இந்தியா கெலிச்சுருச்சுப்போய்...!!!!

அட, இந்தியா சீரிஸை ஜெயிச்சுருச்சு...ராபின் உத்தப்பா ஒரு அதிரடி துவக்கத்தை கொடுக்க ( 17 பந்துக்கு 28 ரன்), அதுல ரெண்டு சிக்ஸர் மூனு போரு, கங்குலி வழக்கமான கவர்ட்ரவ்களுமாக, சாத்து சாத்துன்னு சாத்தி ஒரு அறுபத்தி எட்டு ரன்னை 82 பந்தில் சேகரிக்க ( அதுல ஒரு சிக்ஸ் மற்றும் எட்டு 4),பிறகு இறங்கின நாயக்கர் மஹால் கல்தூண் ராகுல் திராவிட் (78 ரன்) (இவரு த்ராவிடரா இல்லையா, பெங்களூர் இந்திரா நகர்ல தான் வீடு), சச்சின் சிங்கம்போல (உள்நாட்ல/அட வெளிநாட்லயும் தான் :))) ) கிளம்பி விளசுனாருய்யா...தோனிக்கு போட்டியா மடக்கிப்போட்டு அடிச்ச சிக்ஸரை காண கண் மில்லியன் வேண்டும்...

சும்மா கிழி கிழின்னு கிழிச்சுட்டாருல்ல...76 பந்துக்கு செஞ்சுரி...இது நாப்பத்தி ஓராவது செஞ்சுரி...பத்து 4, மற்றும் ஒரு சிக்ஸர்...அட கடைசியில் இறங்குன நம்ம விளம்பர ஹீரோ தோனி சும்மாவா...இருவது பந்துக்கு நாப்பது ரன்...அடிச்சு தூள் செஞ்சுட்டாருல்ல...எவனாவது இளிச்சவாயன் மாட்டினா விடமாட்டானுங்களே...போன் போட்டு அடிப்பானுங்க...ஆமாம், மூனு சிக்ஸ் ஒரு போர்..ஓரே ஜூபிலேஷன்...சீரிஸ் ஜெலிச்ச மகிழ்ச்சியில் த்ராவிட் துள்றாரு...

மேன் ஆப் த சீரிஸ் விருது நம்ம சச்சினுக்கே போயிருச்சு...எனக்கென்னவோ சந்தர்பாலுக்கு கிடைக்கும் என்று தோனுச்சு...ஆனால் சச்சின் அதையும் தட்டிக்கிட்டு போயிட்டார்...

யுவராஜ் சிங் கடைசி வரைக்கும் இறங்கவே இல்லை...வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை பொறுத்தவரிக்கும் பாவல், எம்ரிச், ப்ராட்ஷோ ( ஒரு ஷோவும் காமிக்கமுடியலை இவரால) இவங்க மூனுபேரு பந்துவீச்சும் கிழித்து எறியப்பட்டது...

இந்திய அணியின் மொத்த எண்ணிக்கை 341 , மூனு விக்கெட் இழப்புக்கு...

கொஞ்சம் பேயறைஞ்ச மாதிரிதான் இறங்குனாங்க வெஸ்ட் இண்டீஸ் அணியினர்...அதிரடியா ஆட முயற்சி செய்து, கொஞ்சம் மொக்கையா சில விக்கெட்டுகளை இழந்து, கடைசியில ஒன்னுமில்லாமே போச்சு....பாவம்...சோபிப்பாருன்னு நினைச்ச சந்தர்பால் நோம்பு கஞ்சி ரெண்டு சொம்பு குடிச்சுட்டு வந்தமாதிரி மந்தமா ஆட்டத்தை ஆரம்பிச்சவுடனே நெனைச்சேன்...

இன்னைக்கு வெஸ்ட் இண்டீஸ் ஊத்திக்கும் என்று...

ஜாகீர் கான் போட்ட பந்தை கல்லியில சுள்ளி பொறுக்குறமாதிரி ஹர்பஜன் புடிச்சு சந்தர்பால் ஆட்டம் போச்சு...இந்த கெய்லுக்கு என்ன ஆச்சு...போயும்போயும் அகார்க்கர் போட்ட பந்துலயா அவுட் ஆகனும் ? அகர்கர் தான் எதிர் அணி நபராச்சே...( ஆமாம், இவர் டீம்ல பந்துவீசினா, இந்திய அணியில் 10 பேர், எதிர் அணியில் 12 பேர்.. இது என்னோட கணக்கு)
ஆயாச்சு...கெய்ல் இதை நெனச்சு நாலு நாள் நல்ல சோறு திங்க மாட்டார்...

அதை விடுங்க..ஸ்மித் ஒரு 24 ரன் சேர்த்தாரு....பரவால்லை...எதிர் முனையில் சாமுவல்ஸ் நிக்க, நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது...பத்தான் பந்துல யுவராஜோட அருமையான கேச்சுல போய் சேந்துட்டாரு...

லாரா...இவருக்கு யாரோ சூனியம் வெச்சுட்டாங்கன்னு நினைக்கிறேன்...பாவம் பத்தான் கைல மூனு ரன்னுக்கு ரன் அவுட் ஆகி இடத்தை காலிபண்ணிட்டு போய்ட்டாரு...

சாமுவல்ஸ் ஒரு பக்கம் என்னமோ சிறப்பாத்தான் ஆடிக்கிட்டிருந்தாரு...அவசரக்குடுக்கை எல்.சிம்மன்ஸ் குடு குடுன்னு அல்ப்பையா ஒரு ரன்னுக்கு அலைஞ்சு ஓடி, சப்ஸ்டியூட்டா வந்த சுரேஷ் ரெய்னாவோட கையால ரன் அவுட் ஆகி பெவிலியனை பார்த்து போயிருச்சு..

ராம்தின் வந்தாம்யா அடுத்து...சாமுவல்ஸும் ராம்தினும் கொஞ்சம் நம்பிக்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தத்தான் செஞ்சாங்க..ஆனா ஹர்பஜன் போட்ட ஒரு பந்துல கும்ளே கைல ( போயும்போயும்) கேச்சை குடுத்து ஆட்டையை முடிச்சுக்கிட்டு போனவுடனே, சாமுவஸ்க்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிருச்சு...அப்படியும் கொஞ்சம் தாக்கு புடிச்சார்..

சிம்மன்ஸுக்கு அடுத்து வந்த ஆர்.ஸ்மித்து, நம்ம கும்ளேவை ஸ்பின் பவுலர்னு நினைச்சு பெவிலியன்ல வந்து நிக்க, நம்ம கும்ளேவும் ஒரு நாலு பந்து நல்ல புள்ளையாட்டம் போட்டுட்டு, அடுத்து நூத்தி இருவது கிலோமீட்டர் வேகத்துல ஒரு பந்தை போட, டரியல் ஆன ஸ்மித்து, சுதாரிக்கறதுக்குள்ள பந்து பேடுல பட, எல்.பி டபள்யூன்னு எல்லாரும் எகிற, ஸ்மித் அவுட்...இந்த மாதிரி எத்தனை பேரை ஏமாத்தி இருக்கோம், நீ எல்லாம் ஜுஜுபி என்ற பாவனையில் கும்ளே ஒரு லுக்கு விட்டாரு...( 500 பேருக்கு மேலே இருக்கும்) பாவம் இன்னும் எத்தனை பேர் உலகக்கோப்பையில் ஏமாறப்போறானுங்களோ !!!

அடுத்து வந்த எம்ரித் அகார்கருக்கு இரை...கேச் புடிச்சது நம்ம உத்தப்பா...இந்த மாதிரி விக்கெட் எடுத்தே இந்த பயலும் சாதனை செஞ்சுருவான்...சச்சின் டெண்டுல்கர் இல்லைன்னா இவனுக்கு கமெண்டேட்டர் வாய்ப்பு கூட கிடைக்கது...ஆளப்பாரு ஆளை...டி.பி வந்தவன் மாதிரி...யாராவது இவனுக்கு மூனுவேளை கஞ்சி ஊத்துங்கப்பா...

அடுத்து வந்த பாவலை, "கிளம்பு காத்து வரட்டும்" அப்படீன்னு பந்து போட்டு சொன்னது யுவராஜ் சிங்கு..கேச்சை பிடிச்சது சப்ஸ்டியூட்டா நின்ன சுரேஷ் ரெய்னா....

ப்ராட்ஷோ ஏதோ படங்காட்டிக்கிட்டு கடைசி வரைக்கும் அவுட்டாகாம பதினாலு ரன்னோட நின்னது...ஆமாம் ஒத்த ஆளு ஆட முடியாதுல்ல...ஆட்டம் முடிஞ்சு போச்சு...

உங்க ஊருக்கு கூட்டிப்போயி குமுறக்குமுற அடிச்சீங்க இல்லையா...அதுக்கு பதிலடி...வாங்கிக்கோங்க செல்லங்களா...போதுமா இன்னும் கொஞ்சம் வேனுமா ? (எங்க ஓடறீங்க, டெஸ்ட் இருக்கு இருங்கடீ..)

மேன் ஆப் த சீரிஸ் : நம்ம சச்சின் குயந்தை.
கப்பை கைல வாங்குனது : நம்ம திராவிட் செவுரு...
நிம்மதியா உக்காந்திருந்தவர் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் உளவாளி சே(செ)ப்பல்..

உட்டாம் பாரு பிகிலு...அட ஆபீஸ்ல இருந்து எப்படி மேட்ச் எல்லாம் பார்க்க முடியும்...ரீடிப் தளத்துல க்ரிக்கெட் அப்டேட்டை பார்த்து ( மேட்ச் முடிஞ்ச பிறகு) எழுதுன விமர்சனம்தான் இது...) உங்க கருத்தை அள்ளி தெளிச்சுட்டு போங்கப்போய் / மோய்....சச்சினையோ, கங்குலியையோ திட்டுறவங்க திட்டுங்க..ஊத்தப்பா சோத்தப்பாவை வாழ்த்துறவங்க வாழ்த்துங்க...டோனி, சேவாக்கை கலாய்க்கிறவங்க கலாயுங்க...நான் ஒதுங்கிக்கறேன்...( நைட்டு போய் ஹைலைட்ஸ் பார்த்தேன் இல்லையா...அதான் இந்த மீள் பதிவு...)

Comments

எக்ஸாம் மெஸேஜ். ( பாஸா / பெயிலா )
அட நீங்க வேற,
காலையிலேந்து தமிழ்மணம் ஒர்க் ஆகல. ஒரே போர். அதுல கூட வேலை பாக்கறவனுங்க
ஆபிஸ்ல செல்போன்ல ரேடியோவ செட் பண்ணிட்டு சவுண்டா அலம்பல் பண்றாணுங்க. மேனேஜர் வந்தா கோச்சுப்பாருன்னு பாத்தா அவரு ரூமுலயும் டிவில கிரிக்கெட் ஓடிகிட்டு இருக்கு ..என்ன கொடுமடா சாமி

ஆனாலும் கெலிச்சதுல சந்தோசம்தான். என்ன நான் சொல்றது..

சென்ஷி
சூப்பரா இருக்கு கமெண்ட்ரி...

இனிமே நடக்கற எல்லா மேட்ச்சுக்கும் இதே மாதிரி கொடுங்க :-)
இங்க ஆட்டம் நடக்கற நேரம் ராவாச்சா, உத்தப்பா ஊத்திக்கின பிறகு, என்னா ஆவுமோன்னு பயந்துகினு தூங்கிட்டேன். காலைல பாத்தா ஒரே ஆச்சரியம். பட்டய கெளப்பிட்டானுங்க.

ஆனா என்ன, திருப்பி சேவாக்கை கொண்டுவராம இருக்கனும்.
டி.வி. பிறவி said…
//சச்சின் சிங்கம்போல (உள்நாட்ல)//

தம்பி கிரிக்கெட்டே பாக்குறதில்லியோ? இங்க கிளிக்கு. Quoting Wikipedia: "As of January 03, 2007 Sachin Tendulkar(5751) edged past Brian Lara's(5736) world record of scoring maximum runs in tests away from home."

கிரிக்கெட்டே தெரியாம கிரிக்கெட் பத்தி பேசக் கூடாது.
ரவி கமெண்டரி நல்ல இருக்கு.. கலக்கறீங்க. :))

Popular Posts