பாப்பா படம்
யோகன் பாரிஸ் அவர்கள் வாங்கித்தந்த நாய்க்குட்டியுடன் என் மகள்.
முதலில் கன்னித்தீவு பற்றி.

இரண்டு நாட்களுக்கு முன் வந்த தினத்தந்தி கன்னிதீவு கார்ட்டூன். 17703 ஆவது முறையாக. இதனை 365 ஆல் வகுத்தால் 48.50 வருடங்கள். இடையில் தீபாவளி பொங்கல் பேப்பர் லீவு, அந்த தலைவர் இந்த தலைவர் மரணம், அது இது என்று .50 குறைத்துக்கொண்டாலும் 48 ஆண்டுகள். A4 சைஸ் புத்தகமாக போட்டால் பக்கத்துக்கு மூன்று ஸ்ட்ரிப் என்று 3 x 2 = 6 ஸ்ட்ரிப் (பின்பக்கமும் சேர்த்து). மொத்தம் 3000 பக்கம் கொண்ட புத்தகமாக போடலாம். ஆனால் கதை ? புரியுமா ? இதனை முதலில் எழுதியவர் இன்றும் உயிரோடு இருப்பாரா ? அப்படி அவ்வளவு பெரிய புத்தகமாக போட்டால் அது கின்னஸ் சாதனையா ? ஒன்றும் விளங்கவில்லை. கன்னித்தீவு கதைதான் என்ன ? அது சுறா கதை அளவுக்கு காம்ளிகேட்டட் ஆக இருக்குமா ? தெரியவில்லை.
வினவு தோழர்கள் மீதான மதவாதிகள் தாக்குதல்

மத வெறியர்கள், வினவு தோழர்களை நேரடி விவாதத்துக்கு வா என்று அறைகூவல் விடுத்து வினவு மறுத்ததை பெரிய வெற்றியாக கொண்டாடுகிறார்கள்.
நல்ல கறி பிரியாணியை தின்று கொழுத்து ஏப்பம் விட்டு அது ஜீரணமாக பெப்ஸி கோக்கை ஸ்ப்ரைட்டை குடித்துவிட்டு பெரிய மெத்து மெத்து சேரில் அமர்ந்திருந்து அவர்கள் இந்த விவாத அறைகூவலை டைப்புவதாக ஒரு கற்பனை மனதில் ஓடுகிறது.
ஓக்கே. நான் வினவு தோழர்களுடன் பேசி விவாதத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். ஆனால் 30 - 40 வயதுக்கு மேல் உள்ள எடை 50 கிலோவுக்கு குறைவாக, டயபட்டீஸ் இல்லாத மதவாதிகள் விவாதம் செய்யலாம். ரெடியா ?
குமுதம் பிரச்சினை, தீர்க்க குழு - கலைஞர்

குமுதம் மூத்த பத்திரிக்கையாளர் மேல் காவல் நிலையத்தில் செக்ஸ் புகார், பதிப்பாளருக்கும் உரிமையாளருக்கும் சண்டை. தீர்த்துவைக்க முதல்வர் குழு அமைக்கிறார். நாட்டில் ஆயிரம் பிரச்சினை இருக்க குமுதம் பிரச்சினையை மின்னல் வேகத்தில் தீர்க்கிறார் பாருங்கள் முதல்வர்.
அப்படியே லீனா மணிமேகலை ப்ராப்ளம், கள்ளழகர் மதுரையில் லேட்டாக வருவது ஏன் போன்றவற்றையும் தீர்க்கவும்.
நல்லா கெளப்புறாங்கய்யா பீதிய ?
திருமாவுக்கு டாக்டர் பட்டம்

திருமாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டதாக ஒரு செய்தி. எந்த பல்கலைக்கழகம் என்று எல்லாம் ஆராய மனது செல்லவில்லை. காங்கிரசுடன் எந்தகாலத்திலும் கூட்டணி இல்லை என்று உண்ணாவிரத மேடையில் அறிவித்துவிட்டு, அந்த கையுடன் சேர்ந்து பதவியை பெற்றவராச்சே. அப்போதில் இருந்து அவரை என் மனதில் இருந்து அகற்றிவிட்டேன். பொய்க்காக சுழலும் நாக்கு நாய் தூக்கொண்டு போக கூட லாயக்கில்லை.

சுறா பதிவுலக விமர்சனங்கள்

சுறா பதிவுலக விமர்சனங்கள் பீதியை கிளப்புகின்றன. படம் மொக்கை என்பதை விட, வேட்டைக்காரனை விட மொக்கை என்பது இன்னும் கிலியூட்டுகிறது. வெளியூர்க்காரன் பார்வையில், கதையை தியாகராஜ பாகவதரிடம் கொடுத்தால், கதை பழசு, வேற மாத்துங்க என்று சொல்லியிருப்பார் என்றால் எவ்வளவு கொடுமை.
விஜய் நாளைய தீர்ப்பு படத்தில் நடித்தார். விஜய் அப்பா சந்திரசேகர், மகனை ஒரு நடிகனாக்கி பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். முயன்றார். கை கொடுத்தவர் சங்கவி. பாத்ரூமில் விஜய் சங்கவிக்கு சோப் போட, கை தவறி சோப் சங்கவியின் மம்மியின் மார்பில் ஆட, ஆபாசத்தை நாக்கை தட்டிக்கொண்டு இளைஞர் பட்டாளம் ரசிக்க அப்படியே விஜய் சர்வைவல் தொடங்கியது. மேலும் சில படங்களில் சங்கவியை பார்க்கவே ரசிகர்கள் படையெடுக்க, உருவானது இந்த சூறாவளி.
இன்றைக்கு திரிசா அனுஸ்கா அசின் வரை விஜய்க்கு கை கொடுக்கிறார்கள். அதனால் கூட்டம் கூட, சந்திரசேகருக்கு வந்தது நாற்காலி கனவு. என் மவனை முன்னனி நடிகனாக்கனும்னு நெனைச்சேன். ஆக்கினேன். இப்ப முதல்வராக்கனும்னு நெனைக்கறேன். அதுக்கு நீங்கதான் கை கொடுக்கனும் என்று சோனியாவிடமும், ராகுலிடமும் பீதியை கிளப்பினது பத்தாது என்று, இப்போது விஜயும், தான் அரசியலில் ஆழம் பார்ப்பதாக நம்மை கொலைவெறியாக்குகிறார்.
இருப்பது ஒரு நாற்காலி. அதற்கு 2011 இல் இடம் கோருபவர்கள் ரொம்ப அதிகம். அதனால் சந்திரசேகரின் எய்ம் 2016 அல்லது 2021 ஆகத்தான் இருக்கும். காங்கிரசில் சேரலாம் அல்லது தனியாக நிற்கலாம். எப்படியோ என்னுடைய ஐடியா இதுதான். சங்கவி மார்க்கட்டு இழந்துவிட்டாலும் விடாதீர்கள். அவரை முதல் உறுப்பினராக கட்சியில் சேருங்கள். அது தான் உங்களுக்கு ராசி. !!
பை த வே. சுறா படம் நான் இன்னும் பார்க்கவில்லை. நாளைக்கோ நாளான்னைக்கோ தீர்ப்பு எழுதும் உத்தேசமும் இல்லை. பதிவர்கள் படத்தை பார்க்காமல் மொக்கை என்று எழுதவேண்டாம். பார்த்து முழுமையான அளவில் மட்டுமே விமர்சனம் செய்யவும். அதுதான் நீங்கள் பதிவராக இருப்பதன் அடையாளம். (No Pain, No Gain)...
¤¤¤¤¤¤¤
எனக்கு பிடித்த, பாப்பாவுக்கு இன்னும் பிடிக்காத டக் சாங்.