கோழித்திருடன்.........

சில விஷயங்கள் வெளியில வந்தாகவேணும் என்றால் வந்தே தீருமாமா ? உண்மையா ?

திருக்கோவிலூர் என்னோட சொந்த ஊருங்க...அங்கிருந்து ஒரு 10 கிலோமீட்டர் மினிபஸ்ஸில் பயணம் செய்தா நெடுங்கம்பட்டு என்ற கிராமம் வருமுங்க...

இந்த சம்பவம் நடந்து ஒரு 8 வருடம் இருக்கும்...

எங்க தாத்தா போய் சேர்ந்த பிறது - கிராமத்தில எங்க கிழவி மட்டும் தனியா இருந்தது...நிலத்தை பார்க்கனும் இல்லையா...

நாம அப்பப்போ விசிட் அடிக்கிறது...காரணம் இரண்டு - ஒன்று - மிலிட்டரி தாத்தாவோட சீட்டாட்டம்...

பத்து ரூவாயை வைத்து - கிழவணார் ஏமாந்தா - சுத்தி போதையில் ஆடுறவனுங்க கண்ணுலே மண்ணை தூவி - 50 ரூபாயை ஜெயிச்சிடலாம்...எல்லாம் திருட்டு ஆட்டம்தான்...கார்டுகளை ஒளித்து - மறைத்து - எப்படியாவது ஜெயிக்கிறது...

மற்ற காரணம் - நல்ல வெடக்கோழிகளை பங்காளிங்க உதவியோட அமுக்கி - காட்டுல கொண்டுபோய் வறுத்து திங்கறது....

இந்தமாதிரி தான் ஒருநாள்...கிளம்பி போறேன் கிராமத்துக்கு...

கிழவி வீட்டுலே பையை போட்டுட்டு - பத்துரூவாயை பாக்கெட்டுல சொருவிக்கிட்டு கிழவணார் வீட்டுப்பக்கம் போறேன்...

தெரு முக்குல - கண் நிலை குத்துது...

செவப்பு கலர்ல - நல்ல வெடச்சாவல் ஒன்னு மேயுது...

அட இன்னாடா இது...போனவாரம் கண்ணுல படல..எவனோ புதுசா வாங்கிட்டு வந்திருக்காண்டோய்...

ஆவறதில்லையே இது...என்று சீட்டாட்ட கிளப்புக்குள் ( நம்ம கிழவணார் வீடுதான்) நுழைகிறேன்...

ஆட்டத்துல மனசே போவல...எப்படி அந்த கோழியை பிடிச்சு மொக்கறது (திங்கறது) என்பதுலேயே சுத்துதுடோய்...

ஆச்சு...கிழவணார் - ரெண்டு புல்லு தூக்கினார்...பிறவு ஒரு ஸ்கூட் அடிச்சார்...பத்துரூவா போச்சு.....

கிழவணார் கிட்ட சுட்ட ஒரு சுருட்டை பத்தவச்சிக்கிட்டே - யோசனையா வரேன்...நம்ம பங்காளி கோபு - திருக்கோவிலூர்ல இருக்கான்...

ஒம்போது மணி மினி பஸ் டிரைவர் அண்ணாச்சிக்கிட்ட தகவல் சொல்லிவிடுறேன்...போன் எல்லாம் ஏது எங்கூருல..அதுலயும் கோடு வேர்டு தான்...

அண்ணாச்சி...நாளைக்கு முனியப்பசாமிக்கு படையல் போடனும்...என் பங்காளி கோபு இல்லைன்னா கோபி - பஸ்டாண்டுல திரியுவானுங்க...கொஞ்சம் சொல்லிவிட்டுடுங்க...காலையில வெரசா வந்துடச்சொல்லுங்கப்பு...

என்றேன்...

கிழவி வீட்டுக்கு போய் - அது வைத்திருந்த காரக்குழம்பை ஒரு வெட்டு வெட்டிட்டு - முற்றத்தில் கட்டையை சாய்த்தேன்..

டேய்...டேய்...ஏந்திருடா என்று கோபுவும் ( இப்போது ஊரில் விவசாயம் பார்க்கிறார்)- கோபியும் ( இப்போது இவர் போலிசாக இருக்கிறார்) எழுப்பினாங்க..

பொட்டையா - சாவலா : என்னம்மோ உலக அழகி போட்டியில கலந்துக்கப்போற கோழி மாதிரி ஆர்வமா விசாரிக்கானுங்க...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....கிழவி இன்னும் கொல்லிக்கு போவல...கொஞ்சம் இருங்க டோய்...என்றேன்..

கிழவி கிளம்பியது....

தூம்பாவுல இருந்து கொஞ்சம் அரிசியை எடுத்து வாயில் போட்டுக்கொள்கிறேன்...பல்லு விளக்கவில்லை...

அவ் அவ் அவ் அவ் என்று அரிசியை மெல்லாமல் குதப்புகிறேன்...

மெல்ல கிளம்பி போகிறோம் மூன்று பேரும்...

கோபி - பொட்டிக்கடைக்கு போயி எண்ணையை ஒரு கவரில் கட்டிக்கோ - மொளகாத்தூள் ஒரு கவரில் வாங்கிக்கோ - அப்படியே காட்டு கொல்லிக்கு வந்திடு...நம்ம இடத்துக்கு...என்றேன்..

உப்பு - மஞ்ச தூள் ??? என்றான் கோபி...

அது ஏற்க்கனவே பாலித்தீன் கவரில சுத்தி வைச்சிருக்கோம்....என்றான் கோபு...

டேய் கோழியக்காட்டுங்கடா...கோபு அவசரப்படுறான்...

இரு ராசா...கொஞ்சம் பொறு...இது நான்...

ஆங்...அதோ மேயுறான் பாரு...

சிவப்பு நிறத்தில் கும்முனு இருக்கு சாவல்...

அப்படியே வாயில் குதப்பிக்கிட்டிருந்த அரிசியை துப்புறேன்...பக்கத்தில்..

பொ..பொ...பொ...பா.....

அரிசி கிட்ட வருது சாவல்...

லபக்..லபக் னு பொறுக்குது...

அஞ்சே நிமிஷம்...

லைட்டா தள்ளாடுது...

டேய் கோபு...தெருவுல யாரும் இல்லை....அமுக்குடா...என்றேன்...

கையோடு கொண்டுபோயிருந்த சிமெண்ட் சாக்கில் அய்ட்டத்தை - கொஞ்சம் கழுத்தை திருகி - உள்ளே அனுப்புறோம்...

அப்புறம் - பரபரன்னு எங்க ரெகுலர் இடத்தில் சந்திப்பு...காட்டுக்கோயில் அருகே...

எங்க ஆப்பரேஷன்களுக்காக தயாராக - ஒரு புதரில் ஒளியவைத்திருக்கும் - வாணல் - கரண்டி வெளியே வருகிறது...

சுள்ளிகளை கொண்டுவருகிறான் - கோபி..

கோழியை உரித்து - மஞ்சள் தடவி லைட்டாக தீயில் காட்டி - பிறகு பீஸ் போட்டு - மிளகாய்தூள் - உப்பு போட்டு - எண்ணை சட்டியை வத்து - வேலை ஜரூராக நடக்குது...

இடுப்பில் சொருகி வைத்திருக்கும் கட்டையை எடுக்கிறான் கோபு....ஏற்க்கனவே குடித்து மீதி வைத்திருந்த வாத்தை - புதரில் இருந்து எடுத்து வருகிறான் - கோபி...

( கட்டை : குவார்ட்டர் - காரணம் குள்ளமா இருக்கில்ல... வாத்து - புல் பாட்டில் சரக்கு - காரணம், ஓப்பன் செய்யும்போது - வாத்து கழுத்தை திருகுவது மாதிரி திருகனும் இல்லையா)

வேலை முடிஞ்சது...

பதினோரு மணிவாக்கில் வீட்டுக்கு வந்து கட்டையை மீண்டும் சாய்க்கிறேன்...

சாயங்காலம் - கிழவி லபோதிபோ என்று அலறும் சத்தம் கேட்டு எழுந்துகொள்கிறோம்...

பாடையில போவ...கட்டையில போவ என்று சென்சார் செய்யாத வார்த்தைகளை அள்ளி தெளித்துக்கொண்டிருக்குது எங்க ஆயா...

மண்ணை வாரி விட்டு சாபம் கொடுத்துக்கிட்டுருக்கு.....

ஓ..ஆயா...நிறுத்து...இப்ப என்ன ஆகிப்போச்சுன்னு இப்படி கூவுற...என்றேன்..

கம்முனாட்டி..எடுபட்ட பய..படுபாவி - சாண்டாக்குடிச்சவன்  - கட்டியத்தின்னவன் - கட்டையில போவ என்று மீண்டும் ஆரம்பிக்குது...

தே, என்னா ஆச்சு மொதல்ல சொல்லு அத்த...என்றேன்..

போனவாரம் சந்தையில ஒரு கோழி வாங்கி வச்சிருந்தேன் டா..பாவிப்பய எவனோ அத்தை திருடி தின்னுப்புட்டான்...எடுபட்ட பய..

ஆடு மேய்க்கிற பசங்க - செவப்பு சாவல் ரெக்கை காட்டு கோயில் பக்கம் கிடக்குன்னு சொல்லுறானுங்க...

பாடையில போவ...கட்டையில போவ....என்று மீண்டும் ஆரம்பிக்குது...

சரி சாவனை விடாத ஆயா...எந்த நெலமையில நம்ம வீட்டு சேவல்னு தெரியாம திருடி திருடினானுங்களோ...என்றேன்...

Comments

சுமா said…
தூள் கிளப்பிட்டீங்க், நல்லா சிரிச்சேன்
Anonymous said…
நன்றாக இருக்கிறது. ஆனால் ரொம்ப அசிங்கமான கெட்ட வார்த்தைய சென்சார் செய்யாம போட்டுட்டீங்க.
எந்த வார்த்தை என்று தெரியல்லியே...

சொன்னீங்கன்னா தூக்கிடுறேன்..
ரொம்ப நாளா எனக்கு ,
சொந்த செலவுல சூன்யம்-ன்ற பதத்துக்கு அர்த்தம் வெறும் அனுமானமா இருந்துச்சு.. இப்ப நல்லவே புரியுது..

தலைப்பைக் கூட சொந்த செலவுல சூன்யம்-னே வச்சிருக்கலாம்னு தோணுதுங்க....
//எங்க கிழவி மட்டும் தனியா இருந்தது...//

ஓ அதுவா இது....


இத்தனை அழிச்சட்டியமா...? போட்டோல பார்த்தா இந்தக் கோழியும் "அரிசி" திங்குமானு கேட்குற மாதிரி ஒரு அம்மனா மூஞ்சி,

கோழிய அமுக்குன கோபி இப்போ போலீஸா...
அதான் சின்ன வயசுலயே டிரைனிங் எடுதிருக்காரு போல....


அன்புடன்...
சரவணன்.
ம்ம்ம்... எனக்கும் அணைக்கட்டுல முயலை சுட்டு (திருடி) சமைச்சது ஞாபகம் வருது.

8 வருஷத்துக்கு முன்ன ஒளிச்சு வச்ச பாத்திரங்கள் எல்லாம் பத்திரமா அங்கயே இருக்கு.

ஆனா நான் மட்டும் கடல் கடந்து இங்க.

என்னவோ போங்க... பழய ஞாபகத்தையெல்லாம் கிளறிட்டீங்க!
தூக்கியாச்சு..
அடுத்த வாரம் பேங்களூர் வரேன், ஒரு வாத்து ரெடி செய்து வைக்க்ய்
நான் வெஜ் ஆகிட்டேன் டா.....இப்போ எல்லாம் கோழி கூட கிடையாது
Anonymous said…
சூப்பர் ரவி, அருமை...
johan -paris said…
ரவி!
என்ன? கிழவியை முடிப்பது;இப்போ கோழி பிடிப்பது; இனி வங்கி உடைப்பா? எழுத்து !!!! ஒரு மார்க்கமா! இருக்கு அதான் கேட்டேன்.
யோகன் பாரிஸ்
நன்றி அனானி...நீங்கதானே சில வார்த்தையை நீக்க சொன்னது ?
Anonymous said…
ஆமாம்...புரிந்துணார்வுக்கு நன்றி.
அட நீங்க வேற...இதைவிட கேவலமா எல்லாம் எழுதுறானுங்க..
தம்பி said…
ரவி,

வெடக்குறும்பாடு அடிச்சுருக்கிங்களா?

வெடக்கோழியவிட இது டேஸ்ட் அதிகம்!!

//திருக்கோவிலூர் என்னோட சொந்த ஊருங்க...///

சித்தலிங்கமடம் தெரியுமா?
priya said…
You look so calm in your profile photo.. my god, you are so funny and naughty.. I laughed a good one reading your article
நீங்க திருடுன கோழி சண்டைக் கோழியா ? ரவி நேற்றைக்கே படித்துவிட்டேன்... கோழி நல்ல விட கோழிதான் ... நல்ல வந்திருக்கு ... சாரி நல்லாவே திருடியிருக்கிங்க...
உறவுகள் போட்டிக்கு எதாவது கெயிவி கதை ஒன்னு அம்புடவில்லையா ? :))
மகேஸ் said…
கோழி திருடிறது, குத்தகைக்கு விட்ட குளத்துல யாருக்கும் தெரியாமல் மீன் பிடித்து பொரித்துச் சாப்பிடுவது இது போல் எனக்கும் பல அனுபவங்கள் உண்டு ரவி.
நினைவு படுத்தியதத்கு நன்றி.

//தனித்திரு விழித்திரு பசித்திரு//
இது மூன்றுமே கோழி பிடிப்பதற்கு அவசியம்.
உங்க தலைப்பு உங்களைப் பற்றி ரெம்ப நல்லாச் சொல்லுது ரவி. :)))
ரவி, இன்னும் சில மேட்டர்களை உன்னிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
அதை எல்லாம் எப்போ சொல்லப்போறீங்க.
சுந்தர், நீங்க எந்த மேட்டர் என்று சொன்னால் தானே அவன் சொல்லுவான்?
பிரபா ( இந்தியன் என்று கூப்பிடவேண்டுமா என்ன?)

இவன் செய்யுற அளும்பு தாங்கலை.ஆனால் ரூமில் சொன்னதெல்லாம் எழுதப்போறானா என்னான்னு ஒரு சந்தேகம் , அவ்வளவுதான்.
எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம் சுந்தர்.

அப்படி என்னதான் சொன்னான் ?
டேய் கொஞ்சம் அடக்கி வாசிங்கடா...

இமெயிலில் பேசறத எல்லாம் என் கமெண்ட் பெட்டியில் எழுதிக்கிட்டிருக்கீங்க ?

இங்கே இலவச கொத்தனாருன்னு ஒருத்தர் அப்படிதான் செய்துக்கிட்டு இருக்காரு....

என்னையும் அந்த லிஸ்டுல சேர்த்துடாதீங்கப்பு..
இருந்தாலும் கோழிபுடிக்க இவ்வளவு கஷ்டபடக்கூடாது நல்லாதான் எழுதறீங்க

ஹிஹிஹிஹிஹி
கோழி பிடிக்க கஷடம் கிடையாதுங்க...அதை கொண்டுபோய் வறுத்து திங்கிறதுல தான் கஷ்டம் இருக்கு....

பதிவுல சொன்னமாதிரி - கொஞ்சம் அரிசியை வாயில போட்டு (காலங்காத்தால) - துப்பினீங்கன்னா - கோழி ஜூட்...

காரணம் நம்ம வாய் ஒரு ஆசிட் வாயிங்க..
ரவி,
நீங்க திருக்கோவிலூரா?

எங்க சொந்த ஊர் அதுதான். நான் பிறந்த ஊரும் அதுதான்.
இன்னும் எங்க பெரியம்மா வீடு கூட அங்க இருக்கு.

வருடா வருடம் ஆத்து திருவிழாவிற்கும், கோடை விடுமுறைக்கும் அங்க வருவேன். எனக்கு மிகவும் பிடித்த ஊர்.

தென்பென்னை ஆறு (இப்ப வறண்டு போய் இருக்கு :-(), பஞ்சனாம் பாறை, நண்டு பிடிக்கிறது, மீன் பிடிக்கிறது, ஓடைல குளிக்கிறது, உலகளந்த பெருமாள் கோவில், ராஜா கடை பரோட்டா எதையும் மறக்க முடியாது.

கடைசியா வந்து 2-3 வருஷமிருக்கும். இந்த மாதிரி திருட்டுத்தனமெல்லாம் எங்க அண்ணனுங்க (பெரியம்மா பசங்க) பண்ணுவாங்க...நான் சும்மா கூட போய் வெடிக்கை பார்ப்பேன் :-))
தம்பி.....நீங்க சித்தலிங்க மடமா ? தெரியும் - நல்லா தெரியும்...

எனக்கு ஒரு பிரண்டு கூட உண்டு அங்க..

பிரபாகரன் என்று பெயர்...நான் திருக்கோவிலூரில் படித்த ஒரே வருடத்தில் , என் பள்ளி நன்பன் அவன்..(1991 ஆக இருக்கும் - 6 ஆம் வகுப்பு...

- ஒரு முறை போயிருக்கேன்....ரோட்டோரம் வீடு....

தெரிஞ்சா சொல்லுங்க...
ஆஹா...
ஒன்னுகூடிடாங்கையா....
ஒன்னு கூடிடாங்க.........
அன்புடன்...
சரவணன்.
தம்பி said…
//தம்பி.....நீங்க சித்தலிங்க மடமா ? தெரியும் - நல்லா தெரியும்...//


என் அம்மாவின் சொந்த ஊர் அது. நான் சின்ன வயசுல அந்த ஊர்லதான் வளர்ந்தேன் அப்புரம் லீவுக்கு போகறதோட சரி.

எனக்கு மிகவும் பிடித்த ஊர் அது..

//எனக்கு ஒரு பிரண்டு கூட உண்டு அங்க..//

பிரபாகரனை தெரியாதே. ஆனால்
ரோட்டோரமாதான் எங்க வீடும் ஹோட்டலும் இருந்தது.
ஆயாவை கொல்வது எப்படி அதில் கடைசியில் ஆயா சாப்பிட்ட கோழியும் இதே போல் திருடியதா? :))
நான் நல்லா விழுந்து விழுந்து:-( சிரிச்சேன்... உணவில் தீவிர சைவம் என்றாலும்!

//சில விஷயங்கள் வெளியில வந்தாகவேணும் என்றால் வந்தே தீருமாமா ? உண்மையா ?

ஏப்பம் விட்டீங்களா, இல்லையா:-)
அருமையா ஏப்பம் வந்தது...
ENNAR said…
ஆமாம் ஆடு மாடுகளை வா வா பா பா என்கிறோம் கோழியை மட்டும் ஏன் போ போ என்று அழைக்கிறோம்
Anonymous said…
நல்லாஇருக்கு அப்பு.
ரவி சார்,

எல்லா விஷயத்திலும் பூந்து விளையாடுறீங்க. . . . . .

சாபாஷ் சரியான பதிவு,
பதிவ படிச்சவுடனே கோழி சாப்பிடனும்னு ஆசயா இருக்கு

பி.கு : சுட்டு இல்ல வறுத்து.
PKS said…
இயல்பா இருக்கு.

- பி.கே. சிவகுமார்
Anonymous said…
hey appa... partha chamathu kodam madhiri irundhuttu enna ellam settai pannreenga neenga!!!
கிராமத்து பாணியில் ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க ரவி.
Anonymous said…
சூப்பர் தலை.
////சூப்பர் தலை.////

சாதாரண தலைதானுங்க நான்.
//கிராமத்து பாணியில் ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க ரவி.///

நன்றி விடாது கருப்பு அவர்களே...நான் கிராமந்தான்..
Anonymous said…
kalakkal machi
மீள்பதிவாக போடச்சொன்ன நன்பர்களின் விருப்பத்துக்கு இணங்கி...
ம்ம்ம் பழ்ச ஞாபகப்படுத்திட்டீங்க. கம்பு,சோளக்கருது, வெள்ளரிக்காய்,இலந் தைப்பழம் நம்முடைய திருட்டு ஆட்டம் இத்தோட சரி
Baranee said…
ரவி , நன்றாக ரசித்தேன்.
aaagaa... naanga kuruvi sutta kadhaiyellaam njaabagam varudhE...

nalla vElai kuruviyOda paattiyellaam vandhu enakku saabam kodukkala :)))
Anonymous said…
தம்பி ரவி கோழீ திருடா
pinnuuttam pottavangalukku thanks.
மன்னிக்கவும், பின்னூட்டம் போட்டவங்களுக்கு நன்றி !!
மிகச் சிறந்த பதிவு!!

// கிழவி இன்னும் கொல்லிக்கு போவல // கொல்லி - இந்த வார்த்தை யை கேட்டு எவ்வளவு நாள் ஆகிறது..நான் மடப்பட்டு பக்கம் சித்தானங்கூர்

// ஒரு புதரில் ஒளியவைத்திருக்கும் - வாணல் - கரண்டி வெளியே வருகிறது // அதே அதே செட்டப்தான்..10/15 வருசம் நம்மளை பேக் அடிக்க வச்சிட்டீங்க போங்க!!
பாவம் ஆயா, ஆசை ஆசையா சேவல வளத்திருக்கும். இப்படி பண்ணிடீகலே
காலம் கடந்து சிலவற்றை படிப்பதில் எத்தனை சுகம் ! ( ஒரு ஃபிரி மெச்சூர் குழந்தைத்தனம் ;) ) வட்டாரவழக்கை ஒரு தயக்கத்துடன் எழுதியுள்ளது தெரிகிறது, அதன் அழகே அதன் வழக்குதான். :)

Popular Posts