காமதேனு - உண்மையில் இருக்கா ?

என்ன இப்படி ஒரு தலைப்பு வைச்சிட்டேன் என்று பார்க்கிறீங்களா ? இருக்கு..

எங்கே இருக்கு ? நீ பார்த்தாயா என்று கேட்டால் - நான் பார்த்தேன் என்று தான் சொல்லவேண்டும்..

தொட்டு பார்த்தாயா ? எப்படி இருந்தது ? கேட்டது கிடைத்ததா என்று எல்லாம் கேள்விகளை அடுக்காமல், http://www.kamadenu.com/ பட்டுன்னு இந்த சுட்டியை திறங்கப்பா...

நல்ல பல தமிழ் புத்தகங்கள் - கொட்டிக்கிடக்கு இங்கே....

ஆன்லைனில் வாங்கும் வசதி உண்டு...

எங்களை வாங்க சொல்லிட்டு - நீ என்ன புத்தகம் வாங்கினே என்று கேட்பவர்களுக்கு...

புத்தக விமர்சனம் எழுதும்போது பாத்துக்கோங்க...ஹுக்கும்...

Comments

Anonymous said…
செந்தழல் ரவி, கிரேசி மோகனின் மிஸ்டர் கிச்சா சூப்பர் காமெடி போல் தெரியுது, ஆனால் சர்வர் எரர் அடிக்குது. வாங்க முடியலை.
கொஞ்ச நேரம் காத்திருந்து பிறகு முயற்ச்சி செய்யுங்க...

அந்த புத்தகத்தை நானும் ஆர்டர் செய்யலாம் என்று இருக்கேன்.
Anonymous said…
Do you know Kamadenu owner?

Well known blogger Badri

Poliyar
from Nanganallur bRanch,
Chennai.
Anonymous said…
Do you know Kamadenu owner?

Well known blogger Badri

Poliyar
from Nanganallur bRanch,
Chennai.
Anonymous said…
Do you know Kamadenu owner?

Well known blogger Badri

Poliyar
from Nanganallur bRanch,
Chennai.
Anonymous said…
Do you know Kamadenu owner?

Well known blogger Badri

Poliyar
from Nanganallur bRanch,
Chennai.
Anonymous said…
Do you know Kamadenu owner?

Well known blogger Badri

Poliyar
from Nanganallur bRanch,
Chennai.
Anonymous said…
Kamadenu owner Mr. Badri.

A well known Blogger and Kizakku pathippagam owner.

By poliyar.
ரவி,
ரொம்ப பயனுள்ள சுட்டியத் தான் கொடுத்துருக்கீரு. நான் உடனே போய் பத்து புத்த்கங்கள் வாங்கிபோட்டேன். அது சரி எத்தன நாள்ல வீட்டுக்கு புத்தகங்கள் வரும்? இதுக்கு முன்னாடி இதுல நீரு புத்தகம் வாங்கிருக்கீரா?
செந்தழல் ரவி,

சூப்பர், நான் order பன்னின புத்தகங்கள்.
Book Name
anpukkup panjsamillai
thirumanamaana en thozikku
kaathar kilikal
enakkul paesukiraen
aezaavathu kaathal
naanae enakkoru pothimaram
kalloorip pookkal
en anpu kaathalaa
merkkurip pookkal
melanamae kaathalaaka
thaayumaanavan
inithu inithu kaathal inithu - paakam-2
inithu inithu kaathal inithu - paakam-1
en anpulla appaa

நன்றீ,
தம்பிஜெயந்தன்
////அந்த புத்தகத்தை நானும் ஆர்டர் செய்யலாம் என்று இருக்கேன்.///

செய்திட்டேன்...நாலு நாளைக்குள் கிடைக்கும் என்று சொல்லி இருக்காங்க..
thalai ஆர்டர் செய்த புக்குகளை நாங்கள் அனானி பெயரில் ஆர்டர் செய்யும் வசதி இருக்கிறதா?
சொந்த பெயரிலேயே ஆர்டர் செய்யுங்கப்பு, அங்கன கிரடிட் கார்டு எல்லாம் தரவேணும்.
////Do you know Kamadenu owner?

Well known blogger Badri

Poliyar
from Nanganallur ///

நல்ல புத்தகங்கள் எங்கே இருந்தாலும் வாங்கலாம் இல்லையா ?
Anonymous said…
காம..தேனு...பாத்தீங்களா?
சோம...பானம்...,
பேரெல்லாம் எப்படி வச்சாங்களோ?
உண்மையான தொண்டன் said…
கலிகாலத்திலும் காமதேனு கண்ட தலையை வாழ்த்தி வணங்குகின்றேன்.

இப்படிக்கு,
செயலாளர்,
அகில உலக தலை தலைமை மன்றம்,
3வது தெரு,சரஸ்வதிபுரம்,
அல்சூர்,
பெங்களூர்.
மிகவும் நல்ல தகவலை கொடுத்ததற்கு நன்றி இரவி
///காம..தேனு...பாத்தீங்களா?
சோம...பானம்...,
பேரெல்லாம் எப்படி வச்சாங்களோ?
///

காமா - சோமான்னு வச்சிருக்காங்க...
Anonymous said…
ஆர்டர் செய்த புத்தகங்கள் இன்னும் வரலையே ?
நீர் இருப்பது உள்நாடா - வெளிநாடா ?

என்றைக்கு ஆர்டர் செய்தீர் ?
Anonymous said…
உள்நாடு தான். நேற்று உமது பதிவை பார்த்து ஆர்டர் செய்தேன்.
குறைந்தது 4 நாள் ஆகும் என்று போட்டிருந்ததா நியாபகம்.

வெயிட் பண்ணுங்க...
Anonymous said…
அப்படியா, அப்போ சரி.
G.Ragavan said…
நல்ல சுட்டி. நானும் முயன்று பார்க்கிறேன். நன்றி.
Anonymous said…
நான் ஆர்டர் செய்யும்போது பாதியில் கரண்டு போயிருச்சு. என்ன செய்ய ?
கார்டு நெம்பர் எல்லாம் கொடுத்தீங்களா ?>
Anonymous said…
இல்லை.
சரி எத்தன நாள்ல வீட்டுக்கு புத்தகங்கள் வரும்? இதுக்கு முன்னாடி இதுல நீரு புத்தகம் வாங்கிருக்கீரா?

நெல்லை கிறுக்கரே,

நான் ஆன்லைனில் பல புத்தகங்கள் வாங்கியுள்ளேன். சென்னையிலிருந்து பெங்களூருக்கு அதிக பக்ஷம் ஒருவாரத்திற்குள் வந்துவிடுகின்றன.

க்ரெடிட் கார்ட் மட்டுமல்லாமல், தாங்கள் பேங்க் ட்ரான்ஸ்ஃபர் வசதி பெற்றவராகவிருப்பின் அதை உபயோகப்படுத்தியும் புத்தகங்கள் பெறலாம்.

எனக்கு இதுவரை அனுப்பி வைக்கப்பட்ட புத்தகங்களும் நல்ல புத்தகங்களாகவே இருந்தன. அதாவது எல்லா பக்கங்களும் முழுமையாகவும், சரியான ப்ரிண்ட்டுடனும் இருந்தன.

ஓரிரண்டு புத்தகங்களை வாங்குவதற்குப் பதிலாக பல புத்தகங்களாக (ஒரு ஸெட்) வாங்குவது லாபம். ஒரு ஸெட் என்பதில் எத்தனை புத்தகங்கள் வரும் என்பதை அந்த ஸைட்டை பார்த்து முடிவு செய்துகொள்ளுங்கள்.
அப்போ ஒன்னும் பிரச்சினை இல்லை, மீண்டும் ஆர்டர் செய்யுங்க.
என்னங்க, என்னை காமதேனுவுக்கு மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்க.
நெல்லை கிறுக்கரே,

தாங்கள் உண்மையிலேயே நெல்லையை சேர்ந்தவரா?

அங்கே ஸ்ரீ வைகுண்டம் அருகே பேய்க்குளம் என்றொரு ஊர் இருக்கிறதே. கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
தகவல்களுக்கு நன்றி மியூஸ்..

நீங்கள் வாங்கும் மற்ற தளங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
muse அண்ணாச்சி,
நான் உண்மையிலயே திருநெல்வேலிக்காரன் தான். நீங்க சொல்லுத பேய்க்குளம் நல்லாத் தெரியும். ஸ்ரீவைகுண்டத்துல நம்ம பங்காளிக நெறய பேரு இருக்காக. உங்களுக்கு பேய்க்குளத்துல யாரயாவது தெரியுமா?
ரவி, muse அண்ணாச்சி,
ரெண்டு பேருக்கும் நன்றி. நான் ஆர்டர் கொடுத்த ரெண்டாவது நாளே புத்த்கங்கள் எல்லாம் சென்னயில என் வீட்டுக்கு வந்துட்டுதாம். இது மாதிரி பயனுள்ள நெறய சங்கதிகள நீங்க எங்க்ளோட பகிந்துக்கிடனும்....
நெல்லை கிறுக்கரே,

எங்கள் சொந்த ஊரே அதுதான். இதுவரை பார்த்ததில்லை. ஆசையுண்டு.

செம்புலிங்க நாடான் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவருடைய முக்கிய எதிரிகளாக இருந்த பெரும் ஜமீந்தார்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
Anonymous said…
// நான் ஆர்டர் செய்யும்போது பாதியில் கரண்டு போயிருச்சு. என்ன செய்ய ?//

கூட நீயும் போக வேண்டியதுதான ...
Anonymous said…
//அந்த புத்தகத்தை நானும் ஆர்டர் செய்யலாம் என்று இருக்கேன்.//

அந்த புத்தகம் என்ன இட்லியா, தோசையா ஆர்டர் செய்ரதுக்கு....
இம்சை அரசன் 23வது மியூஸ் ரசிகர் மன்றம் said…
//செம்புலிங்க நாடான் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவருடைய முக்கிய எதிரிகளாக இருந்த பெரும் ஜமீந்தார்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?//

அந்த ஜமீந்தாருக்கு சொம்பு அடிச்ச பரம்பரையில வந்தவரு தான் எங்க தலைவரு.
// நான் ஆர்டர் செய்யும்போது பாதியில் கரண்டு போயிருச்சு. என்ன செய்ய ?//

கூட நீயும் போக வேண்டியதுதான ...

ஹஹஹ ரசித்து சிரித்தேன் அனானி :)
Anonymous said…
//அந்த புத்தகம் என்ன இட்லியா, தோசையா ஆர்டர் செய்ரதுக்கு....//

கொஞ்சம் உட்டா புக்குங்களை எல்லாம் பொட்லம் கட்டி வாங்கியாருவிங்க போல இருக்கே?
Anonymous said…
//செம்புலிங்க நாடான் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவருடைய முக்கிய எதிரிகளாக இருந்த பெரும் ஜமீந்தார்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?//

//அந்த ஜமீந்தாருக்கு சொம்பு அடிச்ச பரம்பரையில வந்தவரு தான் எங்க தலைவரு.//

சொம்பு உடஞ்சி போச்சா? நசுங்கி போச்சா?
Anonymous said…
//இம்சை அரசன் 23வது மியூஸ் ரசிகர் மன்றம் said...

//செம்புலிங்க நாடான் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவருடைய முக்கிய எதிரிகளாக இருந்த பெரும் ஜமீந்தார்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?//

அந்த ஜமீந்தாருக்கு சொம்பு அடிச்ச பரம்பரையில வந்தவரு தான் எங்க தலைவரு.
//

எங்கள் தலைவரை இழிவு படுத்தும்பட்டி இம்சையில் "ச" பயன்படுத்திய மியூஸ் ரசிகர் மன்றத்திற்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
இம்சை அரசன் 23வது மியூஸ் ரசிகர் மன்றம் said…
//சொம்பு உடஞ்சி போச்சா? நசுங்கி போச்சா?//

அந்த ஸொம்ப தான் இன்னமும் பெங்களூர்ல எங்க தலைவரு வேற ஒருத்தருக்கு அடிச்சிக்கிட்டிருக்காரு
Anonymous said…
தாமதமாக அடித்து ஆடும் அனானிகளை வன்மையாக கண்டிக்கிறேன்.
பாயவிரிச்சான் said…
நானும் இங்கே பாய விரிக்கட்டுமா?
Anonymous said…
///Do you know Kamadenu owner?

Well known blogger Badri

Poliyar
from Nanganallur bRanch,
Chennai.///

பாருங்க சார், எந்த விருப்பு வெறுப்பும் இல்லாம போலியார் எழுதி இருப்பதை?
///பாருங்க சார், எந்த விருப்பு வெறுப்பும் இல்லாம போலியார் எழுதி இருப்பதை?///

நடுநிலையாளரிடம் போலியாருக்கு கோபம் வருவதற்க்கு காரணம் இல்லை அனானி.
muse அண்ணாச்சி,
செம்புலிங்கம் ஒரு ராபின்ஹூட் மாதிரின்னு ஊருல பெருசுக சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன். இருக்குதவுக கிட்ட இருந்த்து திருடி இல்லாதவகளுக்கு கொடுப்பாருன்னு சொல்லுவாக. அவருக்கு எதிரிகளான ஜமீந்தாருக பத்தியும் சொல்லிருக்காக.

அந்தக் கத நடந்து ஒரு நூறு வருசம் இருக்குமின்னு நெனக்கேன். எங்க வீட்ல கூட செம்புலிங்கம் திருட வந்திருந்தாருன்னு எங்க ஆச்சி சொல்லுவாக. அந்தக் கதயெல்லாம் படமா எடுக்கப் போறதாவும் அதுல நம்ம சரத்குமாரு நடிக்கப் போறதாவும் பேச்சு அடிபட்டுச்சு.. அப்புறம் அதக் கெடப்புல போட்டுட்டானுவ...
Anonymous said…
காமதேனு பால் ஒரு லிட்டர் பார்ர்ர்ர்சல்.......
Anonymous said…
//muse அண்ணாச்சி,
செம்புலிங்கம் ஒரு ராபின்ஹூட் மாதிரின்னு ஊருல பெருசுக சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன். இருக்குதவுக கிட்ட இருந்த்து திருடி இல்லாதவகளுக்கு கொடுப்பாருன்னு சொல்லுவாக. அவருக்கு எதிரிகளான ஜமீந்தாருக பத்தியும் சொல்லிருக்காக.

அந்தக் கத நடந்து ஒரு நூறு வருசம் இருக்குமின்னு நெனக்கேன். எங்க வீட்ல கூட செம்புலிங்கம் திருட வந்திருந்தாருன்னு எங்க ஆச்சி சொல்லுவாக. அந்தக் கதயெல்லாம் படமா எடுக்கப் போறதாவும் அதுல நம்ம சரத்குமாரு நடிக்கப் போறதாவும் பேச்சு அடிபட்டுச்சு.. அப்புறம் அதக் கெடப்புல போட்டுட்டானுவ...
//

வந்துட்டங்கயா பழம் பெருச்சாளிங்க...

ஸ்ப்பா இப்பவே கண்ண கட்டுதே.....

இம்சை அரசன் 23வது மியூஸ் ரசிகர் மன்றம்.
Anonymous said…
//திருட வந்திருந்தாருன்னு எங்க ஆச்சி சொல்லுவாக//

யேவ் நீ போலி. நீ நெல்லைக்காரன் இல்ல. "ஆச்சி" நெல்லை சொல்லில்ல....
~ said…
ஆமாம், போலிதான் அதுக்கு இன்னா இப்போ
Anonymous said…
வந்துட்டேன்.
Anonymous said…
உங்க தாத்தா பெயர் என்ன ?
அவருக்கு எதிரிகளான ஜமீந்தாருக பத்தியும் சொல்லிருக்காக.

நெல்லை கிறுக்கர் அண்ணாச்சி,

எங்க தாத்தனார்கள்தான் அந்த ஜமீந்தாருக. பாட்டியின் பழைய நினைப்புக்களிலிருந்து தெரிந்துகொண்டது இது.
///எங்க தாத்தனார்கள்தான் அந்த ஜமீந்தாருக. பாட்டியின் பழைய நினைப்புக்களிலிருந்து தெரிந்துகொண்டது இது.///

மியூஸ் - ஜமீந்தார் பேரனா நீங்க..

வாட்டக்குடி இரணியன் படத்தில் வரும் ரகுவரன் மாதிரி எதையாவது செய்தாங்களா - உங்க தாத்தாக்கள் ?

அந்த கதைகளை சொல்லுங்க.
வீனாபோன பையன் said…
நீங்க எல்லாம் தீவிரவாதிகள்
வாட்டக்குடி இரணியன் படத்தில் வரும் ரகுவரன் மாதிரி எதையாவது செய்தாங்களா - உங்க தாத்தாக்கள் ?

அந்த கதைகளை சொல்லுங்க.


நீங்கள் சொல்லும் படத்தில் ஓரிரு காட்ஷிகள் பார்த்திருக்கிறேன். அந்த மாதிரி விஷயங்கள் ஸினிமாவில்தான் வரும் என்று நினைக்கிறேன். அல்லது எங்கள் தாத்தாக்களின் வாழ்வில் அதுபோல எதுவும் நடக்கவில்லை.

செம்பு லிங்கத்திற்குப் பயந்துகொண்டு ஊரை விட்டு ஓடியதுதான் நடந்தது.

என் தாத்தாக்கள் தங்கள் வீட்டிலிருந்த விலையுயர்ந்த நகைகள், பட்டுத் துணிகள், பணம் காசுக்களை ஒளித்துவைத்தது, என் தாத்தா செம்புலிங்கத்திற்கு பயந்துகொண்டு குவித்துவைக்கப்பட்டிருந்த அரிசிக்குள் ஒளிந்திருந்த கதைகள்தான் கேட்டிருக்கிறேன்.

தாத்தா விட்ட மூச்சினால் அரிசி மணிகள் உதிர ஒளிந்திருந்தவரையும் செம்பு லிங்கம் கண்டு பிடித்துவிட்டார். அடித்து மிரட்டி நிறைய கொள்ளை அடித்துக்கொண்டும் போய்விட்டார்.

நகைகளை ஒளித்து வைப்பது சரிதான். எதற்காக பட்டுப்புடவைகளை ஒளித்துவைத்தீர்கள்? என்று கேட்டதற்கு, பட்டுத் துணிகளை பார்த்தால் அவற்றையெல்லாம் அள்ளி வீட்டு வாஸலில் வைத்து மொத்தமாக எரித்துவிடுவாராம் செம்பு லிங்கம்.

செம்புலிங்கம் உதவி செய்த ஏழைகளில் பார்ப்பனர்களும் உண்டு. ஒரு பார்ப்பன விதவைக்கு அவரது மகன் பூணுல் அணியும் நிகழ்ச்சிக்கு விலை உயர்ந்த நகைகளை (திருடியதுதான் !) கொடுத்து உதவியிருப்பதாகவும் கேள்விப்பட்டேன்.

இவருடைய ராபின் ஹூட் நடவடிக்கைகளால் ஏழையானவர்கள் பலர் உண்டு. ஏனெனில், பணக்காரர்கள் என்றால் ஜமீந்தார்கள் மாத்திரமில்லை. நாலு காசு சேர்த்து வைத்திருந்தவர்களும் செம்பு லிங்கம் பார்வையில் பணக்காரர்கள்தான்.

கடைசியில் அவரை அவரது மனைவி (ஆசைநாயகி) காட்டி கொடுக்க, வீட்டிலிருந்து மரத்திலேறி தப்பியோட முயன்றவரை போலீஸார் சுட்டு கொன்றார்களாம். எனக்கு அதுதான் வேதனையாக இருக்கிறது. இப்படி உதவி செய்தவரின்மேல் உண்மையில் அன்பு செய்தவர்கள் யாருமில்லையா என்று கேள்வி பிறந்தது. உதவி செய்துவிடுவதால் மக்கள் அன்புடையவர்களாய் ஆகிவிடுவதுமில்லை. பாத்திரம் பார்த்து பிச்சையிட்டிருந்தால் இன்னேரம் ஏதேனும் ஒரு அரஸியல் கட்ஷியின் தலைவராகவோ, ஜாதி சங்கத்தின் தெய்வமாகவோ ஆயிருக்கலாம்.

பல சமயங்களில் மக்களின் அன்பை பெற பண நகை உதவி மட்டுமே போதுவதில்லை.
///பல சமயங்களில் மக்களின் அன்பை பெற பண நகை உதவி மட்டுமே போதுவதில்லை.///

இது நிதர்சனம்.

ஜம்புலிங்கம் என்ற புத்தகத்தை சின்ன வயதில் படித்திருக்கேன்..

ஜம்பு என்ற பெயரில் ஒரு சினிமா வந்ததா கூட நியாபகம்.

ஜெமினி கனேசன் ??

அப்போ என்.டி.டி.வி இருந்திருந்தா ஜம்பு ஒரு பெரிய ஊடக ஆக்ரமிப்பை செய்திருப்பார்.
அய்யா அனானி,
ஆச்சிங்கறது செட்டிநாட்டுல மட்டிமில்ல நெல்லைல சில பகுதிலயும் வழக்கத்துல இருக்குத சொல். பாட்டிய ஆச்சின்னு சொல்லுவோம்.
Anonymous said…
ஓ அங்க இருந்து தூக்கிட்டு வந்த சொம்பதான் இன்னும் அடிச்சுகிட்டிருக்காரா... ரொம்ப பழசா ஆகிருக்குமே...
ஜம்பு என்ற பெயரில் ஒரு சினிமா வந்ததா கூட நியாபகம்.

ஜெமினி கனேசன் ??


ஜெய்ஷங்கர் என்று நினைக்கிறேன். உடன் படித்த ஒருவர் (8ஆம் வகுப்பு) வீட்டிற்குத் தெரியாமல் போய் பார்த்துவிட்டுவந்து ரகஸியமாக கதை சொன்னார். ஈரமான வெள்ளை நிற ஜாக்கெட்டுக்களும், சம்பந்தமில்லாத குலுக்கல் நடனங்களும் என்று "பெரியவங்க பாக்குறது" என்பது புரிந்தது. பெரியவங்க ஆனபின்னால் இதுபோன்ற படங்கள் லயிக்கவில்லை.

ஒரு குறிப்பிட்ட டைரக்டர்தான் ஸம்பந்தமில்லாமல் ஜெய்ஷங்கருக்கும், உஸிலை மணிக்கும் கௌபாய் ட்ரெஸ்ஸெல்லாம் போட்டு இந்த மாதிரி படங்கள் எடுத்தார். அந்த படங்களுக்கு ராமராஜன் படங்கள் எவ்வளவோ தேவலாம். அந்த டைரக்டர் பெயர் ஞாபகமில்லை.

Popular Posts