நான் மிக இனிப்பானவன்.....

தேசிகன் அவர்கள் அவருடைய சர்க்கரை அனுபவத்தை சுவையாக எழுதி இருக்கார்...நான் என்னுயை சர்க்கரை கதையை அங்கே பின்னூட்டமா போட்டபோது ரொம்ப பெரிசாகிட்டது...அதான் அப்படியே ஒரு பதிவு...முதல்முதலாக எனக்கு சர்க்கரை வியாதி கண்டுபிடிக்கப்பட்டது ஜே ஜில் க்ரைஸ்ட் கண்டுபிடிப்பை போல எனக்கும் ஆச்சர்யமான ஒன்றுதான்...

ஸாஸ்கன் நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது ப்ராஜக்ட் முடிந்து சப்போட் செய்துகொண்டிருந்தேன்...க்ளையண்ட் வந்தால் தான் வேலை...க்ளையண்ட் வருவது மாலை ஆறு மணிக்கு மேல் தான்...அதனால் மதியம் நல்ல சாப்பாட்டுடன், அங்கேயே இருந்த ரெஸ்ட் ரூம்களில் ஒன்றை தேர்ந்தெடுந்து குறட்டைவிடாமல் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்தேன்...

ரெஸ்ட் ரூமை ஒட்டியபடி சின்ன நர்ஸிங் ஹோமை, எம்ளாயீஸ்க்கு என்று வைத்து இயக்கிக்கொண்டிருந்தார்கள்...அங்கே இருந்த நர்ஸ் ஒரு சேச்சி...என்னுடைய உடல் நலனில் அக்கறை...ஏசியிலும் சில சமயம் எனக்கு வியர்த்து தொலைவதை பார்த்து, சிக்கென இருந்த ஒரு எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்கல் சர்க்கரை வியாதி டெஸ்ட்டரை வைத்து என் இடது கையில் சிறிய ஓட்டையை போட்டு ரத்தத்தை உறிஞ்சி...

அடுத்த முப்பதாவது வினாடி அய்யோ என்ன உங்களுக்கு சுகர் 380 இருக்கு, எண்ட குருவாயூரப்பா என்று மெர்சலானார்...

அங்கேயே திங்கள் கிழமைகளில் விசிட் அடிக்கும் சென்னையை சேர்ந்த டாக்டர், இந்த புடி செமி டயனில், உணவுக்கு அரைமணி நேரம் முன்னாடி தின்று தொலை என்று பாசத்துடன் திட்டி கொடுத்தார்...

ஒரு வாரம் தினமும் சாப்பிட்டேன்...பிறகு க்ளையண்ட் பகல்நேரங்களிலேயே வர ஆரம்பித்ததால் உறங்க போவதை நிறுத்தினேன்...

அப்புறம் அவுஸ்திரேலியா சிங்கை என்று எங்கெங்கோ சுற்றினாலும் டயபட்டீஸ் பற்றி எந்த ப்ரக்ஜையும் இல்லாமல் திரிந்திருந்தேன்...ஒருமுறை இணையத்தில் (ப்லாக் உலகம் எனக்கு செய்த இன்னொரு நன்மை இது) டயபட்டீஸ் என்ன என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று படித்தபோதே கிறு கிறு என்று வந்தது...

உடனடியாக காலை வெறும் வயிற்றில் சோதித்தபோது 212 என்று இருந்தது...டெஸ்ட் எடுத்தவரே "என்ன சார் இவ்ளோ இருக்கு" என்று கிலியை கிளப்ப...

டாக்டரை கன்ஸல்ட் செய்தேன்..உங்களுக்கு வந்திருக்கறது டைப் 1 - ப்ளட் சுகர், இந்தாங்க டயனில், இதை சாப்பிடுங்க, ஒரு மாதம் கழித்து வாங்க என்றார்...(திரும்ப போகவே இல்லை)

டி.வி. விளம்பரம் பார்த்து அக்யூ செக் என்ற கருவி வாங்கினேன்...அதில் பார்த்தபோதும் டயபட்டீஸ் கன்னாபின்னாவென்றே இருந்தது...

என்னைப்போலவே 29 வயதில் டயபட்டீஸ் வந்த சென்னை நன்பனை தொடர்புகொண்டேன்..அவன் சொன்ன மாத்திரை க்ளுக்கோரெட் போர்ட்டே...அதைத்தான் இன்றுவரை சாப்பிட்டு வருகிறேன்...

டயபட்டீஸ் குறைஞ்சிட்டதும் / அதிகமாயிட்டதும் தன்னாலேயே தெரிஞ்சுடும் எனக்கு...லைட்டாக கை வெலவெலப்பு (கொறைஞ்சுபோச்சு...சாப்பாட்டை வெட்டு), வாய் காய்ந்துபோய், லைட்டாக முதுகு வலி...அதிகமாயிட்டது...க்ளுக்கோரெட் போடு...

இப்படி மானேஜ் செய்துவருகிறேன்....

லைட்டாக யோகா ஒரு மூன்று மாதம் முயன்றேன்...ஒன்னும் வேலைக்காவல...வாக்கிங் போனால் டயபட்டீஸ் கண்டிப்பாக குறைகிறது...நேரமின்னையால் கண்டிநியூ செய்ய முடியல...

ரீசண்டாக புகை பழக்கத்தை விட்டுவிட்டதும், ஆறுமாசத்துக்கு ஒரு முறை குடிப்பதை கூட சுத்தமாக நிறுத்தியதும் (அடத்தூ நீ எல்லாம் ஒரு குடிகாரன்னு வெளிய சொல்லிக்காத ரவி) , ஓட்ஸ் கஞ்சியை காலையில் குடிப்பதும் டயபட்டீஸ் என்னுடைய வாழ்க்கையில் கொண்டுவந்த மாற்றங்கள்...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

Comments

//ரீசண்டாக புகை பழக்கத்தை விட்டுவிட்டதும் //

ரவி,

நல்ல முடிவு. புகைப்பும் டயபடீஸூம் ரொம்பவே கெட்ட கூட்டணி அமைத்து உடல் நலத்தை ஆட்சியிலிருந்து அநியாயமாகக் கவிழ்க்கும்!

நிரந்தர புகைப்பு நிறுத்தம் 50% டயபடீஸ் பிரச்சினைகளை கட்டுக்குள்ளே வைத்திருக்கும்.

மற்றபடி பெரிய சோகமே டயாபடீஸூடன் வாழக்கற்றுக்கொள்ள மனதைத் தயார் செய்யவேண்டியதே!

க்ரீன் வெஜிடபிள் சாலட், கடலைப்பருப்பு சுண்டல் என்று க்ளைசமிக் இண்டெக்ஸ் பார்த்து உணவுத் தேர்வுகளை அமைத்துக்கொள்ளவும்.

இன்சுலின் ஊசி வகையில் இன்று இருப்பது விரைவிலேயே ஓரலாக வந்திரும் இன்னும் கொஞ்சகாலத்தில்!

உணவை கரெக்டான நேரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். கண்ட கண்ட நேரத்தில் சாப்பிட்டால் ஏற்கனவே கன்பூயூஸான பான்க்ரியாஸ் இன்னும் மக்கர் செய்யும்!

நானும் இனிப்புப் பரம்பரைக்காரன்! 160 ரேஞ்சில்.. நடந்தாலே பெருமளவுக்குச் சரியாகிடும்..
PRINCENRSAMA said…
இனிமே ஏதும் பந்தியில மீட் பண்ணா, உங்க பக்கத்திலதான் நான் 'சிட்'டுவேன். நேக்கு இனிப்புன்னா ரொம்ப இஷ்டம்!
போளி டாக்டர் said…
//தனித்திரு... விழித்திரு...பசித்திரு...//

தனித்திருந்திருந்தால் சேச்சி கண்டுபிடிச்சிருக்கமுடியுமோ?

விழித்திருந்தால் ஏ.சி.அறையைத் தேடிப் போயிருப்பீரோ?

பசித்துக்கொண்டேயிருத்தல் எப்போதும் நல்லதன்று....

ஜாக்கிரதை
http://in.news.yahoo.com/
070819/211/6jmk2.html
இந்திய ஆராயச்சியாளரிகளின் ஸ்டெம் செல்

முயற்சி நம்பிக்கை அளிக்கிறது.

சிறு குறிஞ்சா இலைகளை, நிழலில் உணர்த்தி


பொடி செய்து சாப்பிட்டு வந்தார்கள் எங்கள்


வீட்டில். இது மாத்திரை வடிவிலும் இப்போது


கிடைக்கிறது. இது குறித்த ஆராய்ச்சி,

சென்னை பல்கலைக்கழகத்தில்,Biochemistry
Departmentயில் எண்பதுகளில்


நடந்தது தெரியும்!
///நல்ல முடிவு. புகைப்பும் டயபடீஸூம் ரொம்பவே கெட்ட கூட்டணி அமைத்து உடல் நலத்தை ஆட்சியிலிருந்து அநியாயமாகக் கவிழ்க்கும்!

நிரந்தர புகைப்பு நிறுத்தம் 50% டயபடீஸ் பிரச்சினைகளை கட்டுக்குள்ளே வைத்திருக்கும்.

மற்றபடி பெரிய சோகமே டயாபடீஸூடன் வாழக்கற்றுக்கொள்ள மனதைத் தயார் செய்யவேண்டியதே!

க்ரீன் வெஜிடபிள் சாலட், கடலைப்பருப்பு சுண்டல் என்று க்ளைசமிக் இண்டெக்ஸ் பார்த்து உணவுத் தேர்வுகளை அமைத்துக்கொள்ளவும்.

இன்சுலின் ஊசி வகையில் இன்று இருப்பது விரைவிலேயே ஓரலாக வந்திரும் இன்னும் கொஞ்சகாலத்தில்!

உணவை கரெக்டான நேரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். கண்ட கண்ட நேரத்தில் சாப்பிட்டால் ஏற்கனவே கன்பூயூஸான பான்க்ரியாஸ் இன்னும் மக்கர் செய்யும்!

நானும் இனிப்புப் பரம்பரைக்காரன்! 160 ரேஞ்சில்.. நடந்தாலே பெருமளவுக்குச் சரியாகிடும்..
///

பின்னூட்டத்துக்கு நன்றி ஹரி...புகைப்பழக்கத்தை விடுமாறு நீங்கள் கரடியாக கத்தி அனுப்பிய தனிமடலை பலமுறை படித்துள்ளேன்...

நேற்று வேலை நேரத்திலும் தேசிகன் அட்வைஸ் கொடுக்க போனில் மொத்தம் 30 நிமிடம் செலவழித்தார்...

என்ன உங்களுக்கு கொஞ்ச வருஷம் கழித்து வந்தது எனக்கு இப்பவே வந்திட்டது...!!!

///மற்றபடி பெரிய சோகமே டயாபடீஸூடன் வாழக்கற்றுக்கொள்ள மனதைத் தயார் செய்யவேண்டியதே!///

இந்த முயற்சியிலயும் தான் இருக்கேன்.
///இனிமே ஏதும் பந்தியில மீட் பண்ணா, உங்க பக்கத்திலதான் நான் 'சிட்'டுவேன். நேக்கு இனிப்புன்னா ரொம்ப இஷ்டம்! ///

சிட்டுங்க சிட்டுங்க...!!!! இனிப்பு தள்ளிவிட்டுடுறறேன்...அதுக்கு பதில் வடை அது இதுன்னு எதாவது எடுத்துக்குவேன்...
SurveySan said…
என்ன கொடுமைங்க இது.

ஓட்டமா ஓடுங்க. சரியாயிடும்.
//ரீசண்டாக புகை பழக்கத்தை விட்டுவிட்டதும், ஆறுமாசத்துக்கு ஒரு முறை குடிப்பதை கூட சுத்தமாக நிறுத்தியதும்//

ரீசண்ட்டானா.. எப்ப ராசா? ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியா..? அதுலேயும் ஆறு மாசத்துக்கு ஒரு முறை குடிப்பதை நிறுத்தியபோதும்னு சுத்தி வளைச்சு அளக்குற..? இதுல self driving வேற..

இத பாருப்பூ.. உடம்புல ஈ மொய்க்கிற அளவுக்கு சுகரை வைச்சுக்கிட்டு இந்த கெட்டப் பழக்கத்தையும் விட்ரு. வேணாம். சொல்லிட்டேன்.. அப்புறம் டாக்டர் சொல்ற மாதிரி கரீக்ட்டா மாத்திரையைச் சாப்பிடு.. பிகர் பார்க்குறேன்னு சொல்லி நாடு, நாடா சுத்துறதையும் நிறுத்திட்டு ஆபீஸ்ல ஆணி பிடுங்குற வேலைய மட்டும் செய்யு கண்ணு.. உடம்புதான் நமக்கெல்லாம் மூலதனம்.. சொல்லிப்புட்டேன்..
ரவி.. பாகிஸ்தான் வேக பந்து வீச்சாளர்(உடனடியா பெயர் வரமாட்டன் என்றுது), ஆக்ஸ்ன் கிங் , உலகநாயகனுக்கு எல்லா இருக்கு என்று பேசிக்கிறாங்க டயாபாட்டிஸ் ஒரு வருத்தமல்ல ஒரு குறைபாடு மட்டுமே
ஸ்வீட்டான ரவி,

ஹரிஹரன் உங்களுக்கு ரொம்பவே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
டயாபடீஸ் என்பது நோயல்ல... ஒரு குறைபாடுதான் (டிஸ் ஆர்டர்) என்பது தெரியும்தானே!

என் அனுபவப் பகிர்வுகள் சில உங்களுக்குப் பயன்படும் என்று நினைக்கிறேன்...
எனக்கும் உங்களைப்போலவே அலுவலகத்தில்தான் நீரிழிவு அறியப்பட்டது. மிகுந்த தயக்கத்துக்குப் பிறகே ஜி.டீ.டீ. என்ற குளுக்கோஸ் தாங்கு சோதனை எடுத்துக்கொண்டேன். அதுதான் 'நாம் இனிப்பானவர்கள்' என்பதை உறுதியாக உலகுக்கு அறிவிக்கும் சோதனை.
டயாபடீஸுடன் வாழ்வது சோகமே அல்ல... நமக்கு மட்டும் ஏன் இப்படி என்று நினைக்கக்கூடாது... அவ்வளவுதான்!
சின்னக்குட்டி சொன்ன பாக் கிரிக்கெட்டர் - வாசிம் அக்ரம்தான். அவருக்கு டைப் 1. இறுதி வரை இன்சுலின் எடுத்துக்கொண்டே ஆகவேண்டும். அப்படியொரு சூழலில் அவர் பிரமாதமான சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். கிரிக்இன்ஃபோ பாருங்கள். நீரிழிவைப் பற்றி வருந்தாமல், ஆனால் அதற்குரிய கட்டுப்பாடுகளை மதித்து சாதித்தவர்கள் பல பேர். நீங்களும் அப்படி வருவீர்கள் என எனக்குத் தெரியும்.
அப்புறம் சில குறிப்புகள்...
* விருந்தும் விரதமும் நமக்கு (அதாவது நீரிழிவுகாரர்களுக்கு) ஆகாது. ஆகவே செவ்வாய்-வெள்ளிதோறும் சாமிக்கு விரதம், மனைவியுடன் சண்டை போட்டு பட்டினிப்போர், அரசியல் உண்ணாவிரதங்கள் இதற்கெல்லாம் உடனடி தடா.
எப்பாவது ஒருமுறைதானே என்று கல்யாண வீட்டிலோ, பார்ட்டிகளிலோ, மொக்கை பதிவர்கள் உங்களுக்குத் தரும் ஸ்பெஷல் விருந்துகளிலோ புகுந்துவிளையாடி விடாதீர்கள். ரத்த சர்க்கரை அளவு தறிகெட்டுப்போய் பிரச்னைகள் தொடங்கும்.
பி.கு.: வடையும் அடையும் உங்களுக்குப் பிடிக்கும்தான். ஆனால், ஸ்வீட்டுக்குப் பதிலாக எக்ஸ்ட்ரா வடை சாப்பிடுவது உடலுக்கு உகந்ததல்ல. ஜாக்கிரதை... சர்க்கரை குறைபாடுக்கு கொலாஸ்ட்ராலும், உயர் ரத்த அழுத்தமும் நெருங்கிய உறவினர்கள்!
* ரொம்பப் பயமுறுத்த வில்லை... நீங்கள் தாரளமாக நிறையச் சாப்பிடலாம். ஆனால் இடைவெளி விட்டு சாப்பிடுங்கள். தினமும் 5 முறை கூட சாப்பிடலாம்... கொஞ்சம் கொஞ்சமாக!
* காலை உணவு என்கிற வளர்சிதைமாற்றத்துக்கு (மெட்டபாலிசம்) அவசியமான விஷயத்தை பல பேர் கண்டுகொள்வதே இல்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் 12 ஆண்டுகளாக 'டிஃபன்' சாப்பிட்டதே இல்லை என்று பெருமையாகச் சொல்கிறார். டயாபடீஸ்காரர்கள் அப்படியெல்லாம் இருக்கவே கூடாது. இது ரொம்ப முக்கியம்.
* காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே உள்ள இடைவெளியில் சுண்டல்/வெள்ளரிக்காய்/சாலட்/ஓட்ஸ் - இப்படி ஏதாவது எண்ணெய் குறைவான ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்.
மதிய உணவோடு வாரம் இருமுறை கீரை மஸ்ட் கண்ணா மஸ்ட்!
* டால்டா, நெய், கெட்டித்தயிர், வெண்ணெய், பனீர், சீஸ் ஆகியவற்றை கிருஷ்ண பாலனுக்கே அர்ப்பணித்துவிட்டு கொழுப்பு நீக்கிய -நீர்மோரே சிலாக்கியம். கொழுப்பே இல்லாத தயிர் கிட்டினாலும் ஓ.கே.

* மாலை 5 அல்லது 6 மணிவாக்கில் சர்க்கரை, வெண்ணெய் இல்லாத பிரெட்/சாண்ட்விச் அல்லது ஜீரோ அல்லது 2 இட்லி (குஷ்பு இட்லி அல்ல!) அல்லது ஒரு சப்பாத்தி (மைதா ஆகாது... கோதுமையே சிறப்பு) சாப்பிடலாம்.

நேரடி இனிப்புகளும், தரைக்கு அடியில் விளையும் கிழங்குகள் மற்றும் சர்க்கரை அதிகமுள்ள பழங்களையும் தவிர்த்து விடுங்கள். லெமன் சால்ட் / சர்க்கரை இல்லாத தக்காளி ஜுஸ் சாப்பிடலாம். வேறு ஜுஸ் வேண்டாம். சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்போது சில பழங்கள் சாப்பிடலாம்.

உணவு பற்றி நிறையவே சொல்லிவிட்டேன். புகையும், மதுவும் பற்றி உங்களுக்கே தெரியும். அதுபற்றி இந்த சிறியவன் சொல்லி என்ன ஆகப்போகிறது! இணையத்தில் 'டிரிங்கிங் வித் டயாபடீஸ்' என்று கொட்டி வைத்திருக்கிறார்கள்... பாருங்கள்.

வாக்கிங்... இதுதான் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியம். வாரத்தில் 5 நாட்களாவது கட்டாயம் வாக்கிங் போகவேண்டும். தலா 45 நிமிடங்கள். மொத்தமாக நேரம் ஒதுக்கமுடியவில்லை என்றால் காலை-மாலை என்று பிரித்துப் பிரித்தும் போகலாம். லிஃப்ட் பயன்படுத்தாதீர்கள். வாழ்க்கையில் மேலும் மேலும் உயர வேண்டியவர்கள் மாடிப்படிகளைப் பயன்படுத்துவதே நல்லது!

ரவி,
மருத்துவரை ஆலோசிக்காமல் நீங்களாக்கவே மாத்திரை மாற்றி மாற்றி சுயமருத்துவம் செய்வது எனக்கு வருத்தமளிக்கிறது. ஒவ்வொருவரின் உடல்நிலை, எடை, உணவுப்பழக்கம், வயது என பல காரணிகளுக்குத் தகுந்தாற்போலத்தான் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. மற்ற பிரச்னைகளுக்கு மருந்து எடுத்துக்கொண்டாலும் கூட அதை குறித்துவையுங்கள்.
3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ ஆலோசனை பெறும் முன் HBA1C என்ற சோதனை எடுத்துக்கொள்ளுங்கள். இது நாம் அந்தக் காலக்கட்டத்தில் எந்த லட்சணத்தில் உடலை பராமரித்தோம் என்பதை புட்டுப்புட்டு வைத்துவிடும்.
இது சாதாரண ரத்தப் பரிசோதனைதான். காலையில் உணவோ, காபியோ உட்கொள்ளும் முன் ஃபாஸ்டிங்கில் எடுக்கவேண்டும்.
200- 250 ரூபாய் கட்டணம்.

இதுபற்றி எழுத எழுத ஏராளமான விஷயங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஏன், நீங்களும் நானும் ஆர்வமுள்ள இனிப்பாளர்கள் சிலரும் சேர்ந்து ஒரு வலைப்பதிவு தொடங்கக்கூடாது? நமக்கு நீரிழிவு வந்ததில் இப்படியொரு நல்ல விஷயம் நடக்கட்டுமே... நீங்க ரெடிதானே? சொல்லுங்கள்...

இனிப்பு வாழ்த்துகளுடன்

கலைடாஸ்கோப்
ரவி!
என் மனைவிக்கு உண்டு.நீங்கள் பாகற்காயும் சாப்பிடலாம்.கட்டுக்குள் கொண்டுவரலாம்.
எனக்கு இல்லை ஆனால் மனைவியின் பரிசோதனைகளைப் பார்த்துவிட்டு, உடன் பரிசோதனை செய்து, வைத்தியரின் ஆலோசனையுடன் இயற்கையாகக் கிடைக்கும், இனிப்புத் தவிர ஏனையவை இனிப்பின்றியே சாப்பிடுகிறேன்.
உடல் பயிற்சி முக்கியம்.
வெல்லலாம்.