ஹைய்யா !!! ஜாலி !!!! நான் பர்ஸ்ட்டு !!! நன்றிகள் !!!!

தமிழ்மணம் விருதுகள் அறிவிப்பு வந்துருக்கு, அதில் கதை பிரிவில் நீ பர்ஸ்ட்டு என்று காலையின் மூன்று மின்னஞ்சல்கள்...

1. கவிதா
2. டிவிஆர் அய்யா
3. நவநீதன்


கதையை படித்தவுடன் அன்றே சுவனப்பிரியன், என்ன தமிழ்மணபோட்டிக்கு தயாராகிறாயா என்று கேட்டிருந்தார்...ஹி ஹி உண்மைதான்...

தமிழ்மணம் போட்டி அறிவிப்பை பார்த்துவிட்டு, என்னடா இதுவரை நாம மொக்கையை தவிர வேற எதுவும் எழுதவில்லையே, அப்படியே ஒரு கதையை எழுதி போட்டிக்கு போடலாமே என்று முயன்றேன்...

சுஜாதா நினைவு சிறுகதை போட்டி / ஆழி பதிப்பகத்துக்காக எழுதிய ஒரு கொலை ராகம் கதை எனக்கு நிறைவா இருந்தது...இணையத்தில் இல்லை, மின்னஞ்சலில் வேண்டுமானால் அனுப்பறேன்...

ஆனால் கதையை மெயிலில் அனுப்பி பி.கே.எஸ் அண்ணாச்சியிடம் கமெண்ட்ஸ் கேட்டபோது பல கமெண்ட்ஸ். உருப்புடியா நான் எழுத காரணம் பி.கே.எஸ் தான்.

கதை எழுத இன்ஸ்ப்ரேஷன் மோகன் தாஸ். சச்சின் ஸ்டைல்ல சேவாக் பேட்டை பிடிச்ச மாதிரி நான் பிடிச்சிடனும் என்று < நினைத்துக்கொண்டிருக்கிறேன் >

வரலாற்று கதைக்கு இன்ஸ்பிரேஷன் என்றால் பதிவுலகில் நரசிம். அவரோட மாறவர்மன் தேனில் நனைத்த ஹனி கேக். ஷாட் அண்ட் ஸ்வீட்டா சூப்பரா இருக்கும்...

அப்புறம் இரா.வசந்தகுமார், சிரில் அலெக்ஸ் இவங்க எல்லாரும் இன்ஸ்ப்ரேஷன்...

சண்டை போடுறதை விட்டுவிட்டு உருப்புடியா எதையாவது எழுதுமாறு திட்டிக்கொண்டே இருக்கும் வாத்தியார் சுப்பைய்யா அய்யா மற்றும் உண்மைத்தமிழனுக்கு நன்றி..

மூன்று விருதை அள்ளிய டாக்டர் புருணோ, இரண்டு விருதை அள்ளிய உண்மைத்தமிழன், மற்றும் விருதுகள் பெற்ற தூயா, ராம், நிலா, டுபுக்கு, கோவி கண்ணன், தாமிரா, வினவு, சுகுணா திவாகர், குசும்பன், ரிஷான், தாமிரா ஆகியவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

அய்ரோப்பிய நேரத்திலும் விடாமல் என்னுடைய பதிவுகளை படிக்கும், கும்மி அடிக்கும், அரைபிளேடு, குடுகுடுப்பை, பழமைபேசி, நசரேயன், கும்க்கி ஆகியவர்களுக்கு நன்றிகள்..

டோண்டு சாருக்கு ஏன் எந்த விருதும் கிடைக்கல ? * மொக்கையிலும் நக்கல் அல்ல, இருந்தாலும் சந்தோஷம் என்று சொல்லமுடியாது, அவர் எழுதுவது எல்லாம் மொக்கைன்னும் சொல்லமுடியாது, அவரை எனக்கு பிடிக்கும்னு சொல்லமுடியாது, அவர் எழுத்தை எனக்கு பிடிக்காதுன்னு சொல்லமுடியாது.

நீ எதாவது எழுது ரவி, பொறுமையா எழுதுனா நல்லா வரும் என்று சொல்லும் லக்கி மற்றும் இளா நன்றி...

வாக்களித்தமைக்கு கார்க்கி,வால்பையன்,அதிஷா,பரிசல்காரன்,வெண்பூ,தாமிரா ஆகியவர்களுக்கும் நன்றி...<<பிரபல பதிவர்களின் பெயர்களை இடுகையில் சேர்த்து தொலைவது அவர்களின் பின்னூட்டம் கிடைக்க வழி செய்யும்>>

விடுபட்டவர்களை அனைவருக்கும், வாக்களித்த அனைவருக்கும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு ஸ்டைலில் நன்றி நன்றி நன்றி.

இவனுக்கு போயி விருதா என்று டென்ஷன் ஆகும் நன்பர்கள் சுப்ரமணிய சாமி புகழ் வஸ்துவை தயாராக வைத்துக்கொள்ளவும். உண்மைத்தமிழன் அண்ணனையும் நாமக்கல் சிபியையும் அனுப்பி வாங்கிக்கொள்கிறேன்...

Comments

வாழ்த்துகள் தல.. நன்றியெல்லாம் சொல்லி என்னை பிரிச்சு பார்க்காதத்துக்கு நான் நன்.. ஆவ்வ்வ்.. சொல்லக்கூடாது இல்ல.
வாழ்த்துக்கள்
SP.VR. SUBBIAH said…
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை!
சாதித்த உங்களுக்கு வாழ்த்துக்கள் ரவி!
அன்புடன்
SP.VR.சுப்பையா
சாரி கார்க்கி. உன்ன மறந்துட்டென். சரி இப்ப சேர்த்துடுறேன்,.
Anonymous said…
வாழ்த்துகள் தல
நன்றி அய்யா..
நன்றி கடையத்தாரே
வாழ்த்துக்கள் செந்தழல் ரவி !!!!!

Keep Rocking !!!!
இனிய வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள்!
மனம் நிறைந்த வாழ்த்துகள் ரவி
வாழ்த்துக்கள்
ஓட்டு போட்ட என் பேர் இல்லை :)

வெளிநடப்பு செய்கிறேன்.
கலக்கல் ரவி. கதையை இன்னும் படிக்கவில்லை. முதல் பரிசு என்றால் நிச்சயம் நல்லாத்தான் இருக்கும்.

நானும் வாத்தியார் மற்றும் உண்மைத் தமிழன் கட்சிதான். நல்லா எழுத வரலன்னா சண்டை சச்சரவு என்று பொழுது போக்கலாம். உனக்கென்னமா? முதல் ஸ்டெப் கோவியையும் பாராட்டியது. Actually hats off to you.

இனிமே முழுநேர படிப்பிலக்கியவாதியாக உருவெடுத்துள்ள ரவிக்கு ஒரு 'ஒ' போடுங்கப்பா.

அனுஜன்யா
...ஓட்டு போட்ட என் பேர் இல்லை :)

வெளிநடப்பு செய்கிறேன்...''

sorry dear, at work. will add.
நன்றி சந்தனமுல்லை ......
வாழ்த்துகள் இரவி!
/வாக்களித்தமைக்கு கார்க்கி,வால்பையன்,அதிஷா,பரிசல்காரன்,வெண்பூ,தாமிரா ஆகியவர்களுக்கும் நன்றி//

காசு, பணம் வாங்காம ஓட்டு போட்டுறுக்கோம், நாட்டுக்கு எதாவது நல்லது பண்ணுங்க!
வாழ்த்துக்கள்!
காலைல வேற பதிவுல வந்து வாழ்த்து சொல்லிட்டேன்.

மறுபடியும் வாழ்த்துக்கள். கதை இப்ப தான் படிச்சேன். ரொம்ப நல்லா இருக்கு.
Anonymous said…
வாழ்த்துகள் :)
வாழ்த்துக்கள் ரெட்பயர்... :)
இணைய புரட்சியாளனுக்கு விருது குடுக்கலைன்னா சும்மாவா...:)
வாழ்த்துக்கள் அண்ணே...!
பல்லவன்::வல்லவன் நன்றி நன்றி
எக்ஸலண்ட் ரவி!

நல்ல ஃப்ளோவா வந்திருக்கு இந்தப் பதிவு!

இன்னும் நிறைய பரிசுகள் வாங்கி, ஆஸ்கார் லெவலுக்கு போய்.. கட்சி ஆரம்பிச்சு.. முதல்வராகி.. பிரதமராகி..

(ஏண்டா.. ஒரு விருது வாங்கினது குத்தமாடான்னு கேட்கறது தெரியுது!!)
புதுகையாரே...

நன்றி நன்றி நன்றி...ஸ்பெஷல் அடையார் ஆனந்தபவன் நன்றி..
வாழ்த்துக்கள் அண்ணே...
ILA said…
மனசுல ஒரு திருப்தி. இந்த வருசம் நீங்க கலக்குறதுக்கு காரணம் நேரம் அதிகம் இருக்கு, அதனால நல்ல படைப்புகள் வருது. இப்படியே இருந்துடு ராசா
வாழ்த்துக்கள் நண்பரே.
narsim said…
வாழ்த்துக்கள் தல(ழ)..

நன்றியும் கூட..
வாழ்த்துக்கள் ரவி.
அன்புடன் அருணா
வாழ்த்துக்கள் ரவி.
அன்புடன் அருணா
பரிசல்.நர்சிம்.அருணா.ராம்.தூயா.மணி.ஞானசேகரன்.ஜோதிபாரதி.அனுஜன்யா.தமிழன்.கருப்பி..

நன்றி !!!!!

இன்னும் வெண்பூவும் தாமிராவும் வெயிலானும் வரலை.
//இன்னும் வெண்பூவும் தாமிராவும் வெயிலானும் வரலை. //

எனக்கு நன்றி சொல்லாட்டியும் பரவாயில்லை, இவங்க பங்கையும் சேர்த்து எனக்கே கொடுத்துருங்க!

ஹிஹிஹிஹி
//டோண்டு சாருக்கு ஏன் எந்த விருதும் கிடைக்கல ? * மொக்கையிலும் நக்கல் அல்ல, இருந்தாலும் சந்தோஷம் என்று சொல்லமுடியாது, அவர் எழுதுவது எல்லாம் மொக்கைன்னும் சொல்லமுடியாது, அவரை எனக்கு பிடிக்கும்னு சொல்லமுடியாது, அவர் எழுத்தை எனக்கு பிடிக்காதுன்னு சொல்லமுடியாது//

கமல் படம் எல்லாம் பார்க்கறீங்க போல் தெரிகிறதே

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நண்பரே
வாழ்த்துகள்! வாழ்த்துகள் நண்பரே!!
//கடையம் ஆனந்த் said...
வாழ்த்துகள் தல
//

"வாழ்த்துகள் சரியாச் சொன்ன உங்களுக்கு ஒரு சபாசு!"
வாழ்த்துகள் ரவி.. ஆனா கொஞ்ச நாளா உங்க பதிவுகள் அவ்வளவு சுவையா இல்லை, ஆணி அதிகமோ?
coolzkarthi said…
சார் வாழ்த்துக்கள்.....இப்படிக்கு கூல் கார்த்தி....
coolzkarthi said…
சார் சூப்பர் ஆ எழுதுறீங்க எங்களுக்கும் சொல்லி கொடுக்கலாம்ல?
வாழ்த்துக்கள் தல ;)
ரவி, நீங்க பர்ஸ்டு வரணுமின்னு நான் கேங்த்ரிப்சபூ பண்ணது வீண் போகல.
வாழ்க! வளர்க!!
பி.கே.) சுஜாதா பரிசு என்னாச்சு?
வாழ்த்துக்கள்!

அன்புடன்,
உழவன்

Popular Posts