ஆறு போடுங்க ஆறு போடுங்க அப்படீன்னு ஆயிரக்கனக்கான பேர் அழைச்சிட்டாங்க..(உண்மையில இரண்டு பேர்தான் அழைத்தார்கள்)..முதலில் நாரியா...பொறவு நவீன் பிரகாஷ்....கொஞ்சம் யோசித்து பார்க்கையில் ஏற்க்கனவே ஆறு போட்டது நியாபகம் இருக்கு...ஆனால் அது காமெடிக்காக செய்தது...உரல் இங்கே..
ஆனால் சீரியஸாக யோசித்ததில் மண்டை காய்ந்தது...எப்படியோ கஷ்டப்பட்டு எழுத ஆரம்பித்தாயிற்று....
பிடித்த ஆறு சினிமா நடிகர்கள்.
ரஜினி
கமல்
ஜிம் கேரி
அர்னால்டு
மேட் டேமோன் (Matt Damon) - தி பர்ன் ஐடென்ட்டிட்டி படத்தில் அசத்திவிட்டார் என்னை...அதுமுதல் அவரது ரசிகன்...
சத்தியராஜ்....இவரோட நக்கலும் லொள்ளும் யப்பா....ஒரு படத்தில் - மாமன் மகள் என்று நினைக்கிறேன் - கவுண்டருடன் சேர்ந்து ஒரு லூட்டி அடிப்பார் பாருங்கள்...வாத்திய கோஷ்டியை விதம் விதமா வாசிக்க சொல்லி - அதுக்கு சேர்ல உக்காந்தபடியே டேன்ஸ் வேர...யப்பா....
பிடித்த ஆறு நாயகிகள்
சினேகா
அஸின்
ஜோ
சதா
கேத்தரின் ஸீட்டா ஜோன்ஸ் (Zeta Jones, Catharine)
கேத் வின்ஸ்லெட்... - டைட்டானிக்குல கூடைத்தொப்பியை விலக்கிட்டு ஒரு லுக்கு விடுவாங்க பாருங்க....யப்பா...சூப்பரப்பு
பிடித்த ஆறு திரைப்படங்கள்
நாயகன்
உள்ளத்தை அள்ளித்தா...
ஜுராசிக் பார்க் - முதல் பாகம்
ஈவில் டெட் - மூன்றாம் பாகம்
டெர்மினேட்டர் - இரண்டாம் பாகம்
லார்டு ஆப் த ரிங்ஸ் - மூன்றாம் பாகம் - இது மாதிரி ஒரு படம் எடுக்க யாராவது பிறந்து தான் வரனும்...என்ன பிரம்மாண்டம்...சென்னை சத்யம் தியேட்டரில் பார்த்து ஆடிட்டேன்...அட எவ்வளவு பிரம்மாண்டம் அப்படின்னா...தன்னியக்கூட சொம்புல குடிக்காம அப்படியே குண்டானோட குடிபாங்க - ஹுக்கும்...
பிடித்த தலைவர்கள்
ராஜீவ் காந்தி
இந்திரா காந்தி
ஜெயலலிதா - இவரிடம் உள்ள தில் ரொம்ப பிடிக்கும்
ஸ்டாலின் - அட கலைஞர் மகன் தானுங்க....அவர் மேயராக இருந்தபோது அப்பாவுடைய தோழராகிய ஒரு அரசியல் தலையுடன் சென்று அவரது அறையில் சந்தித்தேன்...ரொம்ப எளிமை...வயசு இருக்கு...எப்படியும் முதல்வராக வருவார்...
கி.வீரமணி - இவரும் எளிமையில் சிகரம் - சில கருத்துகளை பிடிக்காமல் போனாலும் தனிப்பட்ட முறையில் பிடிக்கும்
எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) - அதிகமாக சொல்ல தேவை இல்லை...பட்டம் பதவியை அனுபவித்த யாரும் மீண்டும் சராசரி வாழ்க்கையை வாழ முடியாது...வாழ்ந்து காட்டிய போராளி...
பார்க்க விரும்பும் நாடுகள்
நியூஸிலாந்து
ஸ்விஸ்
நார்வே - ஸ்பெஷல் காரணம் இருக்கு
லக்ஸம்பர்க்
கனடா
இலங்கை
தமிழ்நாட்டில் பிடித்த ஊர்கள்
புத்தனாம்பட்டி - கல்லூரி இருந்த ஊருங்க...பல நினைவுகள் அடிக்கடி சுத்தி சுத்தி வரும் இடம்
மதுரை - ஒருமுறை கூட போனது கிடையாது ஆனால் ஜில் ஜில் ஜிகர்தண்டா பத்தி கேள்விப்பட்டதில் இருந்து எப்படியாவது ஒருமுறையாவது குடிச்சாகனும் என்று ஆவல்...பார்ப்போம் எப்போது நிறைவேறுதுன்னு...
திருக்கோவிலூர் - சொந்த ஊர்....வீட்டுவாசலில் தென்பென்னை ஆறு...கபிலர் வடக்கிறுந்து துஞ்சிய கோவில்...அதியமான் மகள்களுக்கு திருமணம் நடந்த மண்டபம்...மூல பிருந்தாவனம் கோவில்....தபோவனம் என்ற பழைமையான மடம்+கோவில்...துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வேட்டைக்கு போகும் ஏரிக்கரை என்று - எல்லா இடங்களும் பிடிக்கும்
திருநெல்வேலி - ஒரே முறை நன்பர் வீட்டில் தங்கி இருக்கேன்...கிளம்பும்போது சூடா அல்வா வாங்கிதந்தார்...இன்னும் மறக்க முடியவில்லை
நாகர்கோவில்
வேளாங்கன்னி - வருடா வருடம் போவதுதான்...ஆனால் அங்கு போனதும் மனதில் ஒரு அமைதி குடிகொள்ளும்
பிடித்த எழுத்தாளர்கள்
அமரர் கல்கி (பொன்னியின் செல்வன்)
சாண்டில்யன் (கடல்புறா)
ராஜேஷ்குமார்
அமரர் ராஜேந்திர குமார்
இந்திரா சவுந்திரராஜன்
ஷேக்ஸ்பியர்
பிடித்த ஆறு தமிழ் பாடல்கள்
பூங்காற்று - புதிதானது
பனிவிழும் - மலர்வனம்
வளையோசை
அன்னக்கிளி நீவாடி - 4 ஸ்டூடன்ஸ் படத்தில் -ஜாய்ஸி கிப்ட் குரலில்..அருமை..
நெஞ்சாங்கூட்டில் - டிஷ்யூம் படப்பாடல்
விழிகளின் அருகினில் வானம் - வெகுதொலைவினில் தொலைவினில் தூக்கம்
பிடித்த ஆறு தமிழல்லாத பாடல்கள்
செலே ஜேய்சே ஹவானே ( மே ஹூ னா - ஹிந்தி பட பாடல் ) - பணிவிஷயமாக மும்பை சென்றேன்..அங்கு ஜுஹு பீச்சில் - கோலா ஐஸ் என்று ஒன்று விற்ப்பார்கள்...அந்த கடையில் கேட்ட பாடல்...எந்த திரைப்படம் என்று நேற்று தான் தெரிந்தது...இப்போது லேப்டாப்பில் தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கிறது
வேங்கா பாய்ஸ்
அக்வா
போனி எம் - ரஸ்புட்டீன்
மைக்கல் ஜாக்ஸ்ன் - பேட்
ரிக்கி மார்ட்டின் - மு - தோஸ் - திரேஸ்
பிடித்த வலைப்பதிவுகள்
டோண்டு (கற்பு பற்றி எழுதியது பிடிக்காது)
லக்கி லூக்
கானா பிரபா - உலாத்தல் என்றுகூட ஒரு பதிவு வைத்திருக்கார்...பெங்களூர் லீலா பேலஸ் ஓட்டலில் தங்கி இருந்தவரை நன்பர் ஆதியோடு சேர்ந்து சந்தித்தபோது - ஆதியின் அடுக்கடுக்கான ஈழம் பற்றிய கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொன்னார்...
முத்து - தமிழினி
சிந்து
விடாது கருப்பு
இனையத்தில் அடிக்கடி செல்லும் ஆறு இடங்கள்
தமிழ்மணம்
கூகுள்
நிலாமுற்றம்
என் பதிவு - தனித்திரு விழித்திரு பசித்திரு
என் பதிவு - இம்சை
ஜி.எஸ்.எம் அரெனா (GSM Arena) - வேற வழியில்லை - வேலையோடு சம்பந்தப்பட்டது - போய்த்தானே ஆகனும்
அடிக்கடி சொல்லும் ஆறு வார்தைகள்
அய்ய...
சீ...
ம்ம்ம்ம்ம்....
அடப்பாவி....
ஓ....
பனியன் போட்ட சனியனே...(யாரையாவது திட்டும்போது மட்டும்)
அம்புட்டுத்தேன் இப்போதைக்கு....வேற யாராவது ரிக்வஸ்ட் செய்தால் அந்த தலைப்பு ஆறு கிடைக்கும்...இதை எழுவதுக்குள் தாவு தீந்துடுச்சி...
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
20 comments:
//சாண்டில்யன் (கடல்புறா)
அமரர் ராஜேந்திர குமார்//
me too like this ...
நார்வேல அப்படி என்னங்க ஸ்பேஷல்........... ரூட் கிட்டு......
அடுத்த தடவை வேளாங்கன்னி வரும் போது நம்ம வீட்டுக்கும் வந்துட்டு போங்க......
நல்லாவே ஆறு போட்டு இருக்கீங்க...
மிக மிக நன்றி செந்தழல் ரவி!.
எனக்கும் மைக்கேல் ஜாக்ஸன் பிடிக்கும்.
பனிவிழும் பாட்டும் ரொம்ப பிடிக்கும்.
ஆமா நார்வே லெ என்னங்க சமாச்சாரம்?
கட்டாயம் வந்திடலாம் சிவா..நரியா...சின்ன வயசுல இருந்து நார்வே ரொம்ப பிடிக்கும்...எங்க அப்பா ஏர்போர்ட்ல இருந்து வாங்கிவந்த ஒரு பொம்மை பேரு நார்வே பொம்மை.....அதுல இருந்து நார்வே என்றால் இனிக்கும்...
அப்பாடா...ஏதோ ஒரு காரணத்தை சொல்லி தப்பிச்சாச்சு...
:)
அட, நானும் தான் கூப்பிட்டு இருந்தேன்.
நீங்க பாக்கல.
:-)
சமுத்ரா அவர்களே...ஒரு தனிமடல் அனுப்பி இருக்கலாம் இல்லையா...ஆறிய பிறகு ஆறு போட வேண்டியதாகிட்டது...
பிடித்த வலைப்பதிவுகள்லே என்னோட பேரா? இன்ப அதிர்ச்சி கொடுத்திட்டீங்க.... நன்றி!!!!
அட உண்மையத்தான் சொன்னேன்...
:)
யப்பா..பனி விழும் இரவு என்னோட most favourite பாட்டுங்க....
மனசுல ஒரு முறை பாட்ட நினைச்சு பார்த்தாலே போதும் நான் மெதக்க ஆரம்பிச்சுடுவேன்.
நல்ல ஆறு...
என்ன? ரவி; பொண்ணு நோர்வேயிலயா??? அங்க தமிழ்ப் பொண்ணுகளும் இருக்காங்க! சரி ;பாரிஸ் வரும் போது அறியத்தாருங்க!ஒங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி!
யோகன் பாரிஸ்
ஆஹா, நீங்களும் கெளம்பீட்டிங்களா அப்பு:-)
நல்ல ரசனைத் தேர்வுகள். குறிப்பாக விழிகளின் அருகினில் வானம்.
வருகைக்கு நன்றி லிவிங் ஸ்மைல்..அடிக்கடி வாங்க...
யோகன் அன்னே..நார்வே இப்பல்ல்லாம் ரொம்ம்ம்ம்ப பிடிக்குது...சுற்றுலா போகும் ஐடியா இருக்கு....தமிழ்பொன்னுங்க இருக்காங்களா நார்வேயில...மெய்யாலுமா ??
வாங்க கானா பிரபா...என்ன ஆளையே கானோம்...
நார்வே இப்பல்ல்லாம் ரொம்ம்ம்ம்ப பிடிக்குது.
இந்த இழுப்பு, ஏதோ சொல்லுது!! ஐயோ ஒங்களுக்கு நோர்வேயில தமிழ்ப் பெண் இருப்பதே! தெரியாமலா போறீங்க! சரி போங்க!!!
யோகன் பாரிஸ்
//பூங்காற்று - புதிதானது
பனிவிழும் - மலர்வனம்
வளையோசை
அன்னக்கிளி நீவாடி - 4 ஸ்டூடன்ஸ் படத்தில் -ஜாய்ஸி கிப்ட் குரலில்..அருமை..
நெஞ்சாங்கூட்டில் - டிஷ்யூம் படப்பாடல்
விழிகளின் அருகினில் வானம் - வெகுதொலைவினில் தொலைவினில் தூக்கம்//
நல்ல ரசனைக் காரராத் தான்யா இருக்கீரு. ஆறுகள் அனைத்தும் அருமை.
நன்றி கைப்பு...
//பூங்காற்று - புதிதானது
பனிவிழும் - மலர்வனம்
வளையோசை
அன்னக்கிளி நீவாடி - 4 ஸ்டூடன்ஸ் படத்தில் -ஜாய்ஸி கிப்ட் குரலில்..அருமை..
நெஞ்சாங்கூட்டில் - டிஷ்யூம் படப்பாடல்
விழிகளின் அருகினில் வானம் - வெகுதொலைவினில் தொலைவினில் தூக்கம்//
அழகான பாடல்கள் ரசனையான தேர்வு. அருமை ரவி ! :) என்றும் இனிக்குமில்லையா ??:)
//பனியன் போட்ட சனியனே...//
ரவி செம பஞ்ச் டயலாக்ய்யா
போடா பனியன் போட்ட சனியனே..
சும்மா சொல்லிப் பாத்தேன். :))
நன்றி தேவ்..ராபின்..இப்ப ஆப்பீஸுல தானிருக்கம்...அதனால பனியன் போடாம சட்டெ போட்டிருக்கம்..ஹுக்கும்...
Post a Comment