என்னோட பின்னூட்டம் ( பதிவ தேடிக்கிட்டு இருக்கேன்)

மிக அழுத்தமான பதிவு..எனக்கு தெரிஞ்சத சொல்லுவேன்..

மதலேன் மரியாள் ( இது தான் வீரமாமுனிவர் கொடுத்த பெயர் ) பல இடங்களில் வருகிற ஒரு பெயர்.

அவருக்கு ஒரு சகோதரியும் ஒரு சகோதரனும் உண்டு என்று காண்கிறோம்..

கிருஸ்து உயிர்த்து எழுந்ததாக சொல்லப்படும் நிகழ்ச்சியை இராயப்பர், மற்றும் அருளப்பர் ( கிருஸ்துவின் அன்புக்கு உரிய சீடர் என்று பைபிள் சொல்லும் நபர்) ஆகியவர்களுக்கு முதலில் அறிவித்தவர் மதலேன் மரியாள்..காரணம் மூண்றாம் நாள் சடங்குக்காக அதி காலையில் கல்லரையை அடைகிறார்..

இதற்க்கு முன்பு, ஒரு விருந்துக்கு முன்னதாக இயேசுவின் கால்களை விலை உயர்ந்த நறுமண தைலத்தால் கழுவி, தன் கூந்தலால் துடைக்கிறாள். இதனை இயேசுவை காட்டி கொடுத்ததாக சொல்லப்படும் யூதாஸ் ஸ்காரியேத்து கண்டிக்கிறார். யூதாஸ் சொல்லும் காரணம் அந்த பணத்தில் ஏழைகளுக்கு உதவி செய்யலாமே என்பதாகும்.ஆனால் இயேசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ( ஆதாரம் : பைபிள்)

இயேசு மதலேன் மரியாளின் வீட்டில் மட்டும் தங்கியதாக குறிப்புகள் உண்டு...

மேலும் இயேசு எந்த பெண்னோடும் பேசும் வழக்கம் கொண்டவர் அல்லர்..ஒரு சம்பவம் பைபிளிள் இடம் பெறுகிறது..இயேசு ஒரு சமாரியப் பெண்ணுடன் பேசும் சம்பவம். இந்த நிகழ்ச்சியை காணும் உணவு வாங்கி வர போய் திரும்பிய அவரது சீடர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்..ஆனால் அவர் அந்த பெண்ணுடன் என்ன பேசினார் என்று எவரும் கேட்க வில்லை...ஆனால் அவர் நிலை வாழ்வை கொடுக்கும் தண்ணீரை பற்றி பேசியதாக அந்த பெண் அறிவிக்கிறார்..

மதலேன் மரியாளின் சகோதரன் இறக்கும் சம்பவம் பைபிளிள் இடம் பெறுகிறது..இயேசு இதனால் மனம் உடைந்து அழுததாக அறிகிறோம்..இயேசு மனம் உடைந்து அழுததாக வேறு ஒரே இடத்தில் தான் குறிப்பு உண்டு..அது கெத்சமெனி தேட்டத்தில் ரத்த வியர்வை சிந்தி அழுத இடம்..சிலுவையில் மரிக்கும்போது கூட இயேசு அழுததாக காண கிடைக்கவில்லை..

மேலும் அவர் மதலேன் மரியாளின் சகோதரரை உயிர்ப்பித்ததாக காண கிடைக்கிறது...

மேலும் அவர் தன் தாயை தன் சீடரிடம் ஒப்படைக்கும் தருணத்தில் (சிலுவையில் மரிக்கும்போது) மதலேன் மரியாள் இல்லையே ? இது கூட சிந்திக்க வேண்டிய விஷயம்..

டாவின்சி கடைசி இரவு உணவு சம்பவத்தை கண்ணால் கண்டவர் இல்லையே ? அதனால் அவரது கற்ப்பனை ஒவியம் கேள்விக்கு உரியது...

Comments

Doondu said…
இப்ப நேசகுமாரை எடுத்துக்கோங்களேன்..

இஸ்லாத்தில அது இல்ல இது இல்லை என்பார்.

அதேபோலத்தான் இந்த டாவின்சி கோடும்.

படிச்சிட்டு சிரிச்சிட்டு போங்க. ஆனா மனசை விட்டுறாதீங்க.
நீங்கள் தேடிக் கொண்டுருந்த பதிவு இதுதான என்று பாருங்கள்

http://rasithathu.blogspot.com/2006/04/blog-post_25.html
முதல்ல குமரன் சாருக்கு நன்றி..மேட்டர் என்னன்னா, எழுதியதோடு சரி. சப்மிட் கொடுக்க மறந்துட்டேன்...இப்ப தான் கொடுத்தேன்...

சரி தான் போலி..ஆனா டாவின்சி கோட நான் இன்னும் படிக்கல..காரணம் தமிழ் அல்லது தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட நாவல்கள தான் படிக்கறது அப்படின்னு ஒரு மொக்க கொள்க எனக்கு..

யாரவது மொழிமாற்றி இருந்தா சொல்லுங்க...
ரவி அவர்களுக்கு பின்னூட்டங்களுக்கு நன்றி.

எனக்கு இந்த நாவலை தமிழில் யாரேனும் மொழி பெயர்த்துள்ளார்களா என்பதைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

உங்களுடய தகவல்களுக்கு நன்றி.

நீங்கள் கடைசி நாள் உணவை நேரில் கண்டவர்கள் யாருமில்லை என்று கூறியுந்தீர்கள் அது முற்றிலும் உண்மை அல்ல. கடைசி நாள் உணவை கிறிஸ்து அவர்களின் சீடர்கள் நேரில் கண்டார்கள் அல்லவா?

டாவின்சி கடைசி நாள் உணவு பற்றி அப்படி ஏன் வரைந்தார் என்றும் ஒரு சர்ச்சை உள்ளது.

கடைசி நாள் உணவை நேரில் கண்ட மதலேன் அம்மையாரின் குறிப்புகளும், கிறிஸ்து அவர்களின் குறிப்புகள் கூட இன்றும் உள்ளது என்றும் அவற்றை பரயாரி ஆப் சயான்( priory of sion ) என்ற ரகசிய குழு ஒன்று பாதுகாத்து வருகிறது என்றும், டாவின்சி அவருடய காலத்தில் அதன் தலைவராக இருந்ததால் அவருக்கு கடைசி நாள் உணவு எவ்வாறு இருந்தது என்று தெரியும் என்றும் கூறப்படுகிறது.

நான் மேற்கூறிய விசயங்கள் அனைத்துமே சர்ச்சைக்குறியது.

என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியது என்னவெனில்

காலம் காலமாக வாடிகன் நகரம் பெண்களை இழிவாகவே நடத்தி வருகிறது சூனியக்காரிகள் எரிப்பு என்ற பெயரில் படித்த பெண்களை கொல்வது, முதல் பாவம் புரிந்தது ஏவாள் என்பதால் பெண்ணை இழிவாக நினைப்பது என்று பல உதாரணங்கள் சொல்லலாம் .

கிறிஸ்து என்ற தெய்வீகப் பிறவியின் கருத்துக்கள் என்றுமே பெண்ணை இழிவாக நடத்தச் சொன்னதில்லை அப்படி இருக்கும் பொழுது எங்கோ ஒரு இடத்தில் அதிகாரம் தவறான கைகளில் சென்றுள்ளது என்பதை உணர முடிகிறது. அது ஆரம்ப காலகட்டங்களிலேயே நடந்துள்ளது என்பது என் கருத்து.

அப்படி ஆரம்ப கால கட்டங்களில் தவறு நடந்த சமயம் கிறிஸ்து அவர்களின் திருமணமும் மறைக்கப் பட்டிருக்கலாம்.

ஆனால் அவ்வாறு உறுதியா நடந்தது என்று கூற இன்று நமக்கு ஆதாரங்கள் இல்லை.
நீங்க சொல்லறது சரிதாங்க...ஒத்துக்கரேன்...நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் எப்பேதும் காத தூரம் வித்தியாசம் இருந்துக்கிட்டே தான் இருக்கு..

வாடிகன் செயல்பாடுகள் பிடிக்காமதான், ப்ராட்டஸ்டண்டு, செவன்த் டே எல்லாம் உருவாச்சு..

ஆனா இப்போ அப்படி இருக்காது என்பது என்னோட கருத்து
மாயவரத்தார் Said

இப்ப எழுதறதில்லை இல்லே.. எழுத முடியாதபடி வெச்சாச்சு ஆப்பு!

Popular Posts