"விஜய்காந்தை நம்பமாட்டோமாக.. - ரவி

இது விஜய்காந்தை நம்புவோமாக அப்படின்னு சிட்டுகுருவி எழுதியதுக்கு பதில்...

விஜயகாந்தை நம்பலாம் சரி...அவரிடம் உள்ள விசிலடிச்சான் குஞ்சுகளை நம்பி எப்படி ஆட்சியை கொடுப்பது...

இது என்ன காஷ்மீர் தீவிரவாதிகளை பக்கம் பக்கமா லியாகத் அலிகான் வசனத்தையும் புள்ளி விவரங்களையும் பேசி கொல்லற விஷயமா ?? ( அதுவும் தமிழ் ல ஹி ஹி )

2011 ல வேனா விஜயகாந்தை நம்பலாம்... ( அப்ப தனுஷ் கட்சி ஆரம்பிக்கரேன் னு அடம் புடிப்பார்..சிம்பு, கலைஞர் என்னோட குரு அப்படின்னு அ(று)றிவிப்பார்..அஜீத் ஏதாவது ஒரு சாதி கட்சியோட தமிழக தலைவரா மல்லு கட்டுவார்..விஜய் ஸ்டாலின் மகன் உதய நிதிக்கு முடிசூட்ட பாக்கறாங்கன்னு தி.மு.க வில இருந்து விலகி அ.தி.மு.க வில சேருவார் ( சங்கீதா முகத்துல சுரத்தே இருக்காது ஹி ஹி )

அதனால இப்ப விட்டுடுவோம் அவர..

Comments

Sittukuruvi said…
அய்யா ரவி ஜெ -வையே உட்கார வைத்து அழகு பார்த்துட்டோம். சந்தோஷமா சசிக்கு அள்ளி கொடுத்திட்டோம் அதை விடவா கொடுமையா இருக்கப்போவுது.

பழுத்த அரசியல்வாதிகள் செய்யும் அட்டகாசங்களைத்தான் பார்க்கிறோமெ. ஆயுத எழுத்து படத்தை பார்த்து சந்தோசமடைகிறோம்.இப்படி ஒன்று நடக்காதா என்று. ஆனால் நம் நாட்டில் நீங்களும் நானும் நிற்போமா முடியாது நாம் மட்டும் தான் ஓட்டு போடுவோம். பிரபலமாக இருப்பதால் அது சினிமா மூலம் தான் என்றால் மட்டும் ஏன் மறுக்கிறீர்?

சற்று யோசித்து பாருங்கள் நானும் கழகத்தின் பின் ஒருகாலத்தில் நின்றவன் தான். ஆனால் அலுத்துவிட்டது எல்லோரும் (ஆங்கிலத்தில் சொல்வது என்றால் (CYA cover your ass).சுவாசனீகருக்கே ஒட்டு போட்டு உக்கார வ்ச்சிட்டாங்க விஜய்காந்த் எந்த விஷயத்தில் குறைந்தவர்

குருவி...

அரசியல் அரிச்சுவடி தெரியாத ரசிகர் கூட்டம், கையில் ஆட்சி அதிகாரம் வந்தால் என்ன செய்யும்..மக்களை சுரண்ட தான் பார்க்கும்...

பேக்கரி கடையில பொட்டலம் மடிக்கறவர் கொஞ்ச காலத்துக்கு அப்புறம் எடுத்து சாப்பிடுரத நிறுத்தி விடுவார்..

அதனால புதுசா யாரும் பொட்டலம் மடிக்க விடவேண்டாம் அப்படின்னு நான் சொல்லுதேன்...நீங்க ?
Sittukuruvi said…
நீங்கள் சொல்வது முழுதுவதுமாக எற்றுக்கொள்ளமுடியவில்லை.
தப்பு செயத்வன் திருந்துவான் என்ற நம்பிக்கையில தப்பே செய்யாதவர்களை இவர் தப்பு செய்வார் என ஒதுக்குகிறீர். Experienced professional வேண்டும் என fresherukku வேலையை கொடுக்கமாட்டீர்களா? எதிர்கட்சியாய் இருந்து ட்ரைன் ஆகி பின் கொடுப்பீர்களா. நல்லது செய்ய எண்ண training வேண்டும்.
http://kuzhali.blogspot.com/2006/04/blog-post_14.html
நான் சொல்லுவது, ஏற்கனவே சுரண்டியவர்கள் அதிகம் சுரண்ட மாட்டார்கள் அப்படின்னு தான்...

Fresher வந்து படிச்சி, வேலை செய்ய ஆரம்பிக்கறதுக்குள்ள தாவு தீர்ந்திடும்..
நல்ல கற்பனை. இருந்தாலும் இந்த முறை அவருக்கு வாய்ப்பு வேண்டாம் என்பது தான் என் கருத்து. இதுவே அவர் நான் கு வருடங்களுக்கு முன்பு கட்சி ஆரம்பித்தால் சிறிது வாய்ப்பு இருக்கின்றது
புறக்கணிப்பது தான் ஒரே வழி.(நான் கூறியது பத்திரிக்கையை, தி.மு.க என தவறாக (சரியாக) எண்ண வேண்டாம்
Sittukuruvi said…
சரி அப்ப யாருக்கு போடுவீங்க.எதை நம்பி ஜெவுக்கும் முகவுக்கும் போடுவீங்க?
SK said…
நீங்கள் யாரும் ஒன்றும் செய்ய வேண்டாம்!
கலைஞரும், தலைவியும் நடத்தும் மாய நாடகங்களை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் முதலில் வந்தபோது என்ன 100 வருட ஆட்சி அனுபவத்தோடுதான் வந்தனரா?
தெலுகு தேசம் ஆட்சியைப் பிடித்தது எப்படி?
இன்னும் இதுபோல பல சொல்லலாம்.
'சிங்கம் - சிறுத்தை''மிருக சாதிகள்' தென் தமிழகத்தில் எப்படிப் போகிறது என விவரம் தெரிந்தவ்ர்களைக் கேட்டுப் பாருங்கள்!
தென்கோடியில், முல்லைபெரியாரின் நன்றி எங்கு விழுகிறது எனவும் கவனியுங்கள்!
காலம் மாறுகிறது, நண்பரே!
காட்சியும் மாறத்தான் போகிறது!
மே- 10-ம் தேதி பார்த்து விடலாம்!
வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு 'முரசே'!!
பார்க்க www.aaththigam.blogspot.com

Popular Posts