இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்...
இன்று இட்லிவடையில் வேகாத இட்லியும் புளித்த சட்டினியும், காய்ந்துபோன ஊத்த (ஓட்டை) வடையும் இருப்பதால், இன்னும் இரண்டு நாளைக்கு கடைபக்கம் வராமல் தெரித்து ஓடும்படி கேட்டுக்கொள்கிறோம்...
அப்படி தெரியாத்தனமா வந்து சாப்பிட்டு - புடிங்கி அடித்தது என்றால் அதற்க்கு கடைமுதலாளி எந்தவகையிலும் பொறுப்பாகமாட்டார்...
காரணம் இது ஒரு சோ(மாறி) கடையில் இருந்து இரவல் வாங்கிய ஊசிய மாவு ஆகும்..
ந(ரன்)றி..
*** இந்த பதிவே ஒரு புளித்த வடைதான்...எழுதப்பட்டது 2006 மத்தியில்... **** ஆனால் இன்னும் ஆதிக்க சக்திகளின் கைக்கூலித்தனம், ரிசர்வேஷன், கோட்டா போன்றவற்றினை நோக்கி வயித்தெரிச்சலை காட்டுவது போன்றவற்றை இத்துப்போன இட்லிவடை செய்துகொண்டுதான் இருக்கிறது பாருங்கள் ***
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
31 comments:
சகாய விலையில் கொடுத்தாலும் வாங்கி சாப்பிட கூடாது.காமெடியா இருக்கு.ஆனா ஏதேனும் லிங்க் இருக்கும் என்று நினைக்கிறேன்.அந்த பதிவு என்ன சொல்லுங்களேன்.
கொடுத்தாச்சு சுமா அவர்களே...இப்ப பாருங்க...
இந்த ஆட்டம் எல்லாம் உங்களுக்கு தாங்காதுங்க...
அப்பீட் ஆகிடுங்க..
ஏன் நான் இலங்கை தமிழர்பிரச்சினையில் தலையிடக்கூடாதா?இட்டிலிவடை நன்பரின் பதிவு எனக்கு பிடிக்கவில்லை.மனதில் இலங்கை தமிழர் பற்றி கொஞ்சம் அன்பு இருந்தால் இப்படி எழுதி இருக்கமாட்டார்.
அதை அங்கே பின்னூட்டம் இட்டு சொல்லுங்க..
சோ எழுதியதை வெளியிட்டு இருக்கிறார் இட்லிவடை...
ஆனால் மனசாட்சி கொஞ்சம் உறுத்தி இருந்தால் செய்து இருக்கமாட்டார் என்பது என் கருத்து...
பின்னூட்டம் இட்டுவிட்டேன்.இலங்கையில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை படித்தபோது இதயம் பற்றி எரிகிறது.ஒரு பெண்ணாகிய எனக்கு இப்படி உணர்வு எழும்போது பெற்றோர்கள் மனநிலை எப்படி இருக்கும்.இதை இட்டிலி வடை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்.?
உணர்வுக்கு நன்றி, தொடந்த்து இதே உணர்வுடன் இருந்தால் வரவேற்ப்பேன்...
என்னங்க திருட்டு பசங்க எல்லாரையும் ஈழ் தமிழ்ர் அது இது ன்னு சப்போர்ட் பண்ண முடியுமா??
அவங்க தளங்களுக்கு போய் பாருங்க இந்தியாவை கண்ட படி திட்டுவாங்க..
ஒருசிலர் திட்டுவதற்க்காக தொப்புள்கொடி உறவை மறக்கமுடியுமா அனானி ?
அவர்கள் திட்டத்தான் செய்வார்கள்..நாம் அவ்வளவு "செய்து" இருக்கோம் அவங்களுக்கு...
நான் தொடந்த்து ஆதரிப்பேன்..:)
///காரணம் இது ஒரு சோ(மாறி) கடையில் இருந்து இரவல் வாங்கிய ஊசிய மாவு ஆகும்..////
WELCOME TO DRAVIDA TAMILS CLUB :-)
ரவி சார் சும்மா அறை குறையாக இந்த பிரச்ச்னையை வீரமணி பார்வையில் பார்காதீங்க.
வடகத்தியானை நம்பாதேன்னு சொன்னது யாரு??
தொப்புள் குடியாம்.. இத்தனை வருசமா இலங்கையில் மலையக தமிழ்ர்கள் என்ற பேரின் நம்ப தமிழ்ர்கள் துண்புறுத்தபடுத்துவது தெரியாதா?
///தொப்புள் குடியாம்.. இத்தனை வருசமா இலங்கையில் மலையக தமிழ்ர்கள் என்ற பேரின் நம்ப தமிழ்ர்கள் துண்புறுத்தபடுத்துவது தெரியாதா? ///
விவரம் தெரிஞ்சவங்க சொன்னாத்தான் தெரியும்...எனக்கு தெரியாது...
ரவி சார்
இதோ இங்க கருத்து எழுதி இருக்காரே லக்கி லூக் அவரை கேளுங்க், சொல்வார்.. அவரின் யாழ் களம் அனுபங்கள் கேளுங்க சொல்வார்
>>>> ஒருசிலர் திட்டுவதற்க்காக தொப்புள்கொடி உறவை மறக்கமுடியுமா அனானி ?
அவர்கள் திட்டத்தான் செய்வார்கள்..நாம் அவ்வளவு "செய்து" இருக்கோம் அவங்களுக்கு...
நான் தொடந்த்து ஆதரிப்பேன்..:) <<<<
அதே காரணங்களுக்காக நானும் ஆதரிக்கிறேன் சகோதரரே.
இந்த விஷயத்தில் "சோ"வின் பேச்சுக்கு "கா".
உங்க பேரைச்சொல்லலாமே...
பொதுப்பிரச்சினைக்காக ஆதரவை தெரிவித்ததுக்கு நன்றி ம்யூஸ்.
/அனைவருக்கும் ஒரு சொல் : விடுதலைப் புலிகள், இந்தியாவின் எதிரிகள். இந்நினைவகற்றாதீர்!
"சோ"அவர்களிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை //
சோ விடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும். யார் எக்கேடு கெட்டால் என்ன தனக்கு எதுவும் ஆகாமலிருந்தால் சரி என்கிற மனப்பான்மை தான்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரதிமா...
தமிழ் தேசியம் என்றால் என்ன?
எதோ நாம் ரொம்ப அவர்களுக்கு செய்து இருக்கோம் என்று சொல்லும் நீங்கள் வெளி நாட்டில் செட்டில் ஆன இலங்கை அகதிகள் இந்தியாவை பிச்சைகார நாடாக சொல்வதை ஏறுறு கொள்வீர்களா?
உதவிக்கு சென்ற இந்திய அமைதி படை துப்பாக்கி ஏந்த காரணம் என்ன?
உலகில் யா¨ராலும் தீர்த்து வைக்க முடியாத பிரச்சனை இலங்கை பிரச்சனை காரணம் போரிடும் சிங்கள் ரானுவமும் மனித மிருகம்..புலிகளும் அவர்களுக்கு சற்றும் குறைந்த்தவர்கள் இல்லை. இந்த இரண்டும் ஒருத்தரை ஒருத்தர் கடித்து கொள்ளும்.. யாராவது சமரசம் செய்ய வந்த்தால் அவர்களை இந்த இரண்டும் சேர்ந்த்து கடிக்கும்.
பிரேமேதாசா புலிகளுக்கு இந்திய ரானுவத்தை எதிர்க்க ஆயுதம் கொடுத்த மாதிரி தான்.
பணக்கார லண்டன் அகதிகள் இந்த ஏழை ராமேச்வர அகதிகளை கண்டு கொள்வார்களா?
விடுங்க சார், எல்லாம் அரசியல் சார்.பிரபாகரனுக்கு எல்லாரையும் இப்படி வைத்து இருந்த்தால் தான் லாபம்.. அந்த சிங்கள் மிருகங்களுக்கு போர் காட்டி மக்களை ஏமாத்துறது தான் வேலை. எல்லாம் அரசியல் சார்
ரவி, சும்மா அடுத்தவன் பதிவைப் பார்த்து திட்டித் திட்டிப் பதிவு போடாம நீங்க உருப்படியா எதாவது பதிவு போடப் பாருங்க.
உங்க கிட்டயும் தனி மனித தாக்குதல் வியாதியின் தாக்கம் தெரிய ஆரம்பிச்சு இருக்கு. முளையிலேயே கிள்ளி எறியப் பாருங்க.
சொல்லிட்டேன். கேட்கறதும் கேட்காததும் உங்க இஷ்டம்.
ரவி!
இலங்கையில்;மலையகத் தமிழர்களுக்கு 58 க்கு,முன் சில தவறுகள்;சில அரசியல்வாதிகளால் ஏற்பட்டது. 58;83 கலவரங்களுக்குப் பின் நிலமை;முற்றாக மாறிவிட்டது. இன்று கிளிநொச்சி;முல்லைத்தீவு,வவுனியா;திருகோணமலை;மட்டக்களப்பு,அம்பாறையில்;பல்லாயிரம் மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட;இந்திய வம்சாவளித் தமிழ்ச்சகோதரர்கள்;மண உறவுகள் மூலம் கூட நெருக்கமாகி சகோதரர்களாக வாழ்கிறார்கள். "வசந்தனுக்கு" இதுபற்றி நிறையத் தெரியலாம். நிற்க!!
"சோ" ; ஒட்டு மொத்தமாக ,இன்று நடப்பதை (அல்லப்பிட்டி;வங்காலை) ஞாயப்படுத்த முற்ப்படுவது.என்ன??? கோளாறேனத் தெரியவில்லை. அவர் எப்போதும் வித்தியாசமாக்ச் சொல்ல வேண்டுமென விரும்புபவர். இதிலும் உலகத்தின் பார்வையில் வித்தியாசம் காட்ட முற்படுகிறாரோ!! தெரியவில்லை. இவர் "தூங்குவது போல் நடிப்பவர்"....நீங்களும் நானுமா???எழுப்பமுடியும்???
விட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்போம்.இது வரை 3 கோவில் ஐயர்களும்(ஈழப் பிராமணர்கள்)இரானுவம் சுட்டுக் கொன்றுள்ளது. ஒருவர் 72 வயது. அவரும் புலியா??? "சோ" ச் "சோ"
யோகன் பாரிஸ்
//இலங்கையில்;மலையகத் தமிழர்களுக்கு 58 க்கு,முன் சில தவறுகள்;சில அரசியல்வாதிகளால் ஏற்பட்டது. 58;83 கலவரங்களுக்குப் பின் நிலமை;முற்றாக மாறிவிட்டது. இன்று கிளிநொச்சி;முல்லைத்தீவு,வவுனியா;திருகோணமலை;மட்டக்களப்பு,அம்பாறையில்;பல்லாயிரம் மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட;இந்திய வம்சாவளித் தமிழ்ச்சகோதரர்கள்;மண உறவுகள் மூலம் கூட நெருக்கமாகி சகோதரர்களாக வாழ்கிறார்கள். "வசந்தனுக்கு" இதுபற்றி நிறையத் தெரியலாம். நிற்க!!
இது எல்லாம் சும்மா புருடா
இன்னும் பெரும்பாலான மலையக தமிழ்ர்கள் அதாவது இந்திய் தமிழர்கள் கொழுமபு நகரத்தில் கூலி வேலை செய்தும் மிகவும் மோசனான நிலையில் இருக்கிறார்கள்.. அவர்களுக்கு இது வரை யாரும் ஆதர்வு கரம் கொடுக்கவில்லை..
சிங்களவன் கிட்டயும் அடி வாங்கி வெள்ளாளர் கிட்டயும் அடிவாங்கி பாவம் அவங்க பாடு திண்டாட்டம்.. முதலல் ஈழ தமிழ்ர்களை சக தமிழ்னை மனுசனா நடத்த சொல்லுங்கப்பா.. அப்புறம் தொப்புள் கொடி பத்தி பேசலாம்..
ஈழம் கிடைத்தால் இலங்கையில் அனைத்து பிரெதேங்களுல் குடி இருக்கும் மலையக தமிழர்களுக்கு முதல்ல சமாதி கட்டிடுவாங்க.
சும்மா தமிழ் சகோதரன் இது எல்லாம் வேணாம் ரவி. உணர்சிகளை தூண்டி வெறிகளை வைத்து வியாபாரம் நடத்தும் கூட்டம் அது
இந்த வெள்ளாள தமிழ்ர்களுக்கு தமிழ்க பார்பணர்களே மேல்.
Hi thala nalla eludheernga..kalakunga..appdiye numma blog pakkam vaanga..padichuttu sollunga..nandri..bye
விடுதலைப் புலிகளுக்கு எங்களின் பகிரங்க ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
இசக்கிமுத்து,
அலுவலக உதவியாளர்,
போலிடோண்டு தலைமைக் கழகம்,
23ஏ,சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி,
துபாய்.
இட்லி வடைக்கு இப்படி ஒரு விளம்பரம் தேவைதானா செந்தழல் ரவி?
what can we do...he cooked something junk...this post is to protest that...
if we are not protesting a lie, the lie may become true in somedays..
வணக்கம் செந்தழல் ரவி.
உங்கள் பதிவுகள் நகைச்சுவை உணர்வோடு இருக்கின்றது. பாராட்டுக்கள்!.
உங்களை ஆறு விளையாட்டிற்கு அழைக்கிறேன். இதோ இந்த தளத்திற்கு சென்று 10 ஆவது பதிவின் கீழ் பாருங்கள்.
http://siriyapaarvai.blogspot.com/
உங்களின் விருப்பமான "ஆறு" களைப் பற்றி நாங்களும் தெரிந்துக் கொள்கிறோம்.
நன்றி!!
நரியா
நல்ல பதிவு. ரசித்தான் இந்த சுதாங்கன்..
2006 ஆம் ஆண்டு ஜூன் மாசம் எழுதியது...
அதே ஊசிய வடையில் ஒரு பகுதி இன்றைக்கும் !!!
செந்தழல் ரவி said...
ஒருசிலர் திட்டுவதற்க்காக தொப்புள்கொடி உறவை மறக்கமுடியுமா அனானி ?
அவர்கள் திட்டத்தான் செய்வார்கள்..நாம் அவ்வளவு "செய்து" இருக்கோம் அவங்களுக்கு...
நான் தொடந்த்து ஆதரிப்பேன்..:)
சரிதான்:)))
இட்லிவடைல சொந்த சரக்கெல்லாம் கூட இருக்குமா? தினமலர்ல இருந்து சுட்டுத் தான அங்க போடுவாங்க :(
//அதை அங்கே பின்னூட்டம் இட்டு சொல்லுங்க..
சோ எழுதியதை வெளியிட்டு இருக்கிறார் இட்லிவடை...
ஆனால் மனசாட்சி கொஞ்சம் உறுத்தி இருந்தால் செய்து இருக்கமாட்டார் என்பது என் கருத்து...//
எனக்கு சாதகமான பதிலை எதிர்பார்த்திருந்தால், நான் மனிதன்.
எந்த பதிலாக இருந்தாலும், விருப்பு வெறுப்பு இன்றி வெளியிடுபவன், பத்திரிக்கையாளன் (எ க . காந்தி )
Post a Comment