தயாநிதி அ.தி.மு.க வில் சேர்ந்தார்................

"திமுகவில் குடும்ப அரசியல்தான் நடக்கிறது!" - அதிமுகவில் இணைந்த தயாநிதி மாறன் பேச்சு.

திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் திமுகவிலிருந்து விலகி இன்று முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பிறகு நிருபர்களை சந்தித்த அவர் திமுகவில் குடும்ப ஆதாயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கபட்டு வருவதாக கூறினார். "கருணாநிதி தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கே பதவியும் செல்வாக்கும் இருக்க வேண்டும் என்று செயல்படுகிறார். ஆனால் அவர் என்னை போன்று கட்சிக்கு உழைத்தவர்களை கண்டுகொள்வதில்லை. தக்க சமயத்தில் நண்பர் நடராசர் எனக்கு திமுகவில் இழைக்கபட்ட கொடுமைகளை தெளிவு படுத்தியதால், திமுகவிற்கும், சன் டிவிக்கும் பாடம் புகட்ட அதிமுகவில் இனைந்திருக்கிறேன். என் முடிவை வரவேற்று, புரட்சி தலைவி அவர்கள் 'மிடாஸ்' மதுபான தொழிற்சாலையில் எனக்கு ஒரு கணிசமான பங்கு தருவதாக கூறி கவுரவப்படுத்தியுள்ளார். ஜெயா டிவியில் தினமும் ஒரு மணி நேரமாவது என் முகத்தை காட்ட ஆவன செய்யப்படும் என்று அருமைச் சகோதரர் டிடிவி தினகரன் வாக்குறுதி அளித்துள்ளார். அதிமுகவில் சேர்ந்த பிறகுதான் நான் மன நிம்மதியுடன் இருக்கிறேன்" என்று மேலும் கூறினார். தேர்தலுக்கு சிறிதும் சம்மந்தம் இல்லையென்றாலும், தெரியாவிட்டால் பலபேர் மண்டை வெடித்துவிடும் என்பதால் இனி அவரை சன் டிவியில் இருட்டடிப்பு செய்வார்களா என்ற முக்கிய கேள்விக்கு தான் கலராக இருப்பதால் அவ்வாறு செய்ய இயலாது என்றும், அவ்வாறு செய்தால் தான் பேசவிருக்கும் அதிமுக தேர்தல் பொது கூட்டங்களில் இதற்கு முழு முக்கியதுவம் கொடுக்க போவதாக அவர் கூறினார்.

"ஏய் தயாநிதி, நீ ஆம்பிள்.." என்று தீவிர பிரச்சாரத்தில் இருந்த வைகோவிற்கு அதிமுகவில் தயாநிதி மாறன் இணைந்த செய்தி துண்டுச்சிட்டின் மூலமாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் பேசியதாவது: "தம்பி தயாநிதி மாறன் திமுகவில் இருந்தபோதும் அவர் மீது எனக்கு தனி அன்பு உண்டு. அந்த அன்பின் வெளிப்பாடாகத்தான் நான் அவரை 'ஏய்' என்றும், அவர் என்னை 'நீ','வா','போ' என்றும் பேசினோம். தயாநிதி மாறன் அதிமுகவில் சேர்ந்துவிட்டதால் இனி கலைஞரால் அம்மாவின் ஆட்சியையல்ல அவர்கள் வீட்டு டிவியில் சேனலைக்கூட மாற்ற முடியாது". தயாநிதி மாறன் டாட்டாவை மிரட்டிய விவகாரம் பற்றி நிருபர்கள் கேட்டதற்க்கு, இதை எழுப்பிய நாங்களே மறந்துவிட்டோம் நீங்கள் ஏன் இன்னும் கவலைப்படுகிறீர்கள் என்று பதிலளித்தார்.

சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி நிருபர்களை சந்தித்த போது "தயாநிதி மாறன், நடிகர் சரத்குமார் கூறியது போல திமுகவை தயாநிதி முன்னேற்ற கழகமாக(த.மு.க) பெயர் மாற்றும்படி நிர்பந்தம் செய்துவந்தார். தேர்தல் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில் இதை செய்தால் வீன் குழப்பம் நேரிடும் என்பதால் அதை மறுத்துவிட்டேன். இதை பெரிதாக்கி உளவுத்துறையை ஏவி தயாநிதி மாறனை அதிமுகவிற்க்கு இழுத்துவிட்டார்கள். பல கோடிகள் கைமாற்றபட்டதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. யார் மூலமாக யாருக்கு என்று என்னை கேட்காதிர்கள்" என்று கூறினார். தயாநிதி மாறன் டாட்டாவை மிரட்டினாரா என்ற கேள்விக்கு "அவர் டாட்டாவை மிரட்டினாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது ஆனால் அவர் தாத்தாவையே மிரட்டினார்" என்று பதிலளித்தார். "பேராண்டி பேர்-ஆண்டியான கதை" என்ற தலைப்பில் கலைஞரின் கவிதை இன்றைய முரசொலியில் வெளியிடப்பட்டுள்ளது.
--

போகிற போக்கை பார்த்தால் மேற்கண்டவாறு நடந்தாலும் வியப்பில்லை!!

இப்படி இட்லிவடை யில் எழுதி இருக்கிறார் ஒரு அனானி....படிச்சிட்டு ரொம்ப நேரம் சிரித்தேன்...

ரவி...

Comments

நல்ல அங்கதம்.:))
நல்ல நகைச்சுவை. ஆபிஸில் வாய் விட்டு சிரிக்காமல் இருக்க ரொம்ப கஷ்டப்படுத்தி விட்டீர்கள்.

இந்த தேர்தலில் நடக்கும் பலப்பல கூத்துக்களை விளக்கிக் காட்டும் சிறந்த parody.

நன்றி
தமிழ் முஸ்லிம் கூட்டு வலைப்பதிவில் அருளடியான் என்பவர், தயாநிதியைப் பற்றி 'ஆடாத ஆட்டமெல்லாம்' என்ற பதிவை எழுதியுள்ளார் அதனையும் படியுங்கள்.

Popular Posts