தென் பெண்ணையின் செல்(லொள்)வன்...

இந்த நிகழ்ச்சி நடந்து சுமார் பதினெட்டு ஆண்டுகளுக்கு அப்புறம் கல்கியின் அமரகாவியம் பொன்னியின் செல்வன் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது...அந்த இலக்கியத்தில் உள்ள காரெக்டர் காவிரி ஆற்றின் சுழலில் மாட்டி, தப்பிப்பதை காவிரித்தாய் கரை சேர்ப்பதாக அருமையாக எழுதி இருப்பார் கல்கியார்...(ஒரு புள்ளியையும் எழுத்தையும் மாத்திப்போட்டா..சும்மா டைம் பாஸ் மச்சி !!!)

நான் இவ்வளவு நாள் லொள்ளு செய்ய இந்த சம்பவமும் ஒரு காரணம்..ஆமாம் பிறகு...இப்போ செய்யுற இந்த லொள்ளு எல்லாம் செய்ய நான் இருந்திருக்க மாட்டேனே...விஷயத்தை படிங்க... கொஞ்சம் லைட்டா மத்த விஷயங்களை போட்டுட்டு கடைசியா மேட்டருக்கு வரேன்...

முதல் படகு முயற்ச்சி

இது வேறு சம்பவம்...ஆனால் முந்தின சம்பவத்தோடு தொடர்புகொண்டது...வீடு கட்ட நிலம் பார்ப்பதற்க்காக ஒரு காரில் திருக்கோவிலூருக்கு பக்கத்தில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் என் குடும்பமும் என் மாமா குடும்பமும் சென்றிருந்தோம்....பெரியவர்கள் எல்லாம் நிலம் பார்த்துக்கொண்டிருக்க, சில்வண்டுகளாகிய நாங்கள் ( அத்தை பிள்ளைகள் இரண்டுபேர், நான், அண்ணன்) எல்லாரும் பக்கத்தில் விளையாட ஓடினோம்...பெற்றோர் நின்றிருந்த இடத்தில் இருந்து வெகுதூரத்தில் செங்கல் சூளை வைக்க மண் அள்ளிய குழியில் தளும்ப தளும்ப தண்ணீர்...அருகிலே கீழே விழுந்த ஒரு பனைமரம்...அதை பார்த்தவுடன் பனை மரத்தை வைத்து படகு விடலாம் என்று ஒரு திட்டம்...மற்றவர்களை காத்திருக்க சொல்லி, நான் மட்டும் இறங்கினேன்...முதலில் பனைமரத்தை தண்ணீரில் தள்ளி அதில் ஏறி அமர்ந்து ஓட்டுவது ப்ளான்...

தண்ணீரில் தள்ளியதும் பாதி முழுகிய நிலையில் இருந்த பனை மரத்தில் ஏறி நான் அமர சற்று தூரம் சென்றதும் படகு நிலை தடுமாறியது...சற்று சமாளிக்க முயன்றேன்...ஆழம் எவ்வளவு என்றே தெரியவில்லை..திடீரென படகு நிலை தடுமாறி தலைகீழாக கவிழ படகுக்கு அடியில் நீச்சல் தெரியாத நான்...பனைமரத்தை பிடித்து மேலேற முயல, அது சுழன்று சுழன்று பிடிகொடுக்காமல் கீழே வீழ்த்தியது...

மேலே இருந்த மற்ற பிள்ளைகள் அலற, சூளை வேலை செய்துகொண்டிருந்த கிழவன் ஓடி வந்தார்...எனக்கு எதுவும் நினைவில்லை...மயக்கம் தெளிந்து ஈர உடையுடன் காரில் ஏற முயன்ற என்னை காரில் ஏறாதே என்று கோபமாக அப்பா சொல்ல..நான் அழ......என்ன கொசுவத்தி சுத்துற எபக்ட் கிடைக்குதா ?

உப்புமாவுக்காக கொலைவெறி தாக்குதல்

பள்ளி முடிந்து வந்தவுடன் அம்மாவுக்கு ஒரு பழக்கம்...ஏதாவது சாப்பிட கொடுப்பாங்க...வீட்டில் இருவர் இருப்பதால் (நான் மற்றும் அண்ணன்) - பாப்பா பிறக்காத நேரம்...இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தின்பது வழக்கம்..அன்றொரு நாள், பள்ளியில் இருந்து வந்தேன்...உப்புமாவை என்னுடைய பிரதர் சாப்பிட்டுக்கொண்டிருதான்...அம்மா எனக்கு ? என்றேன்..அவன் சாப்பிட்டு மீதி தருவான், என்று சொல்ல...நான் அப்படியே வெளியே ஏதோ விஷயமாக சென்றேன்....திரும்பி வந்து பார்த்தால் உப்புமா வாணல் காலி...

அம்மாவிடம் கேட்டால் அவன் சாப்பிட்டுட்டானே...உனக்கு கொடுக்கல்லியா...என்றார்...கடுங்கோபம் பிரதர் மீது..உடனே வெளியே சென்று கொட்டி வைத்திருந்த கல் குவியலில் இருந்து கொத்தாக பாக்கெட்டில் கற்களை நிரப்பி, தொலைவில் விளையாடிக்கொண்டிருந்த அண்ணனின் மேல் வீச...அவன் ஓட...நான் துரத்தி வீச....தண்ணீர் இல்லாத காலி தென்பெண்ணை ஆற்றில் அவன் இறங்கி ஓட...நான் மணலில் இறங்கி துரத்த...கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடி...சோர்ந்து...பிறகு இரவில் வீடு திரும்ப...

அதற்க்குள் வீடு திரும்பிய பிரதர் எல்லா மேட்டரையும் அப்பாவிடம் கக்கிவிட...உப்புமாவுக்கு பதில் நல்ல மாத்து கிடைத்தது...எப்போது பென்ணையாற்றை நினைத்தாலும் இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வந்து க்ளுக் என சிரிப்பது வழக்கமாகிவிட்டது...

மனதுக்கினிய தூண்டில் சிகரெட்டே

கல்லூரி முடிந்தவுடன் வீட்டில் வெட்டியாக ஒருவருடம் சுற்றியது என்னுடைய சிறப்பான சாதனைகளில் ஒன்று...காரணம் பாடத்தில் நான் வைத்த அரியர்...மேற்படிப்புக்கு போகமுடியாத நிலை...வேறு வழியில்லை...தென்பெண்ணை ஆற்றில் புகைப்பிடித்துக்கொண்டு சுற்றுவதை தவிர வேறெதுவும் அறியோம் யாம்...தூண்டில் போட்டு மீன் பிடித்தல், துப்பாக்கி எடுத்துக்கொண்டு வேட்டைக்கு போவது, ஆற்றில் குளிப்பது, மொட்டை மாடியில் படுத்து உறங்கி, சூரியன் முதுகை சுடும்போது கைப்பிடி சுவர் நிழலில் ஒதுங்கி, வேறு வழியில்லை, உச்சத்தில் சூரியன் முதுகை சுட, இனி தூங்க முடியாது என்ற நிலை வரும்போது, கீழே வந்து அறையில் படுத்து உறங்குவது, இது தவிர அறிந்ததும் அறியாததும் ஏதுமில்லை...1999 ஆம் ஆண்டு முடிந்து 2000 ஆண்டு பிறந்ததும் எதிர்காலத்தை பற்றிய பயத்தில் கெட்ட பழக்கங்களை விட்டுவிடுவது என்று முடிவு செய்து, முதலில் சிகரெட் பழக்கத்தை விடுவது என்று உறுதி எடுத்துக்கொண்டேன்...

உறுதியென்ன...விட்டே விட்டேன்...பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து ஒரு வாரம் விடுமுறையில் வீட்டுக்கு போனபோது, எங்கும் மழை வெள்ளமாய் இருந்தது...காடு கரையெல்லாம் தண்ணீர் நிரம்பி வழிந்தது...எங்கள் நிலத்தில் நெற்பயிருக்கு மேலே ஒரு ஆள் அளவுக்கு தண்னீர் போவதாக பணியாளர் வந்து தகவல் தெரிவித்தார்...எங்கெங்கு காணினும் ஏரிகள் உடைப்பெடுத்து வெள்ளக்காடு...

மழை விட்டு வெள்ளம் வற்றி ஒரு நாள் ஆனது...சிறுவர்கள் ஒரு அருமையான விஷயத்தை அறிவித்தார்கள்...அதாவது ஏரியில் இருந்து தண்ணீர் வழிந்தோடியபோது, அதில் இருந்த மீன்கள் அடித்துவந்து அருகாமையில் இருந்த கிணத்தில் ஏறிவிட்டதாகவும், (அதாவது இறங்கி), அதில் தூண்டில் போட்டால் ஏராளமான மீன்கள் கிடைப்பதாகவும்...

களத்தில் இறங்கினோம்...ஐடி எஞ்சினீயர் என்பதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ( நாம எப்போ அதை பார்த்திருக்கோம்), கைலி சட்டையோட தூண்டில் போட கிளம்பியாச்சு...அங்கே போனால் வட்டமான ஒரு கிணறு..சுற்றிலும் மரங்கள்...அது கைவிடப்பட்ட கிணறு என்பதை அதன் உடைந்த சுற்றுச்சுவர் உணர்த்தியது...ஏற்கனவே பயல்கள் தூண்டிலில் அமர்ந்து கலக்க ஆரம்பித்திருந்தார்கள்....நானும் அமர்ந்தேன்....ஒரு மணிநேரத்தில் பை முழுக்க மீன்கள்...அத்தை மகன் அருகில் வந்து உட்கார்ந்தான்....மெதுவாக ஒரு சிகரெட் பற்றவைத்தான்...என்ன சிகரெட்...என்றேன்...பில்டர்...என்றான்...அது நான் சில பல ஆண்டுகளுக்கு முன் மனதுக்கினிமையாக புகைத்துக்கொண்டிருந்த அதே ப்ராண்ட்...மெல்ல நான் ஒன்றை எடுத்து பற்றவைத்தேன்....

தலைப்பை ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்க...

பென்னைத்தாய்

கடைசியா விஷயத்துக்கும் வந்தாச்சு...ப்ளஸ் 2 பரீச்சை முடிச்சு விட்டில் இருந்த காலகட்டம்..அருமையா மழை பேஞ்சு காடுகரை எல்லாம் வெள்ளமாக கடக்கு...சாத்தனூர் அணை நிரம்பி விட்டதால் பென்ணை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடுவதாக பேப்பரில் காலையில் படித்தேன்...ஏற்கனவே ஆற்றில் அளவுக்கு மழைத்தண்ணீர் ஓடிக்கொண்டுதான் இருந்தது..ஆனால் ஆறு நிரம்ப ஓடவில்லை...கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள ஆற்றில் சத்தனூர் டேம் திறந்தால் இரு கரையும் நிரம்ப ஓடிவரும் தண்ணீரை பார்க்க அருமையாக இருக்கும்..அதில் இறங்கி குளிப்பது அல்லது நீந்துவது மிகவும் பிடித்தமான விளையாட்டு எங்களுக்கு...

நான் அண்ணன், அத்தை பையன் ப்ரபா மூவரும் ஆற்றில் ஆட்டம்போட கிளம்பிவிட்டோம்...அண்ணனும் ப்ரபாவும் சற்று முன்பே கிளம்பிவிட்டிருந்தார்கள்...நான் பின்னாலேயே போனேன்...ஆற்றில் இரு கரையும் நிரம்பி கடல்போல அதிவேகத்துடன் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது...

எவ்ளோ ஆழம் இருக்கும் என்று பக்கத்தில் நின்றிருந்த பயலை கேட்டேன்...என்ன ஒரு ரெண்டாள் ஆழம் (3 மீட்டர்) இருக்கும் என்று சொல்கிறான்...கண்கள் என் அண்ணனையும் ப்ரபாவையும் தேடுது...ஆனால் அவன்களை ஆளை கானோம்...வழக்கமாக குளிக்கும் முருகம்பாறையில் பயலுக இல்லை...மெல்லமாக ட்ரெஸை பக்கத்தில் இருந்த ஆலமரத்துக்கடியில் நாங்கள் வழக்கமாக வைக்கும் இடத்தில் கழட்டி வெச்சுட்டு நான் மட்டும் இறங்குகிறேன்...ஏற்க்கனவே இதுபோல புரண்டு வரும் வெள்ளத்தில் மற்ற பசங்களோட நீந்தி எதிர்நீச்சல் விளையாட்டெல்லாம் விளையாடியிருந்ததால் பயம் ஏதும் இல்லை...

கரைக்கு கொஞ்சம் அருகில் இருந்த ஒரு பாறையை நீந்தி போய் பிடிச்சிக்கலாம்...அப்போதான் பசங்க எங்க குளிக்கிறானுங்க என்று தெரியும் என்று சற்றே நீந்தி போய் பாறைக்கருகில் போவதுக்கு முயற்சி செய்ய, காலுக்கடியில் பத்து பேர் பிடித்து இழுப்பது போல் ஒரு உணர்வு...பாறைக்கு போகும் முடிவை கைவிட்டு திரும்ப கரைக்கே வரலாம் என்றால் அதுக்கும் பாறை, நான் ஆற்றில் இறங்கிய இடம் எல்லாம் கடந்து தண்ணீரில் போய்க்கொண்டிருக்கேன்..

எதிர்த்து நீந்த முயற்சி செய்து தோல்விதான்...கைகள் சோர்ந்து போனது...நுரையோடு புரண்டு வரும் தண்ணீர் முகத்தில் அறைகிறது...கரை தூரம் தூரம் தூரம் போய்க்கொண்டு இருக்கிறது...கொஞ்ச நேரத்தில் தண்ணீர் கிட்டத்தட்ட ஆற்றுக்கு நடுவில் இழுத்துவந்துவிட்டது....நான் ஆற்றில் இறங்கிய இடம், ஆலமரம், முருகன் பாறை எதுவும் கண்ணுக்கு தெரியலை...கண்கள் சற்றே இருட்டிக்கொண்டு வருது...எதிர்த்து நீச்சல் அடிக்க முடியலை...அட்லீஸ்ட் தண்ணிர் போற வழியிலாவது நீந்துவோம் என்றால் கால்கள் மணலில் புதைவதும் நான் அதை இழுப்பதுமாக ஒரு ஜீவ மரண போராட்டம்...

சரி ஆனது ஆகிட்டது, என்று ஒரு மாதிரி க்ராஸாக நீச்சல் அடிக்க முயற்சி செய்தால் கொஞ்சம் தப்பிக்க முடியும் என்று நினைத்து அப்படியே செயல்படுத்த, கொஞ்ச நேரத்தில் எதிர் கரைக்கு அருகில், நான் ஆற்றில் இறங்கிய இடத்தில் இருந்து ஒரு இரண்டு கிலோமீட்டர், ஆனால் எதிர்கரைக்கு நெருக்கமாக இருக்கிறேன்...ஏதோ இனம்புரியாத மன உறுதி...சற்றே விரைவாக நீந்தி, நெருங்கி கரையை ஒட்டி வளர்ந்திருந்த ஒரு முள் மரத்தின் வேரை பிடித்தேன்...

கிட்டத்தட்ட மயங்கும் நிலை...உடம்பெல்லாம் வலி ரவுண்டு கட்டி அடிக்க...கரையில் ஏறினால்...உடம்பில் ட்ரெஸ் என்றொரு விஷயம் இல்லாதது தெரியுது...வேற வழி...ஏதோ ஒரு கொடியில் தொங்கிய ஒரு துண்டை கட்டிக்கொண்டு பாலத்தின் வழியாக நடந்து நான் ட்ரெஸ் வைத்த இடம் வந்தால்...அதுக்குள்ள ட்ரெஸ்ஸை எவனோ லவட்டிக்கிட்டு போயிருந்தான்...அப்படியே வீட்டுக்கு வந்து சேர்ந்து, யாரும் பார்க்கும் முன் தோட்டத்து வழியாக அறைக்குள் புகுந்து படுக்கையில் விழுந்தவன் தான்...

இது தான் பெண்ணைத்தாய் என்னை காப்பாற்றி கரைசேர்த்த கதை !!!

இப்போ சொல்லுங்க...லொள்ளுக்கும் எகத்தாளத்துக்கும் காரணம் தெரிஞ்சுருச்சில்லல...

Comments

டெஸ்ட். ( சோதனை)
Anonymous said…
its a very nice post ravi. keep posting da.
ரவி said…
நன்றி இளமை !!!!
ரவி said…
கார்மேகராஜா...பதிவை படிங்க முதல்ல...
///கார்மேகராஜா...பதிவை படிங்க முதல்ல...///

படிச்சுட்டா போச்சு
///இது தான் பெண்ணைத்தாய் என்னை காப்பாற்றி கரைசேர்த்த கதை !!! ////

ரவியண்ணே கலக்கிபுட்டீக!

வீட்டுல வந்து துணி மாத்துனீகளா இல்லையா?

ஒரு சந்தேகந்தே!
ஸ்டார் வீக்கு வந்தாலும் வந்தது. பொளந்து கட்டுறீங்க குங்குமத்தாரே!
பூங்காவுல ஒரு இடம் உங்களுக்காக ரிசர்வ் பண்ணி வச்சிருக்கேன்.
SP.VR. SUBBIAH said…
பொன்னியின் செல்வனில் குந்தவை தேவி வருவார்

தென் பென்னை செல்வனில் எந்த தேவி வருகிறார் என்று பார்க்க அடித்துப் பிடித்துக் கொண்டு பதிவிற்குள் வந்தேன்.

ஒரு தேவியையும் கானவில்லையே மிஸ்டர் ரவி.?

அக்னி தேவி மட்டும்தான் இருக்கிறாள் (அதுவும் ஐந்து வருடஙகள் கழித்து நீங்கள் குடித்த அந்த சிகரெட்டின் முனையில்) :- )))))))))))

SP.VR.சுப்பையா
பெண்ணை ஆற்றை பற்றி சொல்லனும்ன்னா சொல்லிட்டே போகலாம். ரொம்ப நல்லாவே சொல்லி இருக்கீங்க.

என்னவோ போங்க, உங்கள் அனுபவத்தை சொல்லி எனக்குள்ளே மலரும் நினைவுகளை கிளப்பி விட்டுடீங்க.
Anonymous said…
"பொன்னியின் செல்வன் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது...அந்த இலக்கியத்தில்"
பொன்னியின் செல்வன் இலக்கியமா? சுய நினைவோடதான் இத எழுதுனீங்களா?
ரவி said…
நன்றி லக்கி...
கதிர் said…
என் பங்குக்கு நானும் கொஞ்சம் கொசுவத்தி சுத்திக்கிறே. :))

பெண்ணையாத்துல ஒரு முறைதான் விழுந்தேன். ஆனா சித்தலிங்கமடம் வாய்க்கால்ல தினமும் குளிப்பேன்.
திருக்கோவிலூர் ஏரியில என்னோட அத்தை பசங்களோட குளிக்க போன போது பிஸ்து காமிக்கிரேன்னு சொல்லிட்டு ஒரு பாறையிலருந்து பல்டி அடிச்சி இன்னோரு பாறையில என்னோட மண்டை தெறிச்சி டேனிஷ் மிஷன் ஆஸ்பத்திரிலதான் தையல் போட்டாங்க!
ரவி said…
பூங்கவில துண்டு போட்டா படுக்கலாம்...இடம்போட்டா படிக்கலாம் :)))
வாழ்த்துகள் செந்தழல். ரொம்பவும் பிடித்திருந்தது. ரசித்துப் படித்தேன்.
//அமரகாவியம் பொன்னியின் செல்வன் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது...அந்த இலக்கியத்தில்...//

பாத்து ரவி, இலக்கியவாதிங்க யாராவது பார்த்திரப்போறாங்க.

//அக்னி தேவி மட்டும்தான் இருக்கிறாள் (அதுவும் ஐந்து வருடஙகள் கழித்து நீங்கள் குடித்த அந்த சிகரெட்டின் முனையில்)//

இப்பத்தான் முதன்முதலா கேள்விப்படுறேன் இந்த டெர்மை, ஏனென்றால், பெண்களை எப்பொழுதும் அமைதியான ஒன்றுடன் தான் ஒப்புமைப்படுத்துவது வழக்கம். அக்னி எப்பொழுதும் கொழுந்துவிட்டு எரிவதால் அக்னி எப்படி தேவியானது என்று தெரியவில்லை.

ஒருவேளை நீங்கள் தேவியைத் தேடித்தேடிப் பார்த்து கிடைக்காமல் தேவனை தேவியாக்கிட்டீங்களோ.
ரவி said…
நன்றி சபாபதி சரவணன்...
குமுதத்தில் தொடரா வந்துச்சா?

இந்த விஷயம் கல்கிக்கு தெரியுமா?
ரவி said…
கொட்டாங்கச்சி...

பொண்ணியின் செல்வன் இலக்கியம் இல்லையா ? நீங்கள் அதை படித்ததுண்டா ? (முழுமையாக)....

நான் படித்து ரசித்தது புத்தகத்தில்...

என் மனதுக்கு அது ஒரு இனிமையான புத்தகம்...யாராவது பொன்னியின் செல்வன் இலக்கியமா என்று பதிவு இடுங்களேன்...அங்கே வெச்சுக்குவம் நம்ம ஆட்டத்தை...
ரவி said…
///பாத்து ரவி, இலக்கியவாதிங்க யாராவது பார்த்திரப்போறாங்க. ///

அதுதான் அடுத்த பதிவை ரிலீஸ் செய்து தப்பிச்சிக்கிட்டேன் மோகன்....:)))
Anonymous said…
படிக்காம கருத்துசொல்ல நான் இன்ன இலக்கியவியாதியா?
பொன்னியின் செல்வன் இலக்கியம் என்றால் சாண்டில்யன், பட்டுக்கோட்டை பிராபகர் எழுதியதெல்லாம் இலக்கியம்தான்.
கிராமத்து அனுபவங்கள் எப்போதுமே நினைக்க இனிமையானவை.நல்ல பதிவு!

பில்டர் இப்பவும் புகையுதா இல்லையான்னு சொல்லவே இல்லையே!
Unknown said…
கொசுவர்த்தி ரொம்பதான் சுத்திட்டீங்க போங்க... எனக்கு என்னோட கதையெல்லாம் ஞாபகம் வந்துடுச்சு :))
ஜோ/Joe said…
செந்தழல்,
கலக்கல்.மிகவும் ரசித்தேன்.
ரவி!
நீங்க ஆத்தில கட்டியதை நழுவ விட்டுள்ளீர்கள்; நான் இதேபோல் குளத்தில நழுவவிட்டு தவித்தேன்.
முசுப்பாத்திதான்...
யோகன் பாரிஸ்
முதலில் விண்மீன் வாழ்த்துக்கள் ரவி!
இப்படிப் பதிவு மழை கொட்டுகிறதே! ஒரு பதிவில் பின்னூட்டி வந்தால் அடுத்த பதிவு ரெடியாக இருக்கு! என்னத்தைச் சொல்ல:-))))

தென் பெண்ணையின் செல்வா(லொள்வா)!
பனை மரத்தில் கப்பலோட்டிய தமிழா!
உப்புமா போராட்டத் தியாகியே!
புகை என்னும் பகையை ஓட விரட்டிய மறமே!
- இப்படியெல்லாம் கவி பாடிக் களித்திருங்கள் ஸ்டார் வீக்கில்!!:-)
பட்டணத்துலயே பொறந்து வளர்ந்த எனக்கு இப்படியெல்லாம் அனுபவங்கள் ஏற்படல ரவி..

அந்த கோணத்துல ஒங்க கொசுவர்த்தி சுருள்கள் சுவாரஸ்யமா இருந்தது..
Unknown said…
ravi, join ponniyin selvan yahoo group. You will get lots of info and literary "sarchai" :-) nice posting

Popular Posts