எல்லாருக்கும் பாட்டு கேக்க பிடிக்கும்....மென்மையான இசையை ரசிக்காதவங்க யாரிருக்கா ? எனக்கும் இசையை ரசிப்பது ரொம்ப விருப்பமான விஷயம் தான்...புதிய தமிழ் பாடல்கள் அவ்வளவாக என்னை கவர வில்லை என்றாலும் பழய தமிழ் பாடல்களை ரசிக்கும்போது ஏற்ப்படும் இன்பமே தனி தான்....
யாரோ சொன்னாங்களாம்....
"செவிக்குணவு இல்லதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்...." அப்படின்னு....
என்னோட சின்ன இதயம் நல்ல தமிழ் பாடல்களை கேட்கும்போது உருகும்....யார் இசை அமைத்தது, எந்த திரைப்படம், யார் பாடியது, யார் நடிதது எதுவும் எனக்கு தெரியாது...
வரிசைபடுத்தி சொல்ல முடியாது...எனக்கு என்ன ரசனை என்று எனக்கே தெரியாது...எந்த பாட்டு என்ன ராகம் - சுத்தமா தெரியாது...எனக்கு தெரிந்தது எல்லாம் ரசிக்க மட்டுமே.....
பொன்னை விரும்பும் பூமியிலே...என்னை விரும்பும் ஓர் உயிரே....என்ன அழகான வரிகள்.....
உன்னை கானாத கண்னும் கண்ணல்ல...உன்னை என்னாத நெஞ்சும் நெஞ்சல்ல......உயிரை உருக்கும் வரிகளன்ரோ.....
நேற்றுமுதல் நீ யாரோ நான் யாரோ...இன்று முதல் நீ வேறோ நான் வேறோ...காதலின் ஆரம்பத்தை வேறு யார் இதை விட அழகாக சொல்ல முடியும்.....
பாட்டு தலைவன் பாடினால் பாட்டுதான்...கேட்டு ரசிக்க.....பாடலின் ஆரம்பமே உற்சாகத்தின் ஊற்றில் நனைவது போல் உள்ளதன்ரோ.....
சொல்லத்துடிக்குது மனசு...சுகம் அள்ள துடிக்கிர வயசு.....நூறு வயாக்ரா மாத்திரை சாப்பிட்டமாதிரி உற்சாகம் அள்ளுகிரதே.....
கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம்....கடலை வானம் கொள்ளை அடித்தால் மேகம் என்று அர்த்தம்....வைரமுத்துவின் வைர வரிகளை பாருங்கள்.....
விழிகளின் அருகினில் வானம்..வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்...இது ஐந்து புலன்களின் எக்கம்...இது அதிசய அனுபவம் ஹொ யெ...என்ன ஒரு உயிர்ப்பு இந்த வரிகளில்.....
மேகம் கருக்குது மழைவர பாக்குது...வீசி அடிக்குது காத்து....பாடலை கேட்கும்பொழுதே லேசாக குளிர்வது போல இருக்கிறதா ???
ஏரிக்கரை பூங்காற்றே...நீ போற வழி தென் கிழக்கு....தென் கிழக்கு வாசமல்லி...அட அட அட....பாக்கியராஜ் கற்பனையில் / இசையில் உருவாகி கருவாகி நம் காதுகளை வந்து அடைந்த இந்த பாடல்...யாரால் மறக்க முடியும்.....
suppose உன்ன காதலிச்சு suppose நானும் பேதலிச்சு...suppose என்ன கட்டிகோன்னா என்ன செய்வாய்....மனம் துள்ளுது இல்லையா....
m.s.v, இளையராஜா, ரகுமான் ஆகியவரின் இசையில் பல காலதால் அழியாத பாடல்கள் என் மனதில் தங்கி விட்டன.....மற்றவர் இசையிலும் பல பாடல்கள் பிடிக்கும்....
- தொடரும்....
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
வலையுலகில் காமெடியில கலக்கிய / கலக்கிக்கிட்டு இருக்கிற மக்கள்ல எனக்கு தெரிஞ்ச பட்டாசுகள் லக்கிலுக், இளவஞ்சி , கைப்புள்ள , வெட்டிப்பயல் , கொங...
No comments:
Post a Comment