Friday, August 04, 2006

நட்புக்கு நிறமில்லை...(இனமும் - மதமும் இல்லை)

எனக்கு நிறைய நண்பர்கள்..எங்க வீட்டில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் ஆச்சர்யம் தான்..காரணம் எங்க வீட்டில் இருக்கும் எங்க அண்ணாவைத்தேடி யாரும் வரமாட்டாங்க..ஆனால் எனக்கு வெவ்வேறு ஊர்களில் இருந்தெல்லாம் நண்பர்கள் வருவாங்க...லெட்டர் போடுவாங்க..போன் செய்வாங்க...

ஒருமுறை - என் 10 வயதில் நானும் என் அண்ணாவும் விடுமுறைக்காக பாட்டி வீட்டுக்கு வந்திட்டோம்..அப்போது குடும்பம் நெய்வேலியில் இருந்தது.. என்னுடைய குட்டி குட்டி பிரண்ட்ஸ் வந்து என்னை தேடி இருக்காங்க...என் அம்மா சொல்லி இருக்கார் - அதாவது அவங்க ஊருக்கு போயிட்டாங்க - காசு இல்லையாம் திரும்ப என்று..எவ்வளவு ஆகும் என்று அவங்க கேட்க - 100 ரூபாய் என்று சொல்லி வைத்திருக்காங்க... என் நன்பர்கள் - ஆளுக்கு ஒரு ஒரு ரூபாயாக சேர்த்து - ஒரு வாரத்தில் 100 ரூபாய் சேர்த்து - என் அம்மாவிடம் கொடுத்திருக்காங்க... அம்மாவுக்கோ - ஆச்சர்யமான ஆச்சர்யம்..இந்த சின்னதுக்கு மட்டும் எவ்வளவு பிரண்டுக என்று..

பிறகு வீட்டைவிட்டு வெகு தொலைவில் - வருடத்துக்கு ஒருமுறை முழு ஆண்டு விடுமுறைக்கு மட்டுமே - வீட்டிற்க்கு வரும் நிலை ஆனது - காரணம் நான் சேர்ந்த புனித வளனார் உள்விடுதி (boarding). அங்கு நேரத்துக்கு படிப்பு - நேரத்துக்கு சாப்பாடு - நேரத்துக்கு - தூக்கம் என்று ஆனபோது - கை கொடுத்தது வேறு யார் - நன்பர்கள் தான்.. எல்லாரும் வீட்டை பிரிந்து சோகத்தில் இருந்தபோது - சேர்ந்து விளையாடி - சேர்ந்து வார்டனிடம் அடிவாங்கி - சேர்ந்து அழுது - இணை பிரியாதவர்களாகிப்போனோம்..

பிற்ப்பாடு கல்லூரியில் - திருச்சியில் - புத்தனாம்பட்டி கல்லூரியில் சேர்ந்தபோது - எந்த விதமான பொழுதுபோக்கும் இல்லாத சின்ன கிராமத்தில் - நன்பர்களை தவிர வேறெதுவும் அறியாதவர்களானோம்...என்ன சாதி - என்ன மதம் - அறியோம் ஆனால் - மனம் ஒத்த அந்த நட்பு... வார்த்தைகளால் விவரிக்கயியலாதுங்க..சேர்ந்து சினிமாவுக்கு போய் - சேர்ந்து தம் அடித்து - சேர்ந்து தண்ணியடித்து என இங்கோ வேறு விதமான இணைகள் பிறகு வேலை தேடும் படலத்தில் - ரங்கனாதன் தெருவில் - எட்டுக்கு எட்டு அறையில் - சரியாக எட்டு பேர் வசித்தபோது - ஆந்திரா மெஸ்ஸில் - இரண்டு சாப்பாடு வாங்கி - ஆறுபேர் கிர்ந்துண்டபோது -இந்த நட்பு ஒரு புதிய பரிமாணத்தை அடைந்தது.. பிறகு அவர் அவர் ஒர் வேலையில் செட்டில் ஆனபிறகு - இமெயில் - போன் - சாட், வார இறுதிகளில் மீட், புத்தாண்டு கொண்டாட்டங்களில் கொஞ்சம் ஜாலி என்று இது ஒரு பரிமாணம்...

ஆனால்..

எனக்கு அவன் இருக்காண்டா...என் நன்பன் இருக்காண்டா...நான் எப்போ போனாலும் - என்னிடம் காசு இருந்தாலும் இல்லைன்னாலும் என்னை வெச்சு சோறு போடுவாண்டா என்று ஒரு எண்ணம் வருது பாருங்க...அது ஒரு விதமான தன்னிறைவுங்க.... பொருளாதாரத்துல இல்லை.. மன நிறைவாதாரத்துல...

15 comments:

Anonymous said...

its really good

Anonymous said...

ஹாட்ஸ் ஆப் ரவி. உனக்கும் வாழ்த்துக்கள்

Udhayakumar said...

அது....

நாகை சிவா said...

ரவி
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

கஸ்தூரிப்பெண் said...

//அது ஒரு விதமான தன்னிறைவுங்க.... பொருளாதாரத்துல இல்லை.. மன நிறைவாதாரத்துல...//

என்ன ஒரு யதார்த்தமான பரிமாறல்!!!!
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் said...

ரவி... நண்பர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு நட்புக்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள்... நன்றாக இருக்கிறது :)

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
பொருளாதாரத்துல இல்லை.. மன நிறைவாதாரத்துல
///

நல்லா எழுதியிருக்கீங்க நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

நாமக்கல் சிபி said...

ரவி,
//காரணம் நான் சேர்ந்த புனித வளனார் உள்விடுதி (boarding)//

ஆஹா, நீங்களும் புனித வளனாரா?
மஞ்சகுப்பமா, கூத்தப்பாக்கமானு தெரிஞ்சிக்கலாமா?

நான் மஞ்சகுப்பம் புனித வளனார்ல விடுதியில் தங்கி படித்தேன்.

உங்களுக்கு Ref.Father.Agnel தெரியுமா?

Anonymous said...

do you need some friends from Vani?

டிபிஆர்.ஜோசப் said...

நட்புக்கு மதம் ஏது நிறம் ஏது? இனம் ஏது மொழி ஏது? உறவுகளில் மிகவும் நேர்த்தியானது, வேறுபாடு காணாதது, குறைகளைக் கண்டுக்கொள்ளாதது நட்புதானே..

மூழ்காத ஒரே ஷிப் ஃப்ரெண்ட்ஷிப் தானே..

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ரவி.

வெற்றி said...

செந்தழல் ரவி,
மிகவும் நல்ல பதிவு. படிக்கச் சுவைத்துடும் வகையில் நேர்த்தியாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

கவியரசர் கண்ணதாசன் "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்று சொன்னது போல் நல்ல நண்பர்கள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதே என் கருத்து.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்,

ரவி said...

///நான் மஞ்சகுப்பம் புனித வளனார்ல விடுதியில் தங்கி படித்தேன்.

உங்களுக்கு Ref.Father.Agnel தெரியுமா?///


நல்லா தெரியும்...இவரிடம் தான் நான் ஒரு கேள்வி கேட்டேன் - அதுமுதல் என் பிரண்டாகிட்டார்...எங்க வீட்டுக்கு கூட வந்திருக்கார்..

லேட்டஸ்ட் நியூஸ் என்ன தெரியுமா >?

இந்த ஆகஸ்ட் ஒன்னாம் தேதியில் இருந்து அவர்தான் பள்ளியின் பிரிஸ்பால்..

அப்படி என்ன கேள்வி கேட்டேன் என்று கேட்கிறீங்களா ?

உள் விடுதியில் இருந்ததால் - இவரோடு பழகும் வாய்ப்பு எங்களுக்கு - அட இவர்தான் எங்க வார்டன்..

எட்டாம் வகுப்பு படிக்கும்போது - ஒரு முறை என்னுடைய பெட்டி சாவியை தொலைச்சிட்டேன்..

அழுதுக்கிட்டே இவர்கிட்ட போயி - பாதர் - சாவியத்தொலைச்சிட்டேன் அப்படீங்குறேன்...

அவர் கேட்டார் - எங்கேடா தொலைச்சே என்று ?

நான் சொன்னேன்...பாதர்...எங்கே தொலைச்சேன்னு தெரிஞ்சா ஏன் உங்க கிட்ட வந்து கேக்குறேன்...நானே எடுத்துக்க மாட்டேனா என்று...

மக்கா - யோசிக்க ஆரம்பிச்சிட்டாரு மனுஷன்...

Anonymous said...

நட்பு!
உன்னதம் நிறைந்த சொல்! சுந்தரர் கூட அதனால் தான் இறைவனைத் தோழன் பாவனையில் தொழுதார்.காலம் காலமாக நட்பு பலருக்குக் கைகொடுத்துள்ளது. சும்மா யோகனை; யோகன் பாரிஸ் ஆக்கியதும் நட்பே! 83 கலவரம்; வேலையைத் துறந்து வீட்டில் நின்ற போது சுந்தர் எனும் நண்பர் மனைவியின் தாலிக்கொடியை அடைவு வைத்தும்; தேவா எனும் நண்பரும் கைவசமிருந்த பணத்தை கேட்காமலே குறிப்பறிந்துதவினார்கள்.தப்பிவிடு என்றவர்கள். என் உறவுகள் எவரும் உதவும் நினையில் இருந்தும் உதவவில்லை.
நட்பு பெரிது; பேணப்பட வேண்டியது.
யோகன் பாரிஸ்

Priya said...

Good for you ravi!!! You shud never be proud of yrself, but be proud of friendship!!!

Jay said...

//ஆளுக்கு ஒரு ஒரு ரூபாயாக சேர்த்து - ஒரு வாரத்தில் 100 ரூபாய் சேர்த்து - என் அம்மாவிடம் கொடுத்திருக்காங்க... அம்மாவுக்கோ - ஆச்சர்யமான ஆச்சர்யம்..//
அப்பிடியே டச் பண்ணிடுச்சு!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....