விடுமுறை - உடலுக்கு மட்டும்

ஒரு ஆண்டுக்கு பிறகு எடுக்கும் ஒரு வார விடுமுறை...ஆறு மாதங்களுக்கு முன்பே அப்ளை செய்தது...கடுமையான அலுவலக பணிகளை தேவையானவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, விரைவில் வர இருக்கும் சகோதரர் திருமண விழாவிற்க்காக கிராமத்தில் இருக்கும் வீட்டை பெயிண்டிங் செய்வது நீண்ட கால திட்டம்...

மகாலட்சுமிக்கு உதவி வேண்டி வலைப்பதிவர்களின் ஆதரவு கேட்டு இன்றோடு இரண்டாவது நாள்...இத்தனை ஈர இதயங்கள் நம்மை சுற்றி இருக்கும்போது என்ன கவலை என்று ஒருபுறம் அகம் மகிழ்ந்தாலும் இந்த பெரும் பணியை முன்னெடுத்து செல்ல யார் உதவியையாவது பெறவேண்டுமே ?

ஜனவரி முதல் வாரத்தில் ஞானவெட்டியான் ஐயா கல்லூரி கட்டணத்தை செலுத்தும் நாள்தான் அந்த ஏழைப்பெண் நிம்மதி பெருமூச்சு விடும் நாள் என்றாலும், பதிவர்கள் கருணை உள்ளத்தோடு கொடுக்கும் நிதியை சரியான நேரத்தில் ஐயாவின் வங்கி கணக்கில் செலுத்தும் பணியை மட்டும் இப்போதைக்கு ஏற்க்கிறேன்...

யார் யார் உதவி செய்துள்ளார்கள், இன்னும் உதவி செய்யப்போகின்றவர்களின் விவரங்கள், அனைத்தும் பதிவர் பொன்ஸ் அவர்கள் சேமித்து வைத்துள்ளார், சேமித்துக்கொண்டிருக்கிறார்...

மேற்க்கொண்டு ஆதரவுக்கரம் நீட்டும் அனைவரும் என்னுடைய மடலுக்கும் (zyravi@yahoo.com) , ஐயா ஞானவெட்டியான் மடலுக்கும் (njaanam@gmail.com)தெரிவிப்பதோடல்லாமல் பொன்ஸ் அவர்களின் மின்னஞ்சலுக்கும் தெரிவித்தால் மிக உதவியாக இருக்கும்...பொன்ஸ் அவர்களின் மின்னஞ்சல் முகவரி poorna.rajaraman@gmail.com இதுதான்..

பொன்ஸ் அவர்கள் இதுவரை சேமித்த தகவல்கள், சேகரித்த நிதியம் போன்றவை குறித்தான பதிவொன்றை இடுவார்...காத்திருக்கிறேன்...

இந்த செய்தியை வலையில் மற்ற நன்பர்களுக்கு தெரிவித்தும், தார்மீக ஆதரவு கொடுத்தும், பதிவிட்டும், நிதியளித்தும் உள்ள அத்துனை வலைப்பதிவாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கும் அதே நேரம் பற்றாக்குறையை நீக்க மேற்க்கொண்டு நிதி அளிப்பதாக உறுதியளித்திருக்கும் / அளிக்கப்போகும் அத்துனைவருக்கும் முன்பே என்னுடைய நன்றியை காணிக்கை ஆக்குகிறேன்....

இறுதியாக இந்த வரிகளுடன் இப்போது விடைபெற்றுக்கொண்டு

அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுதல்,
ஆலயம் பதினாயிரம் செய்தல்,அன்ன யாவிலும் புண்ணியம் மிக்கது
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் !!!!

நல்ல செய்தியோடு திரும்பி வருகிறேன்...

என்னை தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி எண் 98805 97061. நான் தமிழகத்தில் ரோமிங்கில் இருப்பதால் 9443405765 என்ற எண்ணுக்கும் தொடர்புகொள்ளலாம்...லேண்ட் லைன் 04153 225317...

இந்த காரியத்தை நிறைவு செய்யும் வழிபற்றி ஓய்வில்லாம் சிந்தித்திருப்பேன்....!!!!!!!

Comments

ரவி,
இதுவரை உதவியவர்களின் பெயரும் வலைத்தளமுகவரியும் இங்கே உள்ளன.
மேலும் உதவ விரும்பும் நண்பர்கள் எனக்கும் ஒரு மடல் இட்டுத் தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்
நெஞ்சம் குளிர்ந்துள்ளது. கவலையின்றி சென்று வருக. நாம் எடுத்த பணி இனிதே முடிந்து மகாலட்சுமிக்கு நல்வாழ்வு கிட்டும்.
தொடரட்டும் உங்கள் பணி . வாழ்த்துக்கள் .
//விரைவில் வர இருக்கும் சகோதரர் திருமண விழாவிற்க்காக //

ரூட்டு கிளியர் ஆவுதா? :-)

வாழ்த்துக்கள்!
விடுமுறைக்கால வாழ்த்துக்கள்.

Popular Posts