Tuesday, September 19, 2006

பெங்களூர் மராத்தான்...

பெங்களூரில் மராத்தான் ரேஸ் வைச்சாங்க..நானும் கலந்துக்கிட்டேன்...(கலந்துக்கிட்டா தான் எல்.ஜி வழங்கும் டீ.சர்ட் கிடைக்கும் அப்படீன்னு சொன்னாங்க..:))) பொறவு எல்லாரும் ஓடி முடிச்சு வரும்போது அப்படியே ஜாயிண்ட் ஆகி வெற்றிக்கோட்டை தொட்டேன்..எல்லாரும் கைத்தட்னாங்கப்பா...வெற்றிக்கோட்டை கடக்கும் புகைப்படம் இப்போது இல்லை. அதனால் சில படங்களை மட்டும் வலையேற்றுகிறேன்..



சமூகத்தில் ஊழலை ஒழிக்கிறேன் அப்படீன்னு கிளம்பி இருக்கிற லோக் பரித்ரான் கட்சி காரவுகளும் வந்து கலந்துக்கிட்டாங்க..

நானும் அவங்க கொடிய வாங்கி கொஞ்ச நேரம் கோஷம் போட்டேன்..(கன்னடத்துல :)) - சும்மா ஒரு ஜாலி தான்...

அப்புறம் ஒரே பரபரப்பு...நம்ம கீர்த்தி ரெட்டி - அதான் தேவதை படத்துல நடிச்சாங்களே, அவங்க ஆஜர். அப்படியே பக்கத்துல போயி ஒரு ஆட்டோ கிராப்பை வாங்கிக்கிட்டு...



அடுத்ததா ஒரு குரூப் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு...இந்த போட்டோவில் என் பதிவுக்கு அடிக்க வந்து பிறகு கானாம போகும் சுமாவும் இருக்கிறார்...எங்கே கண்டுபுடிங்க..



மீதியை அப்புறம் சொல்றேனுங்க..

பிலாகர் பிரச்சினையால் படங்களை ஏற்ற முடியவில்லை...விரைவில் வலையேற்றம் செய்கிறேன்.

14 comments:

Anonymous said...

3806-க்கு பக்கத்துல ஒத்த விரல் காட்டற அக்காதானே?

Anonymous said...

தல நீ ஓடி கடந்தியா இல்ல உருண்டு கடந்தியா?...

Anonymous said...

அடுத்து எங்கள் தலையை இந்தியா சார்பில் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தல நீ எங்க குந்திகினுற போட்டாவுல

ஒலிம்பிக் கமிட்டி பிரிவு
செந்தழல் லக்கியார் வலைப்பூ பாசறை
அடிலைட்
ஆஸ்ட்ரேலியா

மெளலி (மதுரையம்பதி) said...

ஒகோ, அந்த டிசர்ட் அப்படி வந்ததுதானா?....

பிராண்ட் அம்பாஸிடருக்கு கூட ஓசில தரமாட்டாங்களா?....

அப்பு, அந்த செல்போன் எப்படி வந்தது?.....அதுல எடுத்த படங்கள் என்ன ஆச்சு?..

கோவி.கண்ணன் [GK] said...

//பொறவு எல்லாரும் ஓடி முடிச்சு வரும்போது அப்படியே ஜாயிண்ட் ஆகி வெற்றிக்கோட்டை தொட்டேன்..எல்லாரும் கைத்தட்னாங்கப்பா//

ரவி...!
கடைசியாக ஓடிவந்ததற்கு தானே !
:))

ரவி said...

நான் இருக்கிறது ஓரமா, ரோஸ் கலர் கொடிய வச்சிக்கினு...

ரவி said...

கோவியாரே...

நானும் எனது தோழர் / தோழியும் ஒரு சிறிய கயமை செய்தோம்...

எல்லாரும் ஆரம்பித்த நேரத்தில் நாங்க ஓடாமல் - ஓரமாக அமர்ந்து கதை அடித்துக்கொண்டிருந்தோம்..

பிறகு வெற்றியாளர்கள் பலத்த கைத்தட்டலுக்கு இடையே வர ஆரம்பித்தார்கள்..

அப்போது சிறிது தொலைவு சுற்றிவர நடந்து சென்று, ஒரு கும்பலோடு கலந்துகொண்டோம்..

அப்படியே புகைப்படம் எழுக்க ஒரு தோழியையும் செட்டப்பு செய்து வைத்துவிட்டேன்...

அதுக்கு முன்னாடி கொஞ்சம் தண்ணீரை மேலே தெளிச்சிக்கிட்டு ( பின்ன, வேர்வை வந்தமாதிரி காட்டவேணாமா - போட்டோவுல..)

அவ்ளோதான்..

நாங்க ஒவ்வொருவரா ஓடி வர, நமது தோழி அருமையாக புகைப்படம் எடுக்க...

எல்.ஜி மனிதவள பிரிவுக்கு போட்டோவை அனுப்பியாச்சு..இன்னும் சில மணி நேரத்தில் வலையில் ஏற்றப்படும்..

என்னங்க பின்னூட்ட நாயகரே - முழு உண்மையையும் ஒரே கேள்வியில் வரவெச்சிட்டீங்களே..

மங்கை said...

நல்லா துரத்துனீங்களா ரவி

மங்கை

ரவி said...

////பிராண்ட் அம்பாஸிடருக்கு கூட ஓசில தரமாட்டாங்களா?....///

அம்பாசிடரா இருந்தாலும் தரமாட்டாங்க, சாண்ட்ரோவா இருந்தாலும் தரமாட்டாங்க..

//அப்பு, அந்த செல்போன் எப்படி வந்தது?.....அதுல எடுத்த படங்கள் என்ன ஆச்சு?.. ///

செல்போன் நாம பேக்கரிக்கு - சீ..பேக்டரிக்கு விசிட் போகும்போது கொரியாக்காரங்க பாசமா குடுக்கறது..

:))))))

ரவி said...

///நல்லா துரத்துனீங்களா ரவி////

மங்கை, அடுத்தது ஒரு படம் போடுறேன் பாருங்க...நாங்க எல்லாம் எப்படி ஓடினோம் என்று தெரியும்..

ரவி said...

////தல நீ ஓடி கடந்தியா இல்ல உருண்டு கடந்தியா?... ///

ஓடித்தான், இதுல என்ன சந்தேகம்.?

Thekkikattan|தெகா said...

இந்த ஃபோட்டோக்களில் ஒரு பொண்ணுங்ககூட என் கண்ணுக்கு தட்டுப்படலியே, யாருமே வராலியொ :-))

Anonymous said...

சங்க கண்மணிகள் ஏன் இந்த சாதனையை கண்டுக்காம இருக்காங்க?

Anonymous said...

//ஓடித்தான், இதுல என்ன சந்தேகம்.?//

தல உன் தொப்பையா பாக்கும் போது நம்மமுடியல.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....