சோ - சசி - ஜெ - சூ.சுவாமி -இந்து ராம் ரகசிய மீட்டிங்ஏலகிரி மலை டமுக்கு டிப்பா எஸ்டேட்டில் சூடான தேநீரை பருகியபடி பெரிய பெரிய சோபாக்களை ஆக்ரமித்திருக்கிறார்கள்...

ஜெ: இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அறிக்கை விட்டுக்கிட்டு இருக்கிறதுன்னு தெரியல...சசி, நாளைக்கு என்ன அறிக்கை ?

சசி : ஆமாக்கா...எப்ப ஆட்சியை கலைக்கறது எப்ப நாம கோட்டைக்கு போறதுன்னு தெரியலைக்கா...கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்துல நாளைக்கு மீசை முனியாண்டி தலைமையில மின் வெட்டை கண்டித்து மறியல்...

சோ : நான் என்ன சொல்ல வர்ரேன்னா...

இந்து ராம் : அதான் வந்துட்டேளே...சொல்லுங்கோ...

சு.சுவாமி : நான் மொதல்ல சொல்றேன்னா...

சோ : டேய் நாந்தான் சொல்வேன்...

இந்து ராம் : சரி அவாளே சொல்லட்டும் விடுங்கோன்னா..

சோ : சரி சொல்லுங்கோ சுவாமிஜி

சு.சுவாமி : இப்ப குடிச்சிண்டிருக்கேளே டீ, இது மாதிரி ஒரு டீ.பார்ட்டியை நடத்தித்தான் தான் ஒபாமாவையே ஆட்சியில ஒக்கார வெச்சேன் தெரியுமோ ?

ஜெ : சார் என்ன சொல்றீங்க ?

சு.சுவாமி : ஆமா...ஹார்வர்ட்ல என்கிட்ட டியூஷன் படிச்சவன் தான் இவன்..அதுல நான் பாவம் பார்த்து பாஸ் போடலைன்னா இவன் பாஸாகியிருக்கவே மாட்டான்...சி.ஐ.ஏவில இருந்து நன்றி சொல்லி எனக்கு அவா லெட்டர் போட்டா.

சோ : நீ உடான்ஸ் உலகநாதனாச்சே...எங்கே அந்த லெட்டர் ? காட்டு பார்ப்போம் ?

சசி : அதானே, அந்த லெட்டரை காட்டுங்க பார்ப்போம் ?

சு.சுவாமி : அது...அது வந்து...ப்ளைட்ல ஒரு கொழந்தை ஆயி போயிருச்சு...அது தொடைக்க கொடுத்துட்டேன்...

இந்து ராம் : சார், நீங்க சூப்பரா புளுகுறீங்க...பேசாம என்னோட ஜர்னல்ல ஆர்ட்டிக்கிள் எழுத வந்துருங்க...

சோ : என்னுடைய துக்ளக் புக்குலயும் எழுதுங்க சார் !!!

ஜெ : ஷட்டப் ஆல் ஆப் யூ !!! நான் கொஞ்சம் தூங்கிட்டதால நீங்க எல்லோரும் கண்டமேனிக்கு பேசிட்டீங்களே ? நான் தான் பேசுவேன் !!!

சசி : அட ஆமாக்கா...!!! நாங்கூட இந்த சொட்டத்தலையனை பார்த்த்துக்கிட்டே நேரத்தை ஒட்டிட்டேன்...

<<< மூவரும் தங்கள் தலைகளை தடவிக்கொள்கிறார்கள் >>>

ஜெ : சரி...இப்ப அறிக்கைகளுக்கு ஐடியா கொடுங்க...ஸ்டீரியோ டைப் அறிக்கை விட்டு விட்டு போரடிக்குது...

சசி : ஆமாக்கா...கவுந்தப்பாடியில கரண்ட புடுங்குனதுக்கு ஆர்ப்பாட்டம், முருங்கப்பட்டி சுகாதார நிலையத்துல அனாசின் மாத்திரை இல்லாததுக்கு போராட்டம் அப்படீன்னு ஒரே மாதிரி போராட்டம் நடத்தி பயங்கரமா போரடிக்கறதா ஓ.பி வெளிய இருந்து கூப்பாடு போட்டாருக்கா...

ஜெ : சரி நீங்க மூனு தீவட்டி தடியனுங்க எதுக்கு இங்கே ஒக்காந்திருக்கீங்க ? ஐடியா கொடுங்க..

சு.சுவாமி : ஐடியா தானே ? இப்ப பாருங்கோ...ஒசாமா பின்லேடன் ஆயிரம் விளக்கு மசூதியில ஒளிஞ்சிண்டிருக்கான்ன்னு ஒபாமாவுக்கு லட்சக்கணக்குல தந்தி கொடுங்க...

சசி : ஏங்க்கா...இங்க இருந்து தந்தி கொடுத்தா அது அமெரிக்காவுக்கு எப்படிக்கா போகும் ? ப்ளைட்லயா ?

ஜெ : உன்னோட அறிவுல நண்டு கடிக்க...கொஞ்சம் சும்மா இருடி...மிஸ்டர் சோ...நீங்க சொல்லுங்க...

சோ : அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா...எங்கிட்ட கோனந்தபங்கரின்னு ஒருந்தர் இருக்கார். அவரை வெச்சு சுரபாகரன் சேப்பாக்ல தான் பங்கர் அமைச்சு தங்கியிருக்கான்னு துக்ளக்ல ஒரு ஆர்ட்டிக்கிள் எழுத வெக்குறேன்...நீங்க அதை சாக்கா வெச்சு சேப்பாக்ல போராட்டம் நடத்துங்க...அப்படியே மாஸ் அள்ளிரும்..

ஜெ : ச்சே..சகிக்கலை...மிஸ்டர் இந்து ராம் ? ஏன் உம்முனு இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி இருக்கீங்க ? பாரத் ரத்னா பட்டம் வேனுமா ? நான் ப்ரைம் மினிஸ்டர் ஆனவுடனே வாங்கி தரேன்...இப்ப ஐடியா சொல்லுங்க...

இந்து ராம் : பட்டம் எல்லாம் நானே வாங்கிக்கறேன்...என்னோட பொண்ணோட டிகிரியையே வாங்கீனவன் நான்...இப்ப ஐடியா சொல்றேன் கேளுங்க...பேசாம கொழும்பு போங்க...அங்கே ஏதாவது ஒரு புத்த விகார் முன்னால நின்னு சாமி கும்புடற மாதிரி ஒரு போஸ் கொடுங்க...அப்படியே ராஜபக்சேவை சந்தியுங்க...அப்புறம் இங்கே வந்து ராஜபக்சே சேலையை புடிச்சு இழுத்துட்டான்னு கண்ணீர் பேட்டி கொடுங்க...இலங்கை தமிழர், இந்திய தமிழர், மலையக தமிழர், இடம் பெயர்ந்த தமிழர் எல்லார்கிட்டயும் அப்ளாஸ் அள்ளிடலாம்...நீங்க தான் அடுத்த பி.எம்...

ஜெ: டேய் எனக்கு கொலைவெறி வர்ரதுக்குள்ள ஓடிப்போயிரு...

சு.சுவாமி : இப்பதான் சந்திரலேகா எஸ்.எம்.எஸ் பண்ணியிருக்கா...நிலாவுல சந்திரயான்ல இருந்து போற ராக்கெட்ட புலிகள் ஹேக் பண்ணியிருக்கா...அவாளோட கம்மியூனிக்கேஷனுக்கு அதை யூஸ் பண்றா..இதை வெச்சு இந்திய பிரதமர் மேல இண்டர்நேஷனல் கோர்ட்ல கேஸ் போடுவேன்...

ஜெ : டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...

<<<மூவரும் எஸ்கேப்>>>

சசி : அக்கா இவனுங்களை எல்லாம் தொரத்திரலாம்க்கா...என்னோட வீட்டுக்காரர் நடராஜன கூப்பிடலாமாக்கா ?

ஜெ : ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

<<<சசியும் எஸ்கேப்>>>

ஜெ தனியாக சிந்திக்கிறார்...

என்ன அறிக்கை விடலாம்...

ஈழ தமிழர்களை ஆதரிச்சு - விட்டாச்சு
புலிகளை எதிர்த்து - விட்டாச்சு
கரண்டு கட்டை எதிர்த்து - விட்டாச்சு

விட்டாச்சு
விட்டாச்சு
விட்டாச்சு
ஆயிரம்
ரெண்டாயிரம்
நாலாயிரம்
பிம்பிலிக்கா பிலாப்பி...
மாமா பிஸ்கோத்து...

<<< தலைமுடியை பிய்த்துக்கொள்கிறார் >>>

Comments

கபீஷ் said…
me the firstu!!

( பதிவ இன்னும் படிக்கல :-) )
கபீஷ்...

ரித்திஷ் மன்ற தானைத்தலைவி ராப்புக்கு போட்டியா நீர் ?
அதிஷா said…
ஐ... ஜாலி இங்க நிறைய ஆபாச பின்னூட்டம் வரும் போலருக்கே...

பிம்பிலிக்கு பிலாப்பி...

மாமா பிஸ்கோத்து
அதிஷா said…
அண்ணா ஏன் அதர் ஆப்ஷன தூக்கினேள்..
ரவி, அசத்தலா இருக்கு
குத்தூசி ‍‍> சின்னக் குத்தூசி > இளைய குத்தூசி
கற்பனையும் நகைச்சுவையும் கலந்த ஒரிஜெனல்.

ரவி சார், அசத்திட்டீங்க போங்க!!
அது சரி, ஏன் படத்துலெ எம்ஜிஆர் முன்னாடி கை கட்டி நிக்கிரீங்க?

ஓ ! பதிவு ஜெ வை ஓவரா நையாண்டி பண்றதால் பாவ மன்னிப்பா ?????????

;-)))
ஒபாமா ஹவர்டில படிக்கலியே? அவ்ரு படிச்சது சட்டம். சுவாமிக்கு அதுவும் தெரியாதே? என்ன சார் குழப்புறீங்க.

இருந்தாலும் சாமி அமெரிக்கவுக்கு விசிட்டிங் புரொபசர் தானுங்களே?
marudhu said…
Ravi,

I appreciate your attempt at humour.You have my sympathy.Please stop writing.Start some other hobby ,well within your capacity and abilities.
நன்றி அதிஷா !!!
நன்றி முரளிகண்ணன், இளையகரிகாலன், பழமைபேசி, ஆட்காட்டி..
marudhu said...
Ravi,

I appreciate your attempt at humour.You have my sympathy.Please stop writing.Start some other hobby ,well within your capacity and abilities.


அட டோமரு ? இத மூனு வருசம் முன்னாலியே சொல்லியிருக்கக்கூடாதாடா ?
ஜாலி இங்க நிறைய ஆபாச பின்னூட்டம் வரும் போலருக்கே...


இன்னும் இருக்கானுங்களா என்ன அவனுங்க ? சென்னை சைபர் கிரைமோட திறமையை பற்றி தெரிஞ்சிக்கிட்ட பின்னாலயும் ?
நன்றி வித்யாசாகரன்...
முரளி said…
good one. :) as good as imaginary articles that is published in thuklak :)
நன்றி முரளி, நன்றி ராபின்...!!!
படத்திலிருப்பவருக்கும்,
ரகசிய கூட்டம் நடத்துபவர்களுக்கும் என்ன சம்பந்தம்?
யாருக்கு தெரியும் ??

Popular posts from this blog

பிராமணர் = பறையர். கண்டுபிடித்தார் ஜெயமோகன்.

வலம்புரி சங்கு வேண்டும்...

விரைவாக விந்து வெளியேறுதல் அல்லது துரித ஸ்கலிதம்