Wednesday, June 14, 2006

பேய்,பிசாசு,ஆவி,மோகினி..

பேய் இருக்கிறதா இல்லையா என்று பலருக்கும் பல கருத்து இருக்கும்...சாமிய நம்புற இல்லடா..அப்புறம் பேயயும் நம்பு...என்று சின்ன வயதில் என்னை மடக்கிவிட்டார் எங்க அய்யா..அப்போது கூகுளாண்டவர் இருந்திருந்தால் அவரிடம் கேட்டிருப்பேன்...

விழுப்புரம் மாமா வீட்டில் - 13 வயதில் - ஈவில் டெட்(Evil Dead) படம் பார்த்தபோதுதான் பேய்களோடு நல்ல அறிமுகம் ஏற்ப்பட்டது...அந்த படத்தின் தாக்கம் சுமார் 5 ஆண்டுகள் இருந்தது...

பத்தாம் வகுப்பு படிக்கும்போது 25 ரூபாய் டில்லிக்கு மனியார்டர் செய்து GHOST என்ற புத்தகத்தை வாங்கினேன்...ஆங்கில புத்தகமான அதில் மேட்டர் சரியாக புரியாவிட்டாலும், படிகட்டில் ஆவிமாதிரி நிற்க்கும் பேய் படம் எல்லாம் போட்டு பயமுறுத்திவிட்டார்கள்...ஆறுமணிக்கு மேல் வெளியே போக சிலநாள் தடா போட்டது...

பிற்பாடு கல்லூரி காலத்தில் நன்பனோடு பந்தயம் கட்டி, சிகரெட் பாக்கெட் சகிதம் 12 மணிக்கு சுடுகாட்டில் வழவழ பளிங்கு கல்லறையில் கால்மணி நேரம் உட்கார்ந்து இருந்தது இரண்டு நாள் கடும் காய்ச்சலுக்கு வழிவகுத்தது...பந்தய பணமும் அம்பேலானது...

கல்லூரி காலத்தில் என் அறை தோழர் மணிவண்ணன், பேயால் பாதிக்கப்பட்டார்..இரவு திடீரென எழுந்து...அய்யோ அம்மா...பேய் அமுக்கியது..கையை காலை ஆட்ட முடியல..என்று பீதியை கிளப்புவார்...அப்புறம் நமக்கு தூக்கம் ஏது...

ஊரில் கேள்விப்பட்ட கதை ஒன்று வேறு அடிவயிற்றில் கிலியை கிளப்பியது...போலீஸ் துறையை சேர்ந்தவர் மனைவியின் ஆவி ஒரு பெண்ணின் மீது புகுந்துவிட்டதாகவும், அவந்தான் என்னை கொன்றான் என்று அவரது இறந்துபோன முதல் மனைவியின் குரலிலேயே பேசியதாகவும்...பல இரவுகள் தூக்கத்தை கெடுத்தது...

ஆவியுலக அனுபவங்கள் அப்படின்னு விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் எழுதிய புத்தகத்தை கூட சிலசமயம் படிச்சி நொந்து இருக்கிறேன்..அதில் உள்ள செய்முறை விளக்கத்தை வைத்து ஆவிபிடிக்க போர்டு வைத்து / நம்பர் எல்லாம் வரைந்து மெழுகுவர்த்தி கொளுத்தி சில்வர் டம்ளரால் பட்டுனு அமுக்கி எஸ் - நோ என்று தானாகவே போகுது பார் என்று பீலா விட்ட கதை எல்லாம் நடந்தது...

நாரியப்பனூர் கோவில் சென்றபோது அங்கு தலைவிரி கோலமாக ஆடும் இளம் பெண்களையும் கண்டு இருக்கேன்..

இப்போது விக்கிபீடியாவில் பேய்களுக்கு தனி லிங்க் உள்ளது...http://en.wikipedia.org/wiki/Ghost



பேய் புகைப்படம்கூட பப்ளிஷ் செய்துள்ளார்கள்..ரென்ஹாம் ஹால் என்னும் இடத்தில் மேஜர் லாப்டஸ் மற்றும் அவரது நன்பர் ஹாப்கின்ஸ் இருவரும் கண்ணால் கண்டதாக சான்று பகர்கின்றனர்..(The Brown Lady of Raynham Hall)..
உரல் இங்கே..

பேய்களை பற்றி ஆராய ஒரு அமைப்பு ஒன்று இயங்கி வருகிறது..
உரல் இங்கே
பேயை படமாக்குவதற்க்கு எல்லா பணிகளையும் செய்துவருகிறார்கள்...

நம்ம ஊரில கொள்ளிவாய் பிசாசு ராத்திரியில கிளம்புமாம்..கிட்ட போனா பொட்டுன்னு ஆளை அடிச்சிடுமாம் என்று சொல்லுவதுண்டு....பிறகு நமக்கு கொஞ்சம் அறிவு தெளிஞ்சவுடன் மீத்தேன் வாயுதான் கொள்லிவாய் பிசாசாக டபுள் ஆக்டு கொடுக்குது என்று தெரிந்தது...

இப்போது சொல்லுங்க...பேய் இருக்கா இல்லையா...நம்பலாமா நம்பப்படாதா ? பாத்திருக்காங்களா பாக்கலையா...

அப்படி விவரம் தெரிஞ்சவங்க எனக்கு இன்னுமெரு தகவலையும் சொல்லுங்க...ஏன் இந்த மோகினி பிசாசு வெள்ளை சாரியை மட்டும் யூஸ் பன்னுது..அதுக்கு காஞ்சிபுரம் / பணாரஸ் பட்டுபத்தியெல்லாம் யாரும் சொல்லவில்லையா??

ஆவியை பார்த்தவங்க ( அட இட்லி குக்கரில புஸ்சுன்னு வர்ர ஆவியை சொல்லலீங்க..) நிஜ ஆவி...யாரும் இருந்தா அது சிகரெட் புடிக்காம, பீடிய மட்டும் லைக் பண்ற காரணத்தையும் சொல்லுங்க...

20 comments:

கோவி.கண்ணன் said...

பேய்களைப் பற்றி மேலும் என் எண்ணங்களை தெரிந்து கொள்ள இந்த சுட்டியை அமுக்குங்க...
பி.கு : இரவில் தனிமையில் படிக்க வேண்டாம். பின்பு துன்னூறு போட நான் பொறுப்பல்ல :)

http://govikannan.blogspot.com/2006/06/blog-post_13.html

ரவி said...

இந்த பதிவை எழுதி முடித்தவுடன் மவுஸ் பாய்ண்டர் தானா நகருதுங்க...

Anonymous said...

என்ன கொடுமை சரவணன்...

Anonymous said...

ரவி,
பேய்பிடித்தவர்கள் பலமொழிகள் பேசுவது எப்படி?

Anonymous said...

ஒரு மோகினிக்கிட்ட சொல்லி உன்னை இராத்திரி கவனிக்க சொல்லுகிரேன்.

ரவி said...

அது எல்லாம் சும்மா டுபக்கூர் சுமா...நீங்க பார்தீங்களா...

ரவி said...

வந்தது இளமாறன்...நான் செய்த ரசத்தை சாப்பிட சொன்னேன்...அப்பீட் ஆகிடுச்சி..

துளசி கோபால் said...

இங்கேயும் இப்படி நம்பிக்கைகள் இருக்கு. எங்கபழைய வீட்டுலே பேய் இருந்துச்சாம்.

நாங்க வந்தபிறகு துண்டைக்காணொம் துணியைக்காணொமுன்னு ஓடியிருக்கும் போல. அந்த வீட்டுலே 17 வருசம் இருந்தோம்:-)

லக்கிலுக் said...

ரவி!

கொஞ்ச நாளாவே ஜோதிடம், பேய், பிசாசுன்னு பகுத்தறிவுக்கு முரணான பதிவுகளாவே போடறிங்க?

தி.க. வீரமணி மறுபடியும் பக்கா Formலே இருக்காரு.... ஜாக்கிரதை!

ரவி said...

துளசியக்கா சமையல் பத்தி யாரவது அதுகிட்டே சொல்லி இருக்கனும்...அதுதான் அப்பீட் ஆகிடுச்சி...

லக்கி...தி.க வீரமணி பார்ம் அவுட் ஆகி நான் பார்த்ததில்லை...அவர் கிட்டெ தனியா பேசி இருக்கேன்...வடலூர் வந்தபோது...மூன்றாண்டுக்கு முன்...

:)

Anonymous said...

என்ன??ரவி!!
திடீரென சொந்தக்காரங்களைப் பற்றி அக்கறை எடுக்குறீங்க!!!பொண்ணு பாக்குறீங்களா,,,???
யோகன் பாரிஸ்

ரவி said...

பெண்பார்க்கத்தான் வேணும்...உங்க பக்கம் நல்ல அடக்கமான பொன்னு இருந்தா சொல்லுங்க...

(அதுக்காக சுடுகாட்டில் தேடவேணாம்..)

நல்ல மோகினி இருந்தா என் இமெயில் முகவரி கொடுத்திடுங்க.

Anonymous said...

உங்களுக்குத் தான் அவங்களைச் "சரியாத்" தெரியும்!!!!!விலாசம் தாரன் வந்து பார்த்துக் கூட்டிப் போங்க!!
யோகன் பாரிஸ்

கதிர் said...

பேய் இருக்கோ இல்லயோ இன்னும் நீங்க பயப்புடுறது நல்லா தெரியுது. எனக்கு கூட சிறு வயதில் அம்மா துணையில்லாமல் நம்பர் ஒன் போகமுடியாததை நினைத்தால் இன்னும் வெக்கமாகத்தான் இருக்குது.

ரவி said...

///பேய் இருக்கோ இல்லயோ இன்னும் நீங்க பயப்புடுறது நல்லா தெரியுது. எனக்கு கூட சிறு வயதில் அம்மா துணையில்லாமல் நம்பர் ஒன் போகமுடியாததை நினைத்தால் இன்னும் வெக்கமாகத்தான் இருக்குது.///

ஹி ஹி....

பயமா - எனக்கா...சிங்கத்தை சீண்டிபார்க்க பேய்க்கு தோனுமா என்ன...

Prabu Raja said...

என்னா இது பூச்சாண்டி காட்றீங்க?
:)

ரவி said...

//பேய் இருக்கா இல்லையா...நம்பலாமா நம்பப்படாதா ? பாத்திருக்காங்களா பாக்கலையா...///

இது தான் நம்ம கேள்வி

அனுசுயா said...

சந்தேகம் இருந்தா நம்ம தொலைகாட்சி மர்ம தொடர்கள பாத்தீங்கனா தெளிஞ்சிடுவீங்கனு நெனக்கிறேன்.

Sud Gopal said...

பேய் இருக்கான்னு இன்னும் சந்தேகப்படறவங்க எங்க க்ளையண்ட் சைட் குவாலிட்டி மேனேஜரை வந்து பார்த்து அவிங்க சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : தைரியசாலிகள் மட்டும் வந்து இந்தப் பதிவைப் படிங்க!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....