Wednesday, October 11, 2006

வெளிநாட்டில் வேலை வேண்டுமா ?

1)துபை
துபையில் உள்ள ஈடிஏ மேற்காசிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனம், தணிக்கையாளர் தேவை, விண்ணப்பதாரர் தணிக்கையாளராக பணியாற்றியிருக்க வேண்டும், தற்போதைய விதிமுறைகளைத் தெரிந்திருக்க வேண்டும், முன் அனுபவம்-3-5 ஆண்டுகள், இ-மெயில் bealthebest@vsnl.net

2)துபை / யூஏஇ

அக்ஷய் சாஃப்ட்வேர் டெக்னாலஜீஸ் லிமிடெட், டெல்பி, எஸ்கியூஎல் சர்வர்/ஆரக்கிள் தேவை, விண்ணப்பதாரர் டெல்பி, எஸ்கியூஎல் சர்வர்/ஆரக்கிள், விபி/ஏஎஸ்பி.நெட் போன்றவற்றில் திறன் பெற்றிருப்பது அவசியம், முன் அனுபவம்-2-4 ஆண்டுகள், இ-மெயில் careers@akshay.co.in

3)துபை / யூஏஇ

பீட்டா ஹாஸ்பிட்டாலிட்டி கம்பெனி, விற்பனைப் பிரதிநிதி தேவை, விண்ணப்பதாரர் கட்டுமானத் துறையில் அனுபவம் பெற்றிருப்பது அவசியம், ஏலம் விடுதல், தினசரி அறிக்கைகளைத் தயாரித்தல், புதிய சேவைகளை அளித்தல் போன்ற பணிகள் தெரிந்திருக்க வேண்டும், முன் அனுபவம்-4-6 ஆண்டுகள், இ-மெயில் milind@iosr.com

4)துபை / யூஏஇ

நிலாக்சி என்டர்பிரைஸஸ், சிவில் என்ஜினீயர் தேவை, தேர்ந்தெடுக்கப்படுவோர் பெரிய வகையிலான கட்டுமானத் திட்டங்களுக்குப் பொறுப்பு வகிக்க வேண்டும், மேலும், அத்திட்டத்தின் அனைத்துப் பணிகளையும் மேற்பார்வையிட வேண்டும், முன் அனுபவம்-2-4 ஆண்டுகள்,
இ-மெயில் nep@airtelbroadband.in

5)சிங்கப்பூர்

பூஜா ஹெச்ஆர் சர்வீஸஸ் நிறுவனம், சாஃப்ட்வேர் (ஜே2ஈஈ) பெர்சனல் தேவை, தேர்ந்தெடுக்கப்படுவோர் நிறுவன திட்டங்களுக்கு டிசைன், செயல்படுத்துதல் மற்றும் துணைநிற்றல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும், முன் அனுபவம்-5-10 ஆண்டுகள்,

இ-மெயில் micro–cv@yahoo.co.in

6)சவூதி அரேபியா

எஸ்சிபிஎல் நிறுவனம், முதுநிலை பினான்சியல் அனலிஸ்ட் தேவை, தேர்ந்தெடுக்கப்படுவோர் நிதி ஆய்வு, வர்த்தக செயல்பாடுகளைக் கண்காணித்தல், திட்டமிடல், கணக்கிடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும், முன் அனுபவம்-3-5 ஆண்டுகள், இ-மெயில் cv@satvamindia.com

7)சிங்கப்பூர், மலேசியா

இன்பினிட் கம்ப்யூட்டர் சொல்யூஷன்ஸ் நிறுவனம், திட்டத் தலைவர் தேவை, விண்ணப்பிப்போர் வெப் ஸ்பியர் பிசினஸ் இன்டகரேட்டர் மெசேஜ் புரோக்கரைக் கையாண்ட அனுபவம் பெற்றிருப்பது அவசியம், முன் அனுபவம்- 4-12 ஆண்டுகள்,

இ-மெயில் debasis@infics.com

8)சிங்கப்பூர்

நெமேரா இன்டர்நேஷனல் கம்பெனி லிமிடெட், காக்னோஸ் டெவலப்பர்ஸ் தேவை, விண்ணப்பிப்போர் காக்னோஸ், எஸ்ஏபி, பிடபிள்யூ, பேங்க், கன்பிகுரேஷன் ஆகியவற்றைத் தெரிந்திருப்பது அவசியம், ஒருங்கிணைந்த எஸ்ஏபி பிடபிள்யூ மற்றும் காக்னோஸ் அனுபவம் பெற்றிருப்பது ஏற்கத்தக்கது, முன் அனுபவம்-5-8 ஆண்டுகள்,
இ-மெயில் swarup@nemera.com

9)ஹாங்காங், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து

குலோபுல் கன்சல்டிங் நிறுவனம், எஸ்ஏபி கன்சல்டன்ட்ஸ் தேவை, தேர்ந்தெடுக்கப்படுவோர் நிறுவனத்தின் பெரிய அளவிலான திட்டங்களுக்கு தொழில்நுட்ப (அ) செயல்பாட்டு ஆலோசகராகய் பணியாற்ற வேண்டும், குறைந்தபட்சம் 2 செயல்பாட்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும், எம்எம், எஃப்ஐ, சிஓ, சிஆர்எம், ஹெச்ஆர், பிபி, பிரி சேல்ஸ், பேசிஸ், நெட் வேவர், ஏபிஏபி ஆகியவற்றைத் தெரிந்திருப்பது அவசியம், முன் அனுபவம்-5-20 ஆண்டுகள், இ-மெயில்
jobs.apply@globuleconsulting.com

10)துபை / யூஏஇ

கோல்டுஸ்டார் எண்டர்பிரைஸ் நிறுவனம், ஐ.டி. அட்மினிஸ்ட்ரேட்டர்ஸ் தேவை, விண்ணப்பதாரர் ஆரக்கிள் தொடர்பான டிபிஎம்எஸ் தெரிந்திருக்க வேண்டும், ஐ.டி. அட்மினிஸ்ட்ரேட்டராக இதற்கு முன் பணியாற்றியிருப்பது ஏற்கத்தக்கது, முன் அனுபவம்- 3-5 ஆண்டுகள், இ-மெயில் fastjobs@goldstarindia.net

11)ஜப்பான்

பிசிஎஸ் டெக்னாலஜி லிமிடெட், பவர்பில்டருடனான சைபேஸ் அல்லது ஆரக்கிள் தேவை, விண்ணப்பதாரர் துறை தொடர்பான அனுபவம் பெற்றிருக்க வேண்டும், வங்கித் துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், சைபேஸ் எஸ்கியூஎல் புரோகிராமிங் டெவலப்மென்ட், பவர்பில்டர் புரோகிராமிங், யூனிக்ஸ் ஷெல் ஸ்கிரிப்ட்ஸ் புரோகிராமிங் தெரிந்திருப்பது அவசியம், முன் அனுபவம்-3-5 ஆண்டுகள், இ-மெயில்
gn-venkataprasad@pcstech.com

12)அமெரிக்கா

ஜேகே டெக்னோசாஃப்ட் லிமிடெட், எம்எஃப்ஜி / பிஆர்ஓ ஈபி2, புரோகிரஸ் சார் டெவலப்பர் தேவை, விண்ணப்பதாரர் எம்எஃப்ஜி, பிஆர்ஓ, ஈபி2, புரோகிராஸ் ஆகியவற்றைத் தெரிந்திருப்பது அவசியம், முன் அனுபவம்-
3-8 ஆண்டுகள்,

இ-மெயில் jkproserve@aol.com

13)சிங்கப்பூர்

கோவன்சிஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், டிபி2 டிபிஏ- அட்மினிஸ்ட்ரேட்டர் தேவை, விண்ணப்பிப்போர் டிபி2 டேட்டாபேûஸக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும், முன் அனுபவம்-3-6 ஆண்டுகள், இ-மெயில் SVenkataramana@covansys.com

14)சிங்கப்பூர்

வென்சர் சாஃப்ட்டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஏஎஸ்400 டெவலப்பர்ஸ் தேவை, விண்ணப்பதாரர் ஏஎஸ்400, ஆர்பிஜி/ஐஎல்இ உடன் யூனிக்ஸ், சி, சி++ தெரிந்திருப்பது அவசியம், வங்கி சூழ்நிலையில் அனுபவம் பெற்றிருப்பது ஏற்கத்தக்கது, முன்
அனுபவம்-5-7 ஆண்டுகள், இ-மெயில் ramachandran.p@venturesofttech.com

15)துபை / ஓமன்

டிரஹென் இன்டர்நேஷனல் கன்சல்டன்ட்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் பிரைவேட் லிமிடெட், கட்டுமான மேற்பார்வையாளர் தேவை, விண்ணப்பிப்போர் பெரிய கட்டடங்கள், வர்த்தக வளாகங்கள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள் கட்டுவதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், முன் அனுபவம்-7-15 ஆண்டுகள், இ-மெயில்
manish@trehaninternational.com

மற்றபடி www.jobsdb.com, www.jobstreet.com போன்றவைகளில் பதிந்து சிங்கப்பூர் வேலைக்கு முயற்சி செய்யலாம்.

மற்ற தளங்கள்:-
www.naukri.com
www.3p-lobsearch.com
www.career1000.com
www.careerindia.com
www.employindia.com
www.indianjobs.com
www.placementindia.com
www.placementpoint.com
www.timesjobsandcareers.com
www.winjobs.com
www.redforwomen.com
www.go4careers.com
www.indiaventures.com
www.indiagateway.com
www.jobsahead.com
www.alltimejobs.com
www.careerage.com
www.headhunters.net
www.monster.com
www.careers.org
www.eresumes.com
www.careerxroads.com
www.nationjob.com
www.jobweb.com
www.aidnjobs.com
www.careerforyou.com
www.careergun.com
www.go4careers.com
www.lobs.itspace.com
www.joboptions.com
www.careermosaic.com
www.jobconnection.com
www.bestjobsusa.com
www.careerpath.com
www.americasemployers.com
www.job-interview.net
www.geojobs.bizland.com
www.job-hunt.org
www.e-netindia.com
www.mykeystone.com
www.gutterspace.com
www.netguide.com
www.tamilnadustate.com
www.cweb.com
www.espan.com
www.jobcurry.com
www.skillsandjobs.com
www.cioljobs.com
www.lampen.co.nz

இவ்வளவு தகவல்களையும் அருமையாக திரட்டித்தந்த என் அன்புகுரிய பதிவருக்கு நன்றி...

Tuesday, October 10, 2006

உங்க ஆபீஸ்ல வேலை காலி இருக்கா ?

எல்லாருக்கும் வணக்கம்.....

நான் வேலை வாய்ப்பு செய்திகளை கொடுத்துக்கொண்டிருப்பது சில/பல பேருக்கு தெரியும்...

நான் இதுவரை செய்துகொண்டு இருப்பது என்னவென்றால் என்னிடம் தொடர்புகொண்டு உதவிகேட்பவர்களுக்கு, எனக்கு தெரிந்த இடங்களில் தொடர்புகொண்டு, காலியிடங்களை தெரிந்துகொண்டு, அவர்களுக்கு தகுதியான பணிவாய்ப்புகளை அறிவிப்பது...

அந்த பணிக்கு தகுதியாக என்ன தேவை என்பதை என் சிற்றரிவுக்கு எட்டிய அளவில் சொல்வது, அவர்கள் எவ்வாறு அந்த பணிக்கு தயாரிப்பது என்பதை என் அறிவுக்கு எட்டிய அளவில் சொல்வது போன்றவைகளை செய்வது வழக்கம்...

எனக்கு மேலும் ஒரு கொள்கை உள்ளது...ஏற்க்கனவே நான் இந்த கம்பெனியில் வேலை செய்யுறேன்...எனக்கு அந்த கம்பெனியில் ஏதாவது பாரு...எனக்கு அதிக சம்பளத்துல பாரு...என்று கேட்பவர்களுக்கு....

தெரியல்லியேப்பா.....என்று நாயகன் கமல் மாதிரி சொல்லிவிட்டு அப்பீட் ஆகிவிடுறது வழக்கம்...

ஏற்க்கனவே பணியில் இல்லாதவர்கள்...பணிவாய்ப்பு தேடிக்கொண்டு இருப்பவர்கள்...வேறு ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அருகில் பணிபுரிய விருப்புபவர்கள்...போன்றவர்களுக்கு மட்டுமே உதவி செய்வேன்...

இதில் இந்திக்காரன், அய்யரு, தேவரு, மலையாளி, குள்ளம், உயரம், சேப்பு, மஞ்சள் என்று எந்த பிரிவினையும் பார்ப்பதில்லை...

ஒரு நன்பர் கேட்டார்...ஏண்டா, இந்தமாதிரி எல்லாருக்கும் வேலை தேடிக்குடுத்துக்கிட்டு இருந்தா, உன்னோட "பீஸ் ஆப் மைண்ட்" பாதிக்கப்படுமே ??

என்னோட சின்ன பீஸ் ஆப் மைண்ட் ஒன்னும் பாதிக்காது...என்று காமெடி செய்துவிட்டு....இதில் தான் எனக்கு பீஸ் ஆப் மைண்ட் என்றேன்....சீரியசாக..

வேலை செய்யாத ஒருவரை பணியில் சேர்க்க பல கயமை செய்யவேண்டி இருக்கும்...இல்லாத புராஜக்ட்டை சேர்ப்பது...அண்டார்ட்டிகாவில் இயங்கும் கம்பெனியில் மூன்றுவருடம் டீ ஆத்தியதாக கதை விடுவது..என்று எல்லாம்....எவனால போய் பார்க்க முடியும்....

என்ன செய்வது...பொய்மையும் வாய்மையிடத்து, குறைதீர்த்த நன்மை பயக்குமெனின் என்ற வள்ளுவர் வாக்குப்படி கயமை செய்தால் நம்ம மக்கள் நல்லா இருப்பாங்கன்னா அந்த கயமையை காதலுடன் செய்ய தயார்....

ஆனால் பணி வாய்ப்பு கிடைத்தவுடன், அனைவரும் பாராட்டும்படி வேலை செய்வதில் நம்ம தமிழனுக்கு இணை அவனேதான்....

வெறும் ஐ.டி ஜாப் மட்டும் இல்லாமல் பல பீல்டுல வேலைக்கும் நம்ப புள்ளைங்களை சேக்கவேண்டி இருக்கு....

அதனால சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், உங்க அலுவலகத்தில் ஓப்பனிங்ஸ் இருந்தால் எனக்கு ஒரு பின்னூட்டம் மூலமாவோ தனிமடல் மூலமாவோ, உங்கள் நேரத்தை கொஞ்சம் ஒதுக்கி....

தயவுசெய்து தெரிவியுங்க....

கைப்புள்ள ராஜஸ்தான்ல வேலை இருக்கு அப்படின்னு சொன்னாலும் அதுக்கும் நம்ம ஆளு தயாராத்தாம்யா இருக்கான்...வடுவூர் குமார் கன்ஸ்ட்ரக்ஷன் பீல்டுல வேலை இருக்குன்னு சொன்னாலும் பரவாயில்லை...நாகைசிவா...சூடான்ல கண்ணிவெடியை நகத்திவைக்கிற வேலை இருந்தாலும் சொல்லுங்க...

வெளிநாட்டுல வேலை கிடைச்சு போயிருப்பீங்க பலர்...அந்த அனுபவத்தை பகிர்ந்துக்கிட்டா அது நம்ம மக்களுக்கு உபயோகமா இருக்கும்...

வலைப்பூ நடத்தும் சிலர் சொந்த நிறுவணம் கூட வைத்திருக்காங்களாம்...அவங்க எல்லாம் நம்ம புள்ளைங்களுக்கு வேலை தரக்கூடதா ?

உங்களால நாலுபேரு நல்லா இருக்கட்டுமே........

தொடர்புக்கு:

zyravindran@hotmail.com எம்.எஸ்.என் சேட்
+919880597061

Friday, October 06, 2006

ஈவில்ஷேர் எளிமையான வலையேற்றுகருவி

எனது இந்த பதிவில் பெரிய அளவுள்ள கோப்புகளை (Files) , அல்லது படங்களை (Images), அல்லது மென்பொருட்களை (Softwares) எளிமையாக வலையேற்றம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

வழக்கமாக பெரிய அளவுள்ள தகவல்களை இணையத்தில் வலையேற்றம் செய்து, பிறகு பயன்படுத்த இந்த இணையத்தளம் சிறப்பான பணியை செய்கிறது...

முதலில் www.evilshare.com என்ற தளத்தை திறந்துகொள்ளுங்கள்..



பிறகு, தேவைப்படும் கோப்பை அல்லது மென்பொருளை அல்லது படத்தை தேடி தொட்டுக்கொள்ளுங்கள்..



பிறகு Upload Seleted File(s) என்ற பொத்தானை அழுத்தினால் போதும்..உங்கள் தகவல் வலையேற்றம் செய்யப்பட்டுவிடும்..

இவ்வாறு வலையேற்றம் செய்யும்போது, உங்கள் மின்னஞ்சலை அளித்தால் உங்கள் தகவல் எங்கே சேமிக்கப்படுகிறது, அதனை எங்கிருந்து பெறலாம் என்ற தகவலை மின்னஞ்சலாகவும் அளிப்பர்..

மேலும் உங்களை பற்றிய தகவல்களை இந்த நிறுவனம் சேகரிக்காமல் சேவை மட்டுமே அளிக்கவேண்டும் என்றால் அதற்க்கும் வழியுண்டு..

பிறகு, உங்கள் நீங்கள் வலையேற்றிய கோப்பின் பெயர், அதன் அளவு, அது எங்கே ஏற்றப்பட்டுள்ளது - என்ற சுட்டி முகவரி (Link) திரையில் காட்டப்படும்..



பிறகு அந்த சுட்டியை உபயோகப்படுத்தி உலகின் எந்த மூலையில் இருந்து உங்கள் கோப்பை தரவிறக்கி திறந்துகொள்ளலாம்..



இந்த முறையில் எளிமையாக உங்கள் கோப்புகளை (Files) / படங்களை / பெரிய மென்பொருட்களை கூட வலையேற்றம் செய்துகொள்ளலாம்...

இது முற்றிலும் இலவசமாக செயல்படும் சேவை என்பது இன்னும் சிறப்பு...

காணவில்லை : கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்

சார், நீங்க பாத்தீங்களா ? அக்கா நீங்க பாத்தீங்களா ? அண்ணா நீங்க ? வண்டி எப்ப வரும் என்று தெரியவில்லை...நானும் ரெண்டு வாரமா நிக்கிறேன்...

கடைசியா இந்தியா ஒளிருது என்று ஒரு பதிவை போட்டுவிட்டு அப்பீட் ஆன கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் எங்கியோ டீசல் இல்லாம நின்னுபோச்சா, கரியில்லாம நின்னுபோச்சா தெரியலை...

எங்கிட்ட ஒரு அழுக்கு மூட்டை இருக்கு...அதை ஏத்தலாம் என்று பாத்தா முடியல்லை...கடலை வறுக்கிறவரு வேற காத்திருக்காரு...

யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீயாத்துற அப்படீங்கற மாதிரி நிறைய அனானிங்க வேற காத்திருக்காங்க...

பின்னூட்ட நாயகர் காத்திருக்காரு...

லக்கிலூக்கை விட்டு ஒரு பதிவு போடசொல்லலாமுன்னு பார்த்தேன்...சரி கோவிகண்ணனே தேட ஆரம்பிச்சுட்டார்...நாமளே போட்டுருவோம் என்று தான்...

உமது கருத்துக்களை மறுக்க எமக்கிருக்கும் உரிமைக்காக...உடனடியாக வாருங்கள் மகேந்திரன் பெ..........

Thursday, October 05, 2006

ஏண்டா சாதீயம் பேசுகிறாய் ?

பள்ளிப்பருவத்தில் சாதீயம் பேசினீங்களா ?

கல்லூரிப்பருவத்தில் சாதீயம் பேசினீங்களா ?

குடும்பத்தாரிடம் சாதீயம், ஆரியம், திராவிடம் பேசினீங்களா ?

பெட்டிக்கடையில், மளிகைகடையில், சந்தைக்கடையில், துணிக்கடையில் சாதீயம் பேசினீங்களா ?

முடிவெட்டிக்கொள்ளும் இடத்தில், உங்கள் துணி அயன் செய்பவரிடம், உடம்பு சரியில்லைன்னா போகும் டாக்டரிடம், பாடம் சொல்லிக்கொடுக்கும் வாத்தியாரிடம் சாதீயம் பேசினீங்களா ?

உங்கள் நண்பரிடம் சாதீயம் பேசினீங்களா ?

ஏன் இணையத்தில் மட்டும் சாதீயம் பேசுறீங்கப்பா ?

ஏன் ஏன் ஏன் ?????

காந்தியை கொன்றது யார் ? ஏன் ?

காந்தி பிறந்த அன்று டிஸ்கவரியில் ஒரு டாக்குமெண்டரி ஒளிபரப்பினார்கள்..அதில் இருந்து எனக்கு தெரியவந்த விஷயம் இது...பலரை கேட்டேன், ஆனால் அவர்களுக்கு இது புதிய செய்தியாகத்தான் இருந்தது...

காந்தி உண்ணாவிரதம் இருந்தார்..அந்த சமயத்தில் காலை பிரார்த்தனையின்போது இந்து மகாசபையை சேர்ந்த நாதுராம் வினாயக கோட்சேவால் கொல்லப்பட்டார்...

அவர் ஏன் உன்ணாவிரதம் இருந்தார் என்பது நிறைய பேருக்கு தெரியாத விஷயமாக உள்ளது..

இந்திய பாக்கிஸ்தான் பிரிவினைக்கு பிறகு இந்திய - பிரிட்டன் கூட்டு கருவூலத்தில் இருந்த 550 மில்லியன் டாலர் தொகையை பாக்கிஸ்தானுக்கு சரிபங்கு அளிக்கவேண்டும்...இதுதான் அவரது உண்ணாவிரதத்தின் நோக்கம்..

உத்தரவிட்டவர் வீர் சாவர்க்கர்...

முதலில் முயற்ச்சி செய்தவர் இந்து மகாசபையை சேர்ந்த கோபால் கோட்சே ( நாதுராம் வினாயக கோட்சேயின் சகோதரர்).

அவர் துப்பாக்கியோடு சென்று நின்றிருந்த சன்னல் உயரமாக இருந்ததால் சுட முடியவில்லை. திரும்பிவிட்டார்...

பிறகு குழுவில் இருந்த வேறொருவர் முயற்ச்சி செய்து அது தோல்வியில் முடிந்தது...

அடுத்த நாள் இந்து மகாசபையை சேர்ந்த நாராயண் ஆப்தேயின் திட்டப்படி, நாதுராம் வினாயக கோட்சே, காந்தியின் முன் மண்டியிட்டு வணங்கி, துப்பாக்கியை முழக்கினார்...

மகாத்மா எனும் விடிவெள்ளி மறைந்தது.....

EDS நிறுவன ரெபரல் வேலை வாய்ப்புகள்

அனைவருக்கும் வணக்கம்....

ஈடிஎஸ் ஒரு சிறந்த நிறுவனம் என்று தெரியுமில்லையா....அதில் பல்வகை பணிகள் உருவகியுள்ளன...

1.டெவலப்மெண்ட்
2.டெஸ்டிங்
3.சேப் (SAP)

மேலும் பல துறைகளில் இருக்கின்றன...

கீழுள்ள சுட்டியை திறந்து பார்த்தால் மேலதிக தகவல் கிடைக்கும்...

http://www8.evilshare.com/911bc9fc-a57c-1029-9802-00a0c993e9d6

வாழ்த்துக்கள்...

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....