காணவில்லை : கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்

சார், நீங்க பாத்தீங்களா ? அக்கா நீங்க பாத்தீங்களா ? அண்ணா நீங்க ? வண்டி எப்ப வரும் என்று தெரியவில்லை...நானும் ரெண்டு வாரமா நிக்கிறேன்...

கடைசியா இந்தியா ஒளிருது என்று ஒரு பதிவை போட்டுவிட்டு அப்பீட் ஆன கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் எங்கியோ டீசல் இல்லாம நின்னுபோச்சா, கரியில்லாம நின்னுபோச்சா தெரியலை...

எங்கிட்ட ஒரு அழுக்கு மூட்டை இருக்கு...அதை ஏத்தலாம் என்று பாத்தா முடியல்லை...கடலை வறுக்கிறவரு வேற காத்திருக்காரு...

யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீயாத்துற அப்படீங்கற மாதிரி நிறைய அனானிங்க வேற காத்திருக்காங்க...

பின்னூட்ட நாயகர் காத்திருக்காரு...

லக்கிலூக்கை விட்டு ஒரு பதிவு போடசொல்லலாமுன்னு பார்த்தேன்...சரி கோவிகண்ணனே தேட ஆரம்பிச்சுட்டார்...நாமளே போட்டுருவோம் என்று தான்...

உமது கருத்துக்களை மறுக்க எமக்கிருக்கும் உரிமைக்காக...உடனடியாக வாருங்கள் மகேந்திரன் பெ..........

Comments

vanakkam machhi..express enga Nondi adikkuthoo ?
Anonymous said…
எக்ஸ்பிரஸ் தான் கழுகாகிடுச்சுன்னு பேசிக்கீறாங்களே தல..
கிழுமாத்தூர் வராததைக் கண்டித்து அனானி முன்னேற்றக் கழகத்தினர் தமிழ்மண பந்த் நடத்தப்போவதாக கேள்விப்பட்டேன்....

லொடுக்குப் பாண்டியும் வருவதில்லை என்பதை நினைவில் கொள்ளவும்....
Anonymous said…
நீ உருப்படவே மாட்டே.

பிருத்வி ராஜ் சௌவான்
அனானி முன்னேற்றக் கழகம் said…
இங்கே அனானி வெளாட்டுக்கு அனுமதி உண்டா?

இவண்
அமைந்தகரை அண்ணாமலை
அமைப்பாளர்
அனானி முன்னேற்றக் கழகம்
என்ன வெளாட்டு இது ?
Anonymous said…
எங்கே எனது பின்னூட்டம் ?
கிழுமத்தூர் கவுந்துட்டா ? தடம் மாறிடுச்சா ?
அனானிகள் முன்னேற்றக் கழகம்
கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்குள் வருமா ?
தம்பி said…
இது ரமலான் மாதம் என்பதால் இங்குள்ள பெரும்பாலான அலுவலகங்கள் அரைநாள் மட்டுமே வேலை. காலை 9.00 - 1.00 மணி வரைதான். லொடுக்குபாண்டி மேற்சொன்ன காரணத்தினால் அதிகம் வலைப்பக்கம் வருவதில்லை. கிழுமாத்தூர் ஏன் வரதில்லைனு தெரியல!
G.Ragavan said…
நாங்கூட நீங்க கதை எழுதீருக்கீங்களோன்னு வந்தேன். ஒன்னும் புரியல. நமக்குத் தெரியாத சமாச்சாரம் போல.
கிழுமத்தூர்க்காரர் திருமணத்திற்குப் பெண் பார்க்கப் போயிருக்கின்றாரோ என்னமோ!
அவசரப் படாதீர்கள் கண்ணுங்களா - அவரே வந்து சூப்பராக அதைப் பற்றி பதிவு போடுவார். பொறுமையாக இருங்கள். கிழுமத்தூரில் இணையத் தொடர்பு உள்ளதா என்ன? அதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்!
//SP.VR.SUBBIAH said...
கிழுமத்தூர்க்காரர் திருமணத்திற்குப் பெண் பார்க்கப் போயிருக்கின்றாரோ என்னமோ!
அவசரப் படாதீர்கள் கண்ணுங்களா - அவரே வந்து சூப்பராக அதைப் பற்றி பதிவு போடுவார். பொறுமையாக இருங்கள். கிழுமத்தூரில் இணையத் தொடர்பு உள்ளதா என்ன? அதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்!
//

வாத்தியார் ஐயா...!
அவருக்கு இரண்டாம் கல்யாணம் பண்ணிவைக்கச் சொல்கிறீர்களா ?

மூன்று வயது குழந்தை இருக்கிறது அவருக்கு !

:)
Senthil said…
பார்டெண்டரிடம் கேளுங்க இல்லாங்காட்டி திவ்யா கிட்ட கேளுங்க :)

அன்புடன்
சிங்கை நாதன்.
Johan-Paris said…
ரவி!
ஒன்னுமே புரியலயே!!!
யோகன் பாரிஸ்
தலைவா கிழமாத்தூர் எக்ஸ்பிரஸ் தமிழ்மண பிளாட்பாரத்துக்கு வந்துவிட்டது.
அழகு said…
கிராஸிங் போட்டிருப்பாங்க. எதிர்த் திசையிலிருந்து வரும் வண்டிக்காக எவ்வளவு நேரம் காத்திருப்பது? வண்டியை எடுக்கவும் முடியாது.

ஹூம் ... பார்ப்போம்.

Popular Posts