Friday, July 07, 2006

கைக்கடிகாரத்துக்கு என் அஞ்சலி....

கைக்கடிகாரத்துக்கும் எனக்கு ஏழாம் பொருத்தம்.....கிட்டத்தட்ட ஏழு வாட்சுகளை தொலைத்த அனுபவம்...அதை அப்படியே ஒரு பதிவாக்கினால் இன்னும் சில வாட்சு கதைகளை கேட்கலாமே...

வாட்சுகளை தொலைத்த கதை மட்டுமல்ல...முதல் வாட்சு வாங்கவே மிக கஷ்டப்பட்டதாக நண்பர் ஒருவர் சொன்னார்...வாட்சுடன் அவருக்கிருந்த உறவை ஏதோ பெரிய செண்டிமெண்ட் காட்சி மாதிரி விவரித்தார்...

என் தாத்தா வைத்திருந்த - கையை ஆட்டினால் சார்ஜு ஆகக்கூடிய வாட்ச் கூட என்னை பிரமிப்பூட்டியது ஒரு சமயம்.....இப்போது என் வாட்ச் கதை கேளுங்க..

என் முதல் வாட்சை 1992 வாக்கில் நெய்வேலியில் ஏழாம் வகுப்பு படித்தபோது வாங்கி கொடுத்த எங்க அப்பா அதை சுவாரசியமாக விளக்கினார்..டேய் இதுல எப்.எம் (FM) - ஏ.எம் (AM), எல்லாம் வரும் என்று..அப்போது திரு திரு என்று விழித்து அவரிடம் ஒரு கொட்டு வாங்கி - அது ரேடியோ அலைவரிசை என்று அறிந்து கொண்டேன்..என் சிறிய கைக்கு கொஞ்சம் பெரியதாக இருந்தாலும் அதில் வரும் இனிமையான கொரகொர இசை மனதை மயக்கும்...மனதை மயக்கும் பணியை அது சிலசமயம் சரியாக செய்யவில்லை என்றாலும் ஸ்கூலில் இருந்த பலபேரை மயக்கியது...

முழு ஆண்டு விடுமுறைக்கு திருக்கோவிலூர் அத்தை வீட்டுக்கு வந்தபோது மாடிக்கு தலையணைகளை கொண்டுசென்று ஒரு வித்தியாசமான விளையாட்டு விளையாடுவோம்...ஏது ஏடகூடம்இல்லைங்க...தலையனையால அடிச்சிக்கறது...தலையனையிலேயும் / தலையிலையும் பஞ்சு பறக்கும்...அவ்வாறு விளையாடிய ஒரு வேளையில் ஆட்டத்துக்கு இடைஞ்சலாக இருக்கே என்று பக்கத்தில் இருந்த கொடியில் கட்டிவிட்டேன்...

அவ்வளவுதான்...மறந்து போய் மாடியிலிருந்து இறங்கி கீழே வந்துவிட்டேன்...அடுத்தநாள் போய் தேடி பார்த்தால் போயிந்தெ...போயே போச்சு....

அதன் பிறகு கடலூர் புனித வளனார் உள்விடுதி (Boarding House) - மாணவனாக எட்டாம் வகுப்பு சேர்ந்ததால் அப்பா மறந்து போனார் என் ரேடியோ வாட்சு என்ன ஆனது என்று...

அடுத்த ஆண்டு விடுமுறையில் ஊருக்கு வந்தபோது, சித்தப்பா ஒரு சீ.துரூ (see - threw ) வாட்ச் பரிசாக கொடுத்தார்...அதாவது உள்ளே இருக்கும் அனைத்து பார்ட்ஸ்ஸும் தெளிவாக தெரியும்..அதன் இயக்கத்தை பார்க்க முடியும்...எப்படி தொலைஞ்சது என்றே தெரியாம தொலைஞ்சு போயே போச்சு...

அதற்கடுத்த ஆண்டு சித்தப்பா குடும்பத்துடன் வேளாங்கண்ணி சென்றபோது அவர் ஒரு வாட்சு வாங்கி கொடுத்தார்..இதில் என்ன சிறப்பு என்றால், கோழி கூவுவது போல் அடிக்கடி கத்தும்...திரும்ப ஊருக்கு வந்தவுடன், மழையில் ஒருநாள் வெளியே கட்டிக்கொண்டு போனேன்....கோழி சீக்கு வந்து செத்துப்போச்சு..அட அதாங்க...வாட்சில் தண்ணீர் புகுந்து காலியாயிடுச்சி...

அப்புறம் சிலபல வாட்சுகள் தொலைத்தேன்...மொத்தம் ஏழு என்று நினைக்கிறேன்....

மற்றபடி வாட்சு இல்லையே என்று கவலைப்படுவதை நிறுத்திக்கொண்டேன்...அதுதான் நம்மிடம் நிற்பதில்லையே என்று...கல்லூரி காலத்தில் சில பெண்களிடம் டைம் கேட்டுவிட்டு கொஞ்சம் வழிய வாட்ச் இல்லாதது கொஞ்சம் உபயோகமாகத்தான் இருந்தது...

மொபைல் வந்தபிறகு வாட்ச் இல்லாதது ஒரு குறையா தோன்றவில்லை...ஆனாலும் நாம் ஒரு வாட்ச் வாங்கினால் என்ன என்று அவ்வப்போது தோன்றும்...

நேரத்தை தெரிந்துகொள்ள பல ஊடகங்கள் வந்துவிட்டதால் - இன்னும் சில ஆண்டுகளில் வாட்சை அருங்காட்சியகங்களில் தான் பார்க்க முடியும் போலிருக்கு...

அன்பு வாட்சுக்கு ( அல்லது கைக்கடிகாரத்துக்கு ) என் அஞ்சலி....

33 comments:

கோவி.கண்ணன் said...

ரவி
வாட்சு தொலைஞ்சிடுச்சின்னு கவலைப் படாதீர்கள் ... என்னுடைய பதிவு லோகவை இலவசமாக தருகிறேன்.

எனக்கு ஒரு வாட்ச் ஒரு வருடத்திற்குமேல் ஓடுவதில்லை. நேரம் சரியில்லாதபோது நன்றாகவே தெரிந்து நின்று விடுகிறது :-(

கோவி.கண்ணன் said...

//"கைக்கடிகாரத்துக்கு என் அஞ்சலி...." //
அஞ்சலிக்கு கை கெடிகாரம் வாங்கிக் கொடுத்ததையும் சொல்லுங்கள் :-)

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
அன்பு வாட்சுக்கு ( அல்லது கைக்கடிகாரத்துக்கு ) என் அஞ்சலி....
///

:-))))))

உங்க ஸ்டைலில் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்...

ரவி said...

ஹுக்கும்...ஆறெலிக்குதான் வாங்கிதரனும்...

யாராவது வாங்கி கொடுப்பாங்களான்னு காத்திருக்கேனாக்கும்...

அஞ்சலியா இருந்தா பரவாயில்லை தான்..

அஞ்சலி கைக்கடிகாரம் வாங்கி கொடுத்தா கட்டமாட்டேன்னு சொல்லுவேனா நானு....

ரவி said...

நன்றி குமரன்...கட்டங்கடைசியா நீங்களாவது ஒத்துக்கிட்டிங்களே..

:))

ஆபீஸ்ல பயலுக யாரும் நம்ப மாட்டேங்குறாங்க...இத்த மொதல்ல காட்டவேணும்...

லக்கிலுக் said...

வாட்ச்சு மட்டுமல்ல சைக்கிள் கூட ஸ்கூல்ல தொலைச்சிருக்கேன்....

நம்மளை மாதிரி தான் நம்ம பிரண்ட்சுங்களும் ஏமாளியா இருப்பாங்க போல.....

ரவி said...

////நம்மளை மாதிரி தான் நம்ம பிரண்ட்சுங்களும் ஏமாளியா இருப்பாங்க போல..... ///

ஏமாளி சரி லக்கி...மதியில்லா மந்திரி மாதிரி கோமாளி ஆகிடாம இருந்தா சரி...நமக்கும் ஒரு தலைகீழ் தினம் வருமா...???

:) :)

Anonymous said...

கல்லூரியில் படிக்கும்போது ஒருவரிடம் கடன் வாங்கிய வாட்சை தொலைத்தீரே (அல்லது அடகு வைத்து அமவுண்டு வாக்கிவிட்டீரே) அந்த கதையை கொஞ்சம் எழுதலாமே சார்?

அந்த இளிச்சவாயன் நாந்தான் (இளமாறன்)என்பதினை அறிவித்துகொள்கிரேன்.

Jay said...

அடடா! கைக் கடிகாரம் பின்னாடி இப்படி ஒரு கதையா!!!!
நான் அறிய எனது பொட்னி மாஸ்டர் கைக்கடிகாரம் கட்டுவதில்லை.. காரணம் கொழும்பிலிருந்து கைக்கடிகாரம் வாங்கிவந்த வேளையில் சிங்களக் காடையாகளால் கொல்லப்பட்டார்.....
யாழ்ப்பாணத்தில் கற்ற பலருக்கு தெரிந்திருக்கலாம் யாழ்பாணத்தில் பிரபலமான ஆசிரியர் பொட்னி குணசீலன்தான் அவர்

ரவி said...

காத்திரும், வாட்சு கட்ட யாரும் வராமலா போய்விடுவாங்க?

அன்புடன்,
சுமா

Jay said...

எனது பின்னூட்டத்திலே ஒரு தவறு கொல்லப் பட்டது ஆசரியரல்ல அவர் அப்பா.......

Anonymous said...

எந்த ஒரு பார்ப்பானும் இதுவரை வாட்சு மட்டுமல்ல எந்த பொருளையும் தொலைத்ததாக வரலாறு இல்லை. தமிழன் தான் கோமாளி.

போலியார் நற்பணி இயக்கம்
ஷரன் ஸ்டோன் பீட்ஸா கார்னர்
புட்பால் கிரவுண்டு, ஜெர்மனி

ரவி said...

சுமா அவர்களே..

வெயிட்டிங் - வெயிட்டிங்...

:) :)

ரவி said...

நற்பணி இயக்கத்தாரே..

சுய கவுரவத்தை - தன்மானத்தை தான் தொலைக்க கூடாது...

வாட்சு தொலைக்கலாம்..:))

ரவி said...

யாருக்கு - யாருக்கு ?

அன்புடன்,
சுமா

ரவி said...

சஸ்பென்ஸ்...சஸ்பென்ஸ்....

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

பின்னூட்டங்கள் வர ஆரம்பித்துவிட்டது

Anonymous said...

நன்பர் : நண்பர்
தலையனைகளை : தலையணைகளை
அதற்க்கடுத்த : அதற்கடுத்த
வேளாங்கன்னி : வேளாங்கண்ணி (என்று நினைக்கிறேன்)
கவலைபடுவதை : கவலைப்படுவதை
நிற்ப்பதில்லையே : நிற்பதில்லையே

Anonymous said...

ஸ்பெல்லிங் மிஸ்டேக் எல்லாம் சுட்டிக் காட்டி வரும் அனானி ஒரு பார்ப்பான். இவன் எதுக்காக தொடர்ந்து ரவியின் பதிவிலேயே கழித்து வருகிறான் என்று எங்கள் இயக்கத்துக்கு தெரியும்.

போலியார் நற்பணி இயக்கம்
ஷரன் ஸ்டோன் பீட்ஸா கார்னர்
புட்பால் கிரவுண்டு, ஜெர்மனி

ரவி said...

நன்றி திருத்திவிடுகிறேன்

ரவி said...

அனானியாக வராமல் சொந்த பெயரில் வந்தால் நன்றி சொல்ல வசதியாக இருக்கும்

:) :)

ரவி said...

ஸ்பெல்லிங் மிஸ்டேக் திருத்துவதை ஏன் இயக்கம் கண்டிக்கிறது என்ற விளக்கம் தாருங்கள் ப்ளீஸ்...

லக்கிலுக் said...

///ஸ்பெல்லிங் மிஸ்டேக் திருத்துவதை ஏன் இயக்கம் கண்டிக்கிறது என்ற விளக்கம் தாருங்கள் ப்ளீஸ்...//

போலியார் இயக்கம் சார்பாக நான் பதில் அளிக்கட்டுமா? :-)

ரவி said...

இயக்கமே....

லக்கிலூக் சொல்லுவதை வழிமொழிகிறீங்களா அல்லது வேற எதாவது ஸ்பெஷல் (!?) காரணம் இருக்கா...

நிலா said...

ரவி

விசேஷ சக்தி இருக்கிறவர்களுக்கு வாட்ச் அடிக்கடி தொலைந்து போகுமென்று எங்கோ படித்தேன் :-)

கேலியில்லை. உண்மையாகவே படித்திருக்கிறேன்

ரவி said...

விளக்கத்துக்கு நன்றி மிஸ்டர் எழுத்து பிழை...

என்ன நிலா..புல்லரிக்க வச்சிட்டீங்க..

நாகை சிவா said...

நம்ம கண்ணன் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல, அப்புறம் இளமாறன் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்ல... இதுல ஏதோ மேட்டர் இருக்குது. விசாரிக்கனும்......

ரவி said...

நாகை நாயகரே...பதில் சொல்லிட்டாப்போச்சு...

அஞ்சலிக்கு கைக்கடிகாரம் எல்லாம் கட்டிவிடலை..அவங்க அண்ணன் ரவுடி ரங்கன் எனக்கு அஞ்சலி செலுத்திடுவானே...

நானும் பார்க்கிறேன் - எந்த பொண்ணாவது பிரசன்ட் பண்ணும் என்று...

ஒன்னும் வேலைக்காகவில்லை...

இளமாறன் அவர்களே...

உங்க வாட்சை வாங்கி அடகு வைத்தது மிலிட்டரி சரக்கு வாங்க மட்டும் அல்ல...ஒரு லவ் மேட்டருல நொந்துபோயிருந்த நமது அறை நண்பரை குஷிப்படுத்த தான் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்...

அந்த வாத்தை (அதாங்க புல் பாட்டில் சரக்கு) கழுத்தை முறித்து ஊறுகாயை தொட்டுக்கொண்டு உள்ளே தள்ளியது நீர்தான் என்பதையும் உமக்கு நினைவூட்ட விரும்புகிறேன்...

நாகை சிவா said...

//அந்த வாத்தை (அதாங்க புல் பாட்டில் சரக்கு) கழுத்தை முறித்து ஊறுகாயை தொட்டுக்கொண்டு உள்ளே தள்ளியது நீர்தான் என்பதையும் உமக்கு நினைவூட்ட விரும்புகிறேன்... //
இளமாறனே, சரக்க தெளிய தெளிய அடிச்சுட்டு, எல்லாம் தெளிஞ்சத்துக்கு அப்புறம் இப்படி ஒரு கேள்வி கேட்டு இருக்கீங்க. உங்களால் நாங்க வேற ரவி சந்தேகப்பட்டுடோம். ரவி, நீ ஏதும் தப்பா எடுத்துக்காதாமா....

Anonymous said...

ஆமாம் சிவா அவர்களே.( ரவி கூறியமாதிரி நாகை நாயகர் என்றுஅழைக்கிறேன் இனிமே), தெளியத்தெளிய அடிச்சது சரிதான், மேற்கொண்டு சரக்கு கேட்டதுக்கு மானிட்டர் என்ற மட்டமான குவாட்டரை - (எம்ஸி விஸ்கி என்று கூறி) - பெப்சி கலந்து என்னை ஏமாற்றிய ரவியின் தரமற்ற செயலை இந்த நேரத்தில் கண்டித்துக்கொள்கிறேன்.

நாகை சிவா said...

//மானிட்டர் என்ற மட்டமான குவாட்டரை - (எம்ஸி விஸ்கி என்று கூறி) - பெப்சி கலந்து என்னை ஏமாற்றிய ரவியின் தரமற்ற செயலை இந்த நேரத்தில் கண்டித்துக்கொள்கிறேன். //
ரவி இது தப்பு தான.....மானிட்டர மோந்து பாத்தாலே ப்ளாட் ஆகும் உன் நண்பனுக்கு நீ இப்படி ஒரு துரோகத்தை பண்ணலாமா?
அப்புறம் இளமாறன், மானிட்டரை மட்டமான சரக்குனு சொல்லுறீங்க, நம்ம பழைய கம்பெனியில் வேலை செய்த ஆபிஸ் அசிட்டெண்ட் மானிட்டர அடிச்சுக்க வேற சரக்கே இல்லனு சத்தியம் பண்ணினான். நீ வேற மாதிரி சொல்லுறீயே. நமக்கு இந்த விசயத்தில் அவ்வளவாக ஞானம் பத்தாது. நான் எங்க அண்ணன் கண்ணனை கேட்டு ஒரு முடிவுக்கு வரேன்.

ரவி said...

ஏதேது...போகப்போக டாஸ்மார்க் ரேஞ்சுக்கு டிஸ்கஸ் பண்ணிப்பீங்க போலிருக்கே...

நான் அப்பாவிங்க...எனக்கு எதுவும் தெரியாதுங்க...இன்னும் தெளிவா சொல்லவேண்டும் என்றால்...

நான் ரொம்ம்ப நல்லவனுங்க...

பொன்ஸ்~~Poorna said...

நண்பரே எழுத்துப் பிழை,
//விளக்கத்துக்கு நன்றி மிஸ்டர் எழுத்து பிழை...//
உங்க நிலைமையைப் பார்த்தீங்களா ? :))))

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....