பெண்ணியமும் பெருங்காய டப்பாவும் !!!

அந்த நேரக்கொடுமையை ஏன் கேக்குறீங்க....ரெண்டு வாரம் முந்தி ஒரு போன் அழைப்பு...

தல, வணக்கம்...

வாவ், சொல்லுங்க...

நம்ம $$$$$ அக்கா கிட்டயிருந்து போன் வந்துச்சு..

அதை ஏன் எங்கிட்ட சொல்றீங்க தலைவா...

எதோ ஆபாச மடல் வந்துச்சாம் அவுங்களுக்கு...

அடப்பாவி...நான் 'நாத்திகமேன்னு' கெடக்கேன்...என்னை சந்தேகப்படுறீயளா ?

சின்னக்காகிட்ட இருந்து ஒரு மடல் கூட வந்துச்சு...

அதுக்கு...

நீங்க எங்கேயிருக்கீங்க...

வேற எங்க, ஆபீஸ்லதான்..ஏன் கேக்குறீங்க...

எந்த ப்ரவுஸர் யூஸ் செய்யுறீங்க...

ஏன், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தான்...

அதுக்கில்லை, ஆனியன் புரவுஸர்னு ஒன்னு ஐ.பி தெரியாமே மடல் அனுப்பலாமாமே, அதுபற்றியதான சிந்தனை உனக்கிருக்கா ?

யோவ் போதும்...எதையாவது பார்த்து பயந்துட்டியா ? யராவது ஏடாகூடமா மடல் அனுப்பித் தொலைஞ்சாங்களா ? இல்லை அரை லூசுங்க எழுதின பதிவெதாவது படிச்சு கடனேன்னு ஒரு பின்னூட்டம் போட்டுத்தொலைஞ்சியா ?

அப்படியெல்லாம் இல்லை தல...ஏற்கனவே உன்னை வேறமாதிரி அடையாளப்படுத்திட்டாங்க...இதுக்குமேல..

என்ன நாண்டுக்கிட்டு சாகனுமா ?

என்ன தல இப்படி எல்லாம் பேசுற...நீ உருப்புடனும்னுதான்...

நான் உருப்புடியாத்தானிக்கேன்.."பார்வைகள்" சரியில்லைன்னா நானனென்ன செய்யுறது ?

என்ன சொல்லுறீங்க...

ஒன்னும் விளங்கலியே ?

அதான், காமாலை கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் அப்படீன்னேன்...

அதுக்கில்ல தல, நல்ல பேரை கெடுத்துக்காதீங்க...

அந்த பேரை வெச்சு எனக்கு சேலரி ஹைக் விழப்போவுதா ? இல்லை சிங்கப்பூர் டூருக்கு ரெண்டு டிக்கெட் ப்ரீயா கொடுக்கப்போறானுங்களா ?

என்ன எழவோ, பெண்ணீயம்னா என்னான்னு கொஞ்சம் விளக்கலாம்னு போன் போட்டேன்...நீங்க நைண்டி சாப்ட்டுட்டு இருப்பீங்க போலிருக்கு..நான் அப்புறமா பேசுறேன்..

பீப்....பீப்...பீப்...

********************************************************************

படத்தை க்ளிக் செய்து பார்த்தால் ஒரு உண்மையை கண்டறியலாம்.....
*********************************************************************

நானும் கொஞ்ச நாளா பார்த்துக்கிட்டே தான் இருக்கேன்...இந்த பெண்ணீய வியாதிகள் கொஞ்சம் பெருசாத்தான் பொங்குது இப்போ...

எது பெண்ணீயம் என்பது குறித்தான என்னோட கருத்து ( ஆமா, பெருசா சொல்லிட்டாலும்)...என்னான்னா....

பெண்ணீயத்தை பெண்களே தீர்மானிக்கட்டும் என்பது தான் என் கருத்து...

அனானியா பின்னூட்டமோ, திட்டி மடலோ அனுப்புகிற நாய்க்கு எப்போது தோல்வி ? அதை இக்னோர் செய்யும்போது தான்...

ஜல்லியடிக்கனுமா ? அடிங்க...யார் கேட்டா ?

கலாய்க்கனுமா ? கலாய்ங்க..யார் தடுத்தா..

யாருக்குமே புரியாததொரு பதிவு போடனுமா ? போடுங்க...யார் நொந்தா ?

கருத்து தளத்தில் வரும் எதிர்ப்புகளை தயங்காமல் புறந்தள்ளி நடைபோடுங்க, அது தான் உண்மையான வெற்றி, இப்பவே நீங்க அப்படித்தான் இருக்கீங்க (இது என்னோட தோழிக்கு)

பெண்ணீயம் ஆண் பித்தளை எல்லாம் தன்னால் புறமுதுகிடும்...

அப்புறம் ஏன் இந்த தலைப்புன்னு கேக்கிறேளா, சும்மா ஒரு எதுகை மோனைக்கு..

Comments

Anonymous said…
photo alignment is not ok man.
ஆஹா இன்னக்கி காம்பிளான் சாப்டு கெளம்பியாச்சா... ஆணி ஒன்னும் இல்லியா??
யோவ், பதிவை படிச்சுட்டு கருத்து சொல்லுய்யா.
அட நீங்க வேற...

நான் ஆணியே புடுங்கவேனாம்னு இருக்கேன்...
ஆனாலும் உங்க இரண்டுபேர் லூட்டியும் தாங்கமுடியலைப்பா தமிழ்மணத்துல. :-):-)
வாங்க தங்கவேல்...இப்போதான் வந்திருக்கீங்க...நாங்க இப்படித்தான்...கண்டுக்காதீங்க...
bala said…
ரவி அய்யா..,

இப்படி மொக்கை பதிவாக ஏன் போடுறீங்க..?
bala said…
ரவி அய்யா..

பெருங்காய டப்பாவுக்கும் பெண்ணியத்திற்கும் என்ன சம்பந்தம். அவர்களை சமயலறையிலேயே வைத்திருக்க விரும்பும் உங்கள் குணம் தெரிகிறது.
ஒரு சின்ன சந்தேகம்

அதாவது பெண்ணீயத்திற்கும் பெருங்காய டப்பாவுக்கும் என்ன சம்பந்தம்?

இப்படி இருக்குமோ பெருங்காய டப்பா ஈயத்தினாலெ செய்யப்படுதோ?


எதுக்கும் விளக்கமளித்தால் நல்லது.
bala said…
ரவி அய்யா..

மேலே இருக்கும் பாலா நான் அல்ல. அது போலி பாலா!
Anonymous said…
//நான் ஆணியே புடுங்கவேனாம்னு இருக்கேன்...//

தலையின் இந்த அறிவிப்பை வன்மையாக கண்டிக்கிறோம்

செந்தழலார் கொலைவெறிப்படை
அணி புடுங்குவோர் அணி
பெங்களூர்
//ஆனாலும் உங்க இரண்டுபேர் லூட்டியும் தாங்கமுடியலைப்பா தமிழ்மணத்துல. :-):-) //

எந்த ரெண்டு பேருன்னு சொல்ல முடியுமா?
bala said…
ரவி அய்யா,
மேலே இருக்கும் போலி பாலாவின் கமெண்டை அழிக்காவிட்டால் நான் போலீஸில் புகார் கொடுப்பேன்.
bala said…
ரவி அய்யா,

மேலே இருக்கும் ரெண்டு பாலா பின்னூட்டங்களுமே ஒரிஜினல் ISO 9001 பாலா போட்ட பின்னூட்டங்கள் இல்லை

பாலா
Anonymous said…
////அவர்களை சமயலறையிலேயே வைத்திருக்க விரும்பும் உங்கள் குணம் தெரிகிறது. ////

பாலா, அது சும்மா சொல்லியது.
bala said…
தழலாக கொதிக்கும் அய்யா,
மேலே இருக்கும் எல்லா பின்னூட்டமுமே போலி பின்னூட்டம் தான்.
நான் தான் ஒரிஜினல் ஹால்மார்க்.. ச்சே, அக்மார்க் பாலா என்பதற்கு எங்கள் வெளியே மிதக்கும் அய்யா வந்து சாட்சி சொல்லுவார்.

மற்ற எல்லா பின்னூட்டங்களையும் நீக்காவிட்டால், எங்கள் அசுரன் அய்யாவின் புரட்சி ம.க.இ.கவில் முறையிட்டுவிட வேண்டிவரும்! சாக்கிரதை!!
viji said…
This comment has been removed by the author.
Anonymous said…
//என்னங்க லக்கியும் நீங்களும் பேசி வச்சிட்டுதான் கெளம்பிருக்கிங்களா? //

ஆமாம்... இல்லை...
Anonymous said…
பெண்கள் என்றவுடன் பல ஆண்களின் தலை காலியான பெருங்காய டப்பாவாக ஆகிவிடுகிறது.

அதனால்தான் அந்தத் தலைப்பு!

சாரே! பறஞ்சது கரெக்டல்லோ?
// //ஆனாலும் உங்க இரண்டுபேர் லூட்டியும் தாங்கமுடியலைப்பா தமிழ்மணத்துல. :-):-) //

எந்த ரெண்டு பேருன்னு சொல்ல முடியுமா- லக்கி லுக்//

இந்த கொடுமைய பாத்தீங்களா?
பின்னூட்டதை டெலிட் செய்ய இயலவில்லை. மன்னிக்கவும்.
eduthachu ravi. ask those parties to check.
Anonymous said…
thambi,

this post is nice.

Popular Posts