மும்பாய் தாக்குதல் இந்தியாவுக்கு சரியான பாடம்: மகிழ்ச்சியில் சிங்கள ஊடகம்

மும்பாய் தாக்குதல் இந்தியாவுக்கு சரியான பாடம்: மகிழ்ச்சியில் சிங்கள ஊடகம்
[சனிக்கிழமை, 29 நவம்பர் 2008, 05:32 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] புதினம் செய்தி


இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பாய் மீது கடந்த வியாழக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், ஆனால், அத்தாக்குதல் குறித்து சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தனது பாதுகாப்பு பத்தியில் தனது மகிழ்ச்சியை மறைமுகமாக வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விடுதலைப் புலிகள் இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்தியாவின் தலையீட்டை கோரி வருகின்றனர். இது தொடர்பில் தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியப் பிரதமரை சந்திப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.

ஆனால், இந்திய மத்திய அரசு இலங்கையில் தலையிடுவதனை விடுத்து முதலில் அங்கு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் 170-க்கும் அதிகமான ஆயுதக்குழுக்களுடன் போராடுவது தான் சிறந்தது.

தற்போது மும்பாயில் உள்ள தாஜ்மகால் மற்றும் ஒபரோய் ஆடம்பர விடுதிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டதும், காயமடைந்ததும் இந்தியாவுக்கு சரியான பாடம் என தனது உள்ளக்கிடக்கையை கொட்டியுள்ளது.

சிறிலங்கா பாகிஸ்தானின் தீவிர விசுவாசி. அது எப்போதும் இந்திய அரசுக்கு விசுவாசமாக நடந்து கொண்ட வரலாறு கிடையாது. பங்களாதேசத்தின் மீதான போரின் போதும் அது பாகிஸ்தானுக்கே தனது ஆதரவை வழங்கி வந்தது.

எனவே, மும்பாய் தாக்குதலின் பின்னனியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்திய அரசு குற்றம் சுமத்தி வருகையில் பாகிஸ்தானின் தீவிர விசுவாசிகளான சிங்கள மக்களின் பத்திரிகை ஒன்று மகிழ்ச்சி தெரிவிப்பது வியப்புக்குரியது அல்ல என இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தமிழ் ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

***செய்தி நிறைவு***

...இதே போல் இந்தியாவில் இருந்து வெளிவரும் சிங்கள ஊடகமான தி ஹிண்டு பற்றியும் ஏதேனும் செய்தி வெளியிடுங்களேன் புதினம்...

Comments

இப்படிப்பட்ட இன வெறியர்களை என்ன செய்தாலும் தகும்...
புதினத்தை பற்றி "புழுத்து போன புதினம்" என்றே நீங்கள் குறிப்பிட்டிருக்கலாம்....
பத்திரிகை என்பது நடுநிலையானது என்பதை உணராத "புதினம்" பத்திரிக்கையா??? குப்பையில்லாமல் வேறொன்றுமில்லை....
thenali said…
அவனுக சந்தோசப்படுவதிலும் நியாயம் உள்ளது. அங்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து இலங்கையில் தீவிரவாத்தினை வளர்த்துவிட்டது இந்திய அரசியல்'வியாதி'கள்தானே, குறிப்பாக காங்கிரஸ். இதற்கு பதிலாக இலங்கையை அப்போதே மிரட்டி தமிழர்களுக்கு சமஉரிமை தர வைத்திருக்கலாம். பல தமிழ் சிங்கள மனித உயிர்கள் தப்பித்திருக்கும். இப்போது நமக்கு வலிக்கற மாதிரிதானே இலங்கையர்களுக்கு வலிக்கும்.
யாரை யாரு திட்டுறானுக?
//இந்தியாவில் இருந்து வெளிவரும் சிங்கள ஊடகமான தி ஹிண்டு //

இங்கதான் நம்ம இளைய குத்தூசி மின்னுறாரு!
Itsdifferent said…
Will you spend your energy, time and effort to avoid such terrorist incidents in the future?

Will you forget your differences, unite under a formidable force to overcome any hurdles, to realise Kalam's vision of 2020?

If you could answer, yes to both, lets unite under one banner. One village/town at a time....
Trisha said…
This comment has been removed by the author.
Trisha said…
This comment has been removed by the author.
Trisha said…
நவனீதன் என்ற அறிவுக்கொழுந்தே டெய்லிமிரர் என்ற சிங்கள ஊடகத்தில் வந்த செய்தியைத் தான் புதினம் தமிழ்ப் படுத்தியிருக்கிறது. இதனைப் புரிந்துகொள்ளாமல் புதினத்தின் மேல் வசைபாடுகிறீர்களே நீங்கள் எல்லாம் ஈனத்தமிழர்கள் வரிசையில் சேர்க்கப்படவேண்டியவர்கள். சாதரண சிங்களவன் கூட மும்பைத் தாக்குதலில் மகிழ்ச்சி அடைந்திருக்கிறான்.
Pot"tea" kadai said…
//
...இதே போல் இந்தியாவில் இருந்து வெளிவரும் சிங்கள ஊடகமான தி ஹிண்டு பற்றியும் ஏதேனும் செய்தி வெளியிடுங்களேன் புதினம்...//

கூடிய சீக்கிரம் மாலினி பார்த்தசாரதி என்னும் பாப்பாத்தி எழுதுவாள்...ஆமா அவளுக்கென்ன மரியாதை வேண்டி கிடக்கு...தமிழினத் துரோகி
Chuttiarun said…
வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>
காமிக்ஸ் உலக நண்பர்களே,

தமிழக காமிக்ஸ் உலகில் உள்ள பல தவறான கருத்துக்களை மாற்றவும், உண்மையான தலை சிறந்த காமிக்ஸ்களை உங்களுக்கு எடுத்து காட்டவும் ஒரு புதிய வலைப்பூவை துவக்கி உள்ளேன்.

சற்றும் சிரமம் பாராமல் வந்து உங்களின் மேலான எண்ணங்களை தெரிவியுங்களேன்.

அன்புடன்,

உலக காமிக்ஸ் ரசிகன்.

Greatest Ever Comics தலை சிறந்த காமிக்ஸ்கள்

Popular Posts