டோண்டு ராகவன் : செந்தழலின் பார்வையில்....

நான் வலைப்பதிவுலகிற்கு 2006 பிப்ரவரி வாக்கில் வந்தபோது வலையுலகை உருட்டி பிரட்டிக்கொண்டிருந்த பிரச்சினை இப்போது இல்லை...

டோண்டுவை பெங்களூர் வலைப்பதிவில் சந்தித்ததில் இருந்து அவரது பதிவுகளை / மொக்கைகளை தொடர்ந்து படித்துவருகிறேன்...

டோண்டு பதிவில் பின்னூட்டம் இட்டுவிட்டு அதன் பலனை நானும் லக்கிலூக்கும் நன்றாகவே அனுபவித்துள்ளோம்...

கோவி.கண்ணன், மகேந்திரன், குழலி, செல்லா, ஜயராமன் உட்பட பலருக்கும் ஏதோ ஒரு வகையில் "மனக்கஷ்டம்" அல்லது "சைக்கோத்தனம்" அல்லது "அடுத்தவர் மீது காழ்ப்புணர்ச்சி" அல்லது "அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்பது" அல்லது "நல்லவர் போல் நடித்து இன்பம் காண்பது" என்று பல உணர்ச்சிகளை கொடுத்த பிரச்சினை எல்லாம் இப்போது இல்லை...

வைஸ் வர்ஸாவாக இல்லாமல் போய்விட்டது, யாருக்கு என்ன உணர்ச்சி என்பதை நீங்களே பொருத்திக்கொள்ளுங்கள்...படம் : திரு டோண்டு ராகவன் அவர்கள்...!!! (டோண்டுவின் படம் கிடைக்கவில்லை, அதனால் ஜெயகாந்தன் படத்தை போட்டிருக்கிறேன் )

டோண்டு ஒரு மசோக்கிஸ்ட் என்றார் குழலி...(அப்போது தான் அப்படி ஒரு வார்த்தை இருப்பதே எனக்கு தெரியும்...அதன் அர்த்தம் இன்றுவரை புரியவில்லை)..டோண்டுவே !!! தமிழ் வலைப்பதிவுலகை விட்டு வெளியேறு !!! என்று நானே பதிவிட்டுள்ளேன்...அது தவறு என்று அப்போதே உணர்ந்தேன்..ஆனான் அதற்காக இந்த இடத்தில் மன்னிப்பு கோருகிறேன்...

தனிப்பட்ட வாழ்வை விடுங்கள்...இந்த மூன்று ஆண்டுகளில நட்பு, கோபம், உணர்வு, பாசம், கண்ணீர், வேகம் என்று பல உணர்ச்சிகளும், அறிவியல்,அரசியல் போன்ற அறிவும் இந்த வலையுலகம் மூலமாகவும் வந்து சேர்ந்துள்ளன...

ஜஸ்ட் லைக் தட் கடந்துபோகவேண்டிய பதிவுலகம், என்னை இவ்வளவு தூரம் ஆக்ரமித்தது என்றால் அதற்கு டோண்டு ராகவன் பதிவில் போட்ட ஒரு சிங்கிள் பின்னூட்டமும் காரணம்...

பதிவுலகம் என்னை மெருகேற்றியிருக்கிறது. நிறைய பொறுமை, உலகை பற்றிய அறிவு, என்னுடைய சொந்த எழுத்து திறமை, நிறைய நன்பர்கள், ஆளுமை திறமை போன்றவை இந்த பதிவுலகம் எனக்கு கொடுத்த கொடைகள்...

அதனால் டோண்டு ராகவனுக்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள்...

இந்த பதிவு டோண்டு ராகவனை பற்றியது என்று திடீர் என்று நினைவுக்கு வந்து தொலைக்கிறது...

டோண்டு ராகவன் பற்றி சின்னதாக ஒரு பின்னூட்டம் போட்டு முடித்துவிடமுடியாது என்பதால் தான் இந்த தனிப்பதிவு...

அவருடைய என்னை புரட்டிப்போட்ட அந்த ஞாயிற்றுக்கிழமை , முரட்டு வைத்தியம் (சீரிஸ் பதிவுகள், முரட்டு வைத்தியம் என்ற லேபிளின் கீழ் பார்க்கவும்) போன்ற பதிவுகளை எப்போது மனக்கஷ்டம் ஏற்பட்டு உடைந்து போனாலும் படிப்பேன்...

தன்னை உணர்ந்தவனின் சுய பரிசோதனைகள் அவை...

ஆராதிக்கப்படவேண்டியவை...

கண்ணீரின் உப்பு வாயில் நனைக்க நனைக்க மீண்டும் மீண்டும் படிக்கப்படவேண்டியவை...

என்னைப்பொறுத்தவரை இதுவரை எந்த எழுத்தாளராளும் எழுதப்படாதவை...

பொக்கிஷமாக பாதுகாக்கப்படவேண்டியவை...

இளவஞ்சி எழுதியிருப்பார்...தனித்துவமானவன்...உங்களைப்போலவே...
என்று...

டோண்டுவின் சில தனிப்பட்ட (யுனீக்) குணங்கள் பற்றி சொல்லியே ஆகவேண்டும்...நீங்கள் தனித்துவமானவர் என்று எண்ணினால் இதுபோன்ற உங்களின் குணங்களை நீங்கள் பட்டியலிட முடிகிறதா என்று பாருங்கள்...

1. அசாத்திய பொறுமை : இதற்கு எடுத்துக்காட்டுகள் சொல்லவேண்டுமா என்ன ?

2. போராட்ட குணம் : தான் சரி / தவறு என்று நம்புவதை இறுதிவரை விடாமல் போராடும் குணம்...தன்னுடைய போலியோடு அவர் போராடியதை சொல்லலாம்...

3. போராட்ட குணம் : தான் சரி / தவறு என்று நம்புவதை இறுதிவரை விடாமல் போராடும் குணம்...சல்மா அயூப் விவகாரத்தை சொல்லலாம்...சல்மா என்பவர் ஒரு குறிப்பிட்ட நபர் என்று ஆதாரங்களோடு விளக்கியும் இன்னும் தன்னுடைய நிலையில் இருந்து மாறவில்லை...ஒரு வேளை ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை மாறலாம்...

4. நேர்மை..ஒரு வெள்ளிக்கிழமை கேள்வி எதுவும் வரவில்லை, அதனால் பதிவு போடவில்லை என்று சொல்லும் நேர்மை எத்தனைபேரிடம் இருக்கிறது ?

5. நெஞ்சுரம் : சகல தொழில்நுட்பங்களிலும் வித்தகரான அவருடைய போலியிடம் போராட அவரிடம் நெஞ்சுரத்தை தவிற வேறென்ன இருந்தது ? நாட்டாமையில் இருந்து ஹாரி பாட்டர் வரை கிளம்பி வந்தார்களே ?

மேலும் அவருடைய முரட்டு வைத்தியம் பதிவில் தொழிற்சங்கத்தை சேர்தவர்கள் பஸ்ஸில் ஏறவிடாமல் தடுத்தபோது அவர் செய்தது இது !!!

நான் என்ன செய்தேன் தெரியுமா? "நீ யாரடா ஜாட்டான் என்னை பஸ்ஸில் வர வேண்டாம் என்பது, நான் கூறுகிறேன் உன் பஸ் எனக்கு வேண்டாம்" என்று ஒரு சைக்கிள் வாங்கி அதில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். வீட்டிலிருந்து அலுவலகம் 20 கிலோமீட்டர். போக ஒரு மணி நேரம் வர ஒரு மணி நேரம் என்று 40 கிலோமீட்டர் பயணம் தினசரி. அப்போது எனக்கு வயது 42. ஆனால் சைக்கிளை கண்மண் தெரியா வேகத்தில் ஓட்டிச் செல்வேன். காற்றின் எதிர்த் திசையில் மனிக்கு 20 கி.மீ. வேகம், நேர்த் திசையில் 30 கி.மீ. வரை வேகம். திசம்பர், ஜனவரி மாதங்களில் அலுவலகம் அடைந்ததும் ஸ்வெட்டரைக் கழற்றி சட்டை வியர்வையால் உடம்பில் ஒட்டிக் கொள்ள நின்றவன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன். பகல் நேர வெப்ப அளவு 15 டிக்ரி செல்சியஸ் போல இருக்கும்.

சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் தலைமை அலுவலகத்துப் பொது மேலாளர் P.G. Zalani என்னை நேஷனல் ஹைவேயில் வியர்வையுடன் சைக்கிள் செலுத்தி வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். என்னைக் கூப்பிட்டு விசாரிக்க நான் அவரிடம் யூனியன்காரர்கள் செய்ததைக் கூற, உடனே அவர் அவர்களைத் தன் அறைக்கு வரவழைத்துக் கேட்டிருக்கிறார். அவர்களோ தாங்கள் ராகவனைக் குறித்துப் பேசவில்லை அவர் எப்போது வேண்டுமானாலும் பஸ்ஸில் வரலாம் என்றுக் கூறினர்.

இருந்தாலும் நான் ஒத்துக் கொள்ளவில்லை. "இதை ஒரு உடற்பயிற்சியாகச் செய்துக் கொள்கிறேன், நன்றி" என்றுக் கூறி விட்டேன்.


6. விடா முயற்சி : அவரே சொல்கிறார் பாருங்கள்...

ஊர் சுற்றியக் காலங்களில் நிறைய சினிமா பார்த்திருக்கிறேன் என்று தோன்றியது. ஒரு வெறுப்பில் இனிமேல் கோர்ஸ் முடியும் வரை திரைப் படம் பார்க்காமல் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தேன். என்னால் முடியாது என்று என் நண்பர்கள் என்னை வெறுப்பேற்ற என் வெறி அதிகமாயிற்று. 1969 ஜூலை வரை ஒரு படமும் பார்க்காமல் இருந்தேன். கோர்ஸ் முடிந்தப் பிறகுதான் படம் பார்த்தேன். ("பார் மகளே பார்")

என் அப்பாவே என்னிடம் அம்மாதிரியெல்லாம் சபதம் செய்ய அவசியமில்லை என்று கூறினாலும் நான் பிடிவாதமாக இதை சாதித்தேன். எது எப்படியானாலும் இது எனக்கு ஒரு வித நிறைவை அளித்தது. பிற்காலத்தில் பல விஷயங்களுக்குப் போராடியிருந்தாலும் என்னுடைய இந்த முதல் போராட்டம் என் மனதில் இப்போதும் நிலைத்து நிற்கிறது. "உன்னால் முடியும் தம்பி" என்று கூறுகிறது.


7. நியாபக திறன்...தொடர்ச்சியாக பல சம்பவங்களை ஏதோ நேற்று நடந்தது போல நினைவில் வைத்திருப்பது...

மச்சினிச்சி கல்யாண வீடியோயில் இருந்து பள்ளிக்கூடத்தில் வாத்தியார் நடத்திய பாடம் வரை இன்றுவரை நியாபகம் வைத்து சொல்வது...

வாழ்க்கையின் மீது தெளிந்த பார்வை உடையவர்களாலேயே இப்படி நியாபகம் வைத்திருக்கமுடியும்...

8. இளமை : இன்றும் இளைஞராகவே திரிவது, தன்னுடைய துனைவியாரை அவ்வப்போது இழுத்து அவர் மீது உள்ள அன்பை அடிக்கடி வெளிப்படுத்துவது...

எக்ஸ்கியூஸ்மீ ரவி.. ஒரு கிங்ஸ் கிடைக்குமா என்று பியர் அடித்து லெக் பீஸை கடித்துக்கொண்டே தி.நகர் பாரில் அவர் கேட்டதை நான் வெளியே சொல்லியிருக்கிறேனா என்ன ?

கடைசீயாக...

என்மேல் கிளப்பப்பட்ட பல அவதூறுகளுக்கு எல்லாம் நான் அவரிடம் சென்று விளக்கம் அளிக்கும் முன்பே உண்மையை அறிந்துகொண்ட கூரிய அறிவு...!!!

யாராவது அவதூறு கிளப்பினால், அதனால் டோண்டு சார் என்ன நினைத்துக்கொள்வாரோ என்று கவலை கொள்ளத்தேவையில்லை...காரணம் அவர் நம்மை நம்புகிறார் என்ற உணர்வே தெம்பைத்தரும் தெரியுமா ?

கருத்து ரீதியாக எனக்கும் அவருக்கும் பல வேறுபாடுகள் இருந்தாலும் நிபந்தனை அற்ற எதிர்பார்ப்புகள் அற்ற நட்பை தொடர்ந்து பாராட்டிவருவது...

ஏன் தொடர்ந்து காண்டு கஜேந்திரன் பதிவை எழுதி போதை ஏற்றிவரும் லக்கிலூக் தான் அவரது ஜெயா டிவி பேட்டியை பல இன்னல்களுக்கிடையே சி.டியில் காப்பி செய்து அவரை தேடி சென்று கொடுத்தவர்...

தீவிர திராவிட சிந்தனை உள்ளவரான லக்கியிடம் அவருக்கு நட்பு என்ற செய்தி, அவர் நட்பு பார்க்க மற்ற வடகலையார்கள் செய்வது போல தோள் சட்டையை தொட்டு பார்ப்பவர் அல்ல என்ற செய்தியை சொல்கிறதல்லவா ? ( என்ன வரவணையான் என்றால் தான் அவருக்கு கொஞ்சம் ஆகாது கிகிகி - டோண்டு சார் அடித்த கிங்ஸுக்கு வரவணை பில்லு போட்டது தான் காரணம் கிகிகி)நானும் வரவணையானும் (இருவரும் மப்பில்)படத்தை எடுத்தவர் ஓசை செல்லா !!!! லக்கிலூக் எதிர் பக்கத்தில் தண்ணியடிப்பதால் அவர் இந்த படத்தில் இல்லை...

அவ்வளது தான் டோண்டு சார் புராணம்...

இந்த பதிவு யாருக்கு கோபம் தரும், யாருக்கு நிறைவு தரும் என்பதை பற்றிய கவலை எனக்கில்லை...

எனக்கு நிறைவாக இருக்கிறது...!!!

Comments

//இந்த பதிவு யாருக்கு கோபம் தரும், யாருக்கு நிறைவு தரும் என்பதை பற்றிய கவலை எனக்கில்லை...
//
கலக்குறே மாமு... ஸாரி பார்ப்பன அடிவருடி :-)
டோண்டு பற்றி எனக்கு பெரிய அளவில் மதிப்பில்லை என்றாலும் சில விடயங்களில் நிச்சயம் மதிப்பு உண்டு...

உண்மையில் டோண்டுவின் சாதனைகள் என்று அவர் நம்புவதோ(?) அல்லது பேசுவதோ சாதனைகளே அல்ல... 60-70 களில் எஞ்சினியரிங் தலைசிறந்த கல்லூரியில் படித்த, அந்த காலத்திலேயே மற்ற சமூகத்தினருக்கு கிடைக்காத ஒரு குடும்ப பிண்ணனி கிடைத்த, இப்போது போன்று அப்போது அத்தனை போட்டியில்லாத(இப்போ எல்லா சமூகத்திலிருந்தும் ஆள் வந்தாச்சி என்பதால் போட்டி மிக கடுமை) நிலையில் டோண்டு சாதித்தது என்ன என்று பார்த்தால் ஹெவிவெயிட் சாம்ப்பியனில் கடைசியாக வந்தவர் தூக்கிய எடையை 45கிலோ பிரிவில் பதக்கம் வென்றவர் தூக்கிய எடையோடு ஒப்பிட்டு பார்ப்பட்கற்கு சமம்....
குழலி அது என்னா அந்த சில விஷயம்னு சொன்னீங்கன்னா பெட்டர்.....
இது வரை யாருடைய எந்த பதிவிலுமே நான் பார்க்காத ஒரு விஷயம் இந்த பதிவில் உண்டு. சாதாரணமாக வலைப்பூவின் முதல் பக்கத்தில் இருக்கும்போது பதிவுகள் பொதுவாக இருக்கும். அம்மாதிரி இருக்கும் பதிவுகளின் ஒன்றின் தலைப்பில் க்ளிக் செய்தால் அப்பதிவு மட்டும் பின்னூட்டங்களுடன் திறக்கும். ஆனால் உங்களது இப்பதிவின் தலைப்பில் மட்டும் அவ்வாறு நான் செய்த போது எனது வலைப்பூ வருகிறது. இது எப்படி சாத்தியம்? தலைப்பில் ஹைப்பர்லிங் கொடுத்தீர்களா?

ஜெயகாந்தன் என்னை உங்களுக்கு நினைவுபடுத்துகிறார் என்பதில் மகிழ்ச்சி.

என்னை நீக்க வேண்டும் என தமிழ்மணத்துக்கு இட்ட கோரிக்கையின் பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ:
//போலி டோண்டு மூர்த்தி உன்னுடன் நடந்த மின்னஞ்சல் கான்வர்சேஷனை வெளியிட்டுள்ளானே என்று ஒரு நன்பர் கேட்டுள்ளார்...அவனுடைய நம்பிக்கையை பெற்று அவனுக்கு "ஸ்பெஷல் ஆப்பு" வைக்க செய்த முயற்சி. அதன் பலனாகத்தான் விடாது கருப்பு, மூர்த்தி, போலி டோண்டு எல்லாம் ஒன்று என்று அறிந்தேன்...//

இதை முழுமனதோடு ஒத்து கொள்கிறேன். உபசாரத்துக்கு கூறவில்லை. பெங்களூர் சந்திப்பில் உங்களை பார்த்து பேசியுள்ளேன். நிச்சயமாகக் கூறுவேன், உங்கள் பார்வையில் போலித்தனம் இல்லை. ஆகவே அது சம்பந்தமாக நீங்கள் போலிக்கு அனுப்பியதாகக் காட்டப்பட்ட மின்னஞ்சல்கள் எனக்குள் புன்முறுவலையே வரவழைத்தன.

I was even a little moved to think that you risked your good name in this venture. My thanks are due to you.

//தமிழ்மணத்தார் நீக்குவதை விட டோண்டுவுக்கே நான் வைக்கும் கோரிக்கை, தமிழ் வலையுலகில் இருந்து விலகவேண்டும் தாங்கள்.//
விலக வேண்டும் என்று எனக்கு இதுவரை தோன்றவில்லை. கடந்த ஏப்ரல் மாதமே என் நண்பர்களும் நண்பரல்லாதவர்களும் இதைத்தான் விரும்பினார்கள். அதற்காக பின்னவர்கள் என்னை ரொம்பவெல்லாம் சீண்டினார்கள். ஆனாலும் நான் விலக மாட்டேன் என்றே பதிவு போட்டேன். அந்த நிலையில் எந்த மாறுதலும் இல்லை. கூறப்போனால் இப்போது அதற்கானக் காரணங்களும் குறைவே. முக்கியமாக மூர்த்தி பெயருடன் அடையாளம் காணப்பட்டான்.

வேண்டுமென்றே நான் அவனை வளர்த்தேன் எனக் கூறுபவர்களுக்கு நான் என்ன கூற முடியும்? அது அவர்கள் கருத்து.

மட்டுறுத்தல் வந்த போதும் என்னை தமிழ்மணத்திலிருந்து தூக்கினால் எல்லாம் சரியாகப் போகும் என்று தன்னிடம் கூறியதாக அப்போதைய நிர்வாகி என்னிடம் கூறினார். ஆகவே இப்போது அதே கோரிக்கை வைக்கப்படும்போது ஏதோ பிளேஷ் பேக் பார்ப்பது போல உள்ளது//.

ஹாரி பாட்டரில் வந்த ஸ்னேப் பாத்திரம் போல நீங்கள் செயல்பட்டீர்கள் என்றும் வேறு இடங்களில் கூறியுள்ளேன்.

//ஏன் தொடர்ந்து காண்டு கஜேந்திரன் பதிவை எழுதி போதை ஏற்றிவரும் லக்கிலூக் தான் அவரது ஜெயா டிவி பேட்டியை பல இன்னல்களுக்கிடையே சி.டியில் காப்பி செய்து அவரை தேடி சென்று கொடுத்தவர்...//
காண்டு கஜேந்திரன் பதிவுகளின் முதல் ரசிகன் நான். சி.டி. விஷயத்தில் லக்கி என்ன ஏமாற்றி விட்டார். முதலில் நூறு ரூபாய் ஆகும் என்று சொன்னவர் சி.டி.ஐ. தரும்போது நான் அவருக்கு பணம் தர அதை வாங்க மாட்டேன் எனக் கூறி என்னை ஏமாற்றி விட்டதைத்தான் கூறுகிறேன்.

போலி விவகாரத்தால் துயரமடைந்தவர்களில் முக்கியமானவர் பதிவர் ராஜா. என் வீட்டுக்கு வந்து 3 மணி நேரம் பேசியவர் கடைசியில் கூறியது எனக்கு சிரிப்பையே வரவழைத்தது. அதாவது போலி என்னை இவ்வளவு தாக்கும்போது என்னை எதிர்த்து எழுத அவருக்கு மனம் வரவில்லை என சங்கடப்பட்டார். அது வேறு, இது வேறு எனக் கூறி அவர் கருத்தை தடையின்றி போடச் சொன்னது வேறு விஷயம்.

வரவணையான் விஷயத்துக்கு வருவோமா. பொட்டீக்கடை வந்த போது வரவணையான் என் அருகில் வந்து மெதுவாக, “டோண்டு மாமா, சத்யா பதிவர்களுக்கு ஏதேனும் சாப்பிட வாங்கித்தர எண்ணுகிறார். என்ன வாங்கலாம்” என்று என்னிடம் ஆலோசனை கேட்க, அந்த இடத்தில் கிடைக்கக் கூடிய குச்சி ஐஸ் வாங்கித் தருமாறு கூறினேன். போலி டோண்டு மேல் நீங்கள் சைபர் கிரைமுக்கு தந்த புகாரில் அவரும் பின்னணி வகித்தார் என்றும் உண்மைத் தமிழன் கூறி அறிந்தேன். ஆகஸ்ட் இரண்டாம் தேதி அவரும் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த போது என்னிடம் சாதாரணமாகவே பேசினார்.

@குழலி. நான் செய்ததாகக் கூறிக் கொண்ட சாதனைகள் கண்டிப்பாக பொறியியல் துறையில் அல்ல. மொழிபெயர்ப்புத் துறையில்தான். பொறியியல் படிப்பு அதற்கு துணை போயிற்று அவ்வளவுதான். இப்போது மறுபடியும் கூறுவேன் தில்லியில் நான் இருந்த போதும் சரி இப்போது சென்னையில் இருக்கும்போதும் முன்னணி மொழிபெயர்ப்பாளர்களிடையே எனக்கு தனியிடம் உண்டு என்று கூறிக் கொள்வதில் எனக்கு தயக்கமோ போலி அடக்கமோ இல்லை.

//நாட்டாமையில் இருந்து ஹாரி பாட்டர் வரை கிளம்பி வந்தார்களே?//
நாட்டாமை, அறவாழி அந்தணன், வெங்கடேஷ் சர்மா, ராஜ் சந்திரா, கிருஷ்ணன், பஜ்ஜி, ஹாரி பாட்டர், கட்டபொம்மன், முனிவேலு ஆகியோர் நல்ல நண்பர்கள். அவர்களிடம் எப்போதுமே எனக்கும் முரளிமனோஹருக்கும் நன்றி உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்
நல்ல பதிவு செந்தழல்.

டோண்டு அவர்களின் அரசியல் பார்வைகளைத் தவிர்த்து அவரிடமிருந்து நாம் அறிந்து கொள்ளவும்/பாராட்டவும் பல விடயங்கள் உண்டு. தன்னம்பிக்கை சார்ந்த விடயங்களில் அவரின் அணுகுமுறை, வயது குறித்தான தெளிவு, விடாமுயற்சி, வெளிப்படையாக பேசுவது என்பன முக்கியமானவை ஆகும்.பிறர் பாராட்டுகளுக்காகவோ/விமர்சனத்திற்காகவோ தன் பிம்பத்தை மாற்றிக்கொள்ளாத நேர்மை அவரிடம் பிடித்த விசயம். அவரின் நேர்/எதிர்மறை குணங்களை புரிந்தவரால் மட்டுமே அவரிடம் நண்பராக இருக்க முடியும்.
//லக்கிலூக் எதிர் பக்கத்தில் தண்ணியடிப்பதால் அவர் இந்த படத்தில் இல்லை...//

லக்கி உங்களுக்காக மிக்ஸிங்குக்கு தண்ணி அடிக்க பைப்புக்கு போனதைதானே இப்படி சொல்லி இருக்கீங்க!!!:))

(மீதி பதிவுக்கு மீ தி எஸ்கேப்பு:)) இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை?:)))
ஜோ / Joe said…
//டோண்டு அவர்களின் அரசியல் பார்வைகளைத் தவிர்த்து அவரிடமிருந்து நாம் அறிந்து கொள்ளவும்/பாராட்டவும் பல விடயங்கள் உண்டு. தன்னம்பிக்கை சார்ந்த விடயங்களில் அவரின் அணுகுமுறை, வயது குறித்தான தெளிவு, விடாமுயற்சி, வெளிப்படையாக பேசுவது என்பன முக்கியமானவை ஆகும்.பிறர் பாராட்டுகளுக்காகவோ/விமர்சனத்திற்காகவோ தன் பிம்பத்தை மாற்றிக்கொள்ளாத நேர்மை அவரிடம் பிடித்த விசயம். //

வழிமொழிகிறேன்.
Bharath said…
உங்க range எங்கயோ போயிட்ருக்கு.. A nice ture/balanced article..

already குழலி அவர் range ல பதில் போட்டுவிட்டார். i'm waiting for the others..

Dondu is not one of my top 10 favorites but i follow his blog pretty regularly.. i completely agree with u on this blog matter
டோண்டுவுக்கும், கலைஞருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. விரிவாக ஒரு ஆய்வுப்பதிவே இதைப்பற்றிப் போடலாம். இருவருக்கும் பொதுவாக ‘பளிச்'சென்றிருக்கும் ஒற்றுமை கடின உழைப்பு!
///டோண்டுவுக்கும், கலைஞருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. விரிவாக ஒரு ஆய்வுப்பதிவே இதைப்பற்றிப் போடலாம். இருவருக்கும் பொதுவாக ‘பளிச்'சென்றிருக்கும் ஒற்றுமை கடின உழைப்பு!////

எக்ஸலண்ட் லக்கி...அதை மட்டும் தான் மிஸ் பண்ணிவிட்டேன் என்று நினைக்கிறேன்...செய்த உழைப்புக்கு காசு வசூலிப்பதிலும் அய்யா கறார் பேர்வழி தான்...!!!
///லக்கி உங்களுக்காக மிக்ஸிங்குக்கு தண்ணி அடிக்க பைப்புக்கு போனதைதானே இப்படி சொல்லி இருக்கீங்க!!!:))///

இந்த அளவுக்கு வலையுலகம் அவரை நம்புகிறதா ??
நன்றி ஜோ, குசும்பன், முத்து, பாரதி
Bharath said…
அண்ணே என் பேரு பரத்.. பாரதி ஆக்கிடீங்களே..
//எக்ஸலண்ட் லக்கி...அதை மட்டும் தான் மிஸ் பண்ணிவிட்டேன் என்று நினைக்கிறேன்...செய்த உழைப்புக்கு காசு வசூலிப்பதிலும் அய்யா கறார் பேர்வழி தான்...!!!//

இதிலும் அவர்களிருவருக்கும் ஒற்றுமை உண்டு.

(எவனாவது அனானியா சொல்றதுக்கு முன்னாடி நானே சொல்றேன். இப்போவெல்லாம் பிரபல பதிவர்களே அனானியா தான் பின்னூட்டம் போடுறானுங்களாம்)
Pot"tea" kadai said…
//இது வரை யாருடைய எந்த பதிவிலுமே நான் பார்க்காத ஒரு விஷயம் இந்த பதிவில் உண்டு. சாதாரணமாக வலைப்பூவின் முதல் பக்கத்தில் இருக்கும்போது பதிவுகள் பொதுவாக இருக்கும். அம்மாதிரி இருக்கும் பதிவுகளின் ஒன்றின் தலைப்பில் க்ளிக் செய்தால் அப்பதிவு மட்டும் பின்னூட்டங்களுடன் திறக்கும். ஆனால் உங்களது இப்பதிவின் தலைப்பில் மட்டும் அவ்வாறு நான் செய்த போது எனது வலைப்பூ வருகிறது. இது எப்படி சாத்தியம்? தலைப்பில் ஹைப்பர்லிங் கொடுத்தீர்களா?//

அச்சோ டோண்டு மாமா...கன்னிமரா லைப்ரரியில் இப்படித்தான் கோப்புகள் சேமிப்பார்கள் என்று டகால்டி காமித்தது கண்டு பிரமித்ததுண்டு. இதை இப்படி மிஸ் பண்ணிட்டீங்களே...

என்னுடைய பழைய பதிவுகளின் (2006 வாக்கில்) எழுதிய பதிவுகளின் தலைப்பைச் சொடுக்கினால் பல பயனான தகவல்களைப் பெற்றிருக்கலாம். அல்லது பெரும்பாலும் மூலத்தின் இணைப்பை தலைப்பிலேயே தந்துவிட்டு ஆதாரம், அல்லது நன்றி அறிவிக்காமல் இருந்ததும் உண்டு.

ப்லொக்கரின் தலைப்பை அடிக்கும்போது கீழே ஒரு ஹைப்பர்லிங்க் பொட்"டீ" இருக்குமே அது எதுக்குன்னே உங்களுக்குத் தெரியாதா?
சரி விடுங்க...

****
போண்டா மாமாவைப் பற்றி அவ்வளவாக பழகி அறிந்ததில்லை என்பதனால் பெரிதாக அபிப்ராயம் வைத்துக் கொண்டதில்லை. ஆனால் 'crooked" இல்லை என் உறுதியாகச் சொல்லுவேன்.
// எக்ஸ்கியூஸ்மீ ரவி.. ஒரு கிங்ஸ் கிடைக்குமா என்று பியர் அடித்து லெக் பீஸை கடித்துக்கொண்டே தி.நகர் பாரில் அவர் கேட்டதை நான் வெளியே சொல்லியிருக்கிறேனா என்ன ? //
ஓவர் குசும்பு உங்களுக்கு...
என்னா ஒரு நகைச்சுவைத் தனம்....????
கபீஷ் said…
முத்து குமரன், பரத்தை வழி மொழிகிறேன். கலக்கல் பதிவு ரவி. திரு. டோண்டுவின் தைரியம், ஞாபக சக்தி அசாத்தியமானது.
வாழ்த்துக்கள் டோண்டூ ஐயா
///ஓவர் குசும்பு உங்களுக்கு...
என்னா ஒரு நகைச்சுவைத் தனம்....????///

ஏய் இது உண்மை மேன்...!!!
நன்றி பரத்...!!!
பொட்டீ...டோண்டு மாமா ஒருமுறை கூகிள் ரீடர் என்றால் என்ன என்று கூட கேட்டிருக்கிறார்...

லூஸ்ல விடவும்...
டோண்டு விடம் கற்க நிறைய விஷயங்கள் இருந்தாலும் அவர் பெயரை கேட்டவுடன் எனக்கு வடிவேலு நியாபகம் தான் வரும் எவ்வுளவு அடிச்சாலும் தாங்குவார் ஆனால் அம்முட்டு அடியையும் விளம்பரமாய் மாத்திகுவார் :))
அவரவர் பணியை அவரவர் ஒழுங்காகச் செய்தால் - யாரும் யாரையும் அடி வருட வேண்டாம்.

2008 லயும் இந்த மாதிரிக் குசும்புக்காகக் கூடப் பேசாதீங்க..மனசு சரியில்லாமல் போச்சுங்க

//குழலி / kuzhali said...
கலக்குறே மாமு... ஸாரி பார்ப்பன அடிவருடி :-)//
இதில் எனக்கு மாற்றுக்கருத்து ஏதும் இல்லை.

//டோண்டு விடம் கற்க நிறைய விஷயங்கள் இருந்தாலும் அவர் பெயரை கேட்டவுடன் எனக்கு வடிவேலு நியாபகம் தான் வரும் எவ்வுளவு அடிச்சாலும் தாங்குவார் ஆனால் அம்முட்டு அடியையும் விளம்பரமாய் மாத்திகுவார் :))
அதேதான்..
//இது எப்படி சாத்தியம்? தலைப்பில் ஹைப்பர்லிங் கொடுத்தீர்களா?
அவருடைய அரசியல் பார்வைகள், சோ மீதான வெறித்தனமான பாசம் போன்றவை தவிர்த்து அவரது உழைப்பு போன்ற விசயங்களில் எனக்கு அவர்மேல் அபார மரியாதை உண்டு.

ஆனா அந்த பீர், லெக் ஃபீஸ், கிங்ஸ் எல்லாம் நம்பவே முடியல.
//எக்ஸ்கியூஸ்மீ ரவி.. ஒரு கிங்ஸ் கிடைக்குமா என்று பியர் அடித்து லெக் பீஸை கடித்துக்கொண்டே தி.நகர் பாரில் அவர் கேட்டதை நான் வெளியே சொல்லியிருக்கிறேனா என்ன ?//

நான் ஆம்லேட் எடுத்து சாப்பிட்டதை மட்டும் சொல்லலாமா?
டோண்டு சார்
ஆஃசிப் வீட்டு கல்யாணத்தில் மட்டன் பிரியாணியை வெட்டியதை யாரும் பார்க்கவில்லையா?
@வால்பையன்:
ஆசிஃப் வீட்டு கல்யாணத்துக்கு சென்றதன் முக்கிய நோக்கமே பிரியாணிதானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்
OSAI Chella said…
Ravi, I almost agree with all your points!! We have many ups and lows in our relationships... but he is always a nice person to befriend.

Popular Posts