திருடனுக்கு டீ போட்டு தரலாமா ?

இது எங்க அய்யன பத்தினது...( சில பேர் அப்பாங்கறாங்க)...இப்ப உள்ள புள்ளங்க டாடீ ங்குங்க..அதுல சில பேருக்கு பெரும..அதாவது பெருமைக்கு பேயோட்டுவாங்க...ப்ரச்சன அது இல்ல..எங்க அய்யன் ஒரு போலீஸ் அதிகாரி..சில ஆண்டுகளுக்கு (2002) முன்னால நான் பாண்டிச்சேரியில வேல பாத்துக்கிட்டு இருந்தப்போ அவர் கடலூர் ல இருந்தார். அதனால நானும் அவரும் ஒண்னா தங்க வேண்டி வந்தது...

சனி ஞாயிறு விடுமுறை..அப்போ நான் வீட்டுல அவரோட இருக்க வேண்டி வரும்..ரொம்ம கடுமையானவர் எல்லாம் கிடையாது..எதாவது கம்யூட்டர நோண்டறது, சமையல் பண்றது அப்படின்னு காமடி பண்ணிக்கிட்டு திரிவார்..

மேட்டருக்கு வர்ரேன்...

அவர பாக்க நிரய பேர் வருவாங்க..எல்லாருக்கும் டீ போடறது, ஸ்னாக்ஸ் தற்ரது எல்லாம் பண்னுவேன்..போலீஸ் காரங்க தவிர சில பார்ட்டிங்க வரும்..அழுக்கு வேட்டி, கிழிஞ்ச சட்டை, வாழ்க்கையில இவன் தலை வாரி இருக்கவே மாட்டான் அப்படின்னு சொல்லற மாதிரி ஒரு மண்டை..சத்தியமே பண்னலாம், இவன் கடந்த பத்து நாளா குளிச்சி இருக்க மாட்டான் அப்படின்னு...

இவங்க வந்தாலும் சோபாவுல உக்காருங்க, வாங்க வாங்க அப்படின்னு மரியாதை பறக்கும்...டேய்...சாருக்கு டீ போடு டா..ப்ரிட்ஜ் ல இருந்து ஸ்னாக்ஸ் எடுத்து குடு..பேன் போடு...அப்படின்னு ஒரே ஆர்ப்பாட்டம் பண்னுவார்...

எனக்கா..ஏகத்துக்கும் கடுப்பு ஏறும்..

அவங்க போனதுக்கு அப்புறம், கேப்பேன்...வந்துட்டு போன சார் என்ன பிசினஸ் பண்றாரு...இல்ல என்ன பண்னிக்கிட்டு இருந்தாரு...

அய்யன் பதில் என்ன தெரியுமா...இவர் நம்ம அர்பன் பேங்ல கொள்ள அடிச்சவர் டா..இப்ப திருந்தி பாண்டியில இருந்து சாரயம் கடத்தி வித்துகிட்டு இருக்காரு..

இந்த மாதிரி ஒரு பதில் வரும்..அதாவது பெரிய தப்பு பண்ணிக்கிட்டு இருந்தவர திருத்திட்டாராம் எங்க அய்யன்...

என்னுடைய கேள்வி என்னனா, ஒரு முறை குற்றம் செஞ்சவன் திருந்துவானா என்ன ???

Comments

ஒரு கெட்டவன் நல்லவனா ஆனதுக்கப்பறம் திரும்ப கெட்டவனா ஆக மாட்டானாம்.. எஸ்ஜே சூர்யா சொல்றார். :O)
சூர்யா இப்படிதான் எதாவது மொக்க காமடி பண்ணிக்கிட்டு இருப்பார்...கண்டுக்காதீங்க..

Popular Posts