Friday, December 01, 2006

நான் சந்தித்த அருமையான வலைப்பதிவர்கள்

வலைபதிய ஆரம்பித்து ஆறு மாதத்துக்கு மேல் ஆகிறது...வந்த புதிதில் அப்படி இப்படி வலைப்பூக்களை படித்து நேரத்தை கழித்துக்கொண்டிருந்த எனக்கு, சொந்தமாக ஒரு பதிவு ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது..வலைப்பூ போண்டா சந்திப்புகள் பற்றி அவ்வப்போது வரும் பதிவுகளை படித்துக்கொண்டிருந்த காலத்தில் பதிவர்கள் சிலருடன் மின்மடல் தொடர்பும் இருந்தது...அப்படி இப்படி என பல பதிவர்களை இந்த ஆறுமாதத்தில் சந்தித்தேன்...இன்னும் பலரை சந்திக்க வேண்டும் என்று ஆவல்...இந்த பதிவில் நான் சந்தித்த வலைப்பதிவர்கள் பற்றியும், நான் அவர்களுக்கு கொடுத்த தொல்லைகள் பற்றியும் எழுத ஆசை..(அதான் ஆரம்பிச்சுட்டயே, எழுதி தொலைக்க வேண்டியது தானே ? - மிஸ்டர் மனசாட்சி)

கானா பிரபா

பெங்களூருக்கு அலுவலக வேலையாக வந்தவர் லீலா பேலஸ் ஹோட்டலில் தங்கி இருக்கிறார் என்று மின் அஞ்சல் மூலமாக அறிந்தேன்..அவர் மொபைல் வேலைசெய்யாததால் லேண்ட் லைனில் பிடித்தேன்..உங்களை பார்க்க வருகிறேன் என்று சொன்னதும் மிகவும் சந்தோஷமாக எதிர்பார்த்திருந்தார்...நானும் ஸாஸ்கன் நிறுவனத்தில் டீம் லீடராக இருக்கும் - இப்போது லண்டனில் குப்பை கொட்டும் தலை ஆதியும் சென்று சந்தித்தோம்...உலாத்தல் எழுதும் உவரா இவர் என்று வெள்ளமென மகிழ்ச்சி...மாதவன் மாதிரி பளபளவென இருந்தார்...கானா பிரபாவின் தாயகம் யாழ் என்றதும் அதுவரை வலைபதிவு பற்றி பரிச்சயமில்லாத ஆதி அவரை கேள்விகளால் துளைத்துவிட்டார்...அவரது ஊர் அனுபவங்கள், ரேடியோ அனுபவங்கள் அனனத்துக்கும் மென்மையான சிரிப்புடன் பதில் சொல்லிய அவரது அமைதி மிகவும் கவர்ந்தது...

ஹோட்டல் ரிசப்ஷனில் தீப்பெட்டி வாங்கி ஒரு தம் போட்டேன்...

எங்கே போகலாம் என்று கேட்டதற்க்கு ஆதியே ஒரு ஹோட்டல் சொன்னார்...அங்கு சென்று ஒரு வெட்டு வெட்டிவிட்டு பில் வந்தவுடன் அதிரடியாக அதை கைப்பற்றினார் கானா பிரபா...பிறகு பல விஷயங்களை பேசிக்கொண்டே அவர் காரில் திரும்பினோம்...

வலைப்பதிவு இது போன்ற நட்புக்கு வழிவகுக்குமா என்ற ஆச்சர்யத்துடன் வீடு திரும்பினேன்...சமீபத்தில் "என் இனிய மாம்பழமே" என்று அவர் எழுதிய அருமையான பதிவை பார்த்தவுடன் அட நம்மாளு என்று ஒரு நெருக்கமான தோழமை மனதில் தோன்றியது...

மங்கை

நோய்டா செல்வதற்க்கு முன்பே மின்மடலில் தெரிவித்துவிட்டேன்...அதற்க்கு மிக சமீபத்தில் தான் அவரது மின் மடல் தெரிந்து அவரிடம் சில விஷயங்கள் பேசியிருப்பேன்...திடீர் என்று அவரது மொபைல் எண் எடுத்து பேசி நான் வருகிறேன் என்று சொன்னவுடன் மிக மகிழ்ச்சியுடன் வரவேற்றார்...

நான் தங்கி இருந்ததோ டெல்லி ஜி.கே மார்க்...எங்கள் பாக்டரி மற்றும் அலுவலகமோ கிரேட்டர் நோய்டா தாண்டி - கிட்டத்தட்ட 80 கி.மீ..என்னுடைய பஞ்சாபி ட்ரைவர் ஒரு மங்குனி அமைச்சர் என்பதை கொடுமையாக நிரூபித்தார்...80 ஆவது செக்டார் என்று கூறியதை 18 என்று அரைகுறையாக புரிந்துகொண்டு உத்திரப்பிரதேசத்தினை சுற்றிக்காட்டினார்...காலையில் விமானத்தில் வந்து பாக்டரியில் சுற்றி பார்த்துவிட்டு - லேப்டாப்பை கீழே போட்டுடைத்து - சில பல வேலைகளை செய்து டயர்டாகி ( மொத்தத்தில் நொந்து நூடுல்ஸாகி ) இருந்த என்னை மேலும் கொடுமைசெய்ய துணிந்தார் நமது அமரீந்தர் சிங்..

ஒரு வழியாக மங்கையின் இந்தி அறிவை கொண்டு (ட்ரைவருக்கு பஞ்சாபிதான் தெரியுது) போய் சேர்ந்த போது மங்கை அவர்களின் கணவர் அவர்களின் ப்ளார் வாசலில் நின்று வரவேற்றார்...இவர் எளிமையின் சிகரம்..மிக மென்மையான மனிதர்....ஒரு டாகி அவங்க வீட்ல இருந்ததா நியாபகம்...இவர் நல்லா கோழி எல்லாம் பிடிப்பார் என்று சிறப்பாக அறிமுகம் செய்தாங்க...சப்பாத்தி + பன்னீர் பட்டர் மசாலா மாதிரி ஒன்றை செய்து (!!) தந்தார்கள்...அவங்க பொண்ணு கேம்ஸ் விளையாடிக்கொண்டே இருப்பதில் ஒரு கவலை அவங்களுக்கு.....மற்ற பொது விஷயங்களை பேசிவிட்டு ( வலைப்பதிவு பற்றி எதுவும் பேசாமல்) அலுவலகம் திரும்பியவுடன் பல கேம்கள் கொண்ட ஒரு பைலை அவங்க மெயில் முகவரிக்கு அனுப்பி மேலும் பிரச்சினையை அதிகப்படுத்தினேன் :))

இவங்களோட ஓவர் கோயம்புத்தூர் ஊர்ப்பாசம் தான் இன்னும் குழப்பமாவே இருக்கு...எப்போ பார்த்தாலும் கிரேட் கோவை என்றே சொல்லிக்கிட்டிருப்பாங்க...

லக்கியார்

வலைப்பூ சுனாமி, வலைப்பூ சுந்தர ராமசாமி ( பொறவு, தான் சுஜாதாவும் இல்லை, பாலகுமாரனும் இல்லைங்கறார்), வலைப்பூ சுந்தர ராமசாமி (உபயம் பொன்ஸ்) லக்கியாரை சந்த்திதது இரண்டு மாதம் முன்பு என்று நினைக்கிறேன்...வலைப்பூவில் பலகாலமாக கும்மி அடித்துவிட்டு வேறு வழியே இல்லை என்று மொக்கையான ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு சென்னைக்கு கிளம்பியாச்சு...தம் போடும் இடத்தில் வேளச்சேரி விஜய நகரை நோக்கி ஓடும் சாக்கடை இருந்தாலும் சில பல நேரத்துக்கு கும்மி அடிக்க முடிந்தது...மொதல்ல தலைமுடியை நீட்டா வெட்டுங்க என்று ஒரு பயங்கரமான அட்வைஸ் கொடுத்துக்கொண்டே சில பல விஷயங்களை பேசினோம்...அதன் பிறகு பல முறை சந்தித்தாகி விட்டது...முத்து தமிழினி வீட்டில் ஒருமுறை, போட்டியில் வென்றவருக்கு காந்தி கடிகாரத்தை அளிக்க ஒரு முறை, ப்ரவுஸிங் செண்டரில் ஒருமுறை என்று...ஆனாலும் முதல் சந்திப்பை நினைவுகூற இந்த பதிவு...

தம் கடையில் கிங்ஸ் இல்லை என்ற போதும் வில்ஸ் பரவாயில்லை என்று கூறும் எளிமையின் சிகரம்...ஒரு திரைப்படத்தில் காருடன் பேசும் ரஜினி போல வண்டி கூட பேசுவார் போல...எதிர் கருத்துடைய வைகோவையும் வாருங்கள் வைகோ என்றழைக்கும் உள்ளம்....தேன்கூட்டில் அப்பாவி அடிமைகளுக்கு என்றெழுதி முதல் பரிசை தட்டிச்செல்லும் திறமை...இனிமேலயாவது எல்லாருக்கும் நல்லவனா இருக்கலாமே என்று எண்ணும் மனோபாவம்...எல்லாருக்கும் வாராதுப்பே...!!!

முத்து (தமிழினி)

லட்சோப லட்சம் ரசிகர்களுக்கு ஒரு மாதம் நிம்மதியை கொடுத்துவிட்டு விடுமுறையில் சென்றிருக்கும் முத்து தமிழினியை சென்ற மாதம் சந்தித்தேன்...அதே சப்பையான காரணத்துக்காக சென்னைக்கு மீண்டும் சென்ற போது, வலைப்பூ சுனாமியாரை அழைத்தேன்...முத்து சென்னையில் தான் இருக்காராம், வாங்க போலாம் என்று...அவரோ, கவிஜர் பாலாபாய் ஊரில் தான் இருப்பதாகவும், அவரையும் தூக்கி போட்டுக்கொண்டு வருவதாகவும் சொன்னார்...கடையில் பாலாபாய் இல்லாமல் தனியாக வந்தார்...பாலா எங்கேயோ போனை கையில் வைத்துக்கொண்டு நிற்பதாகவும், இன்னும் ஒரு மணி நேரத்துக்கு சாரை கிளப்புவது கடினம் (பா.க.ச) என்பது தெரிந்தது தான் மட்டும் வந்ததாக தெரிவித்தார்...

கொடுமையிலும் கொடுமையாக நான் சென்ற பைக் கிக்கர் நான் உதைத்த உதையில் கழன்று ஒடி விட, ஹீரோ ஹோண்டாவை தள்ளி ஸ்டார்ட் செய்ய வேண்டிய கட்டாயத்தில்...இந்த கொடுமையான சமயத்தில் முத்து வீட்டை தேடி கண்டறிந்து அங்கே சென்றால் யாரையோ வைத்து மண்டகப்படி நடத்திக்கொண்டிருந்தார்..நான் சென்றதால் அவர் தப்பினார்...(முன்னாள் வங்கி ஊழியர்)...

பிறகு சுனாமியார் வந்து சேர்ந்ததும், இது யார், அது யார் என்று வழக்கமான பதிவர் சந்திப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது...ஆறு மணிக்கு காரை கிளப்பினால் தான் கொடுமையான ட்ராவல்ஸ் / லாரி ட்ராபிக்கில் இருந்து தப்ப முடியும் என்பதால் 20 நிமிடம் கூட நிம்மதியாக பேசமுடியாத கட்டாயம்...வலைப்பூ சின்னக்குத்தூசியை அங்கேயே விட்டுவிட்டு நான் அப்பீட் ஆகினேன்...

முத்து எளிமையின் சிகரம்...யாருடனும் பச்சக் என்று ஒட்டிக்கொள்ளக்கூடிய கேரக்டர்...இன்றைக்கு வலைப்பூ எழுதும் பலரில் பட்டென ஆனித்தரமான கருத்துக்களை வைக்ககூடியவர்...எதிராளியும் சிரிக்க சிரிக்க எழுதுபவர்...ஒருமுறை ஹிந்தி எதிர்ப்பு பற்றிய எனது பதிவில் ஹிந்தி படித்தால் பெரிய ஆள் ஆகலாம் என்று எழுதி இருந்தேன்...(சிறுபிள்ளைத்தனமான கருத்துதான்...) அதன் பதிலாக, ஹிந்தி தெரிந்தால் பெரிய ஆள் ஆகலாம் என்றால் ஏன் ஹிந்திக்காரன் தமிழ்நாட்டில் சோன் பப்டி விக்குறான் என்று தடலடியாக கேட்டு, என்னை கடுமையாக சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்...அம்புட்டுதேன் இந்த பதிவு....


இன்னும் சில பதிவர்களின் அனுமதியோடு, அவர்களை சந்தித்த விவரம் பற்றி எழுதுவேன்...ஆனால் அதில் முதல் பதிவு கவிஞர் பாலபாரதி பற்றியதாக இருக்கும்...(இவரிடம் அனுமதி தேவை இல்லை...நான் பா.க.ச. உறுப்பினர் , பெங்களூர் கிளை அலுவலகம்)

இப்போதைக்கு வர்ட்ட்டா...

62 comments:

பொன்ஸ்~~Poorna said...

//வலைப்பூ சுந்தர ராமசாமி (உபயம் பொன்ஸ்) //
நான் சொல்லலைய்யா அந்தப் பேரை.. யாரோ லக்கியார் பாசறை கொடுத்த பட்டம் அது...

னித்தரமா?!! அடப் பாவமே..

ரவி said...

சாரி...நீங்க சொன்னது வலைப்பூ சின்னக்குத்தூசி...கரீக்கிட்டா ?

ரவி said...

சரி டம்ளருக்கும் சொம்புக்கும் வித்யாசம் தெரிஞ்சுதா இல்லையா :)))

- யெஸ்.பாலபாரதி said...

எலேய்ய்ய்... என்னைய இது.., நட்சத்திர வாரத்துலையாவது சங்கத்துக்கு லீவு விடக்கூடாதா? என்னைப்பற்றி சொல்லுறதுக்கு முன்னமே, முத்து மேட்டரிலேயே கொண்டு வந்துட்டீரே... அடப்பாவி மக்கா!
//சாரி...நீங்க சொன்னது வலைப்பூ சின்னக்குத்தூசி...கரீக்கிட்டா ?//

அது நான் கொடுத்தது சாமீ..

ரவி said...

பாலா, உம்மைபற்றி தனியாகவே ஒரு பதிவு வைத்துள்ளேன் அய்யா...விரைவில் ஆரம்பிப்போம்...!!

கானா பிரபா said...

வணக்கம் ரவி

உங்கள் பதிவு கண்டு உண்மையில் மெய் சிலிர்த்துப் போனேன்.
உங்கள் முதல் இடையில் " என் சித்தியின் மகனல்லவா நீங்கள் என்றீர்கள்"
எனக்கு அது புரியவில்லை. "என் தாய் தமிழகத்தின் தங்கை ஈழத்தின் புதல்வரல்லவா நீங்கள்" என்று அன்றி விளக்கம் சொல்லி என் நெஞ்சில் நிறைந்தீர்கள்.
உங்களின் அன்புக்கு என்றும் நன்றி உடையவன் நான்.

ஜோ/Joe said...

செந்தழல் ரவி,
சுவாரஸ்யமான பதிவு! ரசித்தேன்.

வெற்றி said...

ரவி,
நல்ல பதிவு.

/*அவரோ, கவிஜர் பாலாபாய் ஊரில் தான் இருப்பதாகவும், அவரையும் தூக்கி போட்டுக்கொண்டு வருவதாகவும் சொன்னார்... */

இந்த வரியைப் படித்ததும் வாய்விட்டுச் சிரித்து விட்டேன். தூக்கிப் போட்டுக்கொண்டு வருவதற்கு பாலபாரதி என்ன மூட்டையா முடிச்சா? :))

ரவி said...

வெற்றி....க.க.க.போ...(சும்மா இருந்தாலும் பா.க.ச எட்டிப்பார்த்திருது...)

dondu(#11168674346665545885) said...

வாழ்த்துக்கள் செந்தழல் ரவி அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் [GK] said...

வந்துட்டான்ய்யா வந்துட்டான்...!
:)))

கங்கிராட்ஸ் !

உள்ளம் கேட்குதே மோர் !
:))

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நட்சத்திர வாழ்த்துக்கள் ரவி.

பொன்ஸ்~~Poorna said...

நட்சத்திர வாழ்த்துக்கள் ரவி... :)

வரவனையான் said...

என்னங்கப்பா இது பெரிய பெரிய தலைங்க எல்லாம் வந்து வாழ்த்துசொல்லிட்டு போறங்க...

ரவி வாழ்த்துக்கள், கும்மி இங்கையே ஆரம்பிப்போமா.......

ரவி said...

இங்கேயா...வானாம்யா வானாம்...இந்த ஒரு வாரம் உருப்புடியா ஏதாவது எழுதிட்டு போறேனே...

லக்கிலுக் said...

வலைப்பூ முகம்மது யூனுஸ் அவர்களே!

உங்களைப் பற்றிய கட்டுரையை குங்குமத்தில் கண்டேன். ஆனந்தம் அடைந்தேன்.

நட்சத்திர வாழ்த்துக்கள்!

சாத்வீகன் said...

நட்சத்திரமாய் மின்ன வந்தீர்.
வாழ்த்துக்கள்...

doondu said...

என்னுடைய வாழ்த்தினை ரிலீஸ் செய்யவும்!!!

மங்கை said...

நட்சத்திர வாழ்த்துக்கள்...நன்றி...

பன்னீர் மசாலா "மாதிரியா"??...ஹ்ம்ம்ம்

Thekkikattan|தெகா said...

ரவி,

அடிச்சு விளையாடுங்க சொல்றேன்... ஹூம்... //சப்பாத்தி + பன்னீர் பட்டர் மசாலா// எப்படி இருந்துச்சு :-))

துளசி கோபால் said...

ஹைய்யா.... ரவி நீங்களா நட்சத்திரம்?

ஜோரே ஜோர்.

தனித்து இருந்து, விழித்து இருந்து ப் படிப்பேன். ஆனா பசியோடு இருக்க மட்டும் முடியாது.

வாழ்த்து(க்)கள்.

Anonymous said...

வாழ்த்துக்கள் ரவி....

கலக்குங்க...ஆமா அந்த கதை என்ன ஆச்சு...நான் முடிவை படிக்கலையா...இல்ல நீங்க இன்னும் முடிக்கலையா....இல்ல ஒரிஜினல் கதை முடிவுக்கு வந்தபின் இதை முடிக்கலாம்னு இருக்கீங்களா?

வெற்றி said...

ரவி,
நீங்கள் தான் இவ்வார நட்சத்திரம் என முன்னர் பின்னூட்டம் எழுதிய போது தெரியாமல் போய்விட்டதே.

நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

போன வாரம் முழுவதும் பொன்ஸ் அமர்க்களப் படுத்திவிட்டுப் போயிருக்கிறார். அதனால கொஞ்சம் எதிர்பார்ப்பு கூடவாக இருக்கும். நல்ல சுவாரசியமான பதிவுகளாகத் தாருங்கள். படிக்க ஆவலாக உள்ளேன்.
நன்றி.

நாடோடி said...

என்ன மங்குனி ரவி அவர்களே நலமா?..

இன்பா (Inbaa) said...

நடத்துங்கள் ... சூரியனாய் ஜொலிக்க வாழ்த்துக்கள். (சூரியனும் நட்சத்திரம் தான்பா ... செந்'தழல்' க்கு அதுதான் சரியா வரும்)

ரவி said...

நலம்தான் லகுட பாண்டி அவர்களே....நானாவது பரவாயில்லை...நீங்கள் விழாவை சிறப்பிக்கிறேன் என்று போனவர் அரசரிடம் வந்து விலாவை சிறப்பித்து சென்றீர் :))))))

வாங்க நாடோடி...நன்றி !!!

ரவி said...

நன்றி துளசி டீச்சர் !!!!

ரவி said...

நன்றி லக்கி...!!!

ரவி said...

வெற்றி - உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி நடந்துகொள்வேன் என்ற நம்பிக்கையில் !!!

ரவி said...

நன்றி தெக்கத்தி காட்டான்...சப்பாத்தி ஓக்கே...பன்னீர் பட்டர் மசாலாவை பற்றி நான் பேசமாட்டேன்...:))) படையப்பா செந்தில் ஜோக் நியாபகம் வந்திருச்சி...!!!

ரவி said...

நன்றி இன்பா !!! தழல் விளக்கத்துக்கும்...

மங்கை said...

///சப்பாத்தி ஓக்கே...பன்னீர் பட்டர் மசாலாவை பற்றி நான் பேசமாட்டேன்...:))) படையப்பா செந்தில் ஜோக் நியாபகம் வந்திருச்சி//

சர்தார்ஜி கிட்ட இருந்து மீட்டது என் தப்பு..அப்பிடியே விட்டு இருக்கனும்...

இதுல சர்டிபிகேட் வேற "பாவம் பையன் ரொம்ப 'innocent' போல இருக்குனு"..

அதுக்கு தான் இவர் பதிலுக்கு certificate கொடுத்து இருக்கார்..

Unknown said...

நட்சத்திரப் பதிவர் நண்பர் ரவிக்கு வாழ்த்துக்கள்

லக்கிலுக் said...

அமுகவினரும் கும்மியடிக்க ஏற்றவாறு நட்சத்திர வாரத்தில் இடஒதுக்கீடு உண்டா என்று கேட்டு வரச் சொன்னார்கள் :-)

ரவி said...

வெள்ளிக்கிழமை வெச்சுக்கலாமே சுனாமியாரே !!!!

மணியன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!! குங்குமத்தில் உங்கள் சேவை பாராட்டப்
பட்டிருப்பதற்கும் வாழ்த்துக்கள் !

Pot"tea" kadai said...

***** வாழ்த்துக்கள் மாமோய்...

இன்னைக்கே ஆட்டய ஆரம்பிச்சுட்டீங்களா? டூண்டுவே வாழ்த்து சொல்லியிருக்கிறார்னா நீங்க வலைப்பதிவின் "ஜான் ரைட்" தான்.

ஆட்டம் ரொம்ப சுலுவா இருக்காப்புல தெரியுதே?

ரவி said...

நன்றி பொட்டிக்கடையாரே !!

Anonymous said...

//தம் கடையில் கிங்ஸ் இல்லை என்ற போதும் வில்ஸ் பரவாயில்லை என்று கூறும் எளிமையின் சிகரம்..//

எளிமைக்கு என்ன ஒரு எளிமையான உதாரணம் :-)வாழ்த்துகள் நண்பரே!!

நல்லா இருங்க!!

சாத்தான்குளத்தான்

விழிப்பு said...

வாழ்த்துக்கள் ரவி, கலக்குங்க!

ப்ரியன் said...

அட நட்சத்திரமா?

மின்ன வாழ்த்துக்கள் செந்தழல்

வரவனையான் said...

//அமுகவினரும் கும்மியடிக்க ஏற்றவாறு நட்சத்திர வாரத்தில் இடஒதுக்கீடு உண்டா என்று கேட்டு வரச் சொன்னார்கள் :-)

By luckylook //


வெள்ளிக்கிழமை வெச்சுக்கலாமே சுனாமியாரே !!!!

By செந்தழல் ரவி,//




வெள்ளிக்கிழமை மேற்காம சூலம் இன்னைக்கே குத்தலாம்

ரவி said...

நன்றி ப்ரியன்...:)

ரவி said...

///வெள்ளிக்கிழமை மேற்காம சூலம் இன்னைக்கே குத்தலாம் ///

அட யாருப்பா இது..மேக்கால சூலம், கெழக்கால நீலம் அப்படீன்னுக்கிட்டு...வெள்ளிக்கிழமை தான் நம்ம எஞ்சினீயர்கள் எல்லாரும் கொஞ்சம் மஜாவா இருப்பாங்க...:))

கருப்பு said...

அட நம்ப பய புள்ளை ரவியா இந்த வார நட்சத்திரம்?

வாழ்த்துக்கள்யா... நல்லா இருங்கடே!

அதுசரி. எங்கே கொலைவெறிப்படை எல்லாம் இன்னும் காணோம்?

ஒன்னும் சுவாரஸ்யமே இல்லையே!

ரவி said...

படையினர் கூடாரம் அடித்திருக்காங்க...வெள்ளிக்கிழமை ஒதுக்கியாச்சு....பாவிகளா, நான் நல்லாதா ஒரு படைப்பு போட உடமாட்டீங்களா ??

இராம்/Raam said...

நட்சத்திர வாழ்த்துக்கள் ரவி.

ரவி said...

நன்றி ராம்...

அனானிகள் முன்னேற்றக் கழகம் (அ.மு.க) said...

அனானிகளை சந்தித்ததை குறித்து எழுதாத செந்தழலாரை வன்மையாக கண்டிக்கிறோம். வெள்ளிக்கிழமை பதிவை புறக்கணிப்பதாக தீர்மானமும் நிறைவேற்றியாகி விட்டது.

Sud Gopal said...

நட்சத்திர வாழ்த்துக்கள் ரவி.

Anonymous said...

Nice one! I love the expression and writing style!

From your fan
OSAI CHELLA

suvanappiriyan said...

நட்சத்திர வாழ்த்துக்கள் ரவி.

நாடோடி said...

//என்னை மேலும் கொடுமைசெய்ய துணிந்தார் நமது அமரீந்தர் சிங்..//

ஹிந்திபேசி வாய்சொல்லில் சிங்கை புறமுதுகிட்டு ஓட செய்ததால் நீர் இனிமேல்"பன் கொண்டை வென்றான்" உலகம் அறியப்படுவாய்.


:))))))))))))))))))))))))))))))))))

பாரதி தம்பி said...

//வெள்ளிக்கிழமை தான் நம்ம எஞ்சினீயர்கள் எல்லாரும் கொஞ்சம் மஜாவா இருப்பாங்க...:))//

அப்படியா..சொல்லவேயில்லை..

நட்சத்திர வாழ்த்துக்கள்.

நாடோடி said...

//உலகம் அறியப்படுவாய்//

"உலகம் முழுவதும் அறியப்படுவாய்" மாற்றிக்கொள்ளவும்.

Unknown said...

நட்சத்திரம் செந்தழலாய் தகிக்க( :) ) வாழ்த்துக்கள்!!!!

கப்பி | Kappi said...

வாழ்த்துக்கள் ரவி! வழக்கம் போல கலக்குங்க :)

G Gowtham said...

எந்தப்பக்கம் திரும்பினாலும் இந்த வார நட்சத்திரம் ரவிதான்! வாழ்த்துக்கள்!

மலைநாடான் said...

''பன் கொண்டை வென்றான்'', செந்தழல் ரவிக்கு!

இனிய நடசத்திர வார வாழ்த்துக்கள்.:)

சேதுக்கரசி said...

இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.

Udhayakumar said...

வாழ்த்துக்கள் ரவி!!!!

gulf-tamilan said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!!!

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....