பிலாகரிலேயே படத்தை வலையேற்றும் "ADD Image" என்ற பொத்தான் ஏதோ பெயருக்குத்தான் இருக்கிறது என்றும், படத்தை வலையேற்ற உதவுவதில்லை என்றும் ஒரு நன்பர் குறைப்பட்டுக்கொண்டார்..
பிக்காசாவுடன் கூட்டணி சேர்ந்து பிலாகர் படத்தை ஏற்றும் ஒரு மென்பொருளை வழங்குகிறது, ஆனால் அது பயன்படுத்த எளிமையாக இல்லை..
படங்களை வலையேற்ற முயற்ச்சி செய்துகொண்டிருந்த போது ஒரு சிறிய யோசனை, நமது குறுக்கு புத்தி வேலை செய்தது..
அட...சூப்பர்...பிரச்சினை செய்யும் பிலாகரை இப்படி கூட ஏமாற்றலாமா என்று தோன்றியது..
அந்த வழிமுறையை படங்களோடு (!?) சொல்லிக்கொடுக்கிறேன்..
முதலில் உங்கள் வலையேற்றவேண்டிய படத்தை டெஸ்க்டாப்பில் வைத்துக்கொள்ளுங்கள்...கீழே பாருங்கள், எனது விக்கிபீடியா பற்றிய பதிவில் இடம் பெற்ற விக்கி என்ற படம் உள்ளது..

இப்போது உங்கள் பதிவில் உள்ள உருவாக்கு (Create) என்ற பொத்தானை அழுத்தி, புதிய பதிவிற்க்கான சன்னல் வந்தவுடன் அதில் உங்கள் பதிவை உள்ளீடு செய்யுங்கள் ( டைப்படிங்கப்பா)..
பிறகு எங்கே உங்களுக்கு படம் வரவேண்டுமோ அங்கே கர்சர் பூனைக்குட்டியை வைத்து (Mouse Pointer) "Add Image" என்ற பட்டனை கிளிக் செய்யுங்க..
பிறகு இமேஜை இணைக்கும் சன்னல் வரும். அதில் உங்களுக்கு தேவையான லேயவுட், படம் இடமா வலமா, பெரியதா சிறியதா என்று தேர்வு செய்து, இமேஜை செலக்ட் செய்து அப்லோட் இமேஜ் என்ற பொத்தானை அழுத்தவும்.
அவ்வளவுதான்.
இது முடிந்தபின், "Your Image has been Added" என்ற சன்னல் வரும்.."
"Close" என்றால் மூடிக்கொள்ளும் இந்த சன்னல்...
பலருக்கும் பிரச்சினை என்ன என்றால், இதன் பிறகு நமது "Compose Window" வில் பார்த்தால் ஒரு மண்ணும் இருக்காது...
வேறென்ன செய்ய, படங்களை வலையேற்றுவதில் பிரச்சினை என்று ஒரு வரியை பதிவில் சேர்த்துவிட்டு அப்பீட் ஆகிவிடுவீர்...
அப்படியே நில்லுங்க...நீங்க உங்க படங்களை வலையேற்றலாம்....அட ஏற்க்கனவே ஏற்றிவிட்டீர்கள்...எப்படி என்று கேட்கிறீர்களா ?
நீங்கள் "Upload Image" என்ற பொத்தானை அழுத்தியதும் உங்கள் படம் சர்வருக்கு சென்றுவிடுகிறது...
பிறகு "Close Window" என்ற பொத்தானை அழுத்தியதும் ஒரு HTML லிங்க் ( வலையேற்றப்பட்ட உங்கள் படத்தின் லிங்க்) உங்கள் கம்போஸ் விண்டோவில் வந்து விழ வேண்டும்..
ஆனால் இந்த கடைசி ஸ்டெப் மட்டுமே பலருக்கும் பிரச்சினை ஆகிறது.
உங்கள் படம் ஏற்க்கனவே சர்வருக்கு சென்று விட்டதால் நீங்களே இந்த கடைசி ஸ்டெப்பை செய்தால் தீர்ந்தது பிரச்சினை...
<ஏ ஹச் ரெப்="http://photos1.blogger.com/blogger/3075/2751/1600/உங்கள் படம் பெயர்.jpg">
எ ஹச் ரெப் = இதற்க்கு பதில் a href. முதல்வரியில்
எ = இதற்க்கு பதில் a
இதை உங்கள் பதிவில் இப்போது போடுங்கள்..பிறகு உங்கள் படத்தின் பெயரை சரியாக அந்த மூன்று வரிகளில் ( மொத்தம் இரண்டு இடங்களில் வருகிறது) கொடுத்து, பதிவை பிரிவியூ பாருங்கள்..
பப்ளிஷ் செய்யுங்கள்...
இதே முறையில் எல்லா படங்களையும் ஏற்றுங்கள்...
அம்புட்டுதேன் மக்களே....