Friday, November 07, 2008

அமெரிக்காவின் டவுசரை கிழித்த சுல்தான் அண்ணன்...

அன்புள்ள வலைப்பதிவு மகா ஜனங்களே !!! (இதுக்கொன்னும் கொறைச்சல் இல்ல...)

அமெரிக்காவின் டவுசரை கிழிக்கும் சுல்தான் அண்ணனின் பதிவை பற்றி முன்பே எழுதவேண்டும் என்று நினைத்து மறந்துவிட்டேன்...

ஒரு காலத்தில் அமெரிக்கா என்னுடைய கனவு தேசம்...!!! அழகான வெள்ளைப்பெண்கள், சரக்கு, லாஸ் வேகாஸ், பமீலா ஆண்டர்சன் என்று பல கனவுகளை ஆக்ரமித்த ஒரு விஷயம் அமெரிக்கா...

வாழ்க்கையில் ஒரு முறையாவது அங்கே காலடி எடுத்து வைத்துவிடவேண்டும்...விமான நிலையத்தில் இறங்கும்போது மண்டியிட்டு அந்த மண்ணை முத்தமிடவேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தவன் தான் நானும்...

ஆகாயத்தில் பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்த்த்து, அதை பற்றிய பகல் கனவு கண்டு வண்டியில் இருந்து கீழே விழுந்தவன் தான் நானும்...

ஆனால் இப்போது கொஞ்சம் புரிதல் வந்திருக்கிறது...

மலேசியாவில் ஒரு முறை கக்கூஸீல் நோக்கியா மொபைலை தொலைத்துவிட்டு விமானம் புறப்படும் வேளை சண்டையிட்டு, விமானத்தில் இருந்து இறங்கி, அந்த கக்கூஸை கழுவி துடைத்துக்கொண்டிருந்த தமிழரிடம்

"இங்கே மொபைல் ஏதும் பார்த்தீங்களா"

"இல்லையே, நான் எல்லா டாய்லெட்டையும் கழுவிட்டேனே" என்ற மைக்ரோரியலிஸ (இது பற்றி பிறகு விளக்குகிறேன், என்னோட கண்டுபிடிப்பு இது)பதிலையும் பெற்று, விமானத்தில் ஏறிய அனுபவங்களும் கிடைத்துவிட்டது...

ஆனால் இப்போது 2000 வாக்கில் இருந்து அமெரிக்க கண்மூடித்தன மோகம் இல்லை...வளவளவென்று எதுவும் பேச விரும்பவில்லை, அண்ணனின் பதிவுக்கு போலாம் வாங்க...

அண்ணன் இரண்டு பதிவுகளாக எழுதியிருக்கிறார்...

முதல் வாய் பொங்கலை சட்னியோடு உள்ளே தள்ளும்போது நறுக்கென்று மிளகு மாட்டினால் போல இருக்கும் பதிவு நெம்பர் 1

http://sultangulam.blogspot.com/2008/08/1.html

சூடான பிரியாணியை அள்ளி வாயில் திணிக்கும்போது ஏலக்காயோ, கிராம்போ வந்துவிழுந்து தூ தூ என்று துப்பவைக்குமே அதுபோல இருக்கும் பதிவு நெம்பர் 2

http://sultangulam.blogspot.com/2008/08/2.html

இந்த பதிவுக்கு பின்னூட்டம் எதுவும் போட்டு உங்கள் நேரத்தை வீணடிக்கவேண்டாம் நன்பர்களே...சுல்தான் அண்ணன் பதிவில் சந்திப்போம்...

7 comments:

கபீஷ் said...

me the firstu!!

ரவி said...

நன்னி..

கபீஷ் said...

அப்படீன்னா?

Unknown said...

என்ன ஆச்சு நம்ம ஹிட் கவுண்டருக்கு இந்த எகிறு எகிறுதே என்று ஒரே குழப்பம். இங்கு வந்த பின்தானே புரிகிறது. மிக்க நன்றி.

ரவி said...

நன்னி அப்படீன்னா நன்றி !!!!!!!

மங்களூர் சிவா said...

/
இந்த பதிவுக்கு பின்னூட்டம் எதுவும் போட்டு உங்கள் நேரத்தை வீணடிக்கவேண்டாம் நன்பர்களே...
/

எங்க பேச்சையே நாங்க கேக்க மாட்டோம் இதுல.............

ரவி said...

பாருங்க சிவா !!!!!!!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....