தேடுங்க !

Friday, October 06, 2006

ஈவில்ஷேர் எளிமையான வலையேற்றுகருவி

எனது இந்த பதிவில் பெரிய அளவுள்ள கோப்புகளை (Files) , அல்லது படங்களை (Images), அல்லது மென்பொருட்களை (Softwares) எளிமையாக வலையேற்றம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

வழக்கமாக பெரிய அளவுள்ள தகவல்களை இணையத்தில் வலையேற்றம் செய்து, பிறகு பயன்படுத்த இந்த இணையத்தளம் சிறப்பான பணியை செய்கிறது...

முதலில் www.evilshare.com என்ற தளத்தை திறந்துகொள்ளுங்கள்..பிறகு, தேவைப்படும் கோப்பை அல்லது மென்பொருளை அல்லது படத்தை தேடி தொட்டுக்கொள்ளுங்கள்..பிறகு Upload Seleted File(s) என்ற பொத்தானை அழுத்தினால் போதும்..உங்கள் தகவல் வலையேற்றம் செய்யப்பட்டுவிடும்..

இவ்வாறு வலையேற்றம் செய்யும்போது, உங்கள் மின்னஞ்சலை அளித்தால் உங்கள் தகவல் எங்கே சேமிக்கப்படுகிறது, அதனை எங்கிருந்து பெறலாம் என்ற தகவலை மின்னஞ்சலாகவும் அளிப்பர்..

மேலும் உங்களை பற்றிய தகவல்களை இந்த நிறுவனம் சேகரிக்காமல் சேவை மட்டுமே அளிக்கவேண்டும் என்றால் அதற்க்கும் வழியுண்டு..

பிறகு, உங்கள் நீங்கள் வலையேற்றிய கோப்பின் பெயர், அதன் அளவு, அது எங்கே ஏற்றப்பட்டுள்ளது - என்ற சுட்டி முகவரி (Link) திரையில் காட்டப்படும்..பிறகு அந்த சுட்டியை உபயோகப்படுத்தி உலகின் எந்த மூலையில் இருந்து உங்கள் கோப்பை தரவிறக்கி திறந்துகொள்ளலாம்..இந்த முறையில் எளிமையாக உங்கள் கோப்புகளை (Files) / படங்களை / பெரிய மென்பொருட்களை கூட வலையேற்றம் செய்துகொள்ளலாம்...

இது முற்றிலும் இலவசமாக செயல்படும் சேவை என்பது இன்னும் சிறப்பு...

4 comments:

செந்தழல் ரவி said...

மேக்கொண்டு ஏதாவது சந்தேகமுன்னா என்ன கேளுங்க மக்களா..

வைசா said...

நன்றி செந்தழல் ரவி. எவ்வளவு நாட்களுக்கு இலவசமாக இருக்கும் என்று பார்ப்போம்.

வைசா

அனுசுயா said...

¾¸ÅØìÌ ¿ýÈ¢í§¸¡. ÀÂýÀÎò¾¢ À¡÷òÐðÎ ¸ÕòÐ ¦º¡øÈÛí¸.

SP.VR.சுப்பையா said...

இளசுகளுக்கு என்ன இருக்கு?

நண்பர் செந்தழல் ரவி அவர்கள் கேட்டிருந்தார் "இளசுகளுக்கு என்ன இருக்கு?"
வயதானவர்கள் மட்டும் படிக்கவும் என்ற என்னுடைய இன்றையப் பதிவைப் படித்து விட்டு அவர் அப்படிக்கேட்டிருந்தார்.

இளசுகளுக்கு இல்லாமலா?

இளசுகளுக்கு எழுதுவது என்பது எனக்கு ரஸமலாய் சாப்பிடுவதைப்போல. இதோ கொடுத்துள்ளேன்.

http://devakottai.blogspot.com/2006/10/blog-post_116027992775079964.html