03/பிப்ரவரி/2007 - சென்னை வலைப்பதிவர் சந்திப்பு...!!!

எல்லாருக்கும் வணக்கம்...!!!!!

சென்னையில் பல முறை வலைப்பதிவர் சந்திப்பு நடந்தது கடந்த ஆண்டில்...அப்போதெல்லாம் கலந்துகொள்ளவேண்டும் என்று பல முயற்சி எடுத்தும் முடியலை...ஆனால் இந்த ஆண்டு அதிரடியா ஒரு சந்திப்பு நடக்கப்போகுது...இதில் கலந்துகொண்டு, கொலசாமிகளுக்கு நேரடி படையல் போடலாமே என்று ஒரு ஆசை...

இந்த வலைப்பதிவர் சந்திப்பும் ஒரு உருப்படியான வலைப்பதிவர் சந்திப்பாக இருக்கும் என்று எதிர்பார்ப்பாகாதீர், இது ஒரு ஜாலி சந்திப்பு......!!!!!

அவரை கூப்பிடுவோம், இவரை கூப்பிடுவோம் என்றெல்லாம் இல்லாமல் எல்லோரையும் முழு மனதோடு அழைக்கும் அன்பு மடல் தான் இந்த பதிவு...

சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு நடேசன் பார்க்கில் ( பனகல் பார்க் இல்லைங்க, சென்ற முறை ஒரு குட்டி கலாட்டா நடந்ததாம்) சந்திக்கலாம் என்பது தான் திட்டம்...

சந்திப்பில் போண்டா வழங்கப்படுமா, வடை வழங்கப்படுமா, என்று எல்லாம் "வாங்க பேசிக்கலாம் ப்ரண்ஸ்..."

மறக்காம வந்திருங்க...இதுவரை பாலபாரதி / முத்து / வரவணை செந்தில் / மிதக்கும் வெளி / லக்கி / நான் ஆட்டத்துல இருக்கோம்...சென்னையில் இருக்கவங்க, ஆட்டோ அனுப்பறவங்க, இல்லை ஆட்டோவில் வர்றவங்க எல்லாரும் பின்னூட்டத்தில் தகவல் கொடுங்க...

என்னோட மொபைல் ரோமிங் ( 98805 97061) ...அதனால் இந்த நன்பர் எண்ணுக்கு 9884495430 தொலைபேசி ( பெயர் அனானி ) வழி கேட்கறதுன்னா கேளுங்க...

பின்னூட்டத்தில் தெரிவியுங்க எவ்வளவு பேர் வரீங்கன்னு, அதுக்கு தகுந்தமாதிரி ஏதாவது வயிற்றுக்கு ரெடி செய்துடலாம்...!!!

Comments

மிஸ்ஸுடு கால்.
Xavier said…
Natesam Park Address kudunga Ravi
ஏங்க சும்மா வெளாட்டுக்கு தானே கேக்குறீங்க ?

டி.நகர் நடேசன் பார்க் எல்லாருக்கும் தெரியும்ங்க...

பார்க் உள்ள நுழைங்க...ஓரமா நாலுபேர் கெக்கெபிக்கேன்னு சிரிச்சுக்கிட்டிருப்பானுங்க...

அதுதான் நடேசன் பார்க்..
Anonymous said…
///பார்க் உள்ள நுழைங்க...ஓரமா நாலுபேர் கெக்கெபிக்கேன்னு சிரிச்சுக்கிட்டிருப்பானுங்க...//

அப்போ நீங்க முன்னாலெயே போகப்போறீங்க
நான் அதை சொல்லலை...லாபிங் தெரபியில் சிலபேர் பயிற்சி எடுப்பாங்க அதை சொன்னேன்.
அப்பப்போ கொரலு வுடும் கொல சாமி said…
எனக்கு அனாநியா வர விருப்பம் எங்கனா ஒளிஞ்சிருந்து கொரல் கொடுக்கலாமா?

அப்பப்போ கொரலு வுடும் கொல சாமி
கொலசாமிகள் சங்கம்
ரத்தகாட்டேரி ரோடு
முனியாண்டிவிலாஸ் முனுசாமி சமீபம்
காத்தடிச்சான்பேட்டை
இங்கேயும் ஒரு கால்!
நான் கண்டிப்பாக வருகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்த பார்க்கின் பெயர் நடேச முதலியார் பார்க். வெங்கட நாராயணா ரோடில் க்ரெஸண்ட் பார்க்குக்கு எதிரில் உள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்
சூப்பர்....வாங்க வாங்க...அப்படியே டி.பி.ஆர் சாரையும் ( வாலிபருங்க அவரு) கூப்பிட்டு வந்திருங்க...
Anonymous said…
அ.மு.கவை சேர்ந்தவர்களும் அணிஅணியாக கலந்துக்கலாமா?
////இந்த பார்க்கின் பெயர் நடேச முதலியார் பார்க். வெங்கட நாராயணா ரோடில் க்ரெஸண்ட் பார்க்குக்கு எதிரில் உள்ளது.///

:)))))))))))))))
bala said…
//இந்த பார்க்கின் பெயர் நடேச முதலியார் பார்க்.//

நன்றி டோண்டு ராகவன் அய்யங்கார் அவர்களே!

பாலா அய்யர்
கு.மு.க. said…
மொத்தமாக நாங்களும் கும்மி அடிக்கலாமா?

கு.மு.க. இளைஞர் அணி
சென்னை வலைபதிவர் சந்திப்பு சிறப்பாக நிகழ டெல்லி பாகச கிளையின் சார்பாய் வாழ்த்துகிறேன்.

சென்ஷி
சென்ஷி,
பா.க.ச துவக்குவதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட இடம் இந்தப் பூங்கா தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? :)))

பாகசவின் பாதி வருடம் முடிந்ததைக் கொண்டாடும் விதமாக இந்தச் சந்திப்பு இருக்கும் என்று நம்புவோம் ;)
வரவணைக்கு ஒரு எட்டு மணி ( புல்லு) பெங்களூரில் இருந்து புடித்து வரப்படும் என்று பாசத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்...!!!!!!!
//சென்ஷி,
பா.க.ச துவக்குவதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட இடம் இந்தப் பூங்கா தான் என்பது உங்களுக்குத் தெரியுமா? :))) //

எனக்கும் உங்களுடன் சேர்ந்து தலயை கலாய்க்க ஆசை. ஆனால் இப்போது விடுமுறை கிடைக்காததால் முடியலில்லை. அடுத்த முறை வரும்போது சொல்லிவிட்டு கிளம்புவது என முடிவு செய்துள்ளேன். ஆகவே நான் இல்லாத குறையில்லாமல் தலையை தனிபட்ட முறையில் என் சார்பிலும் கலாய்க்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

டெல்லியிலிருந்து

சென்ஷி
பா.க.ச இந்த முறை வீரியமாக செயல்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்...
டோண்டு தொலைபேசியில் சொன்னார்...பார்க்கு பக்கத்தில் ஒரு ஓட்டல் இருப்பதாக....எனக்கென்னமோ அது சரியா வரும்னும் தோனல...
Anonymous said…
மீட்டிங் முடிந்தவுடன் வாட்டர்பாக்கெட்டுக்கு எங்கே போவது நன்பரே
//பா.க.ச இந்த முறை வீரியமாக செயல்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்... //

நன்றி...நன்றி...நன்றி...நன்றி...

தல சிகரெட்ட விட்டதுக்காக ஒரு நன்றி அறிவிப்பு தீர்மானம் நிறைவேத்திடுங்க.

சென்ஷி
பெங்களூரில் இருந்து வருபவர்களுக்கு TA DA உண்டா?

கப்பலில் வருவதற்கும் தயார் ;-)
Anonymous said…
சந்தோசமான விடயம்..கொஞ்சம் பொறாமையாகவும், ஏக்கமாகவும் கூட இருக்கு...சந்திப்பு பற்றிய வர்ணனைக்காக காத்திருக்கிறேன்..
நான் ரவியுடன் பேசிவிட்டு இதை எனது வலைப்பூவிலும் போட நினைத்தேன். பிளாக்கர் சதி செய்கிறது. ஆகவே அதை நகலெடுத்து இங்கேயே ஒட்டுகிறேன்.

நம்ம செந்தழல் ரவி வரும் சனிக்கிழமை (03.02.2007) அன்று தி.நகர் வெங்கட நாராயணா ரோட்டில், நடேச முதலியார் பூங்காவில் மாலை 5 மணியளவில் ஒரு வலைப்பதிவர் சந்திப்பை ஆர்கனைஸ் செய்திருக்கிறார். அந்த மீட்டிங் வெற்றிகரமாக நடக்க நாம் எல்லோரும் முயற்சிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். அதே தெருவில் மூன்று நிமிட நடை தூரத்தில் ரத்னா கஃபே உள்ளது. அது திருவல்லிக்கேணீ ரத்னா கஃபேயின் கிளை ஆகும். நல்ல டிபன் கிடைக்கும். முக்கியமாக இட்டிலிகள் ஒரு பக்கெட் சாம்பாருடன். :)))

மீட்டிங் பேசியதும் எல்லோரும் பொடி நடையாக அங்கே சென்று ஒரு பிடி பிடிக்கலாம் என்று ரவிக்கு ஆலோசனை கொடுத்துள்ளேன். டட்ச் முறையில் செலவை எல்லோரும் பகிர்ந்து கொள்வது என்று திட்டம். ஆகவே வயிற்றில் இடம் வைத்துக் கொண்டு வரவும். ஏனெனில் பில் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ளப்படும். ஓக்கே?

(மேலே கூறியது ஆலோசனை மட்டுமே).

சனிக்கிழமை சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
Pot"tea" kadai said…
நன்னா ஷேமமா இருங்கோ!

நாலு பேரு வாயில சாவன வாங்காதேள்!!!
வலைப்பூ சுனாமி லக்கியார் பாசறை said…
அண்ணன் பாலபாரதி அவர்களுக்கு ஸ்பெஷல் தம்மு பெங்களுரிலிருந்து வரவழைக்கப்படுமா என்றும் சொல்லவும்.
வலைப்பூ சுனாமி லக்கியார் பாசறை said…
அண்ணன் பாலபாரதி அவர்களுக்கு ஸ்பெஷல் தம்மு பெங்களுரிலிருந்து வரவழைக்கப்படுமா என்றும் சொல்லவும்.
வரவனைக்கு 8 மணி புல்லு
லக்கிலுக்குக்கு 7 மேலே (7 அப்புப்பா)
தலை பாலபாரதி அவர்கள் முன்பாக தம் அடிக்கும் போராட்டம் நடத்தலாம் என்றிருக்கிறோம்.
இந்த சந்திப்பில் என்ன ஸ்பெஷல்?
நண்பர்களே!

ஞாயிறன்று வைத்திருக்கலாமே :(

முடிந்தவரை, எப்படியாவது இடையில் வந்துவிட்டுச் செல்ல முயற்சிக்கிறேன்.
G.Ragavan said…
மற்றுமொரு சந்திப்பா. இந்த முறை என்னால் கலந்து கொள்ள முடியாது. அனைவரும் நன்றக கலந்து கொண்டு மகிழுங்கள். நடந்தவைகளைப் பதியுங்கள்.

நடேசன் பார்க்குக்குப் பக்கத்தில் இரண்டு புகழ் பெற்ற இடங்கள் உண்டு. ஒன்று Red Roses House. ஆம். சிகப்பு ரோஜாக்கள் படத்தில் ஸ்ரீதேவி வீல் என்று கையைப் பார்த்து அலறுவாரே. அந்த வீடுதான். அந்தச் சுற்றுலாத்தலம் பூங்காவில் வலப்புறம் என்றால் இடப்புறம் கண்ணதாசன் மெஸ். தகுந்த விலையில் நல்ல டிபன் ஐட்டங்கள் கிடைக்கும். தோசை, அடை, இட்டிலி போன்றவை மிகச்சுவை. கண்டிப்பாக அங்கு செல்லுங்கள். ரத்னா கபேக்குக் கொஞ்சம் நடக்க வேண்டும். ஆனால் கண்ணதாசன் மெஸ் பூங்காவின் சுற்றுப் பகுதியிலேயே உள்ளது. அருகிலேயே இருப்பது கண்ணதாசன் பதிப்பகம். இதைத்தான் சிவப்பதிகாரம் படத்தில் கண்ணதாசன் பதிப்பகத்தின் மதுரைக் கிளை என்று காட்டிச் சிரிப்புக் காட்டினார்கள்.
G.Ragavan said…
ரத்னா கபேயும் நல்லா இருக்கும். சாம்பாரை ஜக்கில்தான் குடுப்பார்கள். இரண்டாவது ஜக்கு வாங்காவிட்டால் கோவித்துக் கொள்வார்கள். :-))
வரமுடியாத தூரத்தில் இருப்பதால்
வாழ்த்துக்கள் மட்டும்.

சந்திப்பில் நிகழ்பவை பற்றி பதிவில் எழுதுங்கள், படித்தாவது சந்தோசப்படுகிறேன்.

பி.கு:

யெஸ்.பா வை கலாய்கிறவங்க யாரா இருந்தாலும் என் சார்பாகவும் சேர்த்து கலாய்ச்சிடுங்க (நாங்களும் பா.க.ச. உறுப்பினர்-ல்ல!)
Anonymous said…
ரத்னா கபேக்கு போறதா இருந்தா நான் வரமாட்டேன்.
Anonymous said…
இந்த போண்டா மாமா வந்தா நான் வரமாட்டேன்.
///இந்த போண்டா மாமா வந்தா நான் வரமாட்டேன். ///

ஏன் ?
///இந்த போண்டா மாமா வந்தா நான் வரமாட்டேன். ///

ஏன் ?
Anonymous said…
அதெல்லாம் சொல்ல மாட்டேன்.
//Anonymous said...
அதெல்லாம் சொல்ல மாட்டேன்.
//

அட சும்மா சொல்லுப்பா.
சந்திப்பு 'சந்தோஷமாக' நடக்க வாழ்த்து(க்)கள்.

விவரமாப் பதிவு போட்டுருங்க.
Anonymous said…
அந்த மாமா, ஒரு 7 வார்த்தையை பேசமாட்டேன்னு சொன்னா வர்றேன்.
இந்த சந்திப்பில் போட்டே எடுக்கப்படுமா ?
இளம, பின்னூட்டம் போடல்லாம் நேரம் வந்தாச்சா ?

போட்டோ கண்டிப்பாக அனுமதிக்கப்படாது...
//அந்த மாமா, ஒரு 7 வார்த்தையை பேசமாட்டேன்னு சொன்னா வர்றேன். //

அது என்னன்னு கொஞ்சம் எடுத்து விடுறது ???
Anonymous said…
"போலி","சாதி","அய்யங்கார்","பின்னூட்டம்" " அதர்அனானி","போண்டா".

இன்னொரு வார்த்தை பிறகு சொல்வேன்
இதுக்கு பேசாம அவர் வாயில ப்ளாஸ்திரியை போட்டி ஒட்டிறலாம்..இல்லை ஊமை மாதிரி நடிக்க சொல்லலாம் :)))))))))))))))))
Anonymous said…
அடுத்த வார்த்தை என்னன்னு கேக்கமாட்டேளா?
எனக்கு என்னமோ பொறி தட்டுது. யார் நீங்க ? அந்த ஒத்த வார்த்தையையும் சொல்லிடுங்க :))))
வாங்க வினையூக்கி...எதிர் பார்க்கிறேன்...
ஓசி போண்டா தருவதாக இருந்தால் நானும் வரேன்.

சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கிறேன்.
SurveySan said…
ரவி,
டிப்ஸ்: தக்/வெ/உர் ப்ரெஷ்ஷா ரங்கணாதன் தெருல கெடைக்கும்.

ஒரு ரெண்டு வாரம் கழிச்சு சந்திப்பு வச்சிருந்தீங்கன்னா பரிசு பணத்துல போண்டா வாங்கிட்டு போயிருக்கலாம். :)

போல வருஷ போட்டீல கெலிச்சதுக்கு பேசாம் எல்லாருக்கும் நீங்க ட்ரீட் கொடுத்திடுங்க.

:)
செந்தழல் ரவி,
அப்பிடியே ஏப்பிரலில் பெங்களூரில் ஒரு குட்டிச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்க, O.K? இராகவன், நீங்கள், நான் O,K யா?
கண்டிப்பாக...வெற்றி....வாலிப வயோதிக அன்பர்களுக்கு அறிவிப்பும் கொடுத்திடலாம்...நல்லா கலாட்டாவா இருக்கும்...கலக்கலாம் வாங்க..!!!
Anonymous said…
I am also coming. I am taking down the mobile number.

Mohan.
ஆட்டோ அனுப்பறேன். முடிஞ்சா நானும் வருவேன்
எனக்கும் கலந்து கொள்ள ஆவல்தான்

ஆனால் வர இயலாது. சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.
மனோகர் said…
இந்தச் சந்திப்பில் பதிவாளர்கள் மட்டும் தான் கலந்து கொள்ள முடியுமா? அல்லது உங்கள் எழுத்துக்களையெல்லாம் தொடர்ந்து படித்து வரும் எங்ளை போன்ற வாசகர்களும், பார்வையாளர்கள் என்ற முறையில் கலந்து கொள்ள அனுமதியுண்டா?
G.Ragavan said…
// வெற்றி said...
செந்தழல் ரவி,
அப்பிடியே ஏப்பிரலில் பெங்களூரில் ஒரு குட்டிச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்க, O.K? இராகவன், நீங்கள், நான் O,K யா? //

கண்டிப்பா வெற்றி. கீழ பாருங்க ரவி என்ன சொல்லீருக்காருன்னு. :-) கலக்கீருவோம்.

// செந்தழல் ரவி said...
கண்டிப்பாக...வெற்றி....வாலிப வயோதிக அன்பர்களுக்கு அறிவிப்பும் கொடுத்திடலாம்...நல்லா கலாட்டாவா இருக்கும்...கலக்கலாம் வாங்க..!!! //
"போலி","சாதி","அய்யங்கார்","பின்னூட்டம்" " அதர்அனானி","போண்டா".
இன்னொரு வார்த்தை பிறகு சொல்வேன்"

மகரநெடுங்குழைகாதன்? :))))

அன்புடன்,
டோண்டு ராகவன்
கண்டிப்பாக வரலாம் மனோகர்...
அப்படியே டி.பி.ஆர் சாரையும் ( வாலிபருங்க அவரு) கூப்பிட்டு வந்திருங்க...//

நான் வாலிபந்தான்னு வ.வா.சங்கமே சான்றிதழ் வழங்கிவிட்டதே.. பிறகென்ன.. கலந்துக்க வேண்டியதுதான்..
Anonymous said…
//அந்த மாமா, ஒரு 7 வார்த்தையை பேசமாட்டேன்னு சொன்னா வர்றேன். //

அது என்னன்னு கொஞ்சம் எடுத்து விடுறது ??? //

அது கொஞ்சம் அசிங்கமா இருக்கும்.. வேணாம்:)
Anonymous said…
all of you

i am aasath

Please discuss to form a forum to your (IT & ITES employees) political consciousness.

If you meet for a FUN, it should be use to the welfare of your Company owners.

Pls discuss about the IT employees union, Noida issues, How do avoid kazhip aratai and normal aratai>>>

Pls discuss with public of the park atleast. Because you can't know about the real world of our brothers upto till that action...

If you will not follow it, i will give a lesson
sinnakudy said…
ரவி.. சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற எனது வாழ்த்துக்கள்
Anonymous said…
Shall I come ?
சோமி said…
சென்னையில் நடக்கும் ஏதாவது ஒரு வலைப் பதிவர் சந்திப்புக்கு போகவேண்டும் என்று ஒரு எண்ணம் வைத்திருந்தேன். என்ன செய்ய சென்னைப் சிறுவர் பிச்சைக்காரர்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்றுக்கான காட்சிப் படுத்தல் நாளையும் தொடர்வதால் வருவது சிரமமாக இருக்கலாம்..
செந்தழல் ரவி கொடுத்த இலக்கத்துக்கு தொடர்புகொண்டு வருகிறேன்,

எப்படியும் சிற்றுண்டி பரிமாறப் படுவதற்குள் வந்துவிட முயற்சிப்பேன். சுமார் எத்தினை மணி வரை கலந்துரையாடல் நடக்கும்?

உண்மையிலையே சந்திப்பு நடக்குதோ?

Popular Posts