Thursday, September 21, 2006

நெசப்பாக்கம் குவாட்டர் கோயிந்தனின் கீதை

அய்ய எதுக்கு அயுவுற நீனு...
இன்னாத்த நீ உட்டுட்ட ?
எத நீ கொனாந்த, அத நீ உடறதுக்கு ?
இன்னாத்த நீ கிரியேட் ஆக்கி உட்டுட்ட அது வீணாபோவுறதுக்கு பா..
எத்த நீ எட்த்துக்கினியோ அத்த இங்க இருந்துதான் தூக்கின்போன..
இன்னாத்தா நீ குட்த்தியோ அது இங்கதானபா குடுத்த..
இன்னிக்கு உண்ணாண்ட கீறத நாளைக்கி வேற ஒரத்தன் கொத்திக்கினி போவான்..
பொறவு அத்தயே இன்னொருத்தன் கொத்திக்கினு போவான்.....

9 comments:

Anonymous said...

கடெமையே செய்பா. பிரைசு தானா வருப்பா

SP.VR. SUBBIAH said...

அதான் சொல்றேன்
கம்னு இரு
செடி வச்சவன்
தண்ணி காட்டாமயா
போய்ருவான்?

╬அதி. அழகு╬ said...

ஏதோ தத்துவ மொழியில் எழுதப் பட்டது போல் உள்ளது.

ஒன்றும் புரியவில்லை ;-(

லெனின் பொன்னுசாமி said...

போ நைனா..நீ ரொம்ப கலாய்கிரா..அய்ய சும்மா குந்தின்னு இருன்ன்னா..பெரிய பருப்பா நீ...? தோடா...

Anonymous said...

ayyyyo ayyooo

Anonymous said...

சோத்து கன்னத்தில கீசினா பீச்சாங்கை கன்னத்தையும் காமி.

லக்கிலுக் said...

நெசப்பாக்கம் என்டர் ஆவுறவங்களுக்கு மொதல்லே கண்ணுல படுறதே நம்ம ஒயின் ஷாப்பு தான். அங்கே இடையறாது தண்ணி அடித்த அந்த இனிய காலம் திரும்ப வருமா :-)))))

ரவி said...

இப்படியெல்லாம் சொன்னா நாங்க நம்ம்பிருவமா ? உம்மீது, செவனப்பை குடித்து உவ்வே செய்தவர் என்ற அவப்பெயர் உள்ளதே ? அடுத்த வலைப்பதிவுக்கு புல் மப்போடு வந்து நிரூபியும்...

ரவி said...

///ஏதோ தத்துவ மொழியில் எழுதப் பட்டது போல் உள்ளது.////

மெய்யாலுமா ? ஹி ஹி

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....