நாமக்கல் சிபியை காணவில்லை !!!

வருத்தப்படாத சிங்கங்களில் ஒன்றான நாமக்கல் சிபி, பெங்களூர் விஜயம் ( இது என்ன போலி டாக்டர் விளம்பரம் மாதிரி இருக்குன்னு நினைக்காதீங்க)...என்னைக்கு...அட இன்னைக்கு காலையில் வந்துவிட்டார்...

என்னையும்,முத்து தமிழினியையும் காலையில் சந்தித்துவிட்டு, முத்து தமிழினி வீட்டில் சற்று இளைப்பாறி, ஜீ.ராவையும், அருட்பெருங்கோவையும் சந்திக்கிறேன் என்று எலக்ட்ரானிக் சிட்டி பக்கம் காலை பத்து மணிக்கு கிளம்பியவரை காணவில்லை...!!!

மதியம் சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தேன் நான்...குறைவான நேரமே உள்ளதால் ஜீராவையும் அருட்பெருங்கோவையும் பார்த்துவிட்டு அப்படியே லஞ்சை முடித்துவிடுகிறேன் என்று கூறியதால் ப்ளான் மாற்றமாகியது...

மொபைல் ச்விட்ச் ஆப் ஆகி உள்ளது...அய்யா எங்கே அய்யா நீர்...மொபைலை எவனாவது சுட்டுவிட்டானா ? எங்கள் அலைபேசி நம்பர் தெரியாமல் முழிக்கிறீரா ? இல்லை ஏதாவது கோயில் குளம் என்று சுற்றி பார்க்க கிளம்பிவிட்டீரா ?

ஜீ.ரா / அருள் உங்களுக்காக வெயிட்டிங்...நான் / முத்து தமிழினி திங்கிங்...

எங்கள் எண்கள்.. : ரவி - 98805 97061 , ஜீ.ராகவன் ( 9448373727)

:)))))))))))))

Comments

இதுக்கு பெருதான் ப்ளாக்ஸ் தேடுதலா ..நல்லா இருக்கே கத
இதுக்கு பெருதான் ப்ளாக்ஸ் தேடுதலா ..நல்லா இருக்கே கத
இராம் said…
தள பெங்களுர் வந்திருக்காரா???
Anonymous said…
எனக்கு தெரியாது, தெரியாது, தெரியாது......
என்னைய்யா இது வர வர வலைப்பதிவுகளை குறுந்தகவல் ரேஞ்சுக்கு பயன்படுத்த ஆரம்பிச்சிட்டிங்க
:)
பதிவு போட்டு ஒரு மணிநேரம் ஆகுது போல..தலைவர் வந்துட்டாரா?
Anonymous said…
ரவி,

என்னிடம் இப்போதுதான் பேசினார்.....அருட்பெருங்கோ செல்லிலிருந்து....
இராம் said…
அடபாவிகளா... நானும் பெங்களூரூ'லேதாய்யா குப்பை கொட்டுறேன்...

ஒருத்தராவது போன்பண்ணி சொன்னீங்களா...

விஷயம் தெரிஞ்சுருந்தா "தள"யே வரவேற்க பெரிய விழாவே ஏற்பாடு பண்ணிருக்கலாம்.
என்னய்யா உங்களை நம்பி எங்க தள பெங்களூர் வந்தா பேனாவைக் காணும் ரேஞ்சுல்ல சின்னப் புள்ள மாதிரி சொல்லிகிட்டு இருக்கீங்க...
'தலை' கிடைச்சிட்டார் போலிருக்கு...!!!
ராம், 'தலை' அல்லது 'தல' என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் கூறவும்...

தலை வந்தது திடீர் சொந்த வேலையாக. அதனால் சங்கத்துக்கு அறிவிக்கவில்லையாம்...
இராம் said…
//ராம், 'தலை' அல்லது 'தல' என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் கூறவும்...//

ரவி யூ ஆர் மிஸ்டேக்.... அவரு தளபதி அதுனாலே சார்ட்பார்மிலே 'தள'ன்னு கூப்பிடுவோம்.

//தலை வந்தது திடீர் சொந்த வேலையாக. அதனால் சங்கத்துக்கு அறிவிக்கவில்லையாம்... //

சொந்த வேலையா இருந்தாலும் சங்கத்துக்கு அறிவிக்காத இப்போக்கினை தலையிடம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சொல்கிறேன்.
ஓ, அது அந்த 'தள' யா ?

கொடுமையை பாருங்க...எலக்ட்ரானிக் சிட்டிக்கு வரதுக்கு எதோ ஒரு லூசு, தலையை சிவாஜி நகர் டூ மெஜஸ்ட்டிக் டூ எலக்ட்ரானிக் சிட்டி வழி காட்டி இருக்கு...

"சென்னையாகிவருகிறது பெங்களூர்" அப்படீன்னு பொன்ஸ் ஸ்டைல்ல பதிவு போடப்போறார் 'தள'
இராம் said…
//கொடுமையை பாருங்க...எலக்ட்ரானிக் சிட்டிக்கு வரதுக்கு எதோ ஒரு லூசு, தலையை சிவாஜி நகர் டூ மெஜஸ்ட்டிக் டூ எலக்ட்ரானிக் சிட்டி வழி காட்டி இருக்கு...//

ஹிம் இதே கொடுமையை ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அனுபிவிச்சு இருக்கேன்.

கோராமங்களா அவுட்டோர் ரிங்ரோட்டுக்கு போகறதுக்காக ஒருத்தன்கிட்டே கேட்டேன்.

பாவிப்பய தெரியலைக்கிறதை தெரியலைன்னு சொல்லித்தொலைக்கமா என்னை பெங்களூரூ முழுசயும் சுத்தவிட்டான்.

அதிலிருந்து ஒருத்தன்கிட்டேயும் வழியே கேக்கிறதில்லை :(

//"சென்னையாகிவருகிறது பெங்களூர்" அப்படீன்னு பொன்ஸ் ஸ்டைல்ல பதிவு போடப்போறார் 'தள' //

இங்கெ மெஜஸ்டிக்கிலே இருந்து எலக்ட்ரானிக் சிட்டி போயிருக்காருலே கண்டிப்பா சூப்பராதான் இருந்திருக்கும்.

:)
Anonymous said…
என்ன?, ராமும் பெங்களூரா?.....

செந்தழலாரே, இங்க இத்தனை பதிவர்கள் இருக்கும்போது, ஒரு பதிவர் கூட்டம் கூட நடத்தாமல் சென்னை கூட்டத்திற்கு அழைப்புவிடுக்கிறீர்கள்....இது சரியா....?....
G.Ragavan said…
கண்டுபிடிச்சிட்டோம்ல. விடுவமா? அவரு டொம்லூர்ல இருந்து எ.சிட்டி வர்ரதுக்குப் பஸ் தெரியாம....சிவாஜி நகருக்குப் போய் பஸ் ஏற நெனச்சு...மெஜஸ்டிக்கு போயிட்டாராம். அங்க இருந்து எ.சிட்டி பஸ்சப் பிடிச்சு 1.30க்கு வந்து எறங்கீருக்காரு. இதுக்காக அவர் எடுத்துக்கிட்ட நேரம் மூன்று மணி நேரம் மட்டுமே!

புரியாதவங்களுக்கு விளங்குறாப்புல சொல்றேன். டி.நகர்ல இருந்து தாம்பரம் போறதுக்குப் பஸ் கிடைக்காம பாரீஸ் போய் வந்த மாதிரி. அவ்வளவுதாங்க விஷயம்.
///என்ன?, ராமும் பெங்களூரா?.....

செந்தழலாரே, இங்க இத்தனை பதிவர்கள் இருக்கும்போது, ஒரு பதிவர் கூட்டம் கூட நடத்தாமல் சென்னை கூட்டத்திற்கு அழைப்புவிடுக்கிறீர்கள்....இது சரியா....?.... ///

பல சிங்கங்களில் குகை இது...ஒரு முறை நடத்தினோம்....அது ஒரு இளமை மீட்டிங்காகி, பதிவு போட முடியாமே போச்சு...(ஒவ்வொரு செண்டஸ்ஸும் ஏ )
G.Ragavan said…
// செந்தழல் ரவி said...
பல சிங்கங்களில் குகை இது...ஒரு முறை நடத்தினோம்....அது ஒரு இளமை மீட்டிங்காகி, பதிவு போட முடியாமே போச்சு...(ஒவ்வொரு செண்டஸ்ஸும் ஏ ) //

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்
நான் அங்க இருக்கும் போது இந்த ப்ளாக் எல்லாம் தெரியாம போச்சு...

எப்படியும் சீக்கிரம் வந்துடுவேனு நினைக்கிறேன்... வந்தா எலக்ட்ரானிக் சிட்டி தான் :-)
johan -paris said…
ரவி!
ஈழத்தமிழர் மேல் அவருக்கு அனுதாபம் உண்டு. சிறி லங்கா இராணுவம் தான் கடத்திவிட்டுதோ?? எதற்கும்; யு என் ஒ; மனித உரிமை மையத்துக்கும் அறிவுங்கள்.
யோகன் பாரிஸ்
வந்த்துட்டம்யா வந்துட்டம்யா!
பத்திரமாக கோவை வந்து சேர்ந்தேன்

தொலைதலும் தொலைதல் நிமித்தமும் என்று ஏழாம்திணை வலைப்பூ ஒன்று தொடங்க இருக்கிறேன்.

:))
//எலக்ட்ரானிக் சிட்டிக்கு வரதுக்கு எதோ ஒரு லூசு, தலையை சிவாஜி நகர் டூ மெஜஸ்ட்டிக் டூ எலக்ட்ரானிக் சிட்டி வழி காட்டி இருக்கு...//

இருந்தாலும் நாம யாரு! சிவாஜி நகர்லாம் போவமா! நேரா மெஜஸ்டிக் பஸ்ஸே பிடிச்சிட்டேன்.

அங்கே போயி 360 B பிடிச்சி எலக்ட்ரானிக் சிட்டி போனேன்!

ஆனா ஒண்ணு! 25 ரூ பாஸுக்கு ஊரெல்லாம் சுத்திப் பாத்தாத்தான நமக்கு லாபம்!
SurveySan said…
வணக்கம்.

சர்வேசன் புகைப்பட போட்டி, புகைப்படம் அனுப்ப கடைசி நாள் Feb 11 2007 11:59 pm IST.
போடோவை surveysan2005 at yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

அனுப்பிய புகைப்படத்தை போட்டி முடிவுகள் அறிவிக்கும்வரை நீங்கள் வேறு எங்கும் வெளியிடக்கூடாது.

வாக்கெடுப்பு Feb 12 அன்று ஆரம்பிக்கப்படும்.

நன்றிங்கோ!

போட்டி விவரங்கள் இங்கே: போட்டி
தனி மடல்,
நண்பா, கடந்த சந்திப்புக்கு என்னால் கடைசி நேரத்தில் "பிரென்சு" வகுப்பில் தாமதமாகி விட்டதால், வர இயலவில்லை. மன்னிக்கவும்.
அன்புடன் வினையூக்கி

Popular Posts