Monday, April 13, 2009

அபிஅப்பா, உடன்பிறப்பு மற்றும் தமிழ் ஓவியாவின் பதிலடிக்கு பதிலடி



//மூத்த வலைவதிவரும் இயக்க முன்னோடியுமான தோழர் ஒருவர் சொன்னார். முதலில் ஆதரவாக பின்னூட்டம் இடுவார் அப்புறம் கொச்சைப்படுத்தி பின்னூட்டம் இடுவார். அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று சொன்னார்.///



முதலில் தமிழ் ஓவியா அவர்களின் அல்லது So Called மூத்த வலைப்பதிவரின் அவதூறான செய்தியை என்னை இத்தனை காலம் அறிந்த அபி அப்பா, உடன்பிறப்பு போன்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்று தெரியவேண்டும்.

//ஓரளவு ஜெயலலிதாவை விட சரியாகவே கலைஞர் செயல்படுகிறார் //

இன்னாபா இது ஓரளவு ? அந்தம்மா அஞ்சு மார்க்கு இவர் பதினைஞ்சு மார்க்கா ? என்ன காமெடி இது ?

ஓரளவு சரியா செயல்பட்டு கொஞ்சமா பிரேக்கில் கால் வைத்தால் வண்டி ஆக்ஸிடெண்ட் ஆகாம ஓரளவு மோதுமா ? ஓரளவு உயிர் போகுமா ?

காங்கிரஸ் கட்சி தமிழினத்துக்கு துரோகம் இழைத்துள்ளதா இல்லையா ? ஆம் அல்லது இல்லை என்று அபி அப்பாவும் உடன்பிறப்புவும் சொல்வார்களா ??

ஜெயலலிதாவுக்கு இல்லையப்பா. நான் விஜயகாந்துக்கு ஆதரவு தரேன். அதை பற்றியா பேச்சு இங்கே ?? ஜெயலலிதா பற்றி எந்த பேச்சும் என்னுடைய பதிவில் இல்லாதபோது சுப தமிழ்ச்செல்வன் கதையை இழுத்து வந்து திசைத்திருப்பல் எதையும் செய்யவேண்டாம். வெறும் கவிதை வெற்று காகிதம்.

கண்மூடித்தனமான வீரமணி கலைஞர் பக்தியைத்தானே இங்கே கேள்வி கேட்கிறோம் ??

கலைஞரின் முரட்டு வலையுலக பக்தர் மடிப்பாக்கம் மாபியாவே கம்முனு கீது...




இலங்கைக்கு அனுப்பிய டாங்கியை தமிழ்நாட்டை நைட்லேயே க்ராஸ் பண்ணி கேரளா போயிரு அப்படீன்னாராம் ஒரு மேனன் டெல்லியில. ஆனா பாருங்க கூட்ஸ் வண்டி ட்ரைவர் குடிச்சுட்டு ஓட்டினதால வண்டி காலையில பெரியாரு பொறந்த ஈரோட்டுல நிக்கிது. அதுல குண்டை போட்டு ரொப்பி அடிச்சுத்தானேய்யா இன்னைக்கு இத்தனை உசுரு போச்சு ?



காங்கிரசு ராணுவ மந்திரி ஏக்கே ஆந்தோனிக்கு தெரியாம இலங்கைக்கு ஆயுதங்கள் அனுப்பினாங்களா ?



சிவசங்கர மேனனுக்கு தெரியாம தாம்பரத்துக்கு விமானப்படை வீரர்கள் பயிற்சிக்கு வந்தாங்களா ?



நாராயணனுக்கு தெரியாம பஞ்சாப் ரெஜிமெண்ட் இலங்கையில சண்டைக்கு நிக்குதா ?



இதை எதையும் தட்டிக்கேட்காமல் "தாயே, பிச்சை போடு" என்று வயதை கூட கருதாமல் தன்மானத்தமிழர் கலைஞர் 'கொடுத்த காசுக்கு மேல' கூவுவதை எந்த உணர்வாளரால் சகித்துக்கொள்ளமுடியும் ?

வேட்பாளர் பட்டியலை தூக்கிக்கொண்டு டெல்லிக்கு காவடி எடுக்கும் காங்கிரசின் பதிமூனே சொச்சம் கோஷ்டிகளை விட இத்தாலி அண்ணைக்கு விசுவாசமாக இருப்பது தி.மு.கவும் தி.கவும் தான் என்பதுபோல அல்லவா இருக்கிறது வீரமணியாரின் பேச்சு ?

அங்கே தினமும் கொத்து குண்டுகளை வீசி கொத்துக்கொத்தாக மக்கள் மடியும் வேளையில் மன்மோகன்சிங் கண்மணி, அன்போட, கலைஞர், நான், எழுதும், கடிதம், இல்ல கடுதாசின்னு வெச்சுக்கோ, இல்ல எது வேனா வெச்சுக்கோ என்று கடிதம் எழுதிக்கொண்டிருப்பதன் மூலம் கலைஞர் என்ன சாதித்துவிட்டார் ?

காங்கிரசை வீழ்த்துவதன் மூலம் மட்டுமே இந்த பிரச்சினையில் காங்கிரசுக்கு பாடம் புகட்டமுடியும் என்று மொத்த உணர்வாளர்கள் கூட்டமும் நம்புகிறது...

நீங்கள் ஒரு அமைப்பில் அசோசியேட் ஆகியிருக்கிறீர்கள் என்பதாலேயே அந்த அமைப்பின் அத்தனை கொளுகைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டியதல்ல...

ஒரு நிமிடம் யோசித்து பார்த்து முடிவுசெய்யுங்கள்.

31 comments:

தமிழ் ஓவியா said...

///ஓரளவு ஜெயலலிதாவை விட சரியாகவே கலைஞர் செயல்படுகிறார் //

இன்னாபா இது ஓரளவு ? அந்தம்மா அஞ்சு மார்க்கு இவர் பதினைஞ்சு மார்க்கா ? என்ன காமெடி இது //

கலைஞர் கருனாநிதிக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக் காட்டுவதற்காக பயன் படுத்தப்பட்டதை நீங்கள் பிரேக்குடன் ஒப்பீடு செய்வது சரியல்ல.

உங்களைப்பற்றி சாதாரண ஒரு விமர்சனத்துக்கே இப்படித் துள்ளிக் குதிக்கிறீர்களே. நீங்கள் மட்டும் உலகத்தில் உள்ளவர்களை சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் போது உங்களுக்கு வேண்டுமானல் சரியாகப் படலாம் ஆனால் அவர்கள் நிலை என்ன?

10 வயது முதல் 76 வயது வரை பெரியார் இயக்கமாக வாழ்ந்து வரும் வீரமணி (மற்றும் யாரை வேண்டுமானாலும்)அவர்களைப் பற்றி நீங்கள் விமர்சியுங்கள் ஆனால் கொச்சைப்படுத்தாதீர்கள் என்பது தான் எனது வேண்டு கோள்.

அக்னி பார்வை said...

ஈழ பிரச்ச்னையை (குழு) முதலில் தமிழ அரசியல் கட்சிகள் தங்களின் பலம் காட்ட பயன்படுத்தினார்கள்..

இந்திய அரசாங்காம் போராளிகளை இலங்கைக்கு எதிரான அடியாளாக பயன்படுத்தியது...

இப்பொழுது தமிழக மக்கள் அவர்களை இரக்கத்துடன் பார்க்கும் வேளையில் , அரசியல் கட்சிகள் அந்த இரக்கத்தை ஓட்டுக்களாக மாற்ற முற்படுகிறது..

பதிவர்கர்களும் ,எழுத்தாளர்கள்,தங்களை தமிழ் உணர்வு கொண்டவர்களாக காட்டிக்கொள்ள(ல்ல)எஈழ மரணங்களை பயன் படுத்துகிறார்கள்...

இங்கு ஒருவரின் மரணத்திற்க்கு மதிப்புக்கூட அவரின் மொழி சார்ந்து,நிறம் சார்ந்து, இடம் சார்ந்து, அவரை அதரிப்பதால் வரும் பணம் சார்ந்து, லாபம் சார்ந்து, பலன் சார்ந்தே இருக்கிறது...

பின்குறிப்பு: இந்த பதிவிற்க்கும் இந்த பின்னுட்டத்திற்க்கும், மற்றும் தமிழ் ஓவியா, ரவியின் கருத்து வேறுபாடுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..

இதை சொல்ல வேண்டும் என்று தோன்றியது சொல்லிவிட்டேன்..

உடன்பிறப்பு said...

//முதலில் தமிழ் ஓவியா அவர்களின் அல்லது So Called மூத்த வலைப்பதிவரின் அவதூறான செய்தியை என்னை இத்தனை காலம் அறிந்த அபி அப்பா, உடன்பிறப்பு போன்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்று தெரியவேண்டும்//

தோழர்! யார் மீதும் வைக்கப்படும் எந்த தனிப்பட்ட குற்றச்சாட்டிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. தமிழ் ஓவியா தனிப்பட்ட முறையில் உங்களை விமர்சித்ததற்கு எனது கண்டனங்கள்

//நீங்கள் ஒரு அமைப்பில் அசோசியேட் ஆகியிருக்கிறீர்கள் என்பதாலேயே அந்த அமைப்பின் அத்தனை கொளுகைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டியதல்ல...//

நூற்றுக்கு நூறு சரியான கருத்து ஆனால் இந்த கருத்து உடன்பிறப்புகளை விட புலி ஆதரவாளர்களுக்கே அதிகம் பொருந்தும் என்று நினைக்கிறேன், ஒருமுறை அவர்களை விமர்சித்து தான் பாருங்களேன் அப்புறம் என்ன நடக்கிறது என்று

உடன்பிறப்பு said...

நீங்கள் தொகுத்துள்ள படங்கள் எல்லாம் மிகவும் அருமை. எங்கள் எதிர்வினை எல்லாம் கலைஞர் மீது வைக்கப்படும் விமர்சங்களுக்கு அல்ல அந்த விமர்சங்களில் பிரயோகப்படுத்தப்படும் தரம் தாழ்ந்த சொற்களுக்கு தான்

தமிழ் ஓவியா said...

//தோழர்! யார் மீதும் வைக்கப்படும் எந்த தனிப்பட்ட குற்றச்சாட்டிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. தமிழ் ஓவியா தனிப்பட்ட முறையில் உங்களை விமர்சித்ததற்கு எனது கண்டனங்கள்//

தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தப் பகையும், உறவும் கிடையாது. விமர்சனம் கொச்சைப்படுத்தப்படுவதாக இருக்ககூடாது என்பது தான் எனது நிலை.

தோழர் குழலி இது பற்றி எனக்கு உன்மை விபரங்கலைச் சொல்லிவிட்டார். நானும் புரிந்து கொண்டேன்.

ரவிக்கு மட்டுமல்ல அனைவருக்குமமிது பொருந்தும்.

Unknown said...

//இன்னாபா இது ஓரளவு ? அந்தம்மா அஞ்சு மார்க்கு இவர் பதினைஞ்சு மார்க்கா ? என்ன காமெடி இது ?//

அரசியில்ல எவனும் யோக்கியம் இல்லங்ற தெளிவுக்கு இன்னும் வரலை நீங்க? இவன் best or,அவ bestன்னு பார்க்கிறத விட யாரு betterன்னு பார்க்கிற ஒப்பீட்டு முறைதான் வேணும்.

//காங்கிரசை வீழ்த்துவதன் மூலம் மட்டுமே இந்த பிரச்சினையில் காங்கிரசுக்கு பாடம் புகட்டமுடியும்//

காங்கிரசை வீழ்த்தறீங்கன்னா, யாருக்கு வெற்றி கொடுக்கப் போறீங்க? ஜெவுக்கா, இல்லை ராமதாசுக்கா, பா.ஜ.க வுக்கா, விசயகாந்துக்கா, கார்த்திக், இல்லை 49ஓ?
அதச் சொல்லுங்க முதல்ல, உணர்வு இருக்குங்றதுக்காக, உணர்ச்சிவசப்பட்டு அரவேக்காட்டுத்தனமா பேசக்கூடாதுல்ல?

கார்க்கிபவா said...

//அந்த விமர்சங்களில் பிரயோகப்படுத்தப்படும் தரம் தாழ்ந்த சொற்களுக்கு தான்//

நீங்க வெற்றிக்கொண்டான் பேசிய பேச்செல்லாம் கேட்டதே இல்லையா?

அதை விட, சட்டமன்றத்துல ஒரு பெண் எம்.எ.ஏவிடம் உன் பாவாடை நாடாவ அவுத்து பார் தெரியும்னு பேசினாரே ஒரு நாகரிக தலைவர். அவர பத்தி கூட படிச்சதில்லையா?

ரவி said...

///உங்களைப்பற்றி சாதாரண ஒரு விமர்சனத்துக்கே இப்படித் துள்ளிக் குதிக்கிறீர்களே. நீங்கள் மட்டும் உலகத்தில் உள்ளவர்களை சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் போது உங்களுக்கு வேண்டுமானல் சரியாகப் படலாம் ஆனால் அவர்கள் நிலை என்ன?
///

ரவி said...

சரியான விமர்சனம் மட்டுமே விமர்சனம். நீங்கள் செய்தது அவதூறு தமிழ் ஓவியா அவர்களே..

வேறு யாராவதாவது இருந்திருந்தால் என்னுடைய ட்ரீட்மெண்ட் வேறுமாதிரி இருந்திருக்கும்...

///10 வயது முதல் 76 வயது வரை பெரியார் இயக்கமாக வாழ்ந்து வரும் வீரமணி (மற்றும் யாரை வேண்டுமானாலும்)அவர்களைப் பற்றி நீங்கள் விமர்சியுங்கள் ஆனால் கொச்சைப்படுத்தாதீர்கள் என்பது தான் எனது வேண்டு கோள்.//

என்ன விமர்சித்தேன் என்ன கொச்சைப்படுத்தினேன் என்று குறிப்பிட்டு சொல்லுங்கள்.

தமிழச்சி சொல்வதுபோல் பொதுமைப்படுத்தி சொல்லிவிடவேண்டாம்.

முந்தைய பதிவும் சரி இந்த பதிவும் சரி, நீங்கள் காங்கிரசு கூட்டனிக்கு சொம்பு தூக்குவதை பற்றியே அன்றி வீரமணியை பற்றி அல்லவே ?

ரவி said...

///தமிழ் ஓவியா தனிப்பட்ட முறையில் உங்களை விமர்சித்ததற்கு எனது கண்டனங்கள்///

அதனை அந்த பதிவிலேயே சொல்லியிருந்தீர்கள் என்றால் உங்கள் நடுநிலை தெரிந்திருக்கும்.

இப்போது இங்கே வந்து சொல்வது நீர்த்துப்போன நீராகாரம் மாதிரி உள்ளது.

ரவி said...

///நீங்கள் தொகுத்துள்ள படங்கள் எல்லாம் மிகவும் அருமை. எங்கள் எதிர்வினை எல்லாம் கலைஞர் மீது வைக்கப்படும் விமர்சங்களுக்கு அல்ல அந்த விமர்சங்களில் பிரயோகப்படுத்தப்படும் தரம் தாழ்ந்த சொற்களுக்கு தான்///

சென்ற பதிவிலும் சரி இந்த பதிவிலும் சரி, கலைஞர் என்றே விளித்திருக்கிறேன். கருணாநிதி என்று கூட சொல்லவில்லை. என்ன தரம் தாழ்ந்த சொல்லை உபயோகப்படுத்தினேன் என்று அறியத்தரமுடியுமா ?

ரவி said...

///10 வயது முதல் 76 வயது வரை பெரியார் இயக்கமாக வாழ்ந்து வரும் வீரமணி (மற்றும் யாரை வேண்டுமானாலும்)அவர்களைப் பற்றி நீங்கள் விமர்சியுங்கள் ஆனால் கொச்சைப்படுத்தாதீர்கள் என்பது தான் எனது வேண்டு கோள்.///

பொது வாழ்வில் உள்ள எவரையும் விமர்சனம் செய்யலாம். செத்துப்போன பெரியார் உட்பட. முதலில் அவரை பெரியார் என்று விளிப்பதை கண்டிக்கிறேன். அவர் பெரியார் என்றால் நானும் நீரும் சிறியாரா ? அவரை ராமசாமி என்று அழையுங்கள். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஈரோட்டு ராமசாமி என்று சொல்லுங்கள். இதை சொல்லிவிட்டதால் அய்யோ அம்மா விமர்சிக்கிறார்கள் என்று அலறவேண்டாம்.

லக்கிலுக் said...

//அதை விட, சட்டமன்றத்துல ஒரு பெண் எம்.எ.ஏவிடம் உன் பாவாடை நாடாவ அவுத்து பார் தெரியும்னு பேசினாரே ஒரு நாகரிக தலைவர். //

கார்க்கி சார்!

ரொம்ப நாளாக காங்கிரஸ்காரர்கள் அதிமுக கூட்டணியில் இருக்கும் போதெல்லாம் மேடையில் சொல்லும் குற்றச்சாட்டு இது.

கலைஞர் இப்படி சொன்னாரா என்று சட்டமன்ற குறிப்புகளை பார்க்கும்போது இல்லை. ஒருவேளை கலைஞர் அதுமாதிரி சொன்னபோது நீங்கள் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கலாம். நீங்களே நேரடியாக கேட்டிருக்கும் பட்சத்தில், ஒத்துக் கொள்கிறேன் :-)

லக்கிலுக் said...

//கலைஞரின் முரட்டு வலையுலக பக்தர் மடிப்பாக்கம் மாபியாவே கம்முனு கீது...
//

ஏனிந்த கொலைவெறி தோழர்? :-(

நானே நொந்துப்போய் இருக்கேன்!

லக்கிலுக் said...

//செத்துப்போன பெரியார் உட்பட. முதலில் அவரை பெரியார் என்று விளிப்பதை கண்டிக்கிறேன். அவர் பெரியார் என்றால் நானும் நீரும் சிறியாரா ? //

அய்யய்யோ :-(

மன்னிக்கணும் ரவி. தந்தை பெரியாருக்கு ‘பெரியார்’ என்ற பெயர் வந்த வரலாற்றை நீங்கள் வாசித்திருக்க வேண்டும். புரட்சிகலைஞர், புரட்சிதலைவி மாதிரி தனக்கு தானே போட்டுக்கொண்ட பட்டமல்ல இது!

Anonymous said...

///10 வயது முதல் 76 வயது வரை பெரியார் இயக்கமாக வாழ்ந்து வரும் வீரமணி (மற்றும் யாரை வேண்டுமானாலும்)அவர்களைப் பற்றி நீங்கள் விமர்சியுங்கள் ஆனால் கொச்சைப்படுத்தாதீர்கள் என்பது தான் எனது வேண்டு கோள்.//

பெரியாரின் கருத்துக்களை தட்டச்சு செய்வதினாலே பெரியார் இயக்கம் பற்றி எல்லாம் தெரிந்துவிட்டது என்று நினைப்பது சரியல்ல. உங்களின் நாட்டாமை மனப்பான்மையை மாற்றிக் கொள்ள வேண்டுகிறேன் என்று எமக்கு வேண்டுகோள் முன்வைக்கிறார் கி.வீரமணியின் அடிதாங்கி தமிழ் ஒவியா அவர்கள். காரணம் 10 வயது முதல் 76 வயது வரை பெரியார் இயக்கமே வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து வரும் வீரமணி அவர்களைப் பற்றி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நாம் எழுதுவதாகவும் அதற்கான எதிர்வினையாகவே மேற்குறிப்பிட்ட வார்த்தைகளை நாட்டாமை தனத்திற்குள் எம்முடைய சிந்தனைகளை அடக்க முற்படுகிறார்.

நாட்டாமை என்பது என்ன?

நம்முடைய சிந்தனைகளை நம்முடைய செயல்பாடுளை அடுத்தவர் விரும்பமின்றி திணிக்க முற்படும்போது ஏற்படும் சர்வாதிகாரத்தனம் என்பதே நாட்டாமையாகிறது. ஒரு கழகத்தின் உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன் விருப்பப்படி தி.மு.க
இ.காங்கிரஸ் ஆதரவு குறித்த சர்ச்சகைக்குள் மாட்டியிருக்கும் கி.வீரமணியின் சூழ்ச்சிதான் நாட்டாமைத்தனம் என்பது. அதை நாம் விமர்சிக்க முற்படுவது கழகத்திற்கு எதிரான தொடர்ச்சியான துரோகத்தனம் செய்யும் கி.வீரமணியின் தன்னிச்சை செயல்பாடுகளைத் தான் இங்கே விமர்சிக்க முற்படுகின்றோம். அது எப்படி நாட்டாமைத்தனமாகும்?

லக்கிலுக் said...

//பெரியாரின் கருத்துக்களை தட்டச்சு செய்வதினாலே பெரியார் இயக்கம் பற்றி எல்லாம் தெரிந்துவிட்டது என்று நினைப்பது சரியல்ல. //

தோழர்! இது உங்களுக்கே ஓவரா தெரியலை? :-)))))

Anonymous said...

தமிழர் வாழ்க்கை நடப்புகளில் பழந்தமிழர் கொள்கை என்பதைப் பற்றி பேசக்கூடாதென்றும், அதைக் கொண்டு வந்து மேற்கோள் காட்டக்கூடாதென்றும், எனது தோழர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

பழந்தமிழன் யார்? அவன் கொள்கை என்ன? அதற்கு ஆதாரம் என்ன? அதற்கு இன்று அவசியம் என்ன? என்பது போன்ற கேள்விக்குப் பதில் சொல்ல இன்று ஆளைக் காணோம். வீணாக, அந்தப் பேரில் பிழைக்கவோ, பெருமைப்படவோ, மக்களை சுரண்டவோ, தங்கள் எண்ணத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவோ பயன்படுத்தப்படுகிறது. பழந்தமிழன் யாராயிருந்தால் எனக்கென்ன? உங்களுக்குத் தான் என்ன காரியமாகும்?

இனி நம்முடைய எந்த சீர்திருத்தத்திற்கும் அந்தப் பேச்சு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பகுத்தறிவுவாதியின் கடமையாக ஆகிவிட்டது. பழந்தமிழன் வந்து போதிக்கத் தகுந்த நிலையில் இன்று நமது மனித சமூகம் இல்லை. பழந்தமிழன் கொள்கை எதுவும் இன்று எந்த மனித சமூகத்திற்கும் அவசியமும் இல்லை. மனிதன் காலத்தோடு, மாறுதலோடு செல்ல வேண்டியவனேயயாழிய வேறில்லை. வேண்டுமானால் மடையர்களைத் தட்டி எழுப்ப ஆயுதமாக அதைக் கொள்ளலாம். ஆனால் சாது மக்களை ஏமாற்ற அதைப் பயன்படுத்த விடக் கூடாது’’ என்கிறார் பெரியார்

10 வயதில் நீ என்ன செய்தாய்? 20 வயதில் என்ன செய்தாய்? 60 வயதில் என்ன செய்தாய்? 76 வயதில் என்ன செய்தாய் என்பது இங்கே முக்கியமில்லை. இப்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் என்பதைக் குறித்து விமர்சிப்பது பகுத்தறிவின் தன்மையாகும்.

Anonymous said...

////பொது வாழ்வில் உள்ள எவரையும் விமர்சனம் செய்யலாம். செத்துப்போன பெரியார் உட்பட. முதலில் அவரை பெரியார் என்று விளிப்பதை கண்டிக்கிறேன். அவர் பெரியார் என்றால் நானும் நீரும் சிறியாரா ? அவரை ராமசாமி என்று அழையுங்கள். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஈரோட்டு ராமசாமி என்று சொல்லுங்கள். இதை சொல்லிவிட்டதால் அய்யோ அம்மா விமர்சிக்கிறார்கள் என்று அலறவேண்டாம்.////


மன்னிக்க வேண்டும் தோழர் செந்தழல் ரவி அவர்களே பெரியார் பட்டம் என்பது எதற்காக தந்தை பெரியாருக்கு கொடுக்கப்பட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர் தலைவர் பட்டத்தை தானே கி.வீரமணி போட்டுக் கொண்டது போல் அல்ல இது.

*****
தந்தை பெரியார் பல இடங்களில் அவரைப்பற்றி அவரே சொல்கிறார் :


திராவிடர்களிடையில் எனக்குக் கெட்டபேர்-

வளர்கிறது என்று கூடச் சிலர் சொன்னார்கள்.

எனக்கு இந்தவிதமான உணர்ச்சிக்கு இடமில்லாத-

மானத்தைப் பற்றிக் கவலைப்படாத,

திராவிட மக்களிடையில் நல்ல பெயர்-

வாங்க வேண்டுமென்ற கவலை சிறிதுமில்லை.

அப்படிப் போலி நல்ல பெயரின் மீது-

என் வாழ்வு ஏற்பட்டிருக்கவில்லை.

திராவிட மக்களுக்கு ஏதாவது தொண்டாற்ற வேண்டும்.

அதில் முதன்மையானதாய் திராவிடன் இழிவு-

நீங்க வேண்டும் என்கிற ஆசையும், கவலையும் தவிர,

வேறு ஒன்றுமே எனக்குக் கவலையாக இல்லை.

எனக்கு வேறு அடைய வேண்டிய சாதனமும் இல்லை.

(தந்தை பெரியார்)

****

நான் சாதாரணமானவன்!

"நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள்.எந்தக் காரணத்தைக் கொண்டும் மனிதத் தன்மைக்கு மீறிய எந்தக் குணத்தையும் என்மீது சுமத்தி விடாதீர்கள். நான் தெய்வத்தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டுவிட்டால் மக்கள் என் வார்த்தைகளை ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள். "நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள், நான் சொல்லுவது வேதவாக்கு, நம்பாவிட்டால் நரகம் வரும் நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்" என்று வேதம், சாத்திரம், புராணம் கூறுவதுபோலக் கூறி, நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை,நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது."

(தந்தை பெரியார்)

******

நான் பார்ப்பனர்களை எதிர்க்கிறேனே தவிர பார்ப்பனர்களை வெறுப்பதில்லை. நான் ஏன் பார்ப்பனர்களை எதிர்க்கிறேனென்றால் நான் மனிதர்களை நேசிக்கிறேன்."

(தந்தை பெரியார்)

*****

Anonymous said...

தந்தை பெரியார் பேசுகிறார் :

நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரிடத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன்.





இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறை வாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத் தான் நான் மற்ற வலுக் குறைவான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு தான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.





உண்மையிலேயே பார்ப்பனர்கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட்டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது. நான் காங்கிரஸில் இருந்த காலத்தில் - அதாவது எனது நல்ல நடுத்தர வயதான 40-வது வயது காலத்தில் - நான் ஒரு சுயநலமும் எதிர்பாராமல், எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் (உயர்ந்த அந்தஸ்தில்) இருக்கும்போதே, பார்ப்பன சமுதாயத்தில் இரண்டறக் கலந்து, எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன் என்பது எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தெரியும். நான் காங்கிரஸிலிருந்து பிரிந்ததே, பார்ப்பன வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுத்தான் பிரிந்தேனேயொழிய, மற்றபடி எந்தவிதமான சுயநலம் காரணமாகவும் பிரியவில்லை. பிரிந்த பிறகு பார்ப்பன வெறுப்புணர்ச்சியோடு தொண்டாற்றுகிறேன் என்றால், அத்தொண்டில் எனக்குச் சுயநலம் என்ன இருக்கிறது? அல்லது எனது தொண்டில் நான் வெளிப்படையாகச் சொல்லுகின்ற கருத்தல்லாமல் வேறு உட்கருத்து என்ன இருக்கிறது?







என்னைப் போலவே என் கருத்துகளுக்கெதிரான கொள்கைகளின் மீது உண்மையாகப் பாடுபடுகிற இராஜாஜி அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். எப்படியோ நாங்கள் இரு பிளவாகப் பிளந்து ஒன்றுக்கொன்று ஒட்டமுடியாத அளவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம்.எனக்கு, "நான் தோல்வியடைய மாட்டேன்; நிதானமாகவாவது வெற்றியடைவேன்" என்கிற நம்பிக்கை உண்டு. இராஜாஜியோ, எப்படியோ யோசனையின்றி ஆத்திரப்பட்டுத் தவறான வழியில் இறங்கிவிட்டார். உண்மையிலேயே வருணாசிரம சாதிமுறையைப் புதுப்பித்து நிலைநிறுத்துவது சாத்தியமாகுமா? காந்தி இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டார் என்றால், அது இன்றைக்கு 35 - ஆண்டுகளுக்கு முந்திய காலம். இந்தக் காரணத்தினால் தான், அவர் கொல்லப்பட்டதற்குத் தமிழர்கள் அவ்வளவாக வருந்தவில்லை.









இன்றைய இராஜாஜியின் கருத்தை, என்னை அவர் காங்கிரஸில் இழுத்த காலத்தில் சொல்லியிருப்பாரேயானால், அவருக்கு ஏற்பட்ட பெருமையும், பதவி வாய்ப்பும், செல்வ வளர்ச்சியும் ஏற்பட்டு இருக்க முடியுமா? ஆகவே அவருடைய இன்றைய நிலைமை மக்களை ஏய்த்து வளர்த்தவர் என்றுதானே பொருள்? நான் அப்படியொன்றும் ஏய்க்கவில்லையே; உளறவும் இல்லையே?நான் - எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் - என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன்; சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் கூட, மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அல்லன். பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன்.இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்?









நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.தாங்கள் அப்படி இல்லையென்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால் நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும்.நம் நாடு இன்று அடைந்திருக்கிற இந்தப் போலி சுதந்திரம் என்பது ஒன்றைத் தவிர - மற்ற எல்லா வளர்ச்சிக்கும் பார்ப்பன சமுதாயம் எதிரியாக இருந்திருக்கிறது. இதுமாத்திரம் அல்லாமல், நாட்டில் சமயம், தர்மம், நீதி, அரசியல் என்னும் பேரால் இருந்து வளர்ந்து வரும் எல்லாக் கேடுகளுக்கும் பார்ப்பன சமுதாயம் ஆதரவளித்தே வந்திருக்கிறது, வருகிறது. அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்துத்தான் இந்த நாடும் இந்தச் சமுதாயமும் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இனி வளர்ச்சியை மெதுவாக்கலாமே தவிர, யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைமையைக் காண்கிறேன்.

Anonymous said...

பகுத்தறிவு என்று சொல்லுவதும்
மாறி மாறி வருவதாகும்.இன்று நாம் எவை எவைகளை அறிவுக்குப் பொருத்தமானவை என்று
எண்ணுகிறோமோ அவை அவை நாளைக்கு மூடப் பழக்கங்கள் எனத் தள்ளப்படும்.

நாம் கூட பல பொருள்களை, ஏன் மகான்கள் என்று புகழப்படுபவர்கள்! சொன்னவற்றையே ஒதுக்கி விடுவோம். அதுப்போல் தான்
நமது பின்னோர்கள் என்னைக் குறித்துங்கூட ஒரு காலத்தில் "ராமசாமி என்ற மூடக்
கொள்கைக்காரன் இருந்தான்" என்று கூறலாம்.

அது இயற்கை. மாற்றத்தின் அறிகுறி!
காலத்தின் சின்னம். பழைய காலத்தைச் சேர்ந்தவை என்பதற்காக நாம் குறை கூறவில்லை. அவர்கள் காலத்திற்கு அவர்கள் செய்தது சரி என்பதானாலும் இன்று மாறித்தான் ஆகவேண்டும்.

சிக்கிமுக்கிக் கல்லினால் முதலில் நெருப்பை உண்டாகக்கியவன் அந்தக் காலத்து "எடிசன்!" அப்புறம் படிப்படியாக முன்னேற்றமாகி இப்போது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம்.

எனவே மாற்றம் இயற்கையானது.
அதைத் தடுக்க யாராலும் முடியாது.
எத்தகைய வைதீகமும் மாற்றத்திற்குள்ளாகி தான் தீர வேண்டும்.

---------------------------

தந்தை பெரியார் குறிப்பிட்ட கருத்தோடு தோழர் தமிழ் ஓவியா அவர்கள் மானமுள்ள கி.வீரமணி அவர்களை ஆய்வுகுட்படுத்துவது பகுத்தறிவுக்கு நல்லது.

Anonymous said...

இன்றைய மக்களிலே பலருக்கு
பழைமையிலே இருக்கும் மோகம்
அறிவையே பாழ் செய்து விடுகிறது.
புதிய உலகத் தோற்ற வேகத்தை
தடை செய்து விடுகிறது.

பழைய முறைப்படி உள்ள அமைப்புகளால் -
இலாபமடையும் கூட்டம்,
புதிய அமைப்பு ஏற்படுவதைத் தடுக்க
முயற்சிப்பது இயற்கை.

ஆனாலும் பாமரனின் ஞானசூன்யம்,
சுயநலக்காரரின் எதிர்ப்பு எதிர்ப்பு,
என்னும் இரண்டு பெரிய விரோதிகிளக் கண்டு கலங்காமல் வேலை செய்வோரே- இனிவரும் உலகச் சிற்பிகளாக முடியும்.

(தந்தை பெரியார்)

------------------

(பழைய முறைப்படி உள்ள அமைப்புகளால் -
இலாபமடையும் கூட்டம்,....)

தந்தை பெரியாரின் கருத்து தற்போதைய போலி தி.க. வினருக்கும் பொருந்தும்.

Anonymous said...

////லக்கிலுக் said...
Monday, April 13, 2009
//பெரியாரின் கருத்துக்களை தட்டச்சு செய்வதினாலே பெரியார் இயக்கம் பற்றி எல்லாம் தெரிந்துவிட்டது என்று நினைப்பது சரியல்ல. //

தோழர்! இது உங்களுக்கே ஓவரா தெரியலை? :-)))))/////


தோழர் லக்கி நீங்கள் தப்பாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள்.
இந்த வாக்கியம் நான் உபயோகிக்கவில்லை. தமிழ்ஓவியா
கூறியது.

பார்க்க :
http://thamizhoviya.blogspot.com/2009/04/blog-post_320.html

உடன்பிறப்பு said...

//செந்தழல் ரவி said...
Monday, April 13, 2009

///தமிழ் ஓவியா தனிப்பட்ட முறையில் உங்களை விமர்சித்ததற்கு எனது கண்டனங்கள்///

அதனை அந்த பதிவிலேயே சொல்லியிருந்தீர்கள் என்றால் உங்கள் நடுநிலை தெரிந்திருக்கும்.

இப்போது இங்கே வந்து சொல்வது நீர்த்துப்போன நீராகாரம் மாதிரி உள்ளது
//

தோழர்! உங்களை பற்றிய விமர்சனம் ஆதலால் அது உங்களுக்கு பெரிதாக தெரிந்து இருக்கிறது அந்த பதிவில் எனக்கு தெரிந்தது கலைஞர் மட்டுமே. இப்போது நீங்கள் சுட்டிக் காட்டியதால் உடனே என் கணடனத்தை பதிவு செய்தேன். சுட்டிக் காட்டியவுடன் தவறை திருத்திக் கொளவதும் தவறா

உடன்பிறப்பு said...

//செந்தழல் ரவி said...
Monday, April 13, 2009

///நீங்கள் தொகுத்துள்ள படங்கள் எல்லாம் மிகவும் அருமை. எங்கள் எதிர்வினை எல்லாம் கலைஞர் மீது வைக்கப்படும் விமர்சங்களுக்கு அல்ல அந்த விமர்சங்களில் பிரயோகப்படுத்தப்படும் தரம் தாழ்ந்த சொற்களுக்கு தான்///

சென்ற பதிவிலும் சரி இந்த பதிவிலும் சரி, கலைஞர் என்றே விளித்திருக்கிறேன். கருணாநிதி என்று கூட சொல்லவில்லை. என்ன தரம் தாழ்ந்த சொல்லை உபயோகப்படுத்தினேன் என்று அறியத்தரமுடியுமா ?
//

இது உங்களை பற்றியது அல்ல கலைஞரை விமர்சித்து எழுதும் மற்றவர்களை பற்றியது அவர்கள் வலைப்பக்கங்களுக்கு சென்று நான் விவாதிப்பது இல்லை. உணர்ச்சிகள் மேலிடும் போது என்ன ஆரோக்கியமான விவாதத்தை எதிர்பார்க்க முடியும். அவர்களால் ஒருவித பரபரப்பை மட்டுமே உருவாக்க முடியும். அவர்களால் ஒரு உருப்படியான முடிவைக் கூட சொல்ல முடியாது. நீங்கள் அந்த வகை அல்ல என்பதால் தான் இங்கே வந்து என் கருத்தை பதிவு செய்தேன்

உடன்பிறப்பு said...

//Blogger லக்கிலுக் said...

//அதை விட, சட்டமன்றத்துல ஒரு பெண் எம்.எ.ஏவிடம் உன் பாவாடை நாடாவ அவுத்து பார் தெரியும்னு பேசினாரே ஒரு நாகரிக தலைவர். //

கார்க்கி சார்!

ரொம்ப நாளாக காங்கிரஸ்காரர்கள் அதிமுக கூட்டணியில் இருக்கும் போதெல்லாம் மேடையில் சொல்லும் குற்றச்சாட்டு இது.

கலைஞர் இப்படி சொன்னாரா என்று சட்டமன்ற குறிப்புகளை பார்க்கும்போது இல்லை. ஒருவேளை கலைஞர் அதுமாதிரி சொன்னபோது நீங்கள் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கலாம். நீங்களே நேரடியாக கேட்டிருக்கும் பட்சத்தில், ஒத்துக் கொள்கிறேன் :-)//

எப்படி அவை அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு "டாக்டர்" விஜய்யிடம் தான் பயிற்சி எடுக்க வேண்டும் போல் இருக்கிறது

அன்பரசு said...

திரு. ரவி, காங்கிரசுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்ற உங்கள் கருத்திற்கு மாற்றுக் கருத்தே கிடையாது. அதே நேரத்தில் இந்த தேர்தலில் நாம் காட்டும் காங்கிரஸ் எதிர்ப்பு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? தமிழ் ஓவியாவில் இட்டிருந்த எனது பின்னூட்டத்தை மீண்டும் தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

//பனங்காட்டான் சொன்னது…
அங்கே தமிழினம் அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கையில் இங்கே தமிழர்களின் ஒற்றுமையின்மை மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த நேரத்தில் தேர்தல் வந்தது, அரசியல் கட்சிகளின் முகமூடி உரிந்து விட்டது. ஆனால் யாரும் வெக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

அரசியல் சார்பு இல்லாமல் கீழ்கண்ட சூழ்நிலையை கற்பனை செய்து பாருங்கள்
தேர்தலில் இந்திய அளவில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்று, தமிழகத்தில் அதிமுகவும் அதிக இடத்தில் வென்றிருந்தால், நிச்சயம் காங்கிறஸும் அதிமுக கூட்டணி அமைக்கக் கூடும். அப்படி ஒரு கூட்டணி அமைந்த அடுத்த நிமிடமே திமுக ஆட்சி கலைக்கப் படும். இப்போது மேடை போட்டு ஈழம், தமிழர்கள் என்றூ வாய்கிழிய கத்திக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் அப்போது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே போய் விடுவார்கள் (அவர்கள் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் சரி).

இப்படி ஒரு சூழ்நிலை வரத்தான் போகிறது. இது சாபமல்ல. நடக்கப்போகும் உண்மை. அய்யாவாவது, காங்கிரஸ் அரசின் கயமைத்தனமான நடவடிகைகளை வேடிக்கை பார்த்து நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் அம்மா வந்தால்? தானே முன்வந்து அத்தகைய நடவடிக்கைகளை எடுப்பாரே? அப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? வெறும் காங்கிரஸ் எதிர்ப்பு என்ற பெயரில் அதிமுகவுக்கு அப்படி ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தருவது தமிழின துரோகம். இது வெரும் நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல. தமிழக அரசியலிலும் மாற்றங்கள் வரத்தான் போகின்றன். அவை தமிழர்களுக்கும் தமிழினத்துக்கும் நிச்சயம் நன்மை பயப்பதாக இருக்காது.//

அதே நேரத்தில் ஜனநாயக நாட்டில், மக்கள் அரசியல் கட்சிகளைத் தண்டிக்க தேர்தலைத் தவிர வேறு வழிமுறை உண்டா என்று தெரியவில்லை!

நன்றி

aathirai said...

//முதலில் அவரை பெரியார் என்று விளிப்பதை கண்டிக்கிறேன். அவர் பெரியார் என்றால் நானும் நீரும் சிறியாரா ? //
இது பரவாயில்லை.


இப்பவெல்லாம் வீரமணியை மானமிகு வீரமணி என்று போடுகிறார்கள். இது குறித்தது என்ன நினைக்கிறீர்கள் ?

மாயவரத்தான் said...

லக்கிலுக்... புரட்சி கலைஞர், புரட்சித் தலைவி பற்றி மட்டும் தான் எழுதுவார். அஞ்சா நெஞ்சன் குறித்தெல்லாம் வாயை திறக்க மாட்டார். அதையெல்லாம் விட பெரிய காமெடி, 'பெரிசு' தன்னை எல்லாரும் கருணாநிதி என்று தான் அழைக்கிறார்கள் என்று புலம்பியது தான். கருணாநிதிதானே பேரு?!

மாயவரத்தான் said...

//மானமிகு வீரமணி//

விழுந்தடிச்சு சிரிச்சிட்டு போவ வேண்டியது தான். நாட்டுல காமெடியன்கள் ரொம்பவே பெருத்திட்டானுங்கப்பா. தமிழினத் தலைவருன்னு தனக்கு தானே ஒரு ஆளு சொல்லிக்கலையா? அதே மாதிரி தான் இதுவும்.

தமிழ் ஓவியா said...

//நாட்டாமை என்பது என்ன?

நம்முடைய சிந்தனைகளை நம்முடைய செயல்பாடுளை அடுத்தவர் விரும்பமின்றி திணிக்க முற்படும்போது ஏற்படும் சர்வாதிகாரத்தனம் என்பதே நாட்டாமையாகிறது. ஒரு கழகத்தின் உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன் விருப்பப்படி தி.மு.க
இ.காங்கிரஸ் ஆதரவு குறித்த சர்ச்சகைக்குள் மாட்டியிருக்கும் கி.வீரமணியின் சூழ்ச்சிதான் நாட்டாமைத்தனம் என்பது. அதை நாம் விமர்சிக்க முற்படுவது கழகத்திற்கு எதிரான தொடர்ச்சியான துரோகத்தனம் செய்யும் கி.வீரமணியின் தன்னிச்சை செயல்பாடுகளைத் தான் இங்கே விமர்சிக்க முற்படுகின்றோம். அது எப்படி நாட்டாமைத்தனமாகும்?//

இதைப்படிக்கும் போது பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தலைவி தமிழச்சிக்கு பெரியார் இயக்கக் கொள்கை தெரியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. சதாரண தமிழச்சிக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் தலைவி தமிழச்சிக்கு தெரியாமல் இருந்தால் அது தவறுதான்.

இயக்கத்திற்குள் வரும் முன் ஆய்ரம் கேள்வி கேள் பதில் அளிக்கிரேன். தெளிவு வந்து இயக்கத்திற்குள் வந்தவிட்டால் எந்தக் கேள்வியும் கேட்காமல் நான் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என்று பெரியார் பேசியுள்ளார்.

பெரியாரின் 1948 தூத்துக்குடி மாநாட்டு உரை இதை தெளிவுபடுத்தும்.

மொத்தத்தில் தலைமை என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அதைச் செயல்படுத்த வேண்டியது தொண்டர்களின் கடமை.
எந்தத் தி.க.காரனாவது உங்களிடம் வந்து வீரமணி எடுக்கிற எடுத்த முடிவு என்னைக்கேட்டு எடுக்க வில்லை என்று உங்களிடம் சொன்னானா?.
அப்படிச் சொல்லியிருந்தால் அவன் தி.க. காரனே இல்லையே.

தி.க. சர்வாதிகார இயக்கம்தான். வீரமணி எடுத்த முடிவை ஒவ்வொரு தி.க. காரனும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறான் என்ற தகவலையும் உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

அடுத்து நீங்கள் எடுத்துப் போட்ட பெரியாரின் சிந்தனைகளை நானும் பலமுறை படித்தும் பல தோழர்களிடமும் விவாதித்தும் இருக்கிறேன் தோழர்.



தி.க. வில் இருந்து அண்னா பிரிந்த போது, குருசாமி பிரிந்த போது பெரியார் கையாண்ட நடை முறைகள் என்ன? அதற்கு அவர்கள் தெரிவித்த மறு மொழிகள் என்ன என்பதையெல்லாம் வாய்ப்பு இருக்குமானல் ஒரு முறை படியுங்கள்.அதே போல் பெரியார் 1952 தேர்தலிலிருந்து அவர் எடுத்த நிலைப்படுகளை எல்லாம் ஒரு முறை ஊன்றிப் படிக்க வேண்டுகிரேன்.

தி.க. சட்ட திட்டப்படி தான் வீரமணி நடந்து வருகிரார். தலைமைச் செயற்குழு, பொதுக்குழு என்று மிகச்ச சரியாகச் செயல் படுகிறார். இந்தத் தேர்தலில் அவர் எடுத்திருக்கும் முடிவு மிகச் சரியான முடிவு என்பது என்னைப் போன்ற ஆயிரம் ஆயிரம் தி.க. தோழர்களின் முடிவு.வீரமணி சர்ச்சை சூழ்ச்சியில் மாட்டியிருக்கிறார் என்பதெல்லம் உங்கள் அதீதக் கற்பனை, ஒவ்வொரு தி.க.காரனும் அவரின் முடிவை செல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

வீரமணி அவர்களை விமர்சிக்க கூடாது என்பது என் கருத்தல்ல. உலகில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்ரு எது வுமே கிடையாது. ஆனால் விமர்சிக்கும் போது நாகரிகமாகவும் சான்றுகளுடனும் விமர்சிக்க வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....