துரியோதனன் நட்பு கதை

கர்ணன் முன்பாக துரியன் மனைவி. இருவரும் சொக்கட்டான் ஆடுகிறார்கள். கர்ணனுக்கு கை ஓங்கி இருக்கிறது ஆட்டத்தில்... அந்த நேரம்... கர்ணனின் பின்னால் இருந்த பக்கமாய் துரியன் வருகிறான். அதைக் கண்ட பானுமதி எழ முயல... அதை அறியாத கர்ணன் அவள் ஆட்டத்தில் தோற்பதால் விலகுவதாய் நினைத்து... எங்கே போகிறாய் என்று அவளை இழுத்து உட்கார வைக்க முயல... அவன் கை அவள் இடையில் இருக்கும் மணி மேகலையில் பட்டு முத்து அறுந்து கூடம் எங்கும் சிதறுகிறது. அப்புறம் தான் பின்னால் வந்த நண்பனைக் கவனிக்கிறான்....


இப்போது இருவரின் நிலை பரிதாபம்... நிற்பவன் அரசன்... அடைக்கலம் தந்து வாழ்வித்தவன்... அவன் முன்னால் அவன் மனைவி மடி பிடித்து இழுத்து மேகலை அறுந்து போகுமாறு செய்தவனை மன்னிப்பானா என்று கர்ணனும், என்ன சொல்லுவானோ கணவன் என்ற அச்சத்தில் பானுமதியும் நிற்க...

துரியன் சொல்கிறான்... கர்ணா... எடுக்கவா கோர்க்கவா என்று.....

அதில் பொதிந்த அர்த்தம் தான் என்ன....


சிதறிய முத்துக்களை எடுக்க நிதானம் வேண்டும். கோபம் கொண்ட மனதில் நிதானம் வராது. எடுக்கும் போதே முத்து வழுக்கும், அதனால் கோபம் அதிகமாகும்... கோபத்தை வெகுவாக அடக்கி அதை எடுத்தப் பின்னாலும் மனதில் சற்றேனும் சலனம் இருப்பதாய் நீங்கள் நினைத்தால்... எடுத்த அந்த முத்தைக் கோர்ப்பேன்...


சலனமடைந்த மனதால் அந்த நுண்ணிய செயல் செய்ய இயலாது... நண்பனே...


என் சகியே... சொல்லுங்கள் எடுக்கட்டுமா கோர்க்கட்டுமா என்று. இருவரும் தீயவர்கள் தான்... ஆனாலும் அவர்களிடையே இருந்த நற்பண்புகளையும் எடுத்துக் காட்டியது. ஒரு சிறந்த நட்புக்கு பரிணாமம் காட்டியது..

மஹாபாரதம்

இங்க இருந்து எடுத்தேன்..http://iyappan.blogspot.com/

Comments

>>>>சிதறிய முத்துக்களை எடுக்க நிதானம் வேண்டும். கோபம் கொண்ட மனதில் நிதானம் வராது. எடுக்கும் போதே முத்து வழுக்கும், அதனால் கோபம் அதிகமாகும்... கோபத்தை வெகுவாக அடக்கி அதை எடுத்தப் பின்னாலும் மனதில் சற்றேனும் சலனம் இருப்பதாய் நீங்கள் நினைத்தால்... எடுத்த அந்த முத்தைக் கோர்ப்பேன்...
சலனமடைந்த மனதால் அந்த நுண்ணிய செயல் செய்ய இயலாது... நண்பனே... <<<<<

துரியோதனன் கோபம் கொள்ளாமல் இருந்தான் என்பதை காமிக்கவே இந்த வசனம் என்று நினைத்திருந்தேன்.. இதில் இத்தனை பொருள் பொதிந்துள்ளது என்று இன்றுதான் புரிந்தது.. நன்றி.. :-)
Anonymous said…
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4782&st=15
ரவி!

எதுக்கு இந்த கூத்தும், கும்மியும்னு தெரிஞ்சுக்கலாமா :-)

BTW, இங்கே அ.மு.க.வினருக்கு இடஒதுக்கீடு உண்டா?

Popular Posts