சென்னை வலைப்பதிவர் பட்டறை - தழலின் பார்வையில்

நானும் எழுதுவேன், ஆட்டத்தை கலைப்பேன்....

பதிவர் பட்டறையை பற்றி 30க்கும் மேற்ப்பட்ட பதிவுகள்....ஹைய்யோடா...என்று இருக்கிறது ஸ்னாப்ஜட்ஜ் பதிவை பார்க்க...!!!

சனிக்கிழமை காலையில் நான்கு மணிக்கு பெங்களூர் கிளம்பி, டி.நகர் கீதாஞ்சலி ஹோட்டல் அறையை வந்தடைந்தபோது மணி 11:00...செல்ப் ட்ரைவிங்கில் டவுசர் கழண்டதில் அறையில் க்ராஷ் ஆகி மாலை வரவணையின் தொலைபேசி அழைப்புக்கு தான் விழித்தேன்...

அப்படியே வரவனையுடன் கிளம்பி கிழக்கு பதிப்பக அலுவலகத்தில் பாலாபாயை தேடி சென்றால் ஏற்க்கனவே பட்டறை நடக்கும் இடத்துக்கு லக்கியுடன் அப்பீட்டு...அங்கே சென்று திருவள்ளுவர் சிலையை க்ராஸ் ஆகி போய், போர்வீரர் நினைவில்லம் வரை சுற்றி மீண்டும் 'ஓ' அடித்து திரும்பியதில் மக்கள் இஷ்யூ செய்ய கவர்கள் ப்ரிப்பேர் செய்துகொண்டிருந்த இடம் வந்து சேர்ந்தோம்...

பாலபாரதி என்னவோ சரியாக பேசலை...என்ன டென்ஷனோ...மா.சி அண்ணன், வாங்க அ.மு.கவினரே, உக்காந்து 'பின்' அடிச்சு கவர்ல பொருளை போடுங்க என்று உத்தரவிட்டார்...வரவணை, "அங்க வந்தா கல்யாண வேலை செய்ய வெச்சுருவாங்க" என்று வெளியிலேயே 'தம்' போட அப்பீட் ஆனார்...

என்னுடன் வந்த அனானிமஸை கவர் போட அமர்த்திவிட்டு, உட்கார்ந்து கவர் போடுவதை எல்லாம் ச்ச்செல்லா ஆன்லைனில் மொபைல் மூலம் வலையேற்றிக்கொண்டிருந்த ஓசை செல்லாவை தள்ளிக்கொண்டு பீச்சாங்கை பக்கம் இருந்த பீச்சாண்ட சென்று ஒரு சிகரெட் பற்றவைத்தோம்....

சென்னையில் விற்கும் கிங்ஸ் பில்டர் க்வாலிட்டியை நொந்துகொண்டே ரெண்டு இழுப்பில் முடித்துவிட்டு, (பெங்களூரில் ஐ.டி.சி நிறுவனம் தரும் க்வாலிட்டியை சென்னையில் தருவதில்லை...மட்டமான புகையிலையை போட்டு சிகரெட் தயாரித்து விற்கிறார்கள் சென்னையில்....தமிழன் தலையில் மிளகாய் அரைப்பது சர்வதேச சமூகத்துக்கே கைவந்த கலையாக இருக்கும்போது, கொல்கத்தாவில் இருக்கும் ஐ.டி.சி கம்பெனி காரன் என்ன விதிவிலக்கா)...சிறிது மொக்கைக்கு பிறகு மீண்டும் திரும்பியபோது கல்யாணவேலை முடிந்துபோயிருந்தது...

பிறகு வரவணை ட்ரைவ் செய்ய ('ரவி வண்டி பர்மாமென்ஸ் சூப்பர்'), செல்லாவும் நானும் என்னுடைய ஹோட்டலை நோக்கி...லக்கி முன்பே பைக்கில் ஹோட்டலை நோக்கி பறந்துவிட்டார்...

பாரில் பல விஷயங்கள் பேசினோம்...ஓசை செல்லா அரை க்ளாஸ் ரெட் வைன் அடித்துவிட்டு முகமெல்லாம் வியர்க்கவியர்க்க மப்பாகி மட்டையானார் என்பதை நினைக்க நினைக்க நொந்தேன்...ஆட்டோவில் 70 ருப்பீஸ் பேசி அவரை எக்மோரில் அவர் தங்கி இருந்த ஹோட்டலுக்கு வழியனுப்பிவிட்டு, லக்கிலூக்கிடமும் என்னிடமும் முத்து தமிழினியின் வேலையை (அதான் பஞ்சாயத்து), கொஞ்ச நேரம் செய்த வரவணை செந்தில் பிறகு லக்கியுடன் தன்னுடைய அறைக்கு பார்சல் கட்டிய எம்.ஸி விஸ்கியுடன் புஸ்க்கினார்...

அடுத்தநாள் காலை கண் விழித்தபோது மணி ஒன்பதரை...படபடவென குளித்து ஆர்டர் செய்த தோசையை பல் விளக்காமல் வயிற்றில் அழுத்திவிட்டு கிளம்பி போய் எங்கும் சுற்றாமல் சென்னை பல்கலைக்கழகத்தில் கார் ப்ரேக்கை மிதித்தபோது மணி பத்து...!!!

ஏற்கனவே பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தார்கள் என்று எண்ணத்தோன்றியது..."துன்றதுக்கு" என்று ஒரு உணவு டோக்கன்...கண்டிப்பா பாலபாரதி ஐடியாவாத்தான் இருக்கும்...அவர்தான் இப்படி க்ரியேட்டிவா (கிறுக்குத்தனமா என்று ஊர்நாட்ல சொலவடை) சிந்திப்பார்...பெயர் எழுதி பேட்ச் குத்திக்கொண்டு உள்ளே பட்டையை கிளப்பிக்கொண்டிருந்த பத்ரியை பார்க்க ஏ.சி. அறையில் சென்று அமர்ந்தபோது, தமிழ் வலைப்பதிவர்கள் போண்டாவை ஊதி போண்விட்டாவாக்கிவிட்டது தெளிவாக தெரிந்தது...

டோண்டுவுடன் வழக்கமாக மரவண்டு கனேஷும், ஜெயகமலும், ஜெயராமனும் போண்டா சாப்பிட்ட உட்லேன்ண்ட்ஸ் ஓட்டல் சந்திப்புகளை நினைத்துக்கொண்டேன்...இப்போது ப்ரம்மாண்டமாக நடக்கும் வலைப்பதிவர் பட்டறையை கழுத்தை திருப்பி ஒரு நோட்டம் விட்டபோது...முன்னது கஸ்தூரி ராஜாவின் மொக்கை படம் போலவும், பின்னது ஷங்கரின் அதிரும் ப்ரம்மாண்டம் போலவும் தோன்றியது...

காலியாக இருந்த இருக்கையை தேடியபோது டோண்டுவுக்கு பக்கத்தில் தொடர்ந்து நாலு இருக்கைகள் காலியாக இருந்தது...டோண்டுவுக்கு பின்னால் பூபாலன்...வழக்கமாக...டோண்டு வரும் சந்திப்புகளுக்கு மட்டும் சரியாக வருபவர்..:)))))) இரண்டு சேர் தள்ளி அமர்ந்தேன்...பக்கத்தில் உட்கார்ந்திருந்தவரை "இவர் தான் நான் என்று அறியப்பட்டவர்" என்று குழப்பமாக அறிமுகம் செய்தார் டோண்டு...ச்சும்மாவே எனக்கு எதுவும் புரியலைன்னு வைங்களேன்...வலைப்பூ சுனாமி பக்கத்தில் வந்து அமர்ந்தது...

பக்கத்தில் அமர்ந்திருந்த லக்கியிடம் சொன்னேன்...பாருங்க, நாம பார்த்துக்கிட்டிருக்கும்போதே வலைபூக்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திட்டாங்க சென்னைப்பட்டனத்துக்காரங்களும் பாலாபாயும் என்றேன்...

மதியம் சாப்பாட்டுக்கு டோக்கன் எடுத்துக்கொண்டு போனால் ஆட்டோவில் நசுங்கிய தயிர்சாதங்களை வழித்து, டப்பாக்களை க்ளீன் செய்துகொண்டிருந்தார் பாலபாரதி...என்ன கமிட்மெண்ட்டா சாமீயோவ் என்று நினைத்துக்கொண்டேன்...அப்படியே முகுந்தின் தண்ணீர் பாட்டிலை வைத்து தயிர்சாதம் மற்றும் வெஜ் பிரியாணியை முடித்தேன்...

மேலே தமிழி கல்லூரி பேராசிரியர் மாதிரி பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தார்...கூட்டம் பெப்பெரப்பே என்று அவர் விளக்குவதை பார்த்தபோது, இவர் கண்டிப்பாக கல்லூரி பேராசிரியராகத்தான் இருக்கக்கூடும் என்று நினைத்தேன்...ஹூம் இல்லையாம்...மென்பொருள் நிறுவன மேலாளராம்...சரி மென்பொருள் துறை ஊத்திக்கிட்டா டியூஷன் எடுத்து பொழைச்சுக்கலாம், ஹி ஹி !!! அவரது நிறுவன வேலைவாய்ப்புகளை தருவதாக சொன்னது ரொம்ப ப்ளஷர் ஆக இருந்தது...மற்ற தகவல்களை வேலைவாய்ப்பு பதிவில் வெளியிடுகிறேன்...

பிறகு என்னுடைய செஷன்...முதலில் யார் யாருக்கு இ-மெயில் ஐ.டி இல்லை என்றேன்...எங்கிருந்தோ வந்திருந்த ஆசிறியர் ஒருவர் சிற்றிலக்கிய வெளியீட்டாளர் ஒருவர், கையெழுத்து பிரதி எழுதும் ஒரு தம்பி என்று கை தூக்க, அவர்களுக்கு முதலில் மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்குவதில் பத்து நிமிடம் கழிய, ஹெச்.டி.எம்.எல் பற்றி சில விவரங்களை சொல்லி ஒருவழியாக நிறைவு செய்தேன்...ஓசை செல்லா நான் வகுப்பு எடுப்பதை அப்படியே பதிவாக்க, செல்லா ஆன்லைனில் ரெப்ரஷ் செய்ய, அந்த பதிவு வெளிக்கிட, அதைப்பார்த்த வகுப்பு மாணவர்கள் ஆ வென வாயை பிளந்தது மகிழ்ச்சியாக இருந்தது...இந்த ஆர்வம் தான் அவர்களை மேலும் மேலும் இது பற்றி தெரிந்துகொள்ள கிரியா ஊக்கி என்று மனத்துக்குள் நினைத்து மகிழ்ந்தேன்...

ப்ளாக் செக்யூரிட்டி பற்றி லக்கிலூக், நான் ஒரு கும்மி மற்றும் மொக்கை பதிவர் என்று ஆரம்பித்ததை நான் இருந்து பார்க்கவில்லை...இருந்திருந்தால் சிரித்து ரசித்திருப்பேன்...ஆனால் இந்த டாப்பிக் பற்றி நாகூர் இஸ்மாயில் சம்மந்தா சம்பந்தம் இல்லாமல் வளவளவென்று போட்ட ப்ளேடு தாங்காமல் மேடையில் இருந்த பத்ரி ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்காமல் விக்கியிடம் சொல்லி வெட்டச்சொல்லியும் வளவளப்பு நிற்கவில்லை...டி.வி. காமிராக்கள் உள்ளே வர, நாகூர் இஸ்மாயில், நேரமின்மை காரணமாக நான் வலைப்பதிவுகள் எல்லாம் படிப்பதில்லை, வலைப்பூ எழுதுவதும் இல்லை என்று உளறிக்கொட்டிக்கொண்டிருக்க, அது காமிராவிலும் பதிவாகிக்கொண்டிருக்க பத்ரியே பொறுமை இழந்துவிட்டார்...பட்டென எழுந்து "நீங்களும் எழுதவேண்டும்" என்று சொல்லி ஒரு பஞ்ச் வைத்து சமயோசிதமாக சமாளித்தார்....நாங்கள் எல்லாம் வலைப்பூ எழுதுவதே வேலை வெட்டியாக இருப்பது போலவும், தான் மட்டுமே நாகூரில் ஆணி புடுங்குவது போலவும் அவர் பேசியபோது, அவர் மேல் விழுந்து கடித்துவைக்க வேண்டும் போல் இருந்தது...பத்ரி காப்பாற்றினார் அவரை...(விக்கியிடம் சொல்லி வெட்டி விடச்சொல்லி - பார்வையாளர்களையும்) !!!!!

பிறகு ஒரு தம் பற்றவைக்கலாம் என்று வெளியே வந்தபோது தினமலர், தினத்தந்தி, உண்மை, மாலைமலர், மாலைமுரசு என எல்லா பத்திரிக்கை நன்பர்களும் லிவிங் ஸ்மைலிடம் கூடி நின்று கும்மி அடித்து பேட்டி கண்டுகொண்டிருந்தார்கள்...அவர்களுக்கு பரபரப்பு நூஸு...ஒரு பக்கத்தை ரொப்புவார்கள்...ஹும்...ஸ்மைல்முடித்துவிட்டு வந்தபோது நான் கெளம்புறேன் என்று சொன்னேன்...!!!

மீண்டும் கிளம்பி நானும், ஜெயா.டிவி நட்டத்தில் இயங்குகிறது என்று கூறிய பெங்களூர் அரவிந்தனும் என்னுடைய ஹோட்டல் போனோம்...முகுந்த் என்னுடன் பெங்களூர் வருவதாக கூற, காரை ஓட்டுமாறு அப்ளிக்கேஷன் போட்டேன்...காரணம் நான் பயங்கர டயர்ட்...

மீண்டும் வரவணையும் லக்கியும் ஏழு மணிக்கு வந்து ரிசப்ஷனில் இருந்து அழைக்க, கிளம்பினேன்...பெங்களூர் கிளம்ப ஒன்பது மணி டார்கெட் என்பது ப்ளான்...கீழே வந்து சிறிது நேர காத்திருப்புக்கு பின் முகுந்த் வந்து சேர, கீதாஞ்சலி பாரில் இடமில்லாமல் வரலாற்று புகழ் வாய்ந்த - டோண்டு சார் சிக்கன் சாப்பிட்ட ஈகிள் பார் சென்று வலைப்பதிவர் மீட்டிங் நடத்திவிட்டு, லக்கிக்கும் வரவணைக்கும் பை சொல்லிவிட்டு, முகுந்து காரை பட்டையை கிளப்பி பெங்களூருக்கு வர காலை நாலுமணிக்கு பெங்களூர்...

முகுந்தை அவர் வீட்டில் ட்ராப் செய்துவிட்டு, வீட்டுக்கு போட் பெட்டில் நான் க்ராஷ் ஆகியபோது மணி நாலு முப்பது...

எப்படியும் பட்டையை கிளப்பும் பதிவுகள் வரும், பாபா எல்லாவற்றையும் எடுத்து ஸ்னாப்ஜட்ல போடுவார், மொத்தமாக படித்துக்கொள்ளலாம் என்று மூன்றுமணிவரை காத்திருந்தது வீணாகப்போகவில்லை...சிவாஜி த. பாஸ் படத்தை விட வலைத்திரட்டிகளை அதிரவைக்கும் எண்ணிக்கையில் பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன...பட்டறை பற்றி எழுதவில்லை என்றால் வரலாற்று பிழையாம்...நானும் ஐக்கியமாகிட்டேன் ஜோதியில்..!!!

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Comments

ஆ! ஜோதியில் அய்க்கியமாயிட்டீங்க!
senthilkumar said…
தமிழ் உணர்வும், தமிழ் அறிவும் அதிகம் உள்ளவன் என்ற முறையில், என்னுள் எழுந்த கேள்வி

எதற்காக இந்த தமிழ் பட்டறை? தமிழை வளர்ப்பது இதன் நோக்கமா? அல்லது தமிழில் அதிகமான blogs உருவாகுவது இதன் நோக்கமா?
அல்லது தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் கூடி கருத்து பரிமாறி கொள்வது இதன் நோக்கமா?

தமிழில் அதிகம் blogs வருவதன் மூலம், தமிழ் வளர்ந்து விட போகிறதா?

ஒருவேளை சோற்றுக்கே வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு எதாவது செய்யலாமே?
அதற்கு உங்கள் பட்டறை எந்த வகையிலாவது உதவுமா?
தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் கூட படிக்க முடியாமல் தவிக்கும் ஏழை குழந்தைகளின் படிப்பிற்கு உதவுமா?

எனக்கு தெரிந்து ஒரு குழு, சென்னையில் உள்ள சேரி வாழ் குழந்தைகளுக்கு, எந்த விளம்பரமும் இன்றி மாலை வேளைகளில்,
படிப்பு சொல்லித் தருகிறார்கள்.

நீங்கள் பங்கெடுத்த பட்டறை, நீங்க செலவு செய்து உருவாக்கிய பட்டறை என்று மட்டும் உங்கள் போக்கில் இருந்திருந்தால், எனது கருத்தை நான் இவ்வாறு முன் வைத்திருக்க மாட்டேன்.

ஆனால் பட்டறை நடத்தியதை பெரிய சாதனையாகவும், தமிழ் வளர்ச்சிக்காகான அடிக்கலை நாட்டியதை போலவும்,
தமிழில் blog வைத்திருப்பவர்கள் புத்திசாலிகள் மற்றும் உயர்ந்தவர்களை போலவும்,
அவ்வாறு இல்லாதவர்கள் தரம் தாழ்ந்தவர்கள் அல்லது சாதரண மனிதர்களை போன்று சித்தரிக்கும்
சில பதிவுகளை காண நேர்ந்ததால் தோன்றிய கருத்துக்கள் தான் இவை.

மேலும் நான் கடந்து வந்த சில பதிவுகள் தங்களுடைய புத்திசாலித்தனத்தை காண்பிப்பதற்காகவும்,
ஒரு தரப்பினரையோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர்களை தாக்குவதற்காகவோ உருவாக்கியுள்ளனரே தவிர
தமிழ் வளர்ச்சி என்பதர்கான எந்த வித அறிகுறியும் தெரியவில்லை.

உண்மையில் இந்த பட்டறையின் நோக்கமென்ன?

இது என் கருத்து மட்டுமே... பதிலை பற்றிய எதிர்பார்ப்புடன்...............................

..............தமிழ் தெரிந்தவன்........................
சென்று ஒரு சிகரெட் பற்றவைத்தோம்....

நொந்துகொண்டே ரெண்டு இழுப்பில் முடித்துவிட்டு


அரை க்ளாஸ் ரெட் வைன் அடித்துவிட்டு

ஈகிள் பார் சென்று வலைப்பதிவர் மீட்டிங் நடத்திவிட்டு,
அப்பாடி!! நாகூர் இஸ்மாயில் என்று ஒருவர் நிஜமாக இருக்கிறார் என்பது ஊர்ஜிதமாயிற்று.:-))
எத்தனை பதிவுகளில் படித்தாலும் சுவையாகவே இருக்கிறது!
சூப்பர்...அதி சூப்பர்.
கொக்கரக்கோ.. கும்மாங்கோ...

அடுத்ததா கும்மி பதிவர் பட்டறை ஒண்ணு ஆர்கனைஸ் பண்ணனும். அபி அப்பாவை காண்டாக்ட் பண்ணுங்க.

செப்டம்பர் 20 அமுக பிறந்தநாள் என்பதையும் பாலா அண்ணன் நேற்று நினைவுப்படுத்தினார். அதுக்கும் விழா எடுக்கணும்.

சிங்கமே சிலிர்த்தெழு சீக்கிரம்!!!
பட்டறையை பத்தி பட்டாசாக எழுதி நீங்களும் ஒரு பத்தரைமாத்து தங்கம் என்று நிரூபித்த பதிவரே...... சாரிங்க, இதுக்கு மேல எழுத தெரியல‌

அன்றைக்கு உங்ககிட்ட பேச முடியலையேன்னு முதல்ல வருத்தப்பட்டேன். ஆனா இப்போ தப்பிச்சிட்டோம்டா சாமின்னு தோனுது. எல்லாரையும் சகட்டு மேனிக்கு வாரிட்டீங்களே தலைவா ;)
Anonymous said…
have you ever heard of the word 'neonarcism' you are the personification of that. how can you boast like this. you think you are the super genius. right.you have all liberty to think what ever you like. but why do you insult others like this? remember that 'if you are great , others will be greater'.just because you know some jimmicks in blogging, you are not the emperor of the world.so many great people have toppled down to the chasm.so learn to be polite and learn to respect others.
Anonymous said…
ஏய் நாதாரி,
ஆங்க்ல பின்னூட்டம் போட்டால் வாயடங்கி போய் விடுவாயே. அலட்டல் பேயே,உனக்கு ஜால்ரா தட்ட ஒரு நாலு.பேமானி,அடக்கி வாசி.ரொம்ப ஆடாதே.

Popular Posts