பழனி பஞ்சாமிர்தம், சாய்பாபா, காவி, முதல் வரி

நேத்து நைட்டு பக்கத்துவீட்டு அங்கிள் பழனி பஞ்சாமிர்தம் கொஞ்சம் தந்தார்...அதை வாங்கி சாப்பிடும்போது கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தது...எதும் புட் பாய்ஸன் ஆகுமோன்னு கூட ஒரு பயம்...இருந்தாலும் கொஞ்சமா சாப்பிட்டேன்...

காலையிலே எழுந்தவுடன் ஒரு மாதிரி தலை வின் வின் என்று வலித்தது...லைட்டாக தொட்டுப்பார்த்தவுடன் முடி கொஞ்சம் அதிகமாக இருப்பது போல் தோன்றியது...

முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து பாத்ததில் அதிர்ச்சியில் உறைந்துபோனேன்...

ஆமாம்...கிட்டத்தட்ட சாய் பாபா ரேஞ்சுக்கு முடி வளவளவென்று வளர்ந்திருந்தது...

அய்யோடா இனிமேல் இந்த முடியை வாறி அலுவலகம் கிளம்புவதற்குள் செத்து சுண்ணாம்பாகிடனுமே என்று கிலி கிளம்பியது...

ஏன் இப்படி ஆனது என்று தலையை போட்டு உடைத்துக்கொண்டதில் பக்கத்துவீட்டு அங்கிள் கொடுத்த பஞ்சாமிர்தம் நியாபகம் வந்தது...

கொஞ்சூண்டு சாப்பிட்டதுக்கே இப்படியா என்று ஆச்சர்யமாக இருந்தது...

டி.எஸ்.என் டெலிஷாப்பிங் - முடியுதிர் தைலம் விற்பனை செய்பவர்ளோ அஸ்வினி அஸ்வினி அஸ்வினி என்று கூந்தல் தைலம் விற்பவர்களோ கேள்விப்பட்டால் டி.வி. விளம்பர மாடலாக வரச்சொல்வார்களே என்று பயப்பந்து நெஞ்சில் உருண்டது...

பக்கத்துவீட்டு ஆண்ட்டி வந்து ஏதோ பிரசாதம் என்று நெற்றியில் பொட்டெல்லாம் வைத்தார்கள்...அவர்கள் ஒயிட் பீல்டில் உறையும் சத்திய சாயி பாபா பக்தை...என்னை பார்த்தால் சாயிபாபா மாதிரியே இருப்பதாக வேறு சாமியாடினார்கள்...

எப்போதோ ஏலத்தில் எடுத்த சாயிபாபா நீள அங்கி (காவி நிறமானது) ஒன்றை எடுத்துக்கொண்டுவந்து கொடுத்துவிட்டு போனார்கள்...

இந்த அங்கியை போட்டுக்கொண்டு அலுவலகம் போனால் என்ன என்று ஒரு திடீர் ஆசை உதயமானது...ச்சே...நம்ம ஆபீஸ் ட்ரெஸ் கோட் பார்மர் ட்ரெஸ் மற்றும் சூட் மற்றும் ஹூ வாச்சே...இதை போட்டுக்கொண்டு போனால் ஹெச்.ஆர் டிப்பார்ட்மெண்டில் இருந்து கேள்வி வராதா என்று மனதுக்குள் ஒரு கேள்வி எழுந்து நெஞ்சை குடைந்தது...

இப்போது முடி வளர்ந்ததை மட்டும் அவர்களால் கேள்வி கேட்க முடியுமா என்று நினைத்துபார்த்து லைட்டாக சிரித்துக்கொண்டேன்...

முடியை வெட்டிக்கோடா என்ற அம்மாவை முறைத்தேன்...நானே ரஜினிகாந்த் மாதிரி முடி கொட்டிக்கொண்டு இடது பக்கமும் வலது பக்கமும் ஏறு நெற்றியாகிக்கொண்டே இருக்கிறதே என்ற மனக்கவலையில் தான் ஆறு மாதமாக இருந்தேன் என்பதை எப்படி வெளிப்படையாக சொல்லமுடியும்...

டி.வியில் காதலன் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது...கெடச்சத வெச்சுக்கோட அவ்வளவு தான்...முடியும் பார் முடியும் பார்.....பேட்டா ராப்...

படபடவென சாயிபாபா அங்கியை அணிந்தேன்...அட நான் கூட சாமியார் மாதிரி இருக்கேன்ப்பா..!!!!

அலுவலகத்தின் உள்ளே நுழையும்போது யாருமே ஒரு வித்யாசமாக பார்க்கவில்லை...அவரவர் அவரவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்கள்..நானும் என்னுடைய இடத்துக்கு வந்தேன்...மடிக்கணிணியை திறந்தேன்...இ-கலப்பையை திறந்தேன்...ஒரு நோட் பேட் ஓப்பன் செய்து டைப் செய்ய ஆரம்பித்தேன்...மீதியை முதல் வரியில் இருந்து படித்துக்கொள்ளுங்கள்...

Comments

இதெல்லாம் ஓவரோ ஓவர், ஏன் கலைஞர் கோபால புரம் கூப்பிடலையா?

உங்க உடம்பில ஒரு சுகர் மில் இருக்குனு இப்போ தான் பதிவில பார்த்தேன்(உண்மையா அது, உங்களை எல்லாம் நம்பவே முடியலை :-(() ,அதான் பஞ்சாமிர்தம் கூட பாய்சன் போல இருந்து இருக்கு !
அப்பு !
அற்புதமா இருக்குது. ஆச்சிரமம் போட்டால்; அனுபவிச்சு அள்ளலாம்.
Anonymous said…
இன்னாபா இது? ஒன்னுமே பிரியிலைய.

நெசமாலுமே ஆபீசுக்கு இப்டிதான் போனீங்களா? கொழம்புது! சரி உட்டுத்தள்ளு.
என்ன ரவி, நல்லாதானே இருந்தீங்க? ஒரு நல்ல டாக்டர்கிட்ட போயி ஃபுல் செக் அப் பண்ணிக்கோங்க. (அந்த ஃபுல் இல்ல)
இதுக் கூட நல்லாவே இருக்குது உங்களுக்கு :-). அப்படியே அந்த பஞ்சாமிருதத்தை பார்சல் செய்து எங்க ஊருக்கு அனுப்பி வையுங்க. எங்க ஊருல முடி கொட்டுற பிரச்சனை அதிகம் அதை வச்சி சமாளிச்சிக்கிறோம் :-)
Anonymous said…
இதெல்லாம் ஓவரோ ஓவர், ஏன் கலைஞர் கோபால புரம் கூப்பிடலையா?

mmmmhum...

உங்க உடம்பில ஒரு சுகர் மில் இருக்குனு இப்போ தான் பதிவில பார்த்தேன்(உண்மையா அது, உங்களை எல்லாம் நம்பவே முடியலை :-(() ,அதான் பஞ்சாமிர்தம் கூட பாய்சன் போல இருந்து இருக்கு !

Its True Vavvaal....
Anonymous said…
///அப்பு !
அற்புதமா இருக்குது. ஆச்சிரமம் போட்டால்; அனுபவிச்சு அள்ளலாம். ///

can you take care france branch ???

Ravi
Anonymous said…
///என்ன ரவி, நல்லாதானே இருந்தீங்க? ஒரு நல்ல டாக்டர்கிட்ட போயி ஃபுல் செக் அப் பண்ணிக்கோங்க. (அந்த ஃபுல் இல்ல) ///

vanga nagu...i am going this week end to take gul.test
Anonymous said…
////இதுக் கூட நல்லாவே இருக்குது உங்களுக்கு :-). அப்படியே அந்த பஞ்சாமிருதத்தை பார்சல் செய்து எங்க ஊருக்கு அனுப்பி வையுங்க. எங்க ஊருல முடி கொட்டுற பிரச்சனை அதிகம் அதை வச்சி சமாளிச்சிக்கிறோம் :-) ////

vanga Jesi....First time comment podereenga pola...good...

ok i will send you that panjamirtham...give me the address hahaha

Popular Posts