தேடுங்க !

Tuesday, October 10, 2006

உங்க ஆபீஸ்ல வேலை காலி இருக்கா ?

எல்லாருக்கும் வணக்கம்.....

நான் வேலை வாய்ப்பு செய்திகளை கொடுத்துக்கொண்டிருப்பது சில/பல பேருக்கு தெரியும்...

நான் இதுவரை செய்துகொண்டு இருப்பது என்னவென்றால் என்னிடம் தொடர்புகொண்டு உதவிகேட்பவர்களுக்கு, எனக்கு தெரிந்த இடங்களில் தொடர்புகொண்டு, காலியிடங்களை தெரிந்துகொண்டு, அவர்களுக்கு தகுதியான பணிவாய்ப்புகளை அறிவிப்பது...

அந்த பணிக்கு தகுதியாக என்ன தேவை என்பதை என் சிற்றரிவுக்கு எட்டிய அளவில் சொல்வது, அவர்கள் எவ்வாறு அந்த பணிக்கு தயாரிப்பது என்பதை என் அறிவுக்கு எட்டிய அளவில் சொல்வது போன்றவைகளை செய்வது வழக்கம்...

எனக்கு மேலும் ஒரு கொள்கை உள்ளது...ஏற்க்கனவே நான் இந்த கம்பெனியில் வேலை செய்யுறேன்...எனக்கு அந்த கம்பெனியில் ஏதாவது பாரு...எனக்கு அதிக சம்பளத்துல பாரு...என்று கேட்பவர்களுக்கு....

தெரியல்லியேப்பா.....என்று நாயகன் கமல் மாதிரி சொல்லிவிட்டு அப்பீட் ஆகிவிடுறது வழக்கம்...

ஏற்க்கனவே பணியில் இல்லாதவர்கள்...பணிவாய்ப்பு தேடிக்கொண்டு இருப்பவர்கள்...வேறு ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அருகில் பணிபுரிய விருப்புபவர்கள்...போன்றவர்களுக்கு மட்டுமே உதவி செய்வேன்...

இதில் இந்திக்காரன், அய்யரு, தேவரு, மலையாளி, குள்ளம், உயரம், சேப்பு, மஞ்சள் என்று எந்த பிரிவினையும் பார்ப்பதில்லை...

ஒரு நன்பர் கேட்டார்...ஏண்டா, இந்தமாதிரி எல்லாருக்கும் வேலை தேடிக்குடுத்துக்கிட்டு இருந்தா, உன்னோட "பீஸ் ஆப் மைண்ட்" பாதிக்கப்படுமே ??

என்னோட சின்ன பீஸ் ஆப் மைண்ட் ஒன்னும் பாதிக்காது...என்று காமெடி செய்துவிட்டு....இதில் தான் எனக்கு பீஸ் ஆப் மைண்ட் என்றேன்....சீரியசாக..

வேலை செய்யாத ஒருவரை பணியில் சேர்க்க பல கயமை செய்யவேண்டி இருக்கும்...இல்லாத புராஜக்ட்டை சேர்ப்பது...அண்டார்ட்டிகாவில் இயங்கும் கம்பெனியில் மூன்றுவருடம் டீ ஆத்தியதாக கதை விடுவது..என்று எல்லாம்....எவனால போய் பார்க்க முடியும்....

என்ன செய்வது...பொய்மையும் வாய்மையிடத்து, குறைதீர்த்த நன்மை பயக்குமெனின் என்ற வள்ளுவர் வாக்குப்படி கயமை செய்தால் நம்ம மக்கள் நல்லா இருப்பாங்கன்னா அந்த கயமையை காதலுடன் செய்ய தயார்....

ஆனால் பணி வாய்ப்பு கிடைத்தவுடன், அனைவரும் பாராட்டும்படி வேலை செய்வதில் நம்ம தமிழனுக்கு இணை அவனேதான்....

வெறும் ஐ.டி ஜாப் மட்டும் இல்லாமல் பல பீல்டுல வேலைக்கும் நம்ப புள்ளைங்களை சேக்கவேண்டி இருக்கு....

அதனால சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், உங்க அலுவலகத்தில் ஓப்பனிங்ஸ் இருந்தால் எனக்கு ஒரு பின்னூட்டம் மூலமாவோ தனிமடல் மூலமாவோ, உங்கள் நேரத்தை கொஞ்சம் ஒதுக்கி....

தயவுசெய்து தெரிவியுங்க....

கைப்புள்ள ராஜஸ்தான்ல வேலை இருக்கு அப்படின்னு சொன்னாலும் அதுக்கும் நம்ம ஆளு தயாராத்தாம்யா இருக்கான்...வடுவூர் குமார் கன்ஸ்ட்ரக்ஷன் பீல்டுல வேலை இருக்குன்னு சொன்னாலும் பரவாயில்லை...நாகைசிவா...சூடான்ல கண்ணிவெடியை நகத்திவைக்கிற வேலை இருந்தாலும் சொல்லுங்க...

வெளிநாட்டுல வேலை கிடைச்சு போயிருப்பீங்க பலர்...அந்த அனுபவத்தை பகிர்ந்துக்கிட்டா அது நம்ம மக்களுக்கு உபயோகமா இருக்கும்...

வலைப்பூ நடத்தும் சிலர் சொந்த நிறுவணம் கூட வைத்திருக்காங்களாம்...அவங்க எல்லாம் நம்ம புள்ளைங்களுக்கு வேலை தரக்கூடதா ?

உங்களால நாலுபேரு நல்லா இருக்கட்டுமே........

தொடர்புக்கு:

zyravindran@hotmail.com எம்.எஸ்.என் சேட்
+919880597061

42 comments:

செந்தழல் ரவி said...

என் இமெயில் முகவரி

ravindran.antonysamy@lgsoftindia.com

என் தொலைபேசி..

9880597061

லக்கிலுக் said...

பாராட்டுக்கள் ரவி.

இதுவரை நீங்கள் 50 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததாக கேள்விப்பட்டேன்...

வாழ்த்துக்கள்

செந்தழல் ரவி said...

வேலை இருந்தா சொல்லுப்பா !!!

செந்தில் குமரன் said...

நல்ல முயற்சி ரவி எனக்குத் தெரிந்தால் கண்டிப்பாக சொல்கிறேன்.

வினையூக்கி said...

Good work Ravi

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

சிறந்த சேவை !!
வாழ்த்துகள்.வேலை இருந்தால் அவசியம் சொல்கிறேன்.

மதுரையம்பதி said...

செந்தழலாரே,

டெஸ்டிங்-ல ஏதோ வேகன்ஸி இருக்காம் கோரமங்களா கம்பனில....CV இருந்தா அனுப்புங்க....My friend works in GCI and he said there are some vacancy for people who know testing and ready to sign contract for an year.....

மதுரையம்பதி said...

Also if you have some Microsoft Architects ready to work from Bangalore (5-7 years exp.), let me know.

ஷைலஜா said...

அடேயப்பா! அசாத்தியமான பணி செய்யறீங்களே ரவி! பெயரில் மட்டுமல்ல சேவையிலும் செந்நெருப்பாய் ஜொலிக்கிறீங்க ..வாழ்த்துகள்!
ஷைலஜா

ஷைலஜா said...

அடேயப்பா.!.அசாத்தியமான பணி செய்யறீங்களே ரவி..பெயரில் மட்டுமில்லை இப்படி நல்ல நோக்கத்தோடு உதவும் சேவையிலும் செந்நெருப்பாய் ஜொலிக்கிறீங்க வாழ்த்துகள்!
ஷைலஜா

மனதின் ஓசை said...

கண்டிப்பா சொல்றேன் ரவி.

நல்ல பாராட்டவேண்டிய முயற்சி.
வாழ்துக்கள்.

முத்து(தமிழினி) said...

//வேலை செய்யாத ஒருவரை பணியில் சேர்க்க பல கயமை செய்யவேண்டி இருக்கும்...இல்லாத புராஜக்ட்டை சேர்ப்பது...அண்டார்ட்டிகாவில் இயங்கும் கம்பெனியில் மூன்றுவருடம் டீ ஆத்தியதாக கதை விடுவது..என்று எல்லாம்....எவனால போய் பார்க்க முடியும்....//

:)))

u are so good buddy..keep it up

Hariharan # 26491540 said...

ரவி,

நானிருப்பது குவைத்தில். எங்களது நிறுவனத்தில் தற்போது புதிய வேலை விசாக்கள் பெறுவதில் குவைதிசேஷனால் புதிய நியமனங்களில் சில சட்டசீதியான இம்பேலன்ஸ் குளறுபடிகள். இங்கேயே குவைத்தில் வெலைசெய்து கொண்டிருப்போர் லோகல் டிரான்ஸ்பர் முறையில்தான் ஆளெடுக்கின்றார்கள்.

என்றாலும், எனக்குத் தெரிந்த புதிய விசா தரமுடிந்த நிறுவனங்களில் விசாரித்து ஒபனிங் இருப்பதை தெரிவிக்கிறேன்.

நல்ல முயற்சி ரவி. வாழ்த்துக்கள்.

அன்புடன்,

ஹரிஹரன்

செந்தழல் ரவி said...

அருமை....நன்றி ஹரி..

மதுரையம்பதி said...

என்னப்பா, என்னோட முதல் பின்னுட்டத்த காணோம்?

செந்தழல் ரவி said...

வந்துக்கினே கீது தலை...

செந்தழல் ரவி said...

தலை...ஒன் இயர் காண்ட்ராக்ட் என்ன, டென் இயர் கூட காண்ட்ராக்ட் ஸைன் செய்வோம்...

:))))))

செந்தழல் ரவி said...

நன்றி குமரன் எண்ணம்...

செந்தழல் ரவி said...

நன்றி வினையூக்கி / கல்வெட்டு...

மேட்டரை மறந்துடாதீங்க..

நாகை சிவா said...

//நாகைசிவா...சூடான்ல கண்ணிவெடியை நகத்திவைக்கிற வேலை இருந்தாலும் சொல்லுங்க...//

கண்ணி வெடி நகர்த்தி வைக்குற வேலை எல்லாம் வேண்டாம்ப்பா, வேற ஏதும் நல்ல வேலை இருந்தாலே சொல்லுறேன்.

Hariharan # 26491540 said...

ரவி,

www.kuwait-toplist.com
www.kuwaitpocketguide.com
இந்த இரு வலைத் தளங்களில் குவைத்தில் உள்ள பல்வேறு வகையிலான நிறுவனங்களின் தொடர்பு கொள்ளும் விபரங்கள் கிடைக்கும்.
குவைத்தில் வேலைக்கு முயற்சிப்போருக்கு இவை உதவிகரமாக இருக்கும்.

குவைத் பற்றிய எனது பதிவுகள்:
http://harimakesh.blogspot.com/2006/06/4.html

http://harimakesh.blogspot.com/2006/06/2.html

அன்புடன்,

ஹரிஹரன்

செந்தழல் ரவி said...

தொலைபேசியில் தொடர்புகொண்ட புனா மோகன், நன்றி...

செந்தழல் ரவி said...

ஹரி, நன்றி அகேய்ன்...

பழூர் கார்த்தி said...

உங்கள் நல்ல நோக்கத்திற்கு பாராட்டுக்கள் !!

***

மின்னஞ்சல் முகவரியை குறித்துக் கொண்டேன், வாய்ப்பிருக்கும்போது தெரிவிக்கிறேன், நன்றி !!

G Gowtham said...

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ரவி!
கண்டிப்பாக வாய்ப்புக்களைக் கேள்விப்படும் நேரத்தில் உடனேயே தகவல் கொடுக்கிறேன்.

இது தொடர்பாக (வேலை வேண்டி அல்ல) நண்பர் லக்கிலுக் உங்களைத் தொடர்பு கொள்ளுவார். உதவி செய்யவும்.

வடுவூர் குமார் said...

இருந்தால், நிச்சயம் தெரிவிக்கிறேன்.
நம் மக்களுக்கு இல்லாததா?

வெங்கட்ராமன் said...

கண்டிப்பாக, எனக்கு தெரிந்தவற்றை தெரிவிகிறேன்.

செந்தழல் ரவி said...

தொலைபேசியில் அழைத்த கவுதம்.ஜி க்கு நன்றி....

தேவ் | Dev said...

ரவி மிகவும் நல்ல முயற்சி. நிச்சயம் என் ஆதரவு உண்டு. எங்கள் அலுவலகத்தில் வாய்ப்புகள் ஏற்படும் போது உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

சுவனப்பிரியன் said...

உங்கள் நல்ல நோக்கத்திற்கு பாராட்டுக்கள் !!


மின்னஞ்சல் முகவரியை குறித்துக் கொண்டேன், வாய்ப்பிருக்கும்போது தெரிவிக்கிறேன், நன்றி !!

Anonymous said...

அவுஸ்திரேலியாவில் www.seek.com.au மூலம்தான் அதிகமானோர் வேலைக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

KARTHIKRAMAS said...

ரவி, வாழ்த்துக்கள். ம்டிந்தால் என்னால் ஆன உதவிகளைச் செய்கிறேன். தேவைப்படும் போது karthikramas@gmail.com எழுதுங்கள்.

SKumar said...

Good Job. Keep it up.

நிலவு நண்பன் said...

நல்ல பணி ரவி..வாழ்த்துக்கள்.... பயன் பெற்றவர்களின் பிரார்த்தனைகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கிடைக்கும்..

செந்தழல் ரவி said...

Thanks Mr.PKS for Giving Good Openings...I will serve you soon..

செல்வன் said...

Ravi,

I am a student.Once I get a job will defenitely inform you of any openings.Keep up the good work

NaagareegaKomaali-Thiagan said...

Good work ravi. Keep it up.

If i come across any job vacancies, i will inform you.

Me and my friends are doing 'Free Resume Review Service'. We are doing only for IT people particularly in Microsoft Technologies. It is just like your "//வேலை செய்யாத ஒருவரை பணியில் சேர்க்க பல கயமை செய்யவேண்டி இருக்கும்...இல்லாத புராஜக்ட்டை சேர்ப்பது...அண்டார்ட்டிகாவில் இயங்கும் கம்பெனியில் மூன்றுவருடம் டீ ஆத்தியதாக கதை விடுவது..என்று எல்லாம்....எவனால போய் பார்க்க முடியும்....//"

You can also reach me at thiagarajan_s_d@yahoo.com

with regards
thiagu

புதுமை விரும்பி said...

ரவி,

உங்களின் இந்த பணி மூலம் நிச்சயம் நிறைய பேர் பயனடைவார்கள். உங்கள் பணி தொடர வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

rajavanaj said...

ரவி,

நல்ல முயற்சி.. உங்களுக்கு UNIX / RISC SERVER HARDWARE ல் 3-5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் தெரிந்தால் அவர்கள் CVஐ கீழுள்ள என் மெயில் ஐடிக்கு forward செய்யுங்கள்..

rajavanaj@gmail.com

உங்கள் முயற்சி மேலும் தொடர வாழ்த்துக்கள்..

நன்றி

rajavanaj said...

ரவி,

//வேலை செய்யாத ஒருவரை பணியில் சேர்க்க பல கயமை செய்யவேண்டி இருக்கும்...இல்லாத புராஜக்ட்டை சேர்ப்பது...அண்டார்ட்டிகாவில் இயங்கும் கம்பெனியில் மூன்றுவருடம் டீ ஆத்தியதாக கதை விடுவது..என்று எல்லாம்....எவனால போய் பார்க்க முடியும்....//

இது கொஞ்சம் ஆபத்து.. உங்கள் பெயர் கெடும் ஆபத்தும்.. அப்படி வேலையில் சேருபவர் பெயர் கெடும் ஆபத்தும் உண்டு.. கவனம்!!

தொண்டன் said...

இந்தக்காலத்திலும் இப்படி ஒரு சேவையா?.
வாழ்த்துக்கள்.

You may use this link for openings.

Regards.

http://www.e-jobsearch.com/uae
http://my.monsterindia.com/my_monster.html

செந்தழல் ரவி said...

நன்றி சடையப்பா..