தேடுங்க !

Monday, August 20, 2007

பெப்சி உமா, இத்தோட நிறுத்திக்க...!!!

வலைப்பதிவர்களை நக்கல்விட்டு பெப்சி உமா விடுத்த அறைகூவலை சின்னக்குட்டியரின் வலைப்பதிவில் பார்த்தேன்...

ஆனால் எனக்கு தெரிந்தவரைக்கும் இந்தம்மா தமிழ் வலைப்பதிவர்களை சொல்வதாக தெரியவில்லை என்றே தோன்றுகிறது...

ஆனந்த விகடனும், ஹிண்டு பேப்பரும் படித்து, ஷாம்பார் வடையும் சாப்பிடும் பெப்சி உமா, வலைப்பதிவு தமிழில் எழுதப்படுகிறது என்று அறிந்தால், அப்பாவித்தமிழன் ஆறு ஆண்டுகளாக அவரது லைனை ட்ரை செய்து, ஏழாவது ஆண்டில் லைன் கிடைத்தது, உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு எனும்போது கொடுக்கும் எக்ஸ்ப்ரஷனை விட அதிக எக்ஸ்ப்ரஷனை கொடுப்பார் என்கிறேன் நான்...

" ஓஓஓ...தமிழ்ல கூட ப்லாக்ஸ் இருக்கா ? " என்றதொரு கேள்வியைத்தான் பெப்ஸி உமா கேட்கக்கூடும்...

அதனால் சின்னக்குட்டியரில் வலைப்பதிவில் அவரை குமுறிக்கொண்டிருக்கும் வவ்வால், ப்ரின்ஸ், மாசிலா, தெக்கி காட்டான் போன்றவர்கள் இங்கே கும்மியை தொடருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...

மேலும் அவரை பெப்ஸி உமா என்று விளிப்பதை அன்புடன் நிறுத்திக்கொண்டு, ஆச்சி மசாலா உமா என்றே விளித்து தொலையுமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...

செந்தழல் எங்காவது காரை மோதி ஒரு இருபதாண்டு கோமாவில் விழுந்து எழுந்துவந்தால், அப்போதும் வால்மார்ட் மினரல் வாட்டர் வழங்கும் உங்கள் சாய்ஸ் என்று உமா பாட்டி உளறிக்கொண்டிருப்பதை காண சகியாமல் அப்படியே போய்விடவேண்டும் என்று ஆக்ஸிலெட்டரை நன்றாக அழுத்தி புளியமரத்திலோ அல்லது நின்றுகொண்டிருக்கும் லாரியின் பின்புறத்திலோ குத்தவேண்டும்...அதுதான் இப்போதைய அவா...

கல்லூரி படிக்கும் காலத்தில் எம்.சி.ஏ மாணவர் ஒருவர் பெப்சி உமாவிடம் போன் போட்டு பேசியதாக ஒரே பரபரப்பாயிருந்தது...வழக்கமாக முக்கிய வேலையாக நிற்கும் இடத்தில் யார் அந்த பெப்சி உமா என்ற மொக்கையான கேள்வியை நான் கேட்டுவைக்க, எதிர்வீட்டு ஜன்னல் ப்ளஸ் டூ பிகர் என்னை சனி கிரக ஏலியனை பார்ப்பது போல் பார்த்து, பர்மனண்ட்டாக அந்த ஜன்னலை சாத்திய சம்பவமும் நடந்து தொலைந்தது...

டி.வி சரளமாக பார்க்கும் காலம் வந்தது, எப்போது இந்த நிகழ்ச்சியை வைத்தாலும் யாராவது போனை போட்டு, உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டாயிருக்கு என்று உளர, ஒருவேளை எனக்கு ஏற்படும் வயத்தெரிச்சலால் தான் இந்த நிகழ்ச்சி பிடிக்கவில்லையோ என்று உள்ளூர எழுந்த கிலி காரணமாக ரெண்டு மூனு பேரிடம் விசாரிக்க, அப்படி ஒன்றும் பெப்சி உமாவின் வாய்ஸ் ரசகுல்லா மாதிரி இல்லை என்றும் ஐஸ் க்ரீம் தின்று கரகரத்த ஆயாவின் வாய்ஸ் போலத்தான் இருக்கிறது என்று கடும் கோபத்தில் ஆபீஸ் கலீக் சொல்ல...ஆஹா, கிளம்பிட்டாங்கய்யா என்று நினைத்துக்கொண்டேன்...

ஒரு காலத்தில் யாரும் போன் போடாது போனபோது, சன் டீ.வி நிறுவனத்தினரே பக்கத்து அறையில் இருந்து போனில் உமாவிடம் எழுதிக்கொடுக்கப்பட்ட டயலாக்குகளை வைத்து மொக்கை போட்டதாக ஒரு அதிரடி தகவல் பரவியபோது, நம்புறதா வேண்டாமா ஆண்டவா என்று நொந்துகொண்டேன்...

இப்போது யாரவது ஒரு செலபிரட்டியை கூப்பிட்டு வைத்து உமா மொக்கை போடுவதாக கேள்விப்பட்டு, இன்று கண்டிப்பாக பார்த்தேவிடுவது என்று அலுவலகத்தில் இருந்து விரைந்து வீடு திரும்ப திட்டமிட்டு...அலுவலகத்தில் மானேஜரிடம் ஆணி வாங்கிக்கொண்டிருந்த, அன்றைக்கென்று பார்த்து வீட்டு சாவியை எடுத்துச்சென்றுவிட்ட அறை நன்பனை ஆயிரம் காரணம் சொல்லி வீட்டுக்கு வரவைத்து, வேகமாக ஏழு மணிக்கெல்லாம் டி.வியை ஆன்ன்னியபோது...பெப்சி உமா ப்ரொக்ராம் பார்க்கத்தான் வந்தேண்டா என்றபோது நன்பன் முறைத்த முறையில் தீக்கங்கே வந்துவிட்டது...ஆமாம் பின்ன...பெப்சி உமா ப்ரொகிராம் விசாழ கிழமையாம்...நான் அவனை டார்ச்சர் கொடுத்தது திங்கக்கிழமை...வெற வழி, ஆனந்தமோ, அடுப்படியோ, ஒரு சீரியலை அந்த நேரத்துக்கு பார்த்து அழுதேன்...(இன்னும் கூட அந்த சீரியல் வருதாம்...ஆனா நான் பார்த்தப்போ இருந்த ஹீரோயினி, கொடுமைக்கார மாமியாராம் இப்ப)...

சரி விஷயத்துக்கு மறுபடி வரேன்...

கட்டற்றதாயுள்ள இணையத்துல வலைப்பதிவர்களை கலாய்த்து, தன்னுடைய வேலையான ஹி ஹி சிரிப்பு, புதுப்பாட்டு போடுறது என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அதிகப்பிரசங்கித்தனம் செய்த உமாவை எதிர்த்து, மவுண்ட்ரோட்டில் மழைபெய்யும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்...(இதுவரை ஓசை செல்லா இதைப்பற்றி பதிவு எழுதாதது ஆச்சர்யமாயுள்ளது)

பின் குறிப்பு:

தற்சமயம் நான் வெளியூரில் இருப்பதால் உண்மைத்தமிழன், வரவணை, சுகுணா, ப்ரின்ஸ், லக்கிலூக், பொட்டீக்கடை போன்றவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டு நடத்துவார்கள்....வணக்கம்...

22 comments:

பெப்சி UMA said...

முதலில் அவங்களை நிறுத்த சொல்லுங்க.. நான் நிறுத்திக்கிறன் -:)

வரவனையான் said...

ரவி, நானே வெளியூரிலதான் இருக்கேன்

லக்கிலுக் said...

Excuse me,

Gummi is allowing here?

மின்னுது மின்னல் said...

உண்மைதமிழனும் லக்கியும் உமா ரசிகராமே உண்மையா...


:)

சின்னக்குட்டி said...

அப்பாவித்தமிழன் ஆறு ஆண்டுகளாக அவரது லைனை ட்ரை செய்து, ஏழாவது ஆண்டில் லைன் கிடைத்தது, உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு எனும்போது கொடுக்கும் எக்ஸ்ப்ரஷனை விட அதிக எக்ஸ்ப்ரஷனை கொடுப்பார் என்கிறேன் நான்...

" ஓஓஓ...தமிழ்ல கூட ப்லாக்ஸ் இருக்கா


-:))))

PRINCENRSAMA said...

உங்க ஆசையை அப்படியே விட்டுட முடியுமா, ரவி... ஆனா இன்னும் கொஞ்சம் செய்தியோட இன்னும் கொஞ்ச நேரத்தில் தமிழ்மனத்தில் நுழைகிறேன்.

Anonymous said...

Mrதனித்திரு விழித்திரு பசித்திரு.....

Ammani told about the blogger below...but you felt this is about you.....what happend for your விழித்திரு .... Now you arr திரு திரு திரு திரு திரு

http://hotmachihot.blogspot.com/2006/05/2.html
பார்ப்பான் வேணாம், பார்ப்பான் வேணாம்னு சொல்லிட்டு எல்லா புரொக்ராமையும் பார்ப்பானை வெச்சே பண்ணானுங்கள்லே, அதான் அவனுங்க ஒவ்வொருத்தனா ஆப்பு வெச்சுட்டுப் போறானுங்க! அதுலேயும் இந்த பெப்ஸி உமா இருக்காளே...அவ போன் பேசுறாளா...இல்லை, அக்ரகாரத்துலே மாமியோட அரட்டை அடிக்குறாளான்னு தெரியாத அளவுக்கு, 'வந்துண்டு', 'கேட்டுண்டு'ன்னு அய்யரு பாஷையிலேயே பத்து வருஷமா பேசிக்கிட்டு வர்றா! என்னிக்காவது ஒரு நாள் கலைஞர் போய், 'இந்தாம்மா, அய்யரு பாஷைலே பேசறதா இருந்தா, டிவியை விட்டுக் கெளம்பு'ன்னு சொல்லியிருக்காரா?! இவனுங்க தான் குங்குமம் பத்திரிக்கை விளம்பரத்துலேயே, மாமியும் படிக்கறா மாதிரி காமிக்குறானுங்களே?!

A Pappan

நட்டு said...

மவுண்ட் ரோட்ல மழை வரும் வரைக்குமா? உங்க தவத்தாலாவது மழை வரட்டும்.

வவ்வால் said...

செந்தழலாரே உம்மக்கு ஓவர் குச்ம்பு தாங்க,

அடுத்ததா உங்களுக்கு தான் சங்கு ஊத மாதர் குல மாணிக்கம்லாம் வர போறாங்களாம், எதுக்கும் சீட் பெல்ட்ட இருக்கி மாட்டிக்கோங்க! :-))

Anonymous said...

தல!!! நீங்க கொரியாவில் ஜாலியா இருங்க! நாங்க இருக்கோம்!!.
தூக்கம் கலைச்சிட்டாங்க! இனி மலையேறும் வரை ஓய மாட்டோம்!!.
தல உங்க வார்த்தைக்காகத்தான் பொறுத்திருந்தோம். இனி அதிருமில்ல!!!

புள்ளிராஜா

Anonymous said...

தல!!! நீங்க கொரியாவில் ஜாலியா இருங்க! நாங்க இருக்கோம்!!.
தூக்கம் கலைச்சிட்டாங்க! இனி மலையேறும் வரை ஓய மாட்டோம்!!.
தல உங்க வார்த்தைக்காகத்தான் பொறுத்திருந்தோம். இனி அதிருமில்ல!!!

புள்ளிராஜா

மதுக்கூரான் said...

அண்ணா எனக்கும் பெப்சி உமாவிற்கும் சாரி ஆச்சி உமாவிற்கும் எந்த பங்காளி சண்டைய்யும் இல்லை அவரிடம் கேட்க வேண்டிய ஓரே கேள்வி

எந்த முஸ்லிம் பெண்மனியாவது தொலைபேசியில் விளித்து பேசும்போது
அவர் முதலில் கேட்கும் கேள்வி

ஷொல்லுங்கோ உங்கள் கணவர் துபாயிலா அப்பது குவெய்த்திலா

இதென்ன வக்கிரமா ? வயித்தெரிச்சலா ?

Anonymous said...

////PRINCENRSAMA said...
உங்க ஆசையை அப்படியே விட்டுட முடியுமா, ரவி... ஆனா இன்னும் கொஞ்சம் செய்தியோட இன்னும் கொஞ்ச நேரத்தில் தமிழ்மனத்தில் நுழைகிறேன்.
///

Yes Pleaseeeeeeeeeeeeee

Anonymous said...

Dear Mr.A Pappan

Its All About Fun...Please read and Njoy...Dont think anything more...

///Mrதனித்திரு விழித்திரு பசித்திரு.....

Ammani told about the blogger below...but you felt this is about you.....what happend for your விழித்திரு .... Now you arr திரு திரு திரு திரு திரு///

I like this comment....

Ravi

Anonymous said...

///செந்தழலாரே உம்மக்கு ஓவர் குச்ம்பு தாங்க,

அடுத்ததா உங்களுக்கு தான் சங்கு ஊத மாதர் குல மாணிக்கம்லாம் வர போறாங்களாம், எதுக்கும் சீட் பெல்ட்ட இருக்கி மாட்டிக்கோங்க! :-)) ///

I too advise him the same...

Anonymous said...

///அண்ணா எனக்கும் பெப்சி உமாவிற்கும் சாரி ஆச்சி உமாவிற்கும் எந்த பங்காளி சண்டைய்யும் இல்லை அவரிடம் கேட்க வேண்டிய ஓரே கேள்வி

எந்த முஸ்லிம் பெண்மனியாவது தொலைபேசியில் விளித்து பேசும்போது
அவர் முதலில் கேட்கும் கேள்வி

ஷொல்லுங்கோ உங்கள் கணவர் துபாயிலா அப்பது குவெய்த்திலா

இதென்ன வக்கிரமா ? வயித்தெரிச்சலா ? ////


Is this Damn thing is TRUE ?

Ravi

Anonymous said...

///எந்த முஸ்லிம் பெண்மனியாவது தொலைபேசியில் விளித்து பேசும்போது
அவர் முதலில் கேட்கும் கேள்வி

ஷொல்லுங்கோ உங்கள் கணவர் துபாயிலா அப்பது குவெய்த்திலா

இதென்ன வக்கிரமா ? வயித்தெரிச்சலா ? ///////


வக்கிரமாகத்தான் இருக்கமுடியும். அல்லது அவரது உலகம் அவ்வளவு சிறுசாக..

வாசிப்பு என்பது துளிகூட இல்லாத இந்த பெண்மணியிடம் நாம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும ?

பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா பெப்சி உமாவுக்கு ?

அதை மொதல்ல சொல்லுங்கய்யா ?

enRenRum-anbudan.BALA said...

//செந்தழல் எங்காவது காரை மோதி ஒரு இருபதாண்டு கோமாவில் விழுந்து எழுந்துவந்தால், அப்போதும் வால்மார்ட் மினரல் வாட்டர் வழங்கும் உங்கள் சாய்ஸ் என்று உமா பாட்டி உளறிக்கொண்டிருப்பதை காண சகியாமல் அப்படியே போய்விட வேண்டும் என்று ஆக்ஸிலெட்டரை நன்றாக அழுத்தி புளியமரத்திலோ அல்லது நின்றுகொண்டிருக்கும் லாரியின் பின்புறத்திலோ குத்தவேண்டும்...அதுதான் இப்போதைய அவா...
//
இது, இது சூப்பர் செந்தழலாரே, But, ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி ? :)))
எ.அ.பாலா

கீதா சாம்பசிவம் said...

இதுக்கெல்லாம் ஒரு பதிவு தேவையா? :(((((((

Anonymous said...

/****************************/
Dear Mr.A Pappan

Its All About Fun...Please read and Njoy...Dont think anything more...

///Mrதனித்திரு விழித்திரு பசித்திரு.....

Ammani told about the blogger below...but you felt this is about you.....what happend for your விழித்திரு .... Now you arr திரு திரு திரு திரு திரு///

I like this comment....

Ravi

/****************************/

Ravinna....

I made that as a Fun. Serious for some people who wrote blogs about her, b'cos those who wrote bad also bloggers like everyone...

Please read, Think and Njoy...

A Pappan

செந்தழல் ரவி said...

//இது, இது சூப்பர் செந்தழலாரே, But, ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி ? :)))
எ.அ.பாலா///

தலைவரே, என்றென்றும் அன்புடன் பாலான்னு வச்சுக்கிட்டு இந்த மேட்டரை சூப்பர் என்று சொல்லுறீங்களே...

இதை கொலைவெறின்னுடப்போறாங்க, ஹி ஹி ஹி :))

என்னோட பதிவுல இது உங்க மொதல் பின்னூட்டம்னு நெனைக்குறேன்...

நன்றி...!!!

உங்க பதிவைத்தான் என்னால ஓப்பன் செய்யமுடியல...அதனால திரும்ப மொய் வெக்க முடியாதுங்கோவ்...

ஆமா, நீங்கதான் இட்லிவடையா :))))))))))))))))))))))

enRenRum-anbudan.BALA said...

அன்பின் ரவி,
//ஆமா, நீங்கதான் இட்லிவடையா :)))))))))))))))
//
இது தான் "சந்துல சிந்து பாடுவது" மற்றும் "இடத்த கொடுத்தால் மடத்த பிடிப்பது" என்று பலவாறு அழைக்கப்படுகிறது ;-)

//உங்க பதிவைத்தான் என்னால ஓப்பன் செய்யமுடியல...அதனால திரும்ப மொய் வெக்க முடியாதுங்கோவ்...
//

கொஞ்சம் பிஸிங்க, பதிவுகள் அவ்வளவா போடறதில்ல, ஒரு ரெண்டு மாசமா ! ஒங்களுக்கு தான் மெயில் வந்துருமே, நான் ஏதாவது பதிவு போட்டால், கமெண்ட மெயிலில் அனுப்பலாம், ஏதாவது சொல்லணும்னு தோணிச்சுன்னா :)

எ.அ.பாலா