மனித கேடயங்களா மக்கள் ?

நேற்று உணவு மேசையில், ஈழப்பிரச்சினை குறித்து பேச்சு வந்தது..அங்கே நடைபெறும் மனித அவலம் பற்றியும், மருத்துவமனைகளில் எறிகணைகளை வீசும் நாஜி இலங்கை அரசு பற்றியும் எதிரே அமர்ந்திருந்த பலநாட்டவர்களிடம் கவலையுடன் விவரித்துக்கொண்டிருந்தபோது, ஒரு இந்தி'யர் எதிரே வந்து அமர்ந்தார்..

வந்தமர்ந்தவர், படீரென ஒரு கருத்தை தெரிவித்தார். நான் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தேன்..

ஓ ஸ்ரீலங்கா இஷ்யூ ? அங்கே விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துகிறார்கள் தெரியுமா ? அதனால் தான் அப்பாவி மக்கள் சாகிறார்கள்...என்றார்..

மருத்துவமனையை நோக்கி பல்குழல் எறிகளைகள் மூலம் பாஸ்பரஸ் குண்டுகளையும், மீயொலி விமானங்களின் மூலம் கொத்து குண்டுகளையும் இலங்கை அரசாங்கம் வீசுவதை புதினத்தையும், தமிழ்நெட் இணையதளத்தையும் பார்த்து கவலையோடு அவதானிக்கும் நம்மைப்போல அவர் புதினம் இதழையோ, தமிழ்நெட் இணையத்தளத்தையோ பார்வையிடுபவர் அல்ல...

இந்தியாவில் இருந்து வெளியாகும் ஹிந்து, டைம்ஸ் நவ், சி.என்.என் ஐபிஎன் போன்ற ஊடகங்களை பார்வையிடுபவர்..

அவரின் இந்த கருத்தானது, ஸ்ரீலங்கா அரசு தன்னுடைய ப்ரொப்பகண்டா வார் (பரப்புரை யுத்தம்) மூலம் எவ்வளவு வெற்றிகளை பெற்றுள்ளது என்பதையே காட்டுகிறது...பரப்புரை யுத்தம் என்பது, கத்தியின்றி ரத்தமின்றி முன்னெடுக்கப்படுவதாகும்...அந்த பரப்புரை யுத்தம் பற்றி சமகால உதாரணத்தை சொல்லவேண்டும் என்றால் அது ஈராக் மீது அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பு போரை சொல்லலாம்...

இந்த பரப்புரை யுத்தத்தில் அமெரிக்க அரசு அடைந்த லாபங்கள் என்ன ? பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இருப்பதாக சர்வதேச சமூகத்தை அமெரிக்க அரசு எவ்வாறு நம்பவைத்தது என்று எவ்வளவோ எழுதலாம்...

ஒரு சிறிய ஓட்டளிப்பு முடிவுகளை உங்கள் பார்வைக்கு வைப்பதன் மூலமும், ஆங்கிலத்தில் இருக்கும் ஒரு சுட்டியை உங்களுக்கு தருவதன் மூலமும் கொஞ்சம் விளங்கவைக்கமுடியும்..

48% incorrectly believed that evidence of links between Iraq and al Qaeda have been found,

22% that weapons of mass destruction have been found in Iraq,
25% that world public opinion favored the US going to war with Iraq,
overall 60% had at least one of these three misperceptions,
the frequency of Americans’ misperceptions varies significantly depending on their source of news,
those who primarily watch Fox News are significantly more likely to have misperceptions, while those who primarily listen to NPR or watch PBS are significantly less likely,
among those with none of the misperceptions listed above, only 23% support the war,
among those with one of these misperceptions, 53% support the war, rising to 78% for those who have two of the misperceptions, and to 86% for those with all 3 misperceptions.

ஏற்கனவே பல இன அழிப்பு போர்களில் ஈடுபட்ட போலி கம்யூனிஸ்டு ருஷ்ய அரசாங்கத்திடம் இருந்து சர்வதேச அதிகார மையங்கள் பெற்றுக்கொண்ட தீமைகளில் இது முதன்மையானது என்பேன்...

ஹிட்லரிடமிருந்தும், போலி கம்யூனிஸ்டுகளிடமிருந்தும், பல்வேறு இன ஒழிப்பு பாசிச அரசாங்களிடமிருந்தும் பெற்றுக்கொண்ட ஆயுதங்களில் இலங்கை அரசாங்கம் முதன்மையாக பயன்படுத்தி வெற்றி காண்பது இந்த பரப்புரை யுத்தம்தான்...

பாரீசில், ஜெர்மனியில், பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரங்கள் வைத்த 'தீவிரவாதிகளை' பற்றிய கண்காட்சியில் இடம்பெற்ற போலியான படங்களும், அவர்கள் வினியோகித்த கட்டுரைகளும் இந்த பரப்புரை யுத்தத்தின் ஒரு பகுதியாம்...ஜெர்மனியில் வெளிப்படையாக இதனை எதிர்த்து கேள்விகேட்ட தமிழரை, தூதரக அதிகாரிகள் அடித்து உதைத்து வெளியே தள்ளிய சம்பவம் இடம்பெற்றுள்ளது...

இன்னும் ஒரு விடயத்தை பார்க்கலாம்...இந்தியாவில் இருந்து வெளியாகும் ஆங்கில இதழ்கள், ஊடகங்களின் பிரதிநிதிகள், காலே-கண்டி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டு, நன்கு மகிழ்விக்கப்பட்டு, நல்ல பரிசுப்பொருட்களுடன் இந்தியா திரும்பியுள்ளார்கள்...

அவர்களுக்கு புலிகள் தீவிரவாதிகளாக தெரிவதிலும் வியப்பில்லை, புலிகள் மனித கேடயங்களாக மக்களை பயன்படுத்துகிறார்கள் என்று எழுத அவர்களின் பேனா கூச்சப்படவும் போவதில்லை...

இலங்கை அரசாங்கத்திடம் வாங்கிய ரொட்டித்துண்டுக்கும், இலங்கை அரசின் பிஸ்கெட்டுக்கும் வாலை வளையவளைய ஆட்டுகிறார்கள்...

தமிழரல்லாத இந்திய பொதுமக்களையும், ஹிந்துவும் ப்ரண்ட்லைனும் படிக்கும் அய்.ஏ.எஸ் அதிகாரிகளையும், காவல் அதிகாரிகளையும், உயர் பதவியில் இருப்பவர்களையும், தொழிலதிபர்களையும், அவர்களின் பிள்ளைகளையும் பொய்யான தகவல்களை நம்பவைக்கிறார்கள்...இலங்கை அரசின் கருத்துக்களை திணிக்கிறார்கள்...

வேறு ஒரு தகவல் உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடும்..

லங்கா ரத்னா ஹிந்து ராம் நடத்தும் ஊடகத்தின் வாராந்திர கூட்டத்தில் இந்தியாவுக்கான இலங்கைத்தூதர் அம்சமாக கலந்துகொள்கிறார் என்பதே அந்த தகவல்...

இந்த பரப்புரை யுத்தத்தின் பிஸ்கெட் துண்டுகளுக்காக ஹிந்து இதழ் தொடர்ந்து தமிழர் எதிர்ப்பு நிலை எடுத்துவருவதும், தமிழர் அல்லாத ஒருவரால நிறுவப்பட்ட தினமலர் என்ற தமிழ் நாளிதழ் தொடர்ந்து நச்சு கருத்துக்களை தமிழர் மத்தியிலே பரப்பி வருவதும் எவ்வளவு கீழ்த்தரமானது ?

ஹிந்து ராம் பெற்ற லங்கா ரத்னா பட்டம் போல அந்துமணி ரமேஷ் லென்சு மாமாவுடன் காலே-கண்டிப் பயண கட்டுரை எழுதினால் ஆச்சர்யம் ஒன்றுமில்லல...

இப்போது திடீரென பாரதீய ஜனதா கட்சி ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது கூட எவனாவது சோ'மாறி யின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க இயலவில்லை...பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவான் இந்த துக்ளக்.

வேறு ஒரு செய்தியையும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்...

அமெரிக்க அரசின் அடிப்பொடியான சி.என்.என் தொலைக்காட்சியின் விவாதம் ஒன்றில், விவாதத்தை நடத்துபவர் ஒரு தமிழ் பேராசிரியரிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறார்...

" வெறும் நான்கு சதவீதம் தமிழ் மக்கள், சிங்கள மக்களின் தாய்நாட்டில் முப்பது சதவீதம் நிலங்களை கோரினால் எப்படி ? "

நடுநிலையாக அமர்ந்திருந்த அந்த அறிவிஜீவி தொகுப்பாளரின் இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத பேராசிரியரோ, தமிழர்கள் ரொம்பகாலமாக அங்கே வாழ்கிறார்கள் என்பதுபோல ஏதோ சொல்லிவைத்தார்...

ஸ்ரீலங்கா அரசினதும், மற்றும் சர்வதேசங்களால் முன்னெடுக்கப்படுவதுமான பரப்புரை யுத்தத்தின் வீச்சு, ஒரு தொலைக்காட்சி தொகுப்பை வழங்கும் ஒரு செய்தியாளரிடம் ஒரு பொய்யை, புரட்டை, கொண்டு சென்றுள்ளது...

இன்னொன்றையும் இங்கே சொல்லவேண்டும்...

ஸ்ரீலங்காவின் சர்வாதிகாரி ங்கோத்தபய, ஊடகங்களை மிரட்டும் விதத்தில் அறிக்கை வெளியிட்டதோடு, தூதரக அதிகாரிகளையும் எச்சரிக்கிறார்.

தோதாக இரு, இல்லை என்றால் ஒழிந்துபோ என்பது தான் அவரது அறிக்கையின் சாரம்.

ஸ்ரீலங்கா அரசினது சர்வாதிகாரம், அதனால் முன்னெடுக்கப்படும் பரப்புரை யுத்தத்துக்கு துணை போகவில்லை என்றால் கொல்கிறது, உதாரணம் லசந்த விக்ரமதுங்க.தன் சாவுக்கு மகிந்த ராஜபக்ஷே காரணமாயிருப்பான் என்று அறிந்துவிட்டான் அந்த லசந்த என்னும் பத்திரிக்கையாளன்...

வேறு ஒரு செய்தியையும் இங்கே பகிர்ந்துகொள்ளவேண்டும்...இன்றைக்கு பத்திரிக்கை செய்திகளின் சாரம், இலங்கை அரசின் விமான படையை சேர்ந்த, செஞ்சோலைகளை ரத்த சோலைகளாக்கிய வல்லூறுகளை இயக்கிய விமானிகள், சென்னை தாம்பரத்துக்கு மேலதிக பயிற்சிக்காக இந்தியா வந்துள்ளார்கள்..

யாருக்கும் தெரியாமல் போயிருந்தால் பரவாயில்லை...மக்கள் தொலைக்காட்சியினரும் மக்களும் அதை பார்த்து, படம் பிடித்து, அதை அம்பலப்படுத்தியதால், தமிழக முதல்வர் இந்திய பாதுகாப்பு அமைச்சில் பேசி, அவர்களை வெளியேற்றுமாறு தலைமைச்செயலாளரிடம் கூறுகிறார்.

தமிழக தலைமைச்செயலாளரும், இலங்கை விமானப்படை விமானிகள் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டதாக செய்திக்குறிப்பை வெளியிடுகிறார்.

ஆனால் இந்திய பாதுகாப்பு அமைச்சு, தமிழக முதல்வரிடம் கண்ணாமூச்சி விளையாடி, அவர்களை பெங்களூர் எலகங்கா விமானப்படைத்தளத்துக்கு அனுப்பி பயிற்சி பெறவைக்கிறார்கள்...ஏ.கே.அந்தோனி, சிவசங்கர மேனன், எம்.கே.நாராயணன் போன்ற மலையாளிகளிடம் தமிழர்களுக்கு ஆதரவான உணர்வை என்றைக்குமே எதிர்பார்க்க முடியாது...இவர்கள் இந்த பரப்புரை யுத்தத்துக்கு பலியாகி இருக்கிறார்கள், அதனுடன், அந்த பரப்புரையோடு சேர்ந்து இழைந்த துரோகத்தையும் செய்ய மிகுந்த விரும்பமுடன் இருக்கிறார்கள்...ஒரு மாநில முதல் அமைச்சரை ஏமாற்றுவதற்கு கூட தயங்கவில்லை இவர்கள்...

வீரமுரசு முத்துக்குமாரின் மரணத்தின் பின்னால் ஒவ்வொரு நாளும் கொதித்துக்கொண்டிருக்கும் தமிழகத்தின் உணர்ச்சியை, உணர்வெழுற்சியை, தன்னெழுந்த இன உணர்வை, இந்தியா முழுமைக்கும் உள்ள ஊடகங்களிடம் கொண்டு சேர்த்திருந்தால் வந்திருக்குமா இந்த மலையாளிகளுக்கு தைரியம் ?

சரி என்னதான் தீர்வு ? யாரிடம் உள்ளது தீர்வு ?

தமிழகமே உறைந்துபோகும் அளவில் மக்கள் ஆதரவுடன் போராட்டங்களை நடாத்திவரும் எழுற்ச்சி கொண்ட தமிழினத்தின் ஊடகவியளாளர்கள், இந்திய அளவிலான ஊடகங்களை தொடர்புகொள்ளவேண்டும்...

இந்த பொய்களை, புரட்டை அம்பலப்படுத்தவேண்டும்..

இந்திய பத்திரிக்கையாளர்கள் சம்மேளனத்திடம் இருந்து ஈழப்போராட்டத்தின் உண்மை நிலையை விளக்கும் அறிவிக்கை வெளிவரவேண்டும்...

இந்து, தினமலர் போன்ற பத்திரிக்கைகளில் பணியாற்றும் அன்பான தோழர்கள், அவர்களின் தலைமைகளை நேரடியாக எதிர்க்கவேண்டும்...

உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகளுக்கு மறுப்பு அறிக்கைகளை அந்த பத்திரிக்கையிலோ, அல்லது மற்ற பத்திரிக்கைகளிலோ வெளியிடும் வண்ணம் செயலாற்றவேண்டும்...

தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஒரியா, மராட்டி, போஜ்புரி என்று அத்துனை மொழிகளிலும் ஈழத்தின் உண்மை நிலை வெளியாக பத்திரிக்கை நன்பர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்...

இந்திய அளவில் ஸ்ரீரீலங்கா அரசினதின் பரப்புரை யுத்தத்தை முறியடிக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும்...

சர்வதேசமெங்கும் பரவி வாழும் தமிழ்மக்கள், சர்வதேச ஊடகங்களுக்கு தொடர்ந்து மின்னஞ்சல் மூலம், தொலைபேசி மூலம் தொந்தரவு செய்து, கையூட்டு கொடுத்து, ஸ்ரீலங்காவினது பரப்புரை யுத்ததினை முறியடிக்கும் வகை செய்யவேண்டும்...

இந்த பரப்புரை போரின் மூலமே நாம் மக்கள் மனதை வென்றெடுக்க முடியும். சர்வதேசமெங்கும் மக்கள் மனதை வென்றெடுப்பதன் மூலமே தீர்வு சாத்தியப்படும்...

Comments

தோழர் ஒருவர் எழுதியிருந்தார். ஈழ பிரச்சினைக்கு தீர்வு புலம்பெயர்ந்த தமிழர்கள் நிறைய பிள்ளைகள் பெறுவதுதான் என்று.

இதுபோன்ற கருத்துக்கள் ஈழத்தமிழர்களின் மனதில் காயங்களையே ஏற்படுத்தும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்...
நல்ல மாறுபட்ட பார்வை, உங்கள் கருத்துக்கள் நான் ஆமோதிக்கிறேன்
நன்றி நசரேயன்...
நான் அதனை தீர்வாக சொல்லவில்லை, என் இனம் அழிக்கப்படுகிறதே என்ற வயித்தெரிச்சலில் சொன்னேன்.மேலும் ஈழ மக்கள் உலகில் நண்பர்களை உருவாக்கிகொள்ளவேண்டும் என்றுதான் சொன்னேன்.
அமெரிக்க ஜனாதிபதி மாண்புமிகு ஒபாமா

தொலைபேசி: 001 202-456-1111
தொலை நகல் : 001 202-456-2461

கனடிய பிரதமர் ஸ்ரீபன் காப்பர் -

தொலைபேசி - 001 613-992-4211
தொலைநகல் - 001 613-941-6900

கனடிய வெளிவிவகார அமைச்சர் - லோரன்ஸ் கனன்
தொலைபேசி - 001 613-992-5516
தொலைநகல் - 001 613-992-6802

லிபரல் கட்சித்தலைவர் - மைக்கல் இக்னாட்டியெவ்
தொலைபேசி - 001 613-995-9364
தொலைநகல் - 001 613-992-5880

புதிய சனநாயகக்கட்சித்தலைவர் - ஐக் லேட்டன்
தொலைபேசி - 001 613-995-7224
தொலைநகல் - 001 613-995-4565

-------------------------------------------------
(Sample Letter;)

His Excellency;

Re: Tamils situation Vanni reached Crisis Level; Urging to Stop the Sri Lankan State Genocides against Tamils

I want to take this opportunity to state the terrible crisis deliberately created on the innocent Tamil civilians in Vanni by the government of Sri Lankan and its armed forces. The recent, Gaza tragedy
look too small, compared to what is happening in Vanni for our brethrens for past 25 days. Please break your silence and bring an end to this state enforced Sri Lankan army menace against innocent
Tamils civilians in Vanni.

The Sri Lankan government forces announced 'Safety Zone' few days ago to draw innocent civilians into the so called area such as Suthanthirapuram, Udaiyaarkaddu, and Vallipuram in the Mullaitivu
District. Now, these innocent civilians are being continuously shelled with heavy artilleries and multibarrels by the Sri Lankan Army. According to the government own medical officer in declare the
situation in the Vanni is beyond them. I am calling immediate intervention of the international community to save these civilians from enforced genocides.

The U.N agency says situation in Mulaitivu, Vanni deteriorated to the crisis level. Today alone, at least 300 civilians were dead and over 1000 civilians are badly wounded. A government medical officer working a hospital says, him and medical staff in Vanni unable to treat the large amount of wounded civilians as medical supplies and personals are in very short supply even the hospitals are coming under terrible shell attacks.Wounded even includes Red Cross (ICRC) personals. Genocides continue unabated while the world watching silently. This cannot be accepted, it is the moral duty of the U.N to step in to save the Tamils, please do not allow another Darfur in Sri Lanka.

It is most disheartening to see thousands of our mothers, fathers, sons, daughters, brothers, sisters,infants and children are being brutally killed by the occupying Sri Lankan security forces and we are
unable to continue with our daily lives.Please use your good offices to press the Sri Lankan government to stop the war, stop the genocides of Tamils, send the international monitoring mission to save civilians, send medial staff and supply immediately as thousands are bleeding to their deaths. Please see the attached info rmation SOS call from the Mulaitivu government medical officer.
I earnestly urge you to do your utmost to bring an immediate end to the genocides of Tamils by the Sri Lanka . Recognize their rights to self-determination as this is the only meaningful solution will bring end to the crisis to permanent end.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28151

Thank you for your kind attention on this matter.
2.5 லட்சம் மக்கள் சாவின் விளிம்பில் நிற்பதை வேடிக்கை பார்க்கும் உலகின் மேல் உள்ள கோபத்தில் இனத்தை இப்படியாவது விருத்தி செய்யுங்கள் என்று சொன்னேன்.
///நான் அதனை தீர்வாக சொல்லவில்லை, என் இனம் அழிக்கப்படுகிறதே என்ற வயித்தெரிச்சலில் சொன்னேன்.மேலும் ஈழ மக்கள் உலகில் நண்பர்களை உருவாக்கிகொள்ளவேண்டும் என்றுதான் சொன்னேன்.//

உங்கள் உணர்வு பாராட்டத்தகுந்தது...எனக்கும் வயித்தெரிச்சல்தான். அதனை இப்படி நான் பதிவு எழுதுவது போல நீங்க அப்படி எழுதுனீங்க...

நானும் உங்களை குற்றம்சாட்டி சொல்லவில்லை...

நம் உறவுகளை அது புண்படுத்தும் என்று தான் சொன்னேன் குடுகுடுப்பையாரே
///5 லட்சம் மக்கள் சாவின் விளிம்பில் நிற்பதை வேடிக்கை பார்க்கும் உலகின் மேல் உள்ள கோபத்தில் இனத்தை இப்படியாவது விருத்தி செய்யுங்கள் என்று சொன்னேன்.///

ஓக்கே ஓக்கே ரிலாக்ஸ்
25 வருஷமா தனி ஈழத்துக்காக சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க. இன்றைய நிலையில் பின்னடங்கி உள்ளனர். இந்த சூழ்நிலையில் அவர்கள் மக்களை கேடயமாக ஆக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. (விரும்பி வருபவர்கள் ஆகவும் இருக்கலாம், இல்லை குடும்பத்தில் உள்ள யாரோ ஒருவருக்காக மற்றவர்களும் யுத்த இடத்தை விட்டு வெளியே வர முடியாமல் இருக்கலாம்). இது ஒரு தவறான அணுகுமுறையாக நமக்கு பட்டாலும், இதுவே survival தந்திரம். ஆனாலும் யதார்த்தத்துக்கு மதிப்பு கொடுத்து warzone ல உள்ள மொத்த civilians வெளியேற முடியனும். இன்னிக்கு காலைல அந்த cluster bomb போட்ட வைத்திய சாலைய al-jazeera சேனல் காட்டினாங்க. பாக்கவே முடியல. அவ்வளவு கொடுமையா இருந்தது. இந்த சமயத்துல மேலும் உயிர் இழப்பு இல்லாம மக்கள் வெளியேறனும். அதுக்கு எந்த விதமான தடுப்பும் புலிகளிடம் இருந்து வராம இருக்கணும். அவ்வளவு தான். இத எழுதறது அந்த exclusive பாத்த வருத்தத்துல தான். நிச்சயமாக இலங்கை அரசாங்கம் war crime க்கு தண்டிக்கபட வேண்டியதே. if this war can go on for another 3 or 4 weeks, i am sure lankan govt would face international pressure and mostly likely to back down. But at the same point of time, that could prove fatal for the people over there as the government is intentionally and indiscriminately using the bombs everywhere.
ரவி,

இந்நெரத்திற்கு மிகவும் தேவையான அருமையான கருத்துக்கள்.

ஆனால் தமிழகத்திலிருந்து வெளியாக்கும் இந்து, தினமலர் போன்ற செய்தித்தாள்களின் உரிமையாளர்கள் ஏதொ தங்களையும் தங்கள் இனத்ததவரையும் யூதர்களுடன் ஒப்பிட்டு கொண்டு திராவிட கட்சிகளை (குறிப்பாக திமுக - அதிமுக இப்பொதைக்கு அவரகள் கட்சி - அம்மா இருப்பதால்!) அதற்கு ஓட்டு போடும் மக்களையும் பழி வாங்கியே தீருவது என்ற நோக்கோடு செயலாற்றி வருகின்றனர். இவை தவிர வட நாட்டு ஊடகங்களை எடுத்தாலும் இதே கொள்கை தான் அங்கும்.என்ன இருந்தாலும் இவரகள் எல்லம் ஒரெ இனமல்லவா!. தாங்கள் இனத்தவரை தமிழ் நாட்டில் வளரவிடாமல் செய்யும் திராவிட கட்சிகளையும் அதன் தலைவர்களையும் இவர்கள் விமர்சிக்கும் போக்கு நமக்கு நன்றாக தெரியுமே!. இட ஒதுக்கீடு பிரச்சனையில் இவர்கள் எவ்வளவு கேவலமாக நடந்து கொண்டனர் என்றும் பார்த்தோம்.

இட ஒதுக்கீடு பிரச்சனை சமயத்தில் சாதி வாரியன ஊடகவியளாலர்கள் கணக்கெடுப்பு நடத்தியதில் 'அவரகள்' எத்தனை சதவிகிதம் இடத்தை பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது நாம் அறிந்தது தானே!

காகித ஊடகங்களை விட்டு தள்ளுங்கள். நாம திராவிட கட்சிகள் தான் தங்களுக்கென தொலைகாட்சியே நடத்துகின்றனவெ! அவை தமிழனை பற்றி உண்மை சொல்லும் என்று பார்த்தால் அவைகல் தங்களின் 'கல்லா'வை நிரப்பும் முயற்சியில் தான் அதிகம் ஈடுபட்டு கொண்டிருகின்றன. தற்சமயத்தில் நடந்து வரும் ஈழ விடயங்கள் தொடர்பான செய்திகளை எப்படி இருட்டடிப்பு செய்கின்றனர் என்று பார்த்து கொண்டு தானே இருக்கிறோம்.

'காசா' தாக்கபட்ட பொழுதாவது 'அல் சசீரா' போன்ற அரபு ஊடகங்கள் தலைப்பு செய்தியாக்கிக் கொண்டிருந்தன. ஆனால் அதே போன்றதொரு கொடுமை நம் ஈழ தமிழ் சொந்தங்களுக்கு நடக்கின்ற பொழுது அதை தமிழ் ஊடகங்கள் கூட காட்ட மறுக்கும் கொடுமையான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.
are you writing these after getting money from LTTE???
மிகவும் தெளிவாக அலசியிருக்கின்றீர்கள். இலங்கை தமிழ் பதிவர்கள் இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இந்தியாவை கேவலப்படுத்துவதில்தான் குறியாக இருக்கின்றார்கள். இந்த விடயம் மற்ற இந்தியர்களை எட்டினால் அது ஈழ நலனுக்கு பாதகமாகவே முடியும். மாறாக மற்ற இந்தியரிடத்தில் ஈழத்தமிழர் குறித்த ஆதரவை திரட்டினால் நமது அரசுதானாவே வழிக்கு வரும். ஜார்ஜ் பெர்னான்டஸ், பாலதாக்கரே போன்றவர்கள் ஈழத்தின் மீது ஆதரவுப் பார்வை கொண்டவர்களே. தமிழ்நாட்டில் மட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு நின்று விடாமல் இவர்களைப் போன்றவர்களை பயன்படுத்தி இந்திய மக்களையே ஈழம் நோக்கி திருப்பவேண்டும்.தமிழ்நாட்டு பிஜேபி ஆட்களை விட்டு டெல்லியில் இன்புளுயன்ஸ் செய்யலாம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் பதிவு பார்க்கிறேன். எழுத்து நன்கு கூர்தீட்டப்பட்டுள்ளது.

கட்டுரை மிக மிக அவசியமான பார்வையில் உள்ளது.

நிச்சயமாக ஊடக நண்பர்கள், தங்களின் தலைமைக்கு எதிராக தீவிரமாக புறப்படவேண்டிய நிர்பந்தம் இது. அந்த ஒற்றுமையும், போர்க்குணமும் பொது மக்களிடம் இருப்பதை விட ஊடகநண்பர்களிடம் இருப்பதே அவசியம். உதவும்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களின் பதிவு பார்க்கிறேன். எழுத்து நன்கு கூர்தீட்டப்பட்டுள்ளது.

கட்டுரை மிக மிக அவசியமான பார்வையில் உள்ளது.

நிச்சயமாக ஊடக நண்பர்கள், தங்களின் தலைமைக்கு எதிராக தீவிரமாக புறப்படவேண்டிய நிர்பந்தம் இது. அந்த ஒற்றுமையும், போர்க்குணமும் பொது மக்களிடம் இருப்பதை விட ஊடகநண்பர்களிடம் இருப்பதே அவசியம். உதவும்.
Raரா said…
//வெத்து வேட்டு said...
are you writing these after getting money from LTTE???//
நீ வெத்து வேட்டு மட்டும் அல்ல....வேர எதுவோ கூட....
//வெத்து வேட்டு said...
Friday, February 06, 2009
are you writing these after getting money from LTTE???//

are you asking this after getting money from srilankan government?

தல, இவரு எல்லா இடத்துலயும் இப்படித்தான் கேட்கறாரு. என் பதிவுலயும் வந்தாரு.. ஏதாச்சும் செய்யனுமே!!!!
மணி, மேலெழுந்தவாரியான உங்கள் உணர்வை பாராட்டும் அதே சமயம், இந்த விஷயத்தில் நீங்கள் இன்னும் ஆழ படிக்கவேண்டும் என்பதி என் கருத்து
Rama Krishnan said…
நம்ம ஊரு நக்கீரன் கூட கலைஞரை முத்துக்குமார் சாடியிருப்பதாலேயே முத்துக்குமாரின் மரண சாசனத்தையே வெளியிடவில்லை.

ஈழ தமிழர் நல பேரவை ஏன் துவங்கப்பட்டது என்ற சப்பை கட்டு கட்டுரை வெளியிடுகிறான் .

ராமதாஸ் என்னவோ கருணாநிதியை ஈழப்பிரச்சனையை காட்டி அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பது போல பாமரமக்களை நம்பவைக்க பார்க்கிறான்.

நக்கீரன் மூலம் அடித்தட்டு மக்களின் அறியாமையில் குளிர்காய்ந்து கலைஞருக்கு அடிவருடும் மீசை கோவாலுவையே திருத்தமுடியாத போது....எங்கிருந்து குமுதங்களும் விகடன்களும், தின-மலர்களும், தந்திக்களும், கரன்களும் திருந்த போகிறார்கள்?

இவர்களே இப்படி என்றால் ஷேர் மார்க்கெட்டில்,மக்கள் போட்ட பிச்சையில் மல்டி குரோர் அதிபதிகளான என்டிடிவி ஐபிஎன் சிஎன்பிசி காரங்களை யார் திருத்துவது? இவனுங்களே இப்படின்னா பரம்பரை பணக்காரனான டைம்ஸ் க்ரூப்பையெல்லாம் திருத்தமுடியுமா?

இந்த டிவி ஒனர்களிலிருந்து பியுன்கள்வரை அவர்களின் விழாக்களுக்கு நம் ஜனாதிபதி, பிரதமரிலிருந்து அமைச்சர்கள் தொழில் அதிபர்கள் வரை அட்டென்ட் பண்ண கியுவில் நிற்கும் போது பத்தாததற்கு அமெரிக்க, இங்கிலாந்து, ரஷியா முன்னாள்- இந்நாள் அதிபர்களையும் இழுத்து வந்து பவர் காட்டி, இந்திய மக்கள் மீது நாங்கள் காட்டுவதுதான் செய்தி என்று மீடியா வார் தொடுக்கும் இவர்களுக்கு,அடிமையாய் கிடக்கும் நம்மவர்களையும் எப்படி திருத்தப்போகிறோம்?

ஆதங்கமே மிஞ்சுகிறது.


ஒரே ஒரு வேண்டுகோளை தமிழ்நாடு மக்களுக்கு வைக்கிறேன்... பொழுது போகவேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட எந்த ஏடுகளையும் டிவிக்களையும் புறக்கணியுங்கள். அரசியல்வாதிகள் போலவே பலநிலை வேடம் போடும் இப்படிப்பட்ட இதழாளர்களை புறந்தள்ளுங்கள். முடிந்தால்.., அதிக அளவு ஈழத்திற்காக குரல் கொடுக்கும் தமிழ் ஓசை நாளேடு மற்றும் மக்கள் தொலைக்காட்சியை வளர்த்தெடுக்க உதவிடுங்கள்.
Rama Krishnan said…
நம்ம ஊரு நக்கீரன் கூட கலைஞரை முத்துக்குமார் சாடியிருப்பதாலேயே முத்துக்குமாரின் மரண சாசனத்தையே வெளியிடவில்லை.

ஈழ தமிழர் நல பேரவை ஏன் துவங்கப்பட்டது என்ற சப்பை கட்டு கட்டுரை வெளியிடுகிறான் .

ராமதாஸ் என்னவோ கருணாநிதியை ஈழப்பிரச்சனையை காட்டி அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பது போல பாமரமக்களை நம்பவைக்க பார்க்கிறான்.

நக்கீரன் மூலம் அடித்தட்டு மக்களின் அறியாமையில் குளிர்காய்ந்து கலைஞருக்கு அடிவருடும் மீசை கோவாலுவையே திருத்தமுடியாத போது....எங்கிருந்து குமுதங்களும் விகடன்களும், தின-மலர்களும், தந்திக்களும், கரன்களும் திருந்த போகிறார்கள்?

இவர்களே இப்படி என்றால் ஷேர் மார்க்கெட்டில்,மக்கள் போட்ட பிச்சையில் மல்டி குரோர் அதிபதிகளான என்டிடிவி ஐபிஎன் சிஎன்பிசி காரங்களை யார் திருத்துவது? இவனுங்களே இப்படின்னா பரம்பரை பணக்காரனான டைம்ஸ் க்ரூப்பையெல்லாம் திருத்தமுடியுமா?

இந்த டிவி ஒனர்களிலிருந்து பியுன்கள்வரை அவர்களின் விழாக்களுக்கு நம் ஜனாதிபதி, பிரதமரிலிருந்து அமைச்சர்கள் தொழில் அதிபர்கள் வரை அட்டென்ட் பண்ண கியுவில் நிற்கும் போது பத்தாததற்கு அமெரிக்க, இங்கிலாந்து, ரஷியா முன்னாள்- இந்நாள் அதிபர்களையும் இழுத்து வந்து பவர் காட்டி, இந்திய மக்கள் மீது நாங்கள் காட்டுவதுதான் செய்தி என்று மீடியா வார் தொடுக்கும் இவர்களுக்கு,அடிமையாய் கிடக்கும் நம்மவர்களையும் எப்படி திருத்தப்போகிறோம்?

ஆதங்கமே மிஞ்சுகிறது.


ஒரே ஒரு வேண்டுகோளை தமிழ்நாடு மக்களுக்கு வைக்கிறேன்... பொழுது போகவேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட எந்த ஏடுகளையும் டிவிக்களையும் புறக்கணியுங்கள். அரசியல்வாதிகள் போலவே பலநிலை வேடம் போடும் இப்படிப்பட்ட இதழாளர்களை புறந்தள்ளுங்கள். முடிந்தால்.., அதிக அளவு ஈழத்திற்காக குரல் கொடுக்கும் தமிழ் ஓசை நாளேடு மற்றும் மக்கள் தொலைக்காட்சியை வளர்த்தெடுக்க உதவிடுங்கள்.