Tuesday, December 05, 2006

உங்களுக்கு கவிஞர் பாலபாரதியை தெரியுமா..

உங்களுக்கு கவிஞர் பாலபாரதியை தெரியுமா என்று கேட்டால், பாலபாரதியை தெரியும்...அவர் கவிஞரா என்று கேட்பவரும் உண்டு...சிலபேர்...எங்கியோ கேட்ட பேரா இருக்கு...ஆனா சரியா தெரியலை...என்பார்கள்...நான் சொல்வது வலைப்பதிவர்களை அல்ல...வலைபதியாதவர்களை சொல்கிறேன்...

எனக்கு தெரியும்...

சமீபத்தில் சென்னை சென்றிருந்தபோது கிழக்கு பதிப்பகம் சென்று பாலாவை சந்தித்தேன்...அப்போது அவர் எழுதிய "இதயத்தில் இன்னும்" என்கிற குறுங்கவிதை (ஹைக்கூ) தொகுப்பை பரிசளித்தார்...இதயத்தில் இன்னும் இருக்கின்றன சில கவிதைகள்....அட்டைப்படத்தில் மேலிருந்து கீழாக சற்று கோணலான பாண்ட்டில் இருந்த தலைப்பை பார்த்துவிட்டு என்னுடைய அண்ணன், என்ன கன்னட புக்கா ? என்று கேட்டுவைத்தான்...பிறகு புத்தகத்தின் பின் அட்டையை பார்த்து அதில் இருந்த ஒரு கவிதையால் மனம் கவரப்பட்டு முழுமையாக படித்து முடித்தபிறகே கீழே வைத்தான்...

அந்த கவிதை...

சமத்துவபுரம்...
கழிவுநீர் சுத்தம் செய்ய..
அதே கருப்பன்...

கவிதை என்றாலே தெறித்து ஓடும் ஒரு நபர் (அதான் என்னோட அண்ணன்) ஒரு கவிதை புத்தகத்தை கீழே வைக்காமல் படித்து முடித்தான் என்றால் அந்த எழுத்தின் வீச்சும், சொல்லின் தரமும் எப்படி இருக்கும் என்று நான் சொல்லவேண்டிய அவசியம் இல்லை...

சமூகம் பற்றித்தான் எழுதுவாரா என்று கேட்டால் அதுதான் இல்லை...காதலும் எழுதுகிறார்...அரசியலும் எழுதுகிறார்...சோகமும் எழுதுகிறார்...இயற்கையும் எழுதுகிறார்...தனிமையும் எழுதுகிறார்...

வந்துவிடுவாளோ அவள்...
தோட்டத்தில் காத்திருக்கும்...
இன்று பூத்த ரோஜா...

ஊழல் மந்திரி...
கறைபட்டிருக்குமோ...
அவர் ஏற்றிய தேசியக்கொடி...

இரவு முழுதும்
விழித்திருக்கவேண்டும்...
வானில் தனியே நிலா...

முள்வேலியிட
மனமில்லை...
கிழிபடுமோ காற்று...

மொட்டையாய் காடுகள்...
கோபுரங்களில்...
பறவைகள்...

விறகு விற்க...
பேரம் நடந்தது...
மர நிழலில்.....

புதிய நிலம்...
புதுப்பண்ணையார்...
பழைய கூலி...

புரியாத ஊர்...
புரியாத மொழி...
ஆறுதலாய் அதே நிலா...

குடிநீர் வசதியற்ற
கிராமம்...
உபசரிப்புக்கு "பெப்ஸி"

அவரை சந்தித்தபோது மதியம் லஞ்சுக்கு கிழக்கு பதிப்பகத்துக்கு பக்கத்தில் உள்ள ஒரு உணவகம் போனோம்..ஆழமாக பேசுகிறார்...அனானி பின்னூட்டம் வந்தால் அது யாரையாவது புண்படுத்தும் என்று தெரிந்தால் அனுமதிக்கவேண்டாம் என்று திட்டினார்...அல்லது செய்யுங்கால் முகம் பார்த்து உரைக்க நெஞ்சில் துணிவு வேண்டும் இல்லையா...அது கண்டேன்...சரி சரி என்று ஆமோதித்துக்கொண்டேன்...

பார்த்தவுடன் பலகாலம் பழகியதுபோல் பட்டென ஒட்டிக்கொள்ளும் மனப்பாங்கை சொல்ல மறந்துவிட்டேனே...வாய்யா...என்று சொல்லி தோளில் கைபோட்டு பேசும் மனநிலை எல்லோருக்கும் வந்துவிடாது...உள்ளத்தில் கள்ளமில்லாத வெள்ளந்தி மனிதர்களுக்குத்தான் அது கைவரும்...

சமூகம், அரசியல், கொள்கை எல்லாவற்றிலும் ஒரு தெளிவான மனப்பாங்கு கொண்டவர்...நான் சொன்ன ஒரு சில விஷயங்களையும் வெட்டி விவாதம் செய்யாமல் உடனே ஏற்றுக்கொண்டார்...இது வலைப்பதிவர்களிடம் இல்லாத விஷயமாச்சே...

அவர் கவிதை ஒன்றை கடைசியாக (புத்தகத்திலும் இதுவே கடைசி) சொல்கிறேன்...

கிணற்றுத்தவளைதான்...
நம்பிக்கையிருக்கிறது வாழ்வில்...
நிமிர்ந்தால் தெரியும் வானம்....

தமிழ்மணத்தில நட்சத்திரம் நீ....இன்னொரு நட்சத்திரம் பற்றி எழுதாதே என்றார் ஒரு நன்பர்...நான் அதை மறுத்தேன்...காரணம் சொல்லவா....

இவன் கிழக்கில் மலர்ந்த சூரியனாச்சே !!!!

107 comments:

Anonymous said...

thanks for the intro about Mr.Balabarathi. We both will go and meet him again.

கதிர் said...

ஹைக்கூ எல்லாம் நன்றாக இருந்தது.

மொட்டையாய் காடுகள்
கோபுரங்களில் பறவைகள்

இது மிக நன்று.

நட்சத்திரமே, ஒரு நாளைக்கு ஒரு பதிவே ஜாஸ்தி. இதுல வரிசையா சத்யராஜ் படம் ரிலீஸ் ஆகுற மாதிரி போட்டுகிட்டே இருக்கிங்க! :))

கலக்குங்க!

லொடுக்கு said...

ஆட்டத்தை இங்கேயும் அரங்கேற்றலாமா?

ரவி said...

நன்றி தம்பி அவர்களே....சும்மா போடுவோம்...நேரமும் காலமும் எப்போதும் கிடைக்கும்னு சொல்லமுடியுமா தலைவா ?

ரவி said...

லொடுக்கு அவர்களே...நீங்க பா.க.ச உறுப்பினரா ???

லக்கிலுக் said...

கவிஞரை நான் அண்ணே என்று தான் அழைப்பது வழக்கம். நீங்கள் சொன்னமாதிரி முதல் சந்திப்பிலேயே நம் மனதில் "பச்சக்" என்று ஒட்டிக் கொள்வார்.

இவரை நாத்திகர் என்று பலரும் நினைக்கிறார்கள். இவருடன் பழகியபின்பே தெரிந்தது இவர் ஒரு பழுத்த ஆத்திகர் என்று.

இவர் நித்தமும் வணங்கும் கடவுள் "தந்தை பெரியார்"

Anonymous said...

அப்படியே அவருடைய மைனஸ் குணங்களிலும் ஒன்றிரண்டைச் சொல்லலாம்.. :
1. சட் சட்டென்று வந்துவிடும் கோபம்
2. எல்லாரையும் எளிதில் நம்பிவிடும் குணம்
3. எழுதுவது தொழிலாக இருந்தும் பதிவுகளில் அதிகம் எழுதாமல் ஜல்லி அடிக்கும் திறன் ;)

Anonymous said...

ஆமா நீங்க பாகச மெம்பர் சரி...எல்லா மெம்பருக்கும் அந்த புத்தகம் கிடைக்க வழிஎன்ன?.....

அப்புறமா இன்னும் ஒரு கேள்வி, அவர் சென்னை மாநாட்டிற்கு வராதவர்கள் அது பற்றி பேசக்கூடாது...கமண்ட் அடிக்க கூடாதுன்னெல்லாம் சொன்னாரே, அது பற்றி உங்க கருத்து?

ரவி said...

1. சட் சட்டென்று வந்துவிடும் கோபம்

எல்லா கவிஞர்களுக்கும் உரியதுதான்...இவர் என்ன விதிவிலக்கா ?

2. எல்லாரையும் எளிதில் நம்பிவிடும் குணம்

இது வெள்ளந்தி மனிதர்களின் பொது சொத்து...முதல் மைனஸுக்கும் அடுத்த மைனஸுக்கும் நெருங்கிய தொடர்புண்டு..

3. எழுதுவது தொழிலாக இருந்தும் பதிவுகளில் அதிகம் எழுதாமல் ஜல்லி அடிக்கும் திறன் ;)

இந்த விஷயத்துக்கு பாலாவே விளக்கம் கொடுப்பார் என்று நினைக்கிறேன்...

லொடுக்கு said...

பா.க.சா??

Anonymous said...

கூச்சப்பட்டு இந்த பதிவுல ஒரு பின்னூட்டம் கூட போடமாட்டார்...

லக்கிலுக் said...

//ஆட்டத்தை இங்கேயும் அரங்கேற்றலாமா? //

"ஆட்டையைப் போடலாமா?" என்று கேளுங்கள். வலையுலக லேங்குவேஜ் அப்பப்போ சேஞ்ச் ஆகிவிடுகிறது.

ரவி said...

பா.க.ச = பாலபாரதீயை கலாய்க்கும் சங்கம்..

நான்
பொன்ஸ்
லக்கி
முத்து தமிழினி
வெட்டிப்பயல்
லொடுக்குப்பாண்டி
தேவ்
இளா
வீ த பீப்பிள்
ஆஸ்திரேலியாவில் இரண்டு அனானி
சிங்கப்பூரில் மூன்று அனானி
குழலி
கோவிக்கண்ணன்
தம்பி

அது நீளும் பெரிய லிஸ்ட், வந்து அட்டெண்டென்ஸ் போடுவாங்க பாருங்க.

பா.அ.சா = பாலபாரதி அனுதாபிகள் சங்கம்..

இப்போதைக்கு வாத்தியார் சுப்பையா

Anonymous said...

நல்ல கவிதைங்கதான் ஹைக்கூன்னு சொல்லாதவரைக்கும்.

வாழ்த்துகள் பாலபாரதி.யெஸ்

We The People said...

//இவர் நித்தமும் வணங்கும் கடவுள் "தந்தை பெரியார்"//

இதுவும் ஹைகூ வா?? என்ன ஒரு Contra Statement!!!

We The People said...

பாலாபாய்,
தல இம்புட்டு சூப்பரா கவிதை எளுதுவாருன்னு எங்களுக்கு தெரியாதே... மெய்யாளுமா இவர் எளுதின கவிதையா?? எங்கயோ பச்சா மாதிர்யே இருக்கே.... சுட்ட பூவா?? ;)

இருங்க அவராண்டாயே கேட்டுக்கினு வரேன் :)))

நா.ஜெயசங்கர்,
பா.க.ச தலமை களகம்

SP.VR. SUBBIAH said...

இந்த
செந்தழல்ரவி
பாலபாரதியின்
கதிர்களால்
மிளிரும்
இன்னொரு
கோளா?
சந்திரனைபோல!

SP.VR.SUBBIAH

SP.VR. SUBBIAH said...

இந்த
செந்தழல்ரவி
பாலபாரதியின்
கதிர்களால்
மிளிரும்
இன்னொரு
கோளா?
சந்திரனைபோல!

SP.VR.SUBBIAH

SP.VR. SUBBIAH said...

இந்த
செந்தழல்ரவி
பாலபாரதியின்
கதிர்களால்
மிளிரும்
இன்னொரு
கோளா?
சந்திரனைபோல!

SP.VR.SUBBIAH

We The People said...

பா.க.ச பதிவுன்னு நெம்பி வந்து ரெம்ப ஏமாந்து போயிட்டேன், ஏதோ கமெண்டுகளாவது பா.க.சவுக்கு துணையா வருது...

//அப்படியே அவருடைய மைனஸ் குணங்களிலும் ஒன்றிரண்டைச் சொல்லலாம்.. :
1. சட் சட்டென்று வந்துவிடும் கோபம்//

கரீட்டு தான் பா... சின்னபுள்ள மாதிரி மூகத்தை திருப்பிவைச்சுக்கினு சினுங்குவாரு!!


//2. எல்லாரையும் எளிதில் நம்பிவிடும் குணம்//

ரொம்ப சரி.. அதான் எங்களுக்கு தெரியுமே... அனாலதானே அவரையே எங்க சங்கத்துல தலீவரா வைச்சுயிருக்கோம்...

//3. எழுதுவது தொழிலாக இருந்தும் பதிவுகளில் அதிகம் எழுதாமல் ஜல்லி அடிக்கும் திறன் ;) //

கண்டிப்பா சொல்லறேன் இதை எழுதினது(பாலாவை அறிந்தவன் said... ) ஒரு பா.க.ச மெம்பர்தான்...

நா.ஜெயசங்கர்,
பா.க.ச

Anonymous said...

வீ.த.பீப்பிள்..அவருக்கு போனப்போட்டு படிச்சு காட்டு...!!!

Unknown said...

தெரிய வைத்ததற்கு நன்றி ரவி... ;)

கவிதைகள் நன்று!!!

Anonymous said...

அதென்ன கிழக்கில் மலர்ந்த சூரியன் ? கிழக்கில் நிலைத்த சூரியன் என்று சொல்லியிருக்கலாமே

நாடோடி said...

//நான்
பொன்ஸ்
லக்கி...///
லகுட பாண்டியாரே என்னை விட்டுவிட்டேரே.

இதற்கு உன்னை படுக்க வைத்து பாலா அவர்களின் செல்போனை(கடலைக்கு பயன்படுத்துவது) பிடுங்கி உமது வலதுகாதில் விட்டு இடதுகாதில் எடுக்கவைக்கவேண்டும்.

நாம எவ்வளவு காலாய்ச்சாலும், அழுகாதமாதிரியே இருக்காருப்பா. அவரு ரொம்ப நல்லவருப்பா.... :))))

Anonymous said...

//இதுவும் ஹைகூ வா?? என்ன ஒரு Contra Statement!!! //

காமாலை கண்ணுக்கு...

அருள் குமார் said...

ரவி,
பா.க.ச வை ஆரம்பிச்ச என்னை லிஸ்ட்ல விட்டுட்டீங்களே :)

//1. சட் சட்டென்று வந்துவிடும் கோபம்
2. எல்லாரையும் எளிதில் நம்பிவிடும் குணம்
3. எழுதுவது தொழிலாக இருந்தும் பதிவுகளில் அதிகம் எழுதாமல் ஜல்லி அடிக்கும் திறன் ;)
//

முதல் இரண்டும் அப்படியொன்றும் பெரிய மைனஸ் இல்லை. சட்டென்று கேபப்பட்டாலும் சட்டென்று கூல் ஆகிவிடுவார்.

மூன்றாவது மைனஸ் தான் நானும் அவரிடம் அடிக்கடி சுட்டிக்காட்டும் ஒன்று!

முத்துகுமரன் said...

ரவி, நட்சத்திர வாழ்த்துகள்..

//பார்த்தவுடன் பலகாலம் பழகியதுபோல் பட்டென ஒட்டிக்கொள்ளும் மனப்பாங்கை சொல்ல மறந்துவிட்டேனே...வாய்யா...என்று சொல்லி தோளில் கைபோட்டு பேசும் மனநிலை எல்லோருக்கும் வந்துவிடாது...உள்ளத்தில் கள்ளமில்லாத வெள்ளந்தி மனிதர்களுக்குத்தான் அது கைவரும்...//

உண்மையான வார்த்தைகள். அனைவரிடமும் அவர் காட்டும் அன்னியோன்யம் என்னை மலைக்க வைத்த ஒன்று.

//பா.க.ச = பாலபாரதீயை கலாய்க்கும் சங்கம்..

நான்
பொன்ஸ்
லக்கி
முத்து தமிழினி
வெட்டிப்பயல்
லொடுக்குப்பாண்டி
தேவ்
இளா
வீ த பீப்பிள்
ஆஸ்திரேலியாவில் இரண்டு அனானி
சிங்கப்பூரில் மூன்று அனானி
குழலி
கோவிக்கண்ணன்
தம்பி
//
வளைகுடா கிளைப் பொறுப்பாளரை புறக்கணித்தமைக்கு எனது கடுமையான கண்டனங்கள்

ரவி said...

வாங்க அருள், எப்படியோ விட்டுப்போச்சு...வேனுமின்னா பின்னூட்டத்தை எடிட் செய்து திருத்திடுறேன்...!!!!

நாடோடி கடிக்கவே வந்திட்டார்...இருந்தாலும் இருவருக்கும் வருகைக்கு நன்றி...!!!!

ரவி said...

மன்னிக்கவும் முத்துக்குமரன்...பல் கோணங்களில் இருந்து லிஸ்ட் பற்றிய எதிர்ப்பு வலுத்துக்கொண்டே இருப்பதால் விரைவில் அந்த பின்னூட்டத்தை எடிட் செய்து அளிக்கலாம் என்றுள்ளேன்...

பாலாவும் தெரிந்துகொள்ளட்டுமே, எத்தனை மெம்பர்கள் என்று !!!

ஸயீத் said...

அட கவிதையெல்லாம் சூப்பர்!.
-------------------------------

தாகம் நெருப்பிற்கு..
துரத்துகிறது மெழுகுவர்த்தியை..
இறுதியில் அணைந்தது நெருப்பு தாகம் தணியாமலே...

லொடுக்கு said...

ஆஹா! பெரிய ஆளுங்க எல்லாம் இங்கே வட்டமடிக்கிறத பாத்தா இதுவும் நூறுதான் போங்க.

லொடுக்கு said...

// "உங்களுக்கு கவிஞர் பாலபாரதியை தெரியுமா.."//

யாருங்க அது?

ரவி said...

அது பதிவை பார்த்தால் தானே தெரியும் லொடுக்கு அவர்களே !!!!

Anonymous said...

கண்டிப்பா கிரிக்கெட் ப்ளேயர் இல்லை.

ஜோ/Joe said...

கவிதைகள் அருமை!

பாலபாரதி இவ்வளவு அழகாக கவிதை எழுதுவார் என்று நான் அறிந்திருக்கவில்லை .பதிவுக்கு நன்றி.

பா.க.ச -வுல சேர்வதற்கு விண்ணப்ப படிவம் எங்கு கிடைக்கும்?

ரவி said...

சேர்வதற்க்கு பெரிய தியாகம் எல்லாம் செய்யவேண்டாம் ஜோ...பாலாவை கலாய்த்து முதலில் ஏதோ ஒரு பதிவில் பின்னூட்டம் போட்டாலே நீங்க ஆட்டத்தில் இறங்கிட்டீங்க அப்படீன்னு அர்த்தம்...

:))))))))))))))))

We The People said...

///////இவர் நித்தமும் வணங்கும் கடவுள் "தந்தை பெரியார்"//
இதுவும் ஹைகூ வா?? என்ன ஒரு Contra Statement!!!
//காமாலை கண்ணுக்கு... ///

ஷப்ப்ப்ப்ப்பா காக்கா வடையை லப்புன்னு கவ்விகிச்சு பா...

We The People said...

//வீ.த.பீப்பிள்..அவருக்கு போனப்போட்டு படிச்சு காட்டு...!!! //

படிச்சு காட்டிவிட்டேன்... என் கவிதையா இதெல்லாம்ன்னு ஒரே ஆனந்த கண்ணீர் விடராரு பா...

ஏங்க ரவி இந்த பதிவு போட எவ்வளவு கமிஷன் வாங்யிருக்கீங்க... மரியாதைக்கு 50 சதவீதத்தை பா.க.சவுக்கு கட்டுபா... சங்கத்துல பணத்தட்டுப்பாடுபா...

We The People said...

//பா.க.ச -வுல சேர்வதற்கு விண்ணப்ப படிவம் எங்கு கிடைக்கும்? //

அட வாங்க நம்ம பிளாக்குக்கு ஒரு தனி பதிவே போட்டு வச்சிருக்கேன் தல...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி!
நவீன கவிதை வடிவம் எதுவும் எனக்குப் புரிவதில்லை. ஆனாலும் இவை மிக எளிமையான உள்ளன.
நன்று!
நன்றி!
யோகன் பாரிஸ்

குழலி / Kuzhali said...

பாலபாரதியின் இந்த தொகுப்பை படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டியது இந்த பதிவு.


ஹலோ மிஸ்டர்
பாலா ஜி
திருப்பதியிலிருப்பது
பாலாஜி

திருப்பதிக்கு போனா
கெடைக்கும் லட்டு
உன்கிட்ட வந்தா
கெடைக்குமா ஃபுட்டு(food)?

திருப்பதிக்கு போனா
கெடைக்கும் லட்டு
உன்கிட்ட வந்தா
கெடைக்குமா ஃபுட்டு(food)?

ஹலோ மிஸ்டர்
பாலா ஜி
திருப்பதியிலிருப்பது
பாலாஜி

உன் கையிலிருக்குது
செல்போனு
உன் பாக்கெட்லிருப்பது
ரெனால்ட்ஸ் பேனா

ஒன்னும் ஒன்னும்
ரெண்டு
நீயும் நானு
ஃபிரெண்டு

பாலா ஜி
நான்
கடலை போட்டு
ரொம்ப நாளாச்சி

வடுவூர் குமார் said...

எனக்கும், இந்த கவிதை என்றால் "காத தூரம்" ஓடுவேன்.என்னவோ அந்த அலைவரிசை என்னுடன் சேரவில்லை.
"பலகாலம் பழகியவர் போல்,வாய்யா"- சமீபத்தில் திரு.S.K அவர்களை பார்த்ததும் அறிந்துகொண்டேன்.அது சிலரிடமே உள்ள கலை.

ரவி said...

அவருடைய இனிய நட்புதான் கமிஷன்..

ரவி said...

அடா அடா குழலி...கவிதை கூட பிரிக்கறீங்க !!!!

குறைஞ்ச உடையில கீர்த்தி..
ஜொள்ளொழுகி ஜோக்கடிச்சான் மூர்த்தி..
அவளுக்கு தெரியும் ஜூடோ கராத்தி..
பல் நாலை தட்டினாள் பாப்பாத்தி..

இது குமுதத்தில் 10 வருஷம் முன்பு வந்த கவுஜ...!!!

ரவி said...

/////எனக்கும், இந்த கவிதை என்றால் "காத தூரம்" ஓடுவேன்.என்னவோ அந்த அலைவரிசை என்னுடன் சேரவில்லை.
"பலகாலம் பழகியவர் போல்,வாய்யா"- சமீபத்தில் திரு.S.K அவர்களை பார்த்ததும் அறிந்துகொண்டேன்.அது சிலரிடமே உள்ள கலை. ///

நானும் அப்படித்தான்...இப்போதுதான் கவிதைகளில் ஒரு ஈர்ப்பு...நல்ல கவிதைகளை நீங்கள் ரசித்துத்தானே ஆகவேண்டும் வடுவூராரெ...

சமீபத்தில் அருட்பெருங்கோ எழுதிய கவிதை...

சுடிதாரிலும் வருகிறாய், தாவனியிலும் வருகிறாய்...நீ புதுக்கவிதையா - மரபுக்கவிதையா...

இது எப்டி இருக்கு...!!!

ரவி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோகன் அவர்களே !!!

We The People said...

//அவருடைய இனிய நட்புதான் கமிஷன்..//

அதெல்லாம் ஒத்துக்கமாட்டோம் தல பாலாபாயே ஒப்புதல் வாக்குமூலம் தத்துட்டாரு... அமொண்ட் எவ்வளவுன்னு CBIக்கு டயரெக்டா சொல்லிட்டாரு, இங்கயெல்லாம் சொல்லமுடியாது, உங்ககிட்ட 50% கேட்டு வாங்கிங்க சொல்லிட்டாருபா...

நாடோடி said...

நம்ம பாலபாரதி ரொம்ப நல்லவருங்கோ.
நாம எவ்வளவுதான் காலாய்சாலும் கண்டுக்கமாட்டாருங்கோ.

இப்ப பாருங்க நாம் இங்க மாய்ஞ்சி மாய்ஞ்சி காலாய்ச்சுக்கிட்டு இருக்கோம். எதுவுமே நடக்காதா மாதிரி அங்கன கடலை போட்டுகிட்டு இருக்காரு.

நான் கூட அவர பாத்ததில்ல. ஆனாலும் எனக்கு உறுப்பினர் பதவி கொடுத்திருகாரு பாருங்கோ. அதாங்க பெரிய மனசு.

We The People said...

நாடோடி,

//இப்ப பாருங்க நாம் இங்க மாய்ஞ்சி மாய்ஞ்சி காலாய்ச்சுக்கிட்டு இருக்கோம். எதுவுமே நடக்காதா மாதிரி அங்கன கடலை போட்டுகிட்டு இருக்காரு.//

அவர் எப்பயுமே அப்படித்தான் ரொம்ப நல்லவர் :)))))

கடலை அவருக்கு ரொம்ப பிடித்த விஷயம்.

"நான் வறுப்பேன், வறுத்துக்கொண்டே இருப்பேன்" இப்ப நான் போன் பண்ணும்போது கால்வெயிட்ங்க்கு இடையில எனக்கு மெஸேஜ் கொடுத்தாருங்க... பதிவை வெற்றி பெற என்னை தலமை தாங்க சொல்லியிருக்காரு ;)

ரவி said...

நாடோடி அவர்களே...பாலபாரதியை சந்திக்கவேண்டும் எனில் கிழக்கு பதிப்பகம் செல்லவேண்டும்...ஆனால் மாலை நாலு மணிக்குள் போகவேண்டும்...அவர் வேலை முடிந்து சென்றுவிடும் முன் போங்க...போயி....நீங்க "பா.க.ச" என்று ஒரு கோர்ட் வேடு சொல்லுங்க....அவர் அதுக்கு பா.அ.ச என்று சொல்வார்...அப்போ கண்டுபிடிங்க அவர்தான் பாலா என்று..!!!

ஸயீத் said...

தாகம் நெருப்பிற்கு..
துரத்துகிறது மெழுகுவர்த்தியை..
இறுதியில் அணைந்தது நெருப்பு தாகம் தணியாமலே...

பாலா நீங்க கவலைப்படாதீங்க இந்த கவிதை உங்களுக்குத்தான்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

பாலபாரதியின் இன்னொரு முகத்தை அறிமுகம் செய்துவைத்தமைக்கு நன்றி செந்தழல். ரொம்பப் பிடிச்சது இதுதான்!

//கிணற்றுத்தவளைதான்...
நம்பிக்கையிருக்கிறது வாழ்வில்...
நிமிர்ந்தால் தெரியும் வானம்....//

இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் என்பதையும் சேர்த்தே சொன்னா வசதியா இருக்கும்.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

செந்தழல்,

பா.க.ச. பட்டியல்ல என்னையும் சேர்த்துவிட்டிருங்க. கனேடியக் கிளைக்கு அடி போட்டுக்கிட்டு இருக்கேனாக்கும். ;)

நாமக்கல் சிபி said...

ஆஹா.. இவ்வளவு அருமையா எழுதறவரையாங்க எல்லாம் கலாய்ச்சிட்டு இருக்கீங்க??? என்ன கொடுமை சரவணன்?

ஹைக்கூ எல்லாமே அட்டகாசமா இருக்கு. அதை விமர்சனம் செய்யுமளவு ஞானமில்லையென்றாலும் படிச்சவுடனே மனசை தொடுது.

//சமத்துவபுரம்...
கழிவுநீர் சுத்தம் செய்ய..
அதே கருப்பன்...//

இது டாப்...

//குடிநீர் வசதியற்ற
கிராமம்...
உபசரிப்புக்கு "பெப்ஸி"//

//முள்வேலியிட
மனமில்லை...
கிழிபடுமோ காற்று...//

ரொம்ப அருமையா இருக்கு...

பாபாச ஏதாவது இருக்கா? (பாலபாரதி பாராட்டுவோர் சங்கத்தை தாங்க சொன்னேன்) :-)

We The People said...

//நாடோடி அவர்களே...பாலபாரதியை சந்திக்கவேண்டும் எனில் கிழக்கு பதிப்பகம் செல்லவேண்டும்.//

என்ன ரவி மாத்தி சொல்லறீங்க வித்யோலோக் போங்கன்னு கரீட்டா சொல்லுபா!! நீங்கயெல்லாம் பா.க.சவில இருந்து என்ன யூஸ்...

:))))

Anonymous said...

பெரியார தெய்வமா மதிக்குறவரை கிழக்கில எப்படிய்யா சேர்த்தானுவ. அவனுக சரியான களவாணிப்பய கூட்டமாச்சே. கிழக்குக்கும் இவருக்கும் இருக்குற சம்பந்தம் தள்ளிநிக்கச் சொல்லுதய்யா.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//விறகு விற்க...
பேரம் நடந்தது...
மர நிழலில்.....//
**சந்தன மரம் -??

அட போங்க ரவி...
பா.க.ச ல இத்தனை உறுப்பினரா? அடையாள அட்டை எல்லாம் இருக்கா??:-)
அடியேன் பா.அ.ச, தான்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நீங்க "பா.க.ச" என்று ஒரு கோர்ட் வேடு சொல்லுங்க....அவர் அதுக்கு பா.அ.ச என்று சொல்வார்...அப்போ கண்டுபிடிங்க அவர்தான் பாலா என்று..!!! //

இது என்ன கொடுமை ரவி:-)
நன்கு பழகி வளர்ந்த சென்னையில் கூட கோட் வேர்டா?....
ஆரஞ்சு பழத்துக்கு பதினாலு மாடி!
எல்.ஐ.சி கட்டிடத்தை உரிச்சுத் தான் ச்சாப்பிடணும் -ங்கிறது மாதிரி இல்லே இருக்கு! :-)

G Gowtham said...

கம்ப்யூட்டர் தமிழையும் வலைப்பூ உலக அறிமுகத்தையும் எனக்குக் கொடுத்தவர் பாலா!

நானும் ஒரு வலைப்பூ ஆரம்பித்து ஏதோ ஓரளவுக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கான முழுமுதல் காரணம் பாலாவே.

இன்றைக்கும் என் ப்ளாக் இன்ஞினியர் பாலாவே (பா.க.ச. மேட்டர் இல்லிங்க, நிஜம். நம்புங்க).

பல விஷயங்களை நான் பாலாவிடம் கற்றுக்கொண்டிருக்கிறேன். சமீபத்திய உதாரணம்: சென்னைப்பட்டணத்துக்கு நான் அனுப்பிய ஒரு பின்னூட்டம் அதை அனுப்பிய பின்னும் என்னை ரொம்பவே யோசிக்கவைத்தது. போகிறபோக்கில் பாலாவிடம் சொன்னேன். பாலா அதை சின்னதாக ஒரு எடிட் செய்து வெளியிட்டதைப் பார்த்தேன். என் யோசனைக்கான கரெக்ஷன் அது! வியந்தேன்!

பாலாவிடம் இருந்து செல்போனைப் பிடுங்கினால் அவர் எழுதுவதற்கு நிறைய நேரம் கிடைக்கும் என்பது என் கருத்து!
இதைப் பலமுறை பாலாவிடமே சொல்லி இருக்கிறேன்.

இன்னும் பல உயரங்களுக்குப் போகக்கூடிய தகுதியும் திறமையும் கொண்ட பாலா வாழ்க! வளர்க!

G.Ragavan said...

யெஸ்பான்னுதான் நாங்க சொல்வோம். நீங்க என்ன பாலபாரதீன்னு நீட்டி மொழக்குறீங்களே! யெஸ்பாவின் கவிதைத் தொகுப்பு பற்றிச் சொல்லியமைக்கு நன்றி.

அவரை நானும் சந்தித்திருக்கிறேன். நல்ல மனிதர். எங்கூர்ப்பக்கத்துப் பேச்சு. எனக்கு ஊர்ப்பக்கமே போயிட்ட உணர்வு. வந்த சந்தோசத்தை மறச்சுக்கிட்டு நீங்க எந்தூருன்னு கேட்டேன். மக்கா நாம ராமேசொரம்னாரு.

பாரதி தம்பி said...

//நான்
பொன்ஸ்
லக்கி
முத்து தமிழினி
வெட்டிப்பயல்
லொடுக்குப்பாண்டி
தேவ்
இளா
வீ த பீப்பிள்
ஆஸ்திரேலியாவில் இரண்டு அனானி
சிங்கப்பூரில் மூன்று அனானி
குழலி
கோவிக்கண்ணன்
தம்பி//

அண்ணேன்...என்னையும் ஆட்டையில சேர்த்துக்குங்கண்ணே...பா.க.ச. உறுப்பினரானா வான்கோழி பிரியாணியும்,முட்டை பரோட்டாவும் வாங்கித்தருவீங்களா..?

சேதுக்கரசி said...

பா.க.ச. உறுப்பினர் பட்டியலில் ப்ரியனை விட்டுட்டீங்க.. புது உறுப்பினரான என்னையும் லேட்டஸ்ட் உறுப்பினரான அகிலனையும் விட்டுட்டீங்க..

ஆனாலும் உங்க பதிவப் படிச்சதும் பாலாவின் இன்னொரு முகம் தெரியப்போக, இனி பா.அ.ச.-ல சேரலாமான்னு இருக்கேன்... நல்ல பதிவுங்கோ.

நாமக்கல் சிபி said...

அப்போ பா.க.ச வில் நான் இல்லையா?

கோவி.கண்ணன் [GK] said...

//இவன் கிழக்கில் மலர்ந்த சூரியனாச்சே !!!!//

இதுவே ஒரு சின்ன ஹைகூ ...

ராசா நீ தேறிட்ட :)

பொன்ஸ்~~Poorna said...

அய்யா... பாகச பதிவுன்னு நெனைச்சு வந்தா இப்படிக் கவுத்துட்டீங்களே!!

//இவர் நித்தமும் வணங்கும் கடவுள் "தந்தை பெரியார்" //
லக்கி, பெரியாரைக் கடவுள் என்று சொல்லத் தொடங்கினால், பெரியார் மதம் ஆகிக் கொண்டிருக்கிறது என்று ஏற்கனவே புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு அவல். எனக்குத் தெரிந்து பாலபாரதி தினமும் வணங்கும் கடவுள் தற்போதைக்கு அவருடைய கடலை செல் தான் :))) (ஒரு நிமிசம் அது சும்மா இருந்தாக் கூட பாலாபாய் கண்ணுல தண்ணியே வந்துடும் :))) )


//இந்த விஷயத்துக்கு பாலாவே விளக்கம் கொடுப்பார் என்று நினைக்கிறேன்... //
பயங்கர நம்பிக்கை ரவி உங்களுக்கு.. இதுக்குக் கொடுக்க விளக்கம் இருக்கா என்ன? :)) (விளக்கினா கொஞ்சம் உருப்படியான பின்னூட்டமாப் போயிடும். அதனால், அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை :)) )

ரவி,
பாகச உறுப்பினர்களை "ஒரு" பின்னூட்டட்த்திற்குள் அடக்க முடியுமா? நான்கைந்து பதிவு வேண்டாமா அந்த லிஸ்டைக் கொடுக்க?! நாமக்கல் சிபி, சேதுக்கரசி, சிந்தாநதி, ப்ரியன், இட்லிவடை.. இன்னும் இன்னும் உலகெங்கும் எத்தனை பேர் இருக்கிறார்கள் இந்த பட்டியலில் சேர்க்க....

- யெஸ்.பாலபாரதி said...

போட்டு கொடுத்துட்டீயே பொன்ராசு.. பதிவுக்கு நன்றி! குறைகளை களைய முனைகிறேன். பதிவெல்லாம் ஒழுங்காத்தான் வந்திருக்கு, ஆனா.. பின்னூட்டத்துல தான் பின்னி பெடலெடுக்குறீங்கப்பூ.. :-(((

மேலும், ஒரு திருத்தம் நீர் என்னை சந்தித்தது கிழக்கு பதிப்பகத்தில் இல்லை.
வித்லோகா புத்தகக்கடையில்!
இப்போதைக்கு நான் எஸ்ஸூ ஆகிக்கிறேன். பொறவு வந்து எட்டிப்பார்க்கிறேன்.

Pot"tea" kadai said...

//ஆஸ்திரேலியாவில் இரண்டு அனானி//

சிட்னில இருந்து யார்னா ப்ராக்ஸி கொடுக்கராங்களா?!!!

ரவி said...

///
Anonymous said...
பெரியார தெய்வமா மதிக்குறவரை கிழக்கில எப்படிய்யா சேர்த்தானுவ. அவனுக சரியான களவாணிப்பய கூட்டமாச்சே. கிழக்குக்கும் இவருக்கும் இருக்குற சம்பந்தம் தள்ளிநிக்கச் சொல்லுதய்யா.
////

இந்த அனானி பின்னூட்டத்தை வெளியிடக்காரணம் - சோத்துக்கும் கொளுவைக்கும் சம்மந்தப்படுத்தி நிற்கும் சிலரின் வெகுளித்தனத்தை காட்டுகிறது...கொளுவை எந்த கருமமாவது இருக்கட்டும் ? நாளைக்கு ஜெயா டிவியில உனக்கு வேலை குடுத்தா நீ போவமாட்டியா ??

ரவி said...

வலைப்பதிவே திரண்டு வரும்போல இருக்கேன்...இப்போதைக்கு பா.க.ச வை கண்சாலிடேட் செய்யறதுக்கே பத்து நிமிஷம் ஆவும் போலிருக்கே !!!

ரவி said...

////சிட்னில இருந்து யார்னா ப்ராக்ஸி கொடுக்கராங்களா?!!! ////

சிட்னியில இருக்காங்கப்பா...மெல்போர்னிலும் இருக்காங்க...அதான் பொத்தாம்பொதுவா அவுஸ்திரேலியான்னுட்டேன்..

சேதுக்கரசி said...

//எனக்குத் தெரிந்து பாலபாரதி தினமும் வணங்கும் கடவுள் தற்போதைக்கு அவருடைய கடலை செல் தான் :))) (ஒரு நிமிசம் அது சும்மா இருந்தாக் கூட பாலாபாய் கண்ணுல தண்ணியே வந்துடும் :))) )//

இந்தப் புதிரை யாராவது தயை கூர்ந்து விடுவிக்கலாமே? தலை வெடிச்சிடும் போல இருக்கு.

ரவி said...

////மேலும், ஒரு திருத்தம் நீர் என்னை சந்தித்தது கிழக்கு பதிப்பகத்தில் இல்லை.
வித்லோகா புத்தகக்கடையில்!
இப்போதைக்கு நான் எஸ்ஸூ ஆகிக்கிறேன். பொறவு வந்து எட்டிப்பார்க்கிறேன். ////

சரி வித்லோகா புத்தககடை...ராயப்பேட்டை ப்ரிஜுக்கு அடுத்து (பீச்செ நோக்கி போவும்போது) பைலட் தியேட்டர் தாண்டி அடுத்து வர்ர பர்ஸ்ட்டு ரைட்டு...
போதுமா...

ரவி said...

சேதுக்கரசி அவர்களே...இது ஒன்னும் கம்ப சூத்திரம் இல்லை...

போன் சூடாகுமளவுக்கு கடலை வறுத்துக்கொண்டிருப்பார்...அலுவலில் இருந்து வெளியே நாலு மணிக்கு வந்ததும் ஆரம்பிக்கும் இந்த கடலை, எத்தனை மணிக்கு முடியுமோ யாமறியோம்...

கடலைன்னா என்னன்னு விளக்கம் கேட்றபோறீங்க !!! (தெரியுமில்ல ? )

ரவி said...

///
தாகம் நெருப்பிற்கு..
துரத்துகிறது மெழுகுவர்த்தியை..
இறுதியில் அணைந்தது நெருப்பு தாகம் தணியாமலே...
///

கவிதைக்கு நன்றி ஸயீத்...

சேதுக்கரசி said...

//கடலைன்னா என்னன்னு விளக்கம் கேட்றபோறீங்க !!! (தெரியுமில்ல ? )//

அச்சச்சோ இந்த level-ல நினைச்சிட்டீங்க என்னை? :(

ரவி said...

///இதுவே ஒரு சின்ன ஹைகூ ...

ராசா நீ தேறிட்ட :) ///

தலை, நன்றி !!!

ரவி said...

இல்லை சேதுக்கரசி அவர்களே...சமீபமா குழந்தைகள் எல்லாம் வந்து பின்னூட்டம் போடுதுங்க...அதுக்கு தான் கேட்டேன் :))))

ரவி said...

கவுதம் அவர்கள் இவ்வளவு அருமையாக அனுபவ கருத்தை தருவார் என்று எதிர்பார்க்கவில்லை...

// இன்னும் பல உயரங்களுக்குப் போகக்கூடிய தகுதியும் திறமையும் கொண்ட பாலா வாழ்க! வளர்க! //

உங்கள் வாக்கு நிச்சயம் பலிக்கும் தடாலடியாரே !!!!

ரவி said...

///அண்ணேன்...என்னையும் ஆட்டையில சேர்த்துக்குங்கண்ணே...பா.க.ச. உறுப்பினரானா வான்கோழி பிரியாணியும்,முட்டை பரோட்டாவும் வாங்கித்தருவீங்களா..? ////

கண்டிப்பா தருவோம்...

மொத்தமா தருவீங்களா ?

மொத்தமா தருவோம்...

ரவி said...

////இந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் என்பதையும் சேர்த்தே சொன்னா வசதியா இருக்கும். ////

வித்லோகா புத்தக கடையில் பாலா இருக்கிறார்...அங்கே போயி புத்தகம் வாங்குறவங்களில் அவருடைய நன்பர்கள் இருந்தால் அவர்களுக்கு கையெழுத்தை போட்டு ஒன்னு நீட்டுறாரு...பாலாவிடம் தான் கேட்கனும்..இன்னும் எத்தனை மீதி இருக்குன்னு !!!!

ரவி said...

///(விளக்கினா கொஞ்சம் உருப்படியான பின்னூட்டமாப் போயிடும். அதனால், அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை :)) )////

சரியா சொன்னீங்க...உங்களைப்போலவே எனக்கும் ஆதங்கம் தான்...

ரவி said...

////அட போங்க ரவி...
பா.க.ச ல இத்தனை உறுப்பினரா? அடையாள அட்டை எல்லாம் இருக்கா??:-)
அடியேன் பா.அ.ச, தான்! ////

உங்களை சேர்த்து பல நாளாச்சு தலை. விட்டுப்போச்சு..மன்னிக்கனும்...

லொடுக்கு said...

அட இவ்ளோ நேரம் எங்க ஊருக்காரரை பத்தி தான் பேசிக்கிட்டு இருக்கீங்களா? அவர் எங்க முகவைப் புலவருங்கோ!!!

ரவி said...

வாங்க லொடுக்கு....எல்லாம் ஒரு குரூப்பாத்தான்யா இருக்காங்க...

டிபிஆர்.ஜோசப் said...

வாய்யா...என்று சொல்லி தோளில் கைபோட்டு பேசும் மனநிலை எல்லோருக்கும் வந்துவிடாது...உள்ளத்தில் கள்ளமில்லாத வெள்ளந்தி மனிதர்களுக்குத்தான் அது கைவரும்...//

உண்மையான அழகான வரிகள் ரவி.

கவிதைகளைப் போலவே அவரையும் சுருக்கமாக அறிமுகப்படுத்தி.. மொத்தத்தில் அழகான பதிவு..

வாழ்த்துக்கள்..

நானும் கி.ப. சென்றிருக்கிறேன்.. பத்ரியை சந்திப்பதுடன் சரி. அடுத்த முறை செல்லும்போது சந்திக்க வேண்டும்.

ரவி said...

டி.பி.ஆர் அவர்களே...வித்லோகா புத்தக கடைக்கு போய் பாலாவை நீங்கள் பார்த்து பா.க.ச வில் இணைய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.

Anonymous said...

///ஒன்னும் ஒன்னும்
ரெண்டு
நீயும் நானு
ஃபிரெண்டு///

Super Mr.Kuzali.

அரை பிளேடு said...

யெஸ்.பா. கவித கவித..

செந்தயலாரே உங்க பேஜி மூலமா நானும் பா.க.ச. க்கு ஒரு அப்ளிகேஜனை தட்டி வுட்டுக்கறன்...

Pot"tea" kadai said...

பால் அகனாய்
பால் குடித்து
பாவப்பட்ட முகனாய்
கடலை வறுத்து
பார"தீ"யாய் கனல்கக்கும்
பாலாவே நீ
வாழ்க பல்லாண்டு
;-)

அவுசுதிரேலியா கணக்குல மூனா கணக்க ஏத்திக்க ரவி மாமோய்

லக்கிலுக் said...

ஒரு விஷயத்தை வெட்கத்தை விட்டு சொல்லிவிடுகிறேன். இந்த ஹைக்கூ புத்தகத்தை எனக்கு அண்ணன் பாலா அன்பளிப்பாக "ஓசி"யில் தான் கொடுத்தார்.

"எழுது, எதையாவது" என்று எழுதி அவரது கையொப்பம் இட்டுக் கொடுத்தார்.

ஓசியில் புக் வேண்டும் என்பவர்கள் Please rush to Vidloga :-)))))

Pot"tea" kadai said...

லக்கி,
ஒசில கொரியர் சர்வீசும் கெடைக்குமா?

லொடுக்கு said...

என்னது ஆட்டம் ஜவ்வா இழுக்குது! சீக்கிரம் நூறு அடிங்கப்பா!!!

லொடுக்கு said...

இப்போதான் நான் பதிவையே வாசிச்சேன். ஹாய்-கூ சூப்பருங்க. எஸ்பா பாஸ்பா. இந்தக்கவிதையின் உள்குத்து நல்லாருக்கு.
//குடிநீர் வசதியற்ற
கிராமம்...
உபசரிப்புக்கு "பெப்ஸி"//

மதுமிதா said...

நன்றி ரவி. நல்லதொரு பதிவு.

பாவங்க பாலபாரதி
அவருடைய நாவல் வெளியில் வந்த பிறகுதான், இலக்கிய உலகில் புயல் வரும்னு நினைச்சிட்டிருக்கிறப்போ
இப்போ இங்கே வலைப்பதிவில் அவரைப் பாடாப் படுத்தறீங்க

மதுமிதா said...

இது என்ன பா.க.ச

பா.க.ச ஆரம்பிச்சு இத்தனை உறுப்பினர்கள் வேறா?
அதில் ப்ரியன், பொன்ஸ், ஜெயகுமாருமா? என்ன நடக்குது இங்க?

பாவங்க பாலபாரதி

ரவி said...

வாங்க மதுமிதா, புயலை அறிமுகம் செய்யத்தான் இந்த பதிவு...புயல் இன்னும் கொஞ்ச காலத்துக்கு வேலை வெட்டியை பார்த்துக்கிட்டு அமைதியா இருந்தா நல்லது என்பதால் தான் தாளிக்கிறோம் புயலை..

பாலா : நல்லா கிளப்புறாங்கப்பா பீதிய

ரவி said...

பா.க.ச = பாலபாரதியை கலாய்க்கும் சங்கம்...இது தான் இந்த சங்கத்தில் பால பாடம். பால்வாடியில (அங்கன்வாடி) அ.ஆ.இ சொல்லித்தரமாதிரி...

Anonymous said...

அனானி ஆதரவாளர் செந்தழலார் பேரவை உறுப்பினர்கள் எல்லோரும் பா க ச உறுப்பினகளாக கருதப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுகிறேன்.

100 ஆவது பின்னூட்டமாகுமா இது?

அ மு க.,
அடிலைட் கிளை.
செந்தழலார் பேரவை.

ஸயீத் said...

சரி பாலா அங்கே பார் திறஞ்சுவச்சு கூப்பிட்டாரே யாரும் போகலையா? ஒரு வேளை உங்க எல்லாருக்கும் ட்ரீட் கொடுக்க இருக்குமோ என்னவோ?

Anonymous said...

பாலபாரதீஈஈஈஈஈஈஈஈஈ..ஒம்ம பதிவு 100 பின்னூட்டம் ஆகுதோ இல்லையோ, பாருய்யா, ஒம்பேர வெச்சு ஒருத்தன் 100 பின்னூட்டம் வாங்கிட்டான்.

கார்மேகராஜா said...

நூற்றி ஒன்று!

தருமி said...

விஷயமான ஆளுன்னு தெரியும்.. ஆனா இவ்வளவு ஆழ்மான ஆளுன்னு காமிச்சதுக்கு நன்றி..

தருமி said...

செந்தழல் ரவி said...
பா.க.ச = பாலபாரதீயை கலாய்க்கும் சங்கம்..

நான்
பொன்ஸ்
லக்கி
முத்து தமிழினி
வெட்டிப்பயல்
லொடுக்குப்பாண்டி
தேவ்
இளா
வீ த பீப்பிள்
ஆஸ்திரேலியாவில் இரண்டு அனானி
சிங்கப்பூரில் மூன்று அனானி
குழலி
கோவிக்கண்ணன்
தம்பி

என்னங்க இது..? பா.க.ச.த்தின் மதுரைக் கிளைப் பொறுப்பாளர் என்று பாலபாரதியே தன் கைப்பட எழுதிய அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டர் எங்கிட்ட இருக்கு.. எப்படி என் பேரு இல்ல..?

ரவி said...

அட அதானே...விட்டுப்போச்சு மன்னிக்கவும்...இந்த அளவுக்கு வரும் ரெஸ்பான்ஸை பார்க்கும்போது தனிப்பதிவே போடவேண்டும் போலிருக்கு...

Santhosh said...

ஏப்பா கடலை போட்டா தான்பா மூளை நல்லா வேலை செய்யும், கற்பனை பொங்கும் இது கூட தெரியாம என்னப்பா நீங்க. ஒரு மனுசன் நிம்மதியா கடலை கூட போட முடியலை என்னத்த சுதந்திரம் வாங்கி என்னத்த பண்றது :)). என்னவோ போங்கப்பா பாலா நான் இருக்கேன் உங்க கூட நீங்க போயி கடலையை continue பண்ணுங்க :)).

ரவி,
நட்சத்திரம் ஆனதுக்கு வாழ்த்துக்கள்.

சென்ஷி said...

இதற்கு மேலும் கருத்து கூற இவனிடம் ஏதுமில்லாததால் பாகச உறுப்பினர் என்ற தகுதியில் இந்த பின்னூட்டம் இடுகின்றேன். :)


டெல்லி பாகச கிளை செயலாளர்
சென்ஷி

சேதுக்கரசி said...

கவிஞர் பாலபாரதிக்கு வாழ்த்துக்கள்!

பா.க.ச. அமெரிக்கா கிளை உறுப்பினர்களை உட்டுப்போட்டீங்களே!

ஆனா இந்தப் பதிவுனால பா.க.ச.வுக்கு நட்டம் தான். ஏன்னா KRS மாதிரி சில பேர் பா.அ.ச.-ல சேர்ந்து அதோட பலத்தை அதிகரிக்கிறாங்களே :(

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....