செந்தழல் ரவி எடுத்த 'கருணா அம்மானுடன்' நேரலை செவ்விசெந்தழல் ரவி எடுத்த 'கருணா அம்மானுடன்' நேரலை செவ்வி
இலங்கை அரசியல் பற்றியோ, இந்திய அரசியல் பற்றியோ முழுமையாகவோ அரைகுறையாகவோ அறிந்துதொலைக்காமல், வெறுமனே வலைப்பதிவுலகில் மொக்கையும் கும்மியும் அடித்துக்கொண்டிருக்கும் செந்தழல் ரவியை குறுக்கு மறுக்காக அழைத்துச்சென்று தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் ஒரு இலங்கையில் இருந்து வந்திருக்கும் கருணா என்ற கிழக்கு மாகாண போராளியை பேட்டி எடுக்கவேண்டும் என்று சொல்லி அழைத்துசெல்கிறார்கள்...

பேட்டி எடுக்கச்சொல்லி உட்கார வைக்கப்பட்ட இடத்தில் குளிர்பதன வசதி செய்யப்படாமல் வியர்த்து வழிந்து டென்ஷனாக இருக்கும் செந்தழலிடம் நன்றாக மாட்டிக்கொள்கிறார் பேட்டி கொடுக்க வந்தவர்...

இனி நடந்தவைகளை நீங்களே பாருங்கள்...இவை இருவருக்கும் நடந்த ஆன்லைன் மற்றும் ஆப்லைன் உரையாடல்களின் தொகுப்பு...!!!!

செந்தழல்: வணக்கம்...

கருணா: உங்க பேரு ?

செந்தழல்: என்னோட பேரு செந்தழல் ரவி..உங்க பேரு ?

கருணா: என்னுடைய பெயர் கருணா அம்மான்.

செந்தழல்: என்ன ? கருணா அம்மாவா ? அம்மான்னா..மம்மியா ?

கருணா: இல்லை...அம்மான் என்றோல் அன்ணை..

செந்தழல்: அட வெண்ணை...நானும் அதைத்தானே சொல்றேன்...மேல்மருவத்தூர் மாதிரி எதாவது மேட்டரா ? பேண்ட் போட்டிருக்க...மம்மிங்கற ?

கருணா: தம்பி, நான் மம்மியல்ல...அம்மி...கிழக்கில் ஊன்றிவிட்ட அம்மி...பெரியாரை அப்படித்தான் அண்ணை என்று எங்களூரில் அழைப்பது வழக்கம்...

செந்தழல்: நீ அம்மியோ டம்மியோ...இதுக்கு மொதல்ல பதில் சொல்லு...பெரியாரை அண்ணைன்னு அழைச்சா அண்ணாவை என்ன தொன்னைன்னு அழைப்பீங்களா ? என்னடா குழப்பித்தள்ற...

சரி அதை விடு...செல்வி குடுக்கறேன் செல்வி குடுக்கறேன்னு யாருக்கோ மொபைல்ல கத்தி கத்தி பேசிக்கிட்டிருந்தியே ? செல்வின்னா ? என்ன ராதிகாவை சொல்றியா ?

கருணா: நான் குழப்பவில்லை...தமிழே அறியாத நீ எல்லாம் செவ்வி எடுக்க வந்துவிட்டாய்...அது செல்வி அல்ல...செவ்வி...செவ்வி என்றால் உங்கள் கொச்சைத்தமிழில் பேட்டி என்று அர்த்தம்.....இந்த கேனல் கருணாவிடமே உன்னுடைய பகடி செய்யும் வேலையை காட்டுகிறாயா?

செந்தழல்: என்னது, கேன கருணாவா ? என்ன நன்பா சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கற ? உன்னை நீயே கேனை என்றால் ஊருல உன்னை எவன் மதிப்பான் ?

கருணா ( மனதுக்குள்): ஹுக்கும், இப்ப மட்டும் எவன் மதிக்கிறான்..ஹும்..!!! (தொண்டையை கனைத்துக்கொண்டு இடம் வலமாக மண்டையை ஆட்டுகிறார்) எங்கள் ஊரில் உள்ள இலங்கை படையினர் எம்மை கிழக்கின் முழுமையான பிரதிநிதியாக நியமித்துவிட்டார்கள்...நீ என்ன சொல்வது...

செந்தழல்: சரி இப்போ சீரியஸா ஒரு கேள்வி கேட்கிறேன்...ஏன் புரட்சி சிறுத்தைகள் அமைப்பை விட்டு வெளியே வந்தீங்க ?

கருணா: (மனதுக்குள்): (நான் எங்க வெளிய வந்தேன், அவனுங்களே தொரத்திட்டானுங்க.....)..மீண்டும் தொண்டையை கணைக்கிறார்...இந்த விடயத்தை நீங்கள் கூர்மையாக கெவனிக்க வேண்டும்...புரட்சி சிறுத்தைகளிடம் வடக்கில் வெள்ளமாக பாய்ந்த பணத்தில் கிழக்கில் டீ வாங்க கூட பக்கத்தில் இருந்த பிள்ளையானின் சட்டைப்பையில் கைவைக்க வேண்டிய நிலையில் இருந்த நிலையில் இருந்த எனக்கு அனுப்பவில்லை...வெறும் ஆயுதத்தை கொடுத்து சுடு சுடு என்று சொன்னால் என்ன செய்வது...அதுவும் எங்களுக்கு அனுப்பபட்ட துப்பாக்கிகள் சென்னையில் வால்டர் தேவாரம் தன்னுடைய துப்பாக்கி சுடும் போட்டிகளுக்கு பயன்படுத்தியவை ஆகும்...அவை வெறும் புஸ் போகும் துப்பாக்கிகள் என்பது சென்னையில் உள்ள நரிக்குறவர்களுக்கே தெரியும்போது, அவைகளை வைத்து எப்படி இலங்கை ராணுவத்துடன் சண்டையிட முடியும்....அதனால் தான் நான் இயக்கத்தில் இருந்து வெளியேறினேன்...

செந்தழல்: இலங்கை ராணுவத்தை நோக்கி பொழுதுபோனால் துப்பாக்கியை தூக்கி பிடித்துக்கொண்டிருந்த நீங்கள் இப்போது எப்படி அவர்களுடைய அல்லக்கையாக செயல்பட முடிகிறது ?

கருணா: இந்த விடயத்தையும் நீங்கள் கூர்மையாக கவனிக்கவேண்டும்..

செந்தழல்: கூர்மையாத்தான் கவனிக்கறேன் சொல்லுங்க...

கருணா: ஏராளமாக வந்த சுனாமி நிதியை வைத்துக்கொண்டு இலங்கை அரசாங்கம் முன்பிருந்ததை விட பணக்கார அரசாங்கமாக மாறிவிட்டிருந்தது...துப்பாக்கியை நீட்டி பிடித்துக்கொண்டிருந்த என்னுடைய வீரர்கள் அங்கே எதிர்முனையில் டீ.கடை வைத்திருக்கும் உருமயா, மலிங்கா போன்றவர்களிடம் ஓசியில் டீ.யும் சிகரெட்டும் பாரிய அளவில் வாங்கி வந்திருந்திருக்கிறார்கள்....கடன் பாரிய அளவில் ஆனதால் எங்கள் போராளிகளின் சட்டையை பிடித்த கடைக்காரர்கள் என்னை பஞ்சாயத்துக்கு அழைத்தார்கள்..நான் அங்கே சென்று இந்த சண்டையை விலக்க முயலும்போது அங்கே பக்கத்தில் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்த இலங்கை ராணுவ SLA வீரர் தன்னுடைய பிஸ்கட் பாக்கட் ஒன்றை கொடுத்தார்...அதன் மூலம் இலங்கை ராணுவ வீரர்கள் மிகவும் நல்லவர்கள் என்ற கருத்து உருவானது...இந்த அளவுக்கு அல்ப்பையாக நாங்கள் இருப்போம் என்று எதிர்பாராத இலங்கை அரசு, கிழக்கில் இருந்து எனக்கு ஒரு பெட்டி பிஸ்கட் பாக்கட்டும் பெட்ரோல் நிரப்பப்பட்ட ஒரு ஜீப்பும் அனுப்பியது...இதன் மூலம் நிறைய பிஸ்கட் பாக்கட்டுகளை எங்கள் ஒடுக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு பெறமுடியும் என்ற நம்பிக்கையில் இலங்கை அரசுடன் இணைந்தோம்...இதன் மூலம் கிழக்கை எங்களுக்கு தாரை வார்த்துவிட்டது இலங்கை அரசு...

செந்தழல்: அமைதி முயற்சியில் நீங்கள் பங்கெடுத்ததை பற்றி சொல்லுங்கள்..

கருணா: நான் இதுவரை ஆறுமுறை அமைதி முயற்சிகளில் பங்கெடுத்துள்ளேன்...நோர்வேக்காரர் எரிக் சொல்ஹிம்மை நம்பவே கூடாது...டேபிள் மேல் பிரித்து வைக்கப்பட்ட பிஸ்கட் பாக்கட்டுகளில் நான் கை வைத்து எடுப்பதற்குள் அதை எடுத்து பக்கத்தில் இருக்கும் ஆண்டன் பாலசிங்கத்திடம் கொடுத்துவிடுகிறார்...இதன் மூலம் அவர் நடுநிலை அற்றவர் என்று அப்போதே எனக்கு தெரிந்தது...இருந்தாலும் அதை அப்போது சொல்ல முடியாமல் நான் அவர்கள் பக்கம் இருந்தேன்.....இது போன்ற நடுநிலை அற்ற எரிக் சொல்ஹிம்முக்கு நோர்வே அரசாங்கமே பிஸ்கெட் பாக்கட்டுகளை அனுப்புவது எனக்கு முன்பே தெரியும்...எப்படி இருந்தாலும் அவர் அதனை புரச்சி சிறுத்தைகளின் அரசியல் தலைவருக்கு தான் கொடுப்பார் என்பதும் அறிந்திருப்பதால் தான், எரிக் சொல்ஹிம்மை அமைதி முயற்சிகளில் ஆட்டத்தில் சேர்க்காதீர்கள் என்று நான் சொல்வது...

செந்தழல்: ஒரு கவிதை சொல்லுங்க...

கருணா:

வெருகல் ஆற்றுப்படுக்கையெங்கும் - எம்
வேந்தர்கள் வீழ்ந்து கிடந்தபோது
வெட்டப்பட்ட எம்கரங்கள்
மீண்டும் முளைத்தன.
ஆயிரமாய்…

செந்தழல்: அரசியல் பாதைக்கு நீங்கள் திரும்பியதை ஏற்றுக்கொள்ளமுடியுமா ? அப்படி என்றால் நீங்கள் ஏன் இன்னும் வால்டர் தேவாரத்தின் துப்பாக்கியை வைத்துள்ளீர்கள் ?

கருணா: இது ஒரு சிக்கலான விடயம்...அரசியல் பாதை என்றால் என்னவென்றே எனக்கு கற்றுக்கொடுக்காமல் இருட்டடிப்பு செய்த புரட்சி சிறுத்தைகளின் தலைவர், கிழக்குக்கு எப்படிப்பட்ட பாரிய துரோகத்தை செய்துள்ளார் என்று நீங்கள் புரிந்துகொள்ள முடியும்...ஆகவே உங்களது முதல் கேள்வி எனது மரமண்டையில் ஏறவில்லை...துப்பாக்கிகளை நாங்கள் வைத்துள்ளது மிகவும் எளிமையான கேள்வி...நாங்கள் இட்டலிக்கு பூண்டு சட்டினி செய்யும் போது எம்மிடம் கிரைண்டர் அல்லது மிக்ஸி போன்றவை இல்லாததால் வால்டர் தேவாரத்தின் துப்பாக்கியை வைத்துத்தான் பூண்டை நசுக்கி மிளகாய்தூளில் இடுகிறோம்..ஆகவே எம்முடைய பாதுகாப்புக்காகத்தான் நாங்கள் துப்பாக்கியை தூக்கி பிடித்துள்ளோம்...

செந்தழல்: புரட்சி சிறுத்தைகளால் உங்கள் உயிருக்கு ஆபத்திருப்பதாக சொல்வது எந்த அளவுக்கு உண்மை ?

(எங்க ஆபத்து எங்க ஆபத்து என்று மெர்சலாகி எழுந்து சுற்றும் முற்றும் பார்க்கிறார் கருணா..)

செந்தழல்: அட இப்போ இல்லைங்க...வருங்காலத்தில்...

கருணா : (நிம்மதியாக பெருமூச்சு விடுகிறார்)...புரட்சி சிறுத்தைகளால் எனது உயிருக்கு ஆபத்து என்பது உண்மைதான்...எந்த இரவும் தூங்க முடிவதில்லை...தமிழகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மானிட்டர் குவாட்டர்தான் அந்த பணியை செய்கிறது...இருந்தாலும் பிஸ்கட் பாக்கட்டுக்காக செய்யப்பட்ட இந்த துரோகத்தை மன்னித்து புரட்சி சிறுத்தைகள் தலைவர் அறிக்கை விட்டால் மீண்டும் இலங்கை ராணுவத்துக்கு எதிராக துப்பாக்கிகளை தூக்கி பிடிக்க தயார்...ஆனால் மீண்டும் மூன்று நான்கு பெட்டி பிஸ்கட் பாக்கட்டுகளை புரட்சி சிறுத்தைகள் தலைவர் அனுப்பவேண்டும்...என்னை பார்த்தாலும் முகத்தில் அறைவதை செய்யக்கூடாது...இது தான் எனது கோரிக்கை...

செந்தழல்: பொறுமையாக செல்வி அளித்ததுக்கு நன்றீ....வெளியில் ஒரு பெட்டியில் குட் டே பிஸ்கட் உள்ளது...அதை பெற்றுக்கொண்டு நீங்கள் விடைபெறலாம்...

கருணா: நன்றி செந்தழல் அவர்கள்...

செந்தழல்: நன்றி கேன.கருணா அம்மான் அவர்களே...

Comments

செந்தழல் ரவி இது உங்களுக்கு ஓவராகத் தெரியல்ல! இதையும் ஒரு பதிவென்று அருமையான நேரத்தை வீணாக்கியது தான் மிச்சம்
Anonymous said…
மொக்கை சூப்பராத்தான் இருக்கு.
ஆனா, வேண்டாத வேலைன்னு படுது..
ரவி ,
என்ன கொடுமை சார் இது!
இது வரைக்கும் ஒரே நாளில் 3 தடவை புத்தம் புதிய பதிவாக இது தமிழ்மணத்தில் தோன்றிவிட்டது!(எவ்வளவு கொடுத்திங்க?)

அவன் அவன் சென்னைபட்டறை காய்ச்சலில் கிடைக்கிறான் ஆனாலும் என் கடன் மொக்கை பதிவு போட்டு கிடப்பதே என விட்ட இடத்திலிருந்து கத்திய தீட்ட ஆரம்ப்பிச்சிட்டிங்களே... வேணாம் ... போதும் ... இதோட நிப்பாட்டிப்போம்..! அப்புறம் நானும் மொக்கைபதிவு போட்றுவேன்...அவ்வ்வ்வ்!
(என் மொக்கைகான டிரெய்லர் ... செந்தழல் ரவியுடன் ஒரு நேரடி செவ்வி! அத நான் போடனுமா வேண்டாம நீங்களே முடிவு பண்ணிக்கோங்க)
என்ன செந்தழலாரே நீங்களும் இந்த ஜோதியில ஐக்கியமாயிட்டீங்களா?!!
Anonymous said…
கருணா கிழக்குல அடிச்சுப் பொளந்துகிட்டு இருகாரு. நீங்க இந்த மாதிரி தனக்குத் தானே சொரிஞ்சி இன்பம் கண்டாலே ஒழிய வேற வழியில்லை. அய்யோ பாவம்
மாயா said…
//இதையும் ஒரு பதிவென்று அருமையான நேரத்தை வீணாக்கியது தான் மிச்சம்//

நிச்சயமாக
இந்த பதிவுகளில் நான் போட்ட நாப்பத்தி மூனு கொமண்ட் எங்க போச்சுது
Anonymous said…
This comment has been removed by a blog administrator.
Anonymous said…
This comment has been removed by a blog administrator.

Popular Posts