ஆனால் இந்தக்கலையை கண்டறிந்த தாயகமான இந்தியத்திருநாட்டிலோ, உரிய மதிப்பின்றி இருந்த இந்தக்கலை, இப்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும், அதிகரித்துவரும் மனோதத்துவ ரீதியிலான பிரச்சினைகளாலும், மீண்டும் உரிய முக்கியத்துவத்தை பெற ஆரம்பித்துள்ளது...
இன்றைக்கு கொரியர்கள் நடத்தும் எங்கள் நிறுவனம் யோகா பயிற்ச்சியை கொடுக்கிறது...இதன் புனிதத்தையும், நோய் தீர்க்கும் தன்மையையும் உணர்ந்த கொரியர்களும் ஆர்வத்துடன் பங்குபெறுகிறார்கள்..தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்கிறார்கள்...இதன் பெருமையை சிலாகிக்கிறார்கள்...இதன் மூலம் அடைந்த பலன்களை வெளிப்படையாக சொல்கிறார்கள்...
யாருக்கு பயன் ?
இன்றைய நவீன யுகத்தில் ஆண்களும் பெண்களும் குறைந்தபட்சம் எட்டிலிருந்து பத்துமணிவரை பணிபுரிய வேண்டியுள்ளது...வீடு திரும்பும் நேரத்தையும் கணக்கில் கொண்டால் சராசரியாக பத்திலிருந்து பதினாலு மணி நேரம் செலவு செய்கிறார்கள்...இந்த நேரத்தில் மூளைக்கு வேலை கொடுக்கவேண்டியுள்ளது...இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது...இலக்கு முடிவதற்க்குள் பணியை நிறைவு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது...
பணி முடிந்து வீடு வந்தால் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் திருப்தி செய்ய உணவு தயாரித்தல், குடும்ப வேலைகள், மாமியார், மாமனார், அத்தை மகன், பெரியம்மா பையன், நீண்டகால நன்பர், எதிர்த்த வீட்டு தோழர், வீட்டு வாடகை, பஞ்சர் ஆன பைக், பக்கத்து வீட்டில் இருந்து கழிவு நீர் வாசனை, டிக்கெட் புக்கிங், தெருவிளக்கு எரியாதது, ரோடு சரியில்லாதது, இன்ஸ்யூரன்ஸ், கடன் அட்டை காலக்கெடு தவறியது, வங்கி என்று சுற்றிலும் அம்புகளால் துளைபடுகிறார் நமது மனது என்னும் அபாக்கியசாலி..
இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அதற்க்கு சிறந்த வழி, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்கி யோகா போன்ற பயிற்ச்சியில ஈடுபடுவது பலன் அளிக்கும்....
இதன் மூலம் கர்ப்பிணி பெண்களில் இருந்து, மன அழுத்த நோய்க்கு ஆளானவர்கள் வரை பயனடையலாம்...நாள்பட்ட தலைவலி, முதுவலி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள், எப்போதும் வேலையை சிந்தித்து அதன் மூலம் ஹைப்பர் டென்ஷன், மைகிரேன், உடல் வலி, தூக்கமின்மை ஆகிய அத்துனைவரும் பயன் அடையலாம்...வியாதிகள் ஏதுமின்றி உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்பும் அனைவரும் பயனடையலாம்...
யோகாவின் வகைகள் - கொஞ்சம் விரிவாக பார்க்கலாமா ?
உட்கார்ந்து எழுந்து, கையை காலை ஆட்டி, கண்ணை மூடித்திறந்து, இது மட்டும் அல்ல யோகா...கீழே சற்று விரிவாக வகைப்படுத்தியுள்ளேன்..
யாமா (விதிகள் / வரையறைகள்)
நிர்யாமா (தனிமனித ஒழுக்கம்)
ஆசனா (யோகா செய்யும் முறைகள்)
ப்ராணாயமா (மூச்சுப்பயிற்ச்சி)
ப்ரத்யஹாரா (விடுபடுதல்)
தாரணா (குறிப்பிட்டவைகள் மீது ஒருநிலைப்படுத்துதல்)
தியானா (தியானம்)
சாமாதி (தீர்வு)
இதில் குறிப்பிட்ட யோகாவை எடுத்துக்கொண்டால் அதில்
பக்தி யோகா
கர்ம யோகா
பதஞ்சலி யோகா முறை
ஜனன யோகா
ஹத்த யோகா
குண்டலினி யோகா
என்று பிரிவுகள் உண்டு...
ஒவ்வொன்றையும் விளக்கி வாசகர்களை துயிலில் ஆழ்த்த நான் விரும்பவில்லை எனினும், யோகா சிறந்ததொரு முறை என்பதும், அதில் நம் முன்னோரின் ஆழ்ந்த அறிவு - மனித்ததுக்கு பயனளிக்கு வகையில் செறிந்துள்ளது என்பதையும் ஆழமாக பதிக்க விரும்புகிறேன்...
கர்ப்பிணி ஒருவர் யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ள காட்சி..
யோகா மேற்க்கத்திய நாடுகளில் சிறப்பான முறையில் மார்க்கெட்டிங் செய்யப்படும் காட்சிகள்..
இருவர் இணைந்து செய்யும் பயிற்ச்சி முறைகளும் உண்டு...
மேலேயுள்ள படத்தில் பாருங்கள்...இது போன்ற கடினமான ஆசனப்பயிற்சி தான் யோகா என்று இல்லை...மென்மையாக, உடலுக்கு எந்த விதமான துன்பத்தையும் தராத சிறந்த பயிற்ச்சிகள் உண்டு..
யோகா ஆசிறியர் ( கவனியுங்கள் - இந்தியர் அல்ல ) ஒருவர் தன்னுடைய மாணாக்கரை பழக்கும் காட்சி..
ஏதாவது புத்தகத்தை வாங்கி யோகா படித்துக்கொள்ளலாம் என்று மணிமேகலைப்பிரசுரத்தின் குண்டலினி யோகம் புத்தகத்தையோ அல்லது இணையத்தில் கிடைக்கும் தகவல்களையோ வைத்து பழகுவது முழுமையான பலன் தராது...ஒரு சிறந்த யோகா அறிஞரிடம் பழகுவது சிறந்த பலன் அளிக்கும்..
சக்கரம்,வட்டம் என்று புரியாத விஷயங்களை சொல்லி பணம் பறிக்கும் கூட்டமும் உண்டு...யோகா என்ற பெயரில் குணிந்து நிமிரவைத்து பணத்தை பறித்துக்கொண்டு அனுப்பி விடுவார்கள்..அதனால் நல்ல தரமான ஆசிறியரை தேர்ந்தெடுப்பது முதல்படியாக இருக்கட்டும்...
வெளிநாடுவாழ் இந்திய நன்பர் ஒருவரை சந்தித்தபோது அவர் சொன்னார், பேசாமல் யோகா கற்றுக்கொடுக்கும் தொழிலில் இறங்கப்போவதாக...நான் அவரிடம் வினவியது, நன்பரே உமக்குத்தான் யோகா தெரியாதே, எனக்கு தெரிந்து நீர் எந்த பயிற்ச்சிக்கும் சென்றதில்லையே என்று...அவர் பதில் என்ன தெரியுமா..."இணையம் எதற்க்கு இருக்கிறது" என்பதே...அதனால் தாங்களிருக்கும் நகரில் யோகா கலையை கற்றுக்கொடுக்க விரும்புபவர்கள் முறையாக பயின்று பிறகு ஆரம்பிக்க வேண்டும்...சென்னையில் கூட யோகாவை தொழிலாக ஏற்க நன்பர்கள் முன்வரவேண்டும்...எங்கள் நிறுவனத்தில் யோகா மாஸ்டரின் சம்பளம் (50 மாணவர்கள் - தலா இரண்டாயிரம் மாதம்) - ஒரு லட்சம் ரூபாய்...அவர் எங்கள் நிறுவனம் போல பத்து நிறுவனங்களில் செயல்படுகிறார்...ஆக யோகா கலை வெறும் கலை மட்டும் அல்ல, உபயோகமாகவும் செயல்படுத்தும் முறை உள்ளது...இந்திய அளவில் மாறிவரும் சூழலை யோகாவுக்கும் உங்களுக்கும் சாதகமாக பயன்படுத்த தயாரா நன்பரே !!!!!
51 comments:
ரவி...என்னய்யா ஆச்சு ?
திடிர்னு சாமியார் ரேஞ்சுக்கு ஒரு பதிவு !
சுவாமி வம்பளாந்தா நந்தா செந்தழல் சிரோன்மணி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மத்ததெல்லாம் நீயே போட்டுக்கப்பா ....!
ஜெய் ! ஜெய் !
இதுபற்றி மேலதிக தகவல் தேவை என்றால் என்னை தனிமடலில் தொடர்புகொண்டால் தெரிவிக்கிறேன்...ஆரிய-திராவிட முத்திரை குத்தாமல் கலையாக மட்டும் பார்த்து கேளுங்கள் - சொல்கிறேன் !!
அன்புடன்,
ரவி
ravi.antone@gmail.com
பதிவு தெளிவாக உள்ளது மிஸ்டர் ரவி,
படங்களும் அசத்தலாக உள்ளது
பாராட்டுக்கள்!
SP.VR.Subbiah
நாயகரே, என்னோட படைப்பும் ஒன்னு ரெண்டு இந்த பூங்கா பூங்காங்கறாங்களே அதுல வரவேனாமா ? நான் ஒரு வாத்தியாரிடம் எழுதுவது எப்படி என்று ட்ரெயினிங் எடுத்துக்கிட்டு பொறவு போட்ட மொத பதிவு தலை இது..ஆங்...வந்ட்டாரு பாருங்க நம்ம வாத்யாரு..!!!
வாங்க வாத்யார் அவர்களே !! எல்லாம் நீங்க குடுத்த ட்ரெயினிங் தான் !!!
அன்பு இரவி,
ஒரு வெள்ளைத் தாளில் சுற்றிக் கோடு போட்டுவிட்டீர்கள். கணினி மொழியில் சொல்வதென்றால் FLOW CHART போட்டுவிட்டீர்கள். நன்றாக வந்துள்ளது. மற்றவைகளை எப்படி விளக்குவதாக எண்ணம்?
இன்னும் கொஞ்சம் விவரிக்கலாமே?
அன்பு கண்ணன்,
//திடிர்னு சாமியார் ரேஞ்சுக்கு ஒரு பதிவு !//
யோகாவைப் பற்றிப் பேசினால்,நாமே, "சாமியார்" என முத்திரை குத்துவது, "ஓவாயனுக்கு அவல் கிடைத்தது போலல்லவா?"
ஞானம்நிறைசெல்வரே, நான் இதுபோன்ற விஷயத்தில் அறிவு குறைந்தவன் தான்...இந்த கலையை முழுமையாக அறிந்தவர்கள் - நிறைவாகவும், ரசிக்கும்படியும் எழுதக்கூடியவர்கள் பதிவு செய்வார்கள் என்று நம்புகிறேன்...
ஞானம்நிறைசெல்வரே, பின்னூட்ட நாயகராம் கோவியாரை தவறாக எண்ணவேண்டாம்...என்னை பார்த்தவுடன் அவருக்கு 10 வயது குறைந்துவிடும்...
ரவி,
யோகா கற்றுக் கொள்ள ஆசைதான். இங்கே மூலைக்கு மூலை வகுப்புகள் நடாத்துகிறார்கள். அடுத்த வருடம் பார்ப்போம். வரும் புது வருட [New Year's resolution] உறுதிமொழி இதுதான். அதுக்காக இதுவரை எடுத்த உறுதிமொழிகளெல்லாம் நிறைவேற்றினான எனக் கேட்கக்கூடாது:)
அப்படியே யோகா பற்றி அதை பலகாலம் செய்து பின்னர் முற்றிலுமாக ஒன்றுக்கும் உதவாத ஒன்று என்று கண்டறிந்த U.G. Krishnamurthy சொல்வதையும் படியுங்கள் ரவி .
மாற்றுப் பார்வையும் கிடைக்கும்.
This death process is yoga, not the hundreds of postures and breathing exercises. When the thought process stops splitting itself in two, the body goes through a clinical death. First the death must take place, then yoga begins. Yoga is actually the body's skill in bringing itself back from the state of clinical death...
for more
http://www.well.com/user/jct/chapter6.html
பயிற்சி கொடுத்து ஒருவரை
எழுத வைத்துவிட முடியாது. பரிட்சை எழுதுவதற்கு வேண்டுமென்றால் பயிற்சி கொடுக்க முடியும்
எழுதுவது என்பது ஒரு கலை!
அதற்கு ஆர்வம்,சமூகத்தின் தாக்கங்களில் ஒரு பிடிப்பு
எதையும் சட்டென்று பிடித்துக்கொள்ளூம் தன்மை, எல்லாவற்றையும் விட நெஞ்சில் ஈரம், எழுதும் விஷயங்களைப் பற்றி எழுதுவதற்கு முன்பு ஆராய்ந்து தெரிந்துகொள்ளூம் தெளிவு, சராசரிக்கும் மேலான மொழி அறிவு,
முக்கியமாகப் பார்த்ததைப் பார்தபடி எழுதும் துணிவு எல்லாம் வேண்டும் மிஸ்டர் ரவி
அது உங்களிடம் நிறைய உள்ளது.
அவ்வைசண்முகி படத்தின் கதாநாயகருக்கு மேக் அப்
போட்டவர் என்ன செய்திருப்பார்.
படத்தின் வெற்றிக்கு அவரா காரணம்?
நான் செய்தது உங்களுக்கு மேக் அப்
போடச் சொல்லிக் கொடுத்தது மட்டுமே!
SP.VR.SUBBIAH
//ஞானவெட்டியான் said...
அன்பு கண்ணன்,
//திடிர்னு சாமியார் ரேஞ்சுக்கு ஒரு பதிவு !//
யோகாவைப் பற்றிப் பேசினால்,நாமே, "சாமியார்" என முத்திரை குத்துவது, "ஓவாயனுக்கு அவல் கிடைத்தது போலல்லவா?"
//
ஞானவெட்டியான் ஐயா...!
செந்தழலாரிடம் இப்படி ஒரு நல்ல பதிவு நான் எதிர்பார்க்கவில்லை. ஆச்சிரியத்தில் கண்களை அகலவிரித்து எழுதினேன். மற்றபடி யோகவை தவரென்றோ, அதைச் சொல்லித்தருபவர்கள் சாமியார்கள் மட்டுமே என்ற பொருளில் சொல்லவில்லை. தவறான புரிந்துணர்வை தந்ததற்கு மண்ணிக்க!
//படத்தின் வெற்றிக்கு அவரா காரணம்?
நான் செய்தது உங்களுக்கு மேக் அப்
போடச் சொல்லிக் கொடுத்தது மட்டுமே!
SP.VR.SUBBIAH
//
சுப்பையா சார்,
ஆகா ! இது உங்க வேலைதானா, டிரெய்னிங்... என்னடா நம்ம ரவி பையன் தடம் மாறி எழுதுறாரேன்னு நெனச்சேன்.
:))
கோவியாரே, இப்படி சொல்லிட்ட்டீங்களே !!!
அன்பு கண்ணன்,
தங்களின் மீதுள்ள உரிமையினாலும், தற்பொழுது வலையுலகம் உள்ள் நிலமையிலும், நம்போன்றோரை ஊக்குவிக்கவேண்டும் என்னும் நோக்கோடுதான் எழுதியுள்ளேன். தவறோ?
நல்ல பதிவு ரவி!
அடடடா.. ரவி இந்த மாதிரி பதிவெல்லாம் நாங்க போட வேண்டியது..
ச்சும்மா ஜாலியா, கலஃபுல்லா ஃபோட்டால்லாம் போட்டு.. ஒங்க பாஷையில நக்கலா ஏதாச்சும் போடுங்க..
நீங்க போட்ட சில ஃபோட்டால்லாம் கலர்ஃபுல்லாத்தான் இருந்தது.. இல்லேன்னு சொல்லலே.. ஆனா சப்ஜெக்ட்தான் டல்லடிச்சிருச்சி..
இந்த காலத்து ஐ.டி. தலைமுறை யோகா பண்ணும்போதுகூட மனசுல ப்ராஜக்ட்டும், க்வெரியும், கோடிங்குந்தான ஓடிக்கிட்டிருக்கும்? அப்புறம் யோகா எங்க பண்றது?
அதெல்லாம் நாப்பது வயசாவட்டும் பாத்துக்கலாம்.. இப்ப யார எப்படி கலாய்க்கிலாம்னு பாருங்க.. கலாய்க்கறது ஆளா கிடைக்கல ஒங்களுக்கு:))
//அன்பு கண்ணன்,
தங்களின் மீதுள்ள உரிமையினாலும், தற்பொழுது வலையுலகம் உள்ள் நிலமையிலும், நம்போன்றோரை ஊக்குவிக்கவேண்டும் என்னும் நோக்கோடுதான் எழுதியுள்ளேன். தவறோ?//
அன்பு ஐயா,
தவறை சுட்டிக் காட்டுபவர் தவறாக சொல்கின்றார் என்று பொருள்பட சொல்லவில்லை. ஒரே கருத்துக்களை பலர் பதிவாக எழுதினாலும் எனது பின்னூட்டம் பதிவு எழுதும் பதிவர்களைப் பொறுத்து மாறும்.
உங்களுக்கு என் மீது இருக்கும் உரிமையும், அன்பும் எனக்கு நன்கு தெரியும். அதனால் தான் உடனடியாக பதில் எழுதினேன்.
பி.கு : அனானிகள் இங்கே வந்து நாம் இருவரும் தனி ட்ராக்கில் போவதாக வந்து "வாழ்த்துவாங்க"
பாருங்க !
செந்தழலாளிரின் அன்பு அனானிகள் மண்ணிக்க !
:))
மிஸ்டர் ஜோசப்!
நட்சத்திரப் பதிவு வாரத்தில் நட்சத்திரப் பதிவாளர் கலாய்க்கும் பதிவெல்லாம் போட மாட்டார்! இனிமேல் கிறிஸ்துமஸ் முடிந்துதான் அதெல்லாம்!
அடியேன் சொல்வது சரிதானே மிஸ்டர் ரவி?
SP.VR.சுப்பையா
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியலை, நட்சத்திர அந்தஸ்து கிடைத்ததும் அது எப்படிதான் இம்புட்டு அழகா எழுத
வருதோ :-))
ரவி, படிச்சிக்கிட்டே இருக்கேன், அடிச்சி ஆடுங்க. (தனி மெயில் ரிப்ளைப் போட்டேனே, கிடைச்சுதா)
ரவி,
நட்சத்திரமானதுக்கு முதலில் வாழ்த்துக்கள்.
யோககலையை எழுதி இன்னும் இளமையோடு ஜொலிக்கின்றீகள்!
வாத்தியார் அவர்களே...அப்டி லூஸ்ல விட்டா ஆகுமா ? கவிக்கினியர் எஸ்பா பற்றி நான் எழுதி வெச்சிருக்க பதிவு என்னாகுறது ?
\"ஒரு சிறந்த யோகா அறிஞரிடம் பழகுவது சிறந்த பலன் அளிக்கும்..\"
இது 100% சரியான ஆலோசனை ரவி, முறையாக யோகா செய்யாமல் சிக்கலுக்குள்ளான நண்பர்களும் இருக்கிறார்கள், நல்ல உபயோகமான தகவல்கள் உங்கள் பதிவில் உள்ளன! வாழ்த்துக்கள்.
Mr.Ravi,
just now i went through your YOGA-
nice. I have also learned YOGA through a Master. making awareness among the valaipathivalargal and others are really good thing.
vj/tr
நன்றி ஹரி..........
ஆஹா ரவி...கலக்குங்க
(அது சரி ஒரு டவுட்..இந்த யோகா பண்ணா டயர்ட் ஆகாம அனானி பின்னூட்டம் 24 மனி நேரமும் போடலாமா...ச்ச்ச்சுசுசும்மா டமாசு)
மங்கைனு பேர் இருந்தா பதில் சொல்றது இல்லைனு ஏதாவது வேண்டுதலா...
நானும் பார்க்கிறேன்..ஒரு பின்னூட்டதுக்காவது பதில பின்னூட்டம் கானோம்..:-(((
தலைவா யோகாவுல இரண்டு டைப்பு உண்டு.
ஓன்னு உடம்புக்கு பண்ணுரது. அதாவது உடற்பயிற்சி மாதிரி.
இன்னொன்னு மனசுக்கு பண்ணுரது. தியானம் மாதிரி.
இரண்டாவதுக்குதான் இந்தியா ரொம்ப பேமஸ்.
அதை உலகத்துல பண்ணுரவங்க ரொம்ப கம்மி.
இமயமலையில இருக்குற சாமியாருங்க செய்வாங்கனு சொல்வாங்களே அதேதான்.
நீங்க சொல்லுரது முதல்டைப். அதுக்கு நிறைய பேர் இருக்காங்க.
யோகாவால உடல பேணமுடியுமுனு சொல்லுருதால வந்த தப்பான அர்த்தம் அது. அதனால யோகானா எல்லோரும் முதல் டைபையே தான் நினைக்கிறாங்க.
///பி.கு : அனானிகள் இங்கே வந்து நாம் இருவரும் தனி ட்ராக்கில் போவதாக வந்து "வாழ்த்துவாங்க"
பாருங்க ! ///
அய்யா, நீங்க எந்த ட்ராக்ல போனாலும் எனக்கு சந்தோஷமே !!! மற்றவரை புண்படுத்தும் அனானிகளுக்கு நாங்கள் இடமளிப்பதில்லையே !!!!
இதே பிரச்சினையை இன்னோரு வலைப்பதிவரும் எழுப்பினார்...எல்லா பின்னூட்டத்துக்கும் பதில் தரத்தான் முயலுகிறேன்...அவ்வப்போது வேலையயும் (?!) பார்ப்பதால் வரும் வினைன்னு வெச்சிக்கங்களேன்...சரி இனிமே பதில் உடனே தந்திருவேன்.
நாடோடி அவர்களே...நீங்க சொல்வது சரிதான்...
ஒரு முறை கொரியாவை சேர்ந்த ஒரு தோழி கேட்டாங்க, யோகா என்பது சாட்டையால் அடித்துக்கொள்வது போல் எங்க ஊர் டிவீயில் காட்டுறாங்களே என்று...அய்யோ அப்படியில்லைம்மா, யோகா என்பது என்ன என்று தெளிவாக விளக்க வேண்டியதா போச்சு..
சென்னையில் யோகா கலை எங்கே பயில்விக்கிறார்கள் என்று தெரிந்தால் பின்னூட்டத்தில் தரவும்..எனக்கு தனிமடலில் கேட்ட தமிழ்மண வாசகர் ஒருவருக்கு தரவேண்டியுள்ளது....!!!
பாவம் பாலபாரதி அவர்கள்!
பதிவுகளில் வரும் அவர் படத்தைப் பார்த்தால், அப்பாவியாகத் தோன்றுகிறார்.
1942ல் வந்த சபாபதி படக் கதாநயகன்போல அப்பாவித் தோறத்துடன் இருக்கிறார். அவரைக் கலாய்ப்பதற்கு எப்படித்தான் இவர்களுக்கு மனம் (பா.க.சா விற்கு) வருகிறதோ - தெரியவில்லை
நீங்களுமா அதைச் செய்ய வேண்டும் மிஸ்டர் ரவி!
மாறாக அவருடைய சிறப்புக்களைச் சொல்லி அசத்தலாக ஒரு பதிவு போடுங்கள்.
நீங்கள் எத்தனை வரி எழுதுகிறீர்களோ அத்தனை பின்னூட்டம் நான் போடுகிறேன்.
அப்புறம் பாருங்கள் தமிழ்மணத்திலேயே அதிக பின்னுட்ட்ங்கள் வாங்கிய பதிவு அந்தப் பதிவுதான் என்றாகிவிடும்!
அந்த ரிக்கார்டை எந்த்க் கொம்பனா(ரா)லும் முறியடிக்க முடியாமல் பண்ணி விடுவோம்
என்ன சம்மதம்தானே?
SP.VR.SUBBIAH
பாவம் பாலபாரதி அவர்கள்!
பதிவுகளில் வரும் அவர் படத்தைப் பார்த்தால், அப்பாவியாகத் தோன்றுகிறார்.
1942ல் வந்த சபாபதி படக் கதாநயகன்போல அப்பாவித் தோறத்துடன் இருக்கிறார். அவரைக் கலாய்ப்பதற்கு எப்படித்தான் இவர்களுக்கு மனம் (பா.க.சா விற்கு) வருகிறதோ - தெரியவில்லை
நீங்களுமா அதைச் செய்ய வேண்டும் மிஸ்டர் ரவி!
மாறாக அவருடைய சிறப்புக்களைச் சொல்லி அசத்தலாக ஒரு பதிவு போடுங்கள்.
நீங்கள் எத்தனை வரி எழுதுகிறீர்களோ அத்தனை பின்னூட்டம் நான் போடுகிறேன்.
அப்புறம் பாருங்கள் தமிழ்மணத்திலேயே அதிக பின்னுட்ட்ங்கள் வாங்கிய பதிவு அந்தப் பதிவுதான் என்றாகிவிடும்!
அந்த ரிக்கார்டை எந்த்க் கொம்பனா(ரா)லும் முறியடிக்க முடியாமல் பண்ணி விடுவோம்
என்ன சம்மதம்தானே?
SP.VR.SUBBIAH
மிஸ்டர் ரவி,
நீங்கள் கேட்ட யோகா சென்ட்டர் முகவ்ரிகள் இந்த லிங்க்கில் உள்ளது.
கூகுள் நண்பர் கொடுத்ததுதான்!
http://www.yogamovement.com/links/centers.html?locale=India
SP.VR.SUBBIAH
வணக்கம் ரவி
நீங்கள் சொன்னது போல் முறையான பயிற்சியாளரிடம் கற்று முறையாகச் செய்யவேண்டியது இக்கலை. சன் டீவியின் யோகா நிகழ்ச்சியை வழங்கி வரும் பெரியவர் ஆவுடையப்பனை முன்னர் வானொலிக்காகப் பேட்டி கண்டிருந்தேன். சமயம் வரும் போது அந்த ஒலிப்பதிவை வலையேற்றுகின்றேன்.
//பாவம் பாலபாரதி அவர்கள்!
பதிவுகளில் வரும் அவர் படத்தைப் பார்த்தால், அப்பாவியாகத் தோன்றுகிறார்.
1942ல் வந்த சபாபதி படக் கதாநயகன்போல அப்பாவித் தோறத்துடன் இருக்கிறார்.//
சுப்பையா சார், இப்படிக் கூட கலாய்க்கலாம்னு எங்களுக்குத் தெரியாம போச்சே..
அப்போ நீங்களும் பா.அ.ச வா? (பாலபாரதி அனுதாபிகள் சங்கம்..)
ரவி, எதிர்க் கூட்டம் அதிகமாகிகிட்டே இருக்குப்பா.. ஏதாச்சும் செய்யணும் :)))
யோகா பற்றிய பதிவு நல்லா இருக்கு.. யோகா நானும் கத்துகிட்டேன். ஆனா செய்யும் பொறுமை தான் இல்லை :)))
பொன்ஸ்...பாலபாரதியை பற்றி அறியாமல் சொல்லிவிட்டார் ஐயா..இருந்தாலும் பாலபாரதியை பற்றிய பதிவு உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதை நான் மறுக்க முடியாது...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கானா பிரபா..சீக்கிரம் வலையேற்றுங்கள்...கேட்க ஆவல்..
///ரவி, எதிர்க் கூட்டம் அதிகமாகிகிட்டே இருக்குப்பா.. ஏதாச்சும் செய்யணும் :)))///
கவலை வேண்டாம்...வேலையை முடிச்சிடலாம்...
பொன்ஸ் சகோதரி!
பால பாரதிக்கு எதற்கு அனுதாபிகளும், அவருக்கு ஆதரவாக ஒரு சங்கமும்?
தர்ம தேவதை என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா - அந்த தர்ம தேவதை இப்போது பாலபாரதி அவர்களுடன்தான் இருக்கின்றாள்
மிஸ்டர் ரவி மட்டும் அவரைக் கலாய்த்துப் பதிவு போடட்டும் பாருங்கள் - அந்த தேவதை எத்தனை பேரை அவருக்கு ஆதரவாக அனுப்பி வைக்கிறாள் என்று!
பா.க.ச சங்கத்து ஆட்கள் கலாய்க்கும்போது அவள் ஏன் அவரைக் காப்பற்ற வருவதில்லை என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்குமானால் தனி மடல் அனுப்புங்கள் பதில் சொல்கிறேன்!
SP.VR.சுப்பைய்யா
உடல் மற்றும் மன வளத்துக்கு எளிய முறை உடற்பயிற்சி தியான பயிற்சி காயகல்பப் பயிற்சி மற்றும் அகத்தாய்வு பயிற்சிகள் வாழ்கவளமுடன் மன்றங்களில் கற்றுதரப் படுகின்றன. ""old method of learning yoda was very diffcicult one and almost impossible for the common man to practise.As i felt that such a great science should be brought within the reach of everyone who is eager to learn it, i decided to formulate a practical and simplified method. The result of my endeavour through the y ear is the simplified kundalini yoga {SKY}-- yogiraj vethathiri maharishi இது அவருடைய yoga for modern age புத்தகத்திலிருந்து.விபரங்களுக்கு
உலக சமுதாய சேவா சங்கம்
20 II கடல் நோக்குச் சாலை,
வால்மீகி நகர்,
திருவான்மியூர் .
www.vethathiri.org
உடல் மற்றும் மன வளத்துக்கு எளிய முறை உடற்பயிற்சி தியான பயிற்சி காயகல்பப் பயிற்சி மற்றும் அகத்தாய்வு பயிற்சிகள் வாழ்கவளமுடன் மன்றங்களில் கற்றுதரப் படுகின்றன. ""old method of learning yoda was very diffcicult one and almost impossible for the common man to practise.As i felt that such a great science should be brought within the reach of everyone who is eager to learn it, i decided to formulate a practical and simplified method. The result of my endeavour through the y ear is the simplified kundalini yoga {SKY}-- yogiraj vethathiri maharishi இது அவருடைய yoga for modern age புத்தகத்திலிருந்து.விபரங்களுக்கு
உலக சமுதாய சேவா சங்கம்
20 II கடல் நோக்குச் சாலை,
வால்மீகி நகர்,
திருவான்மியூர் .
www.vethathiri.org
ரவி!
யோகா...என் பெயரில் இருக்கே தவிர; (வெள்ளைத் தம்பி ...கருப்பாக இருப்பதுபோல்) அந்த அறிவு எள்தனையுமில்லை.(யாரோ மற்ற அறிவெல்லாம் ஒழுங்கா இருக்கானு - சவுண்டு விடுராங்க - தன் பிளக்கயே திருத்தாமல் அல்லாடுரார்...என முணுமுணுக்கிறாங்க !!!புரியுதப்பா!! -) அதாவது எனக்கில்லா அறிவுகளில் இதுவும் ஒன்று!!!
எமது சமுதாயத்துக்குக் கிடைத்த பெரிய சொத்து..;ஐயமில்லை;
இதற்கு எந்தச் சாயமும் பூசாமல் பாடசாலைகளில் பாடமாக்கிவிட வேண்டும்.
சமுதாயம் முன்னேறும் .
யோகன் பாரிஸ்
\\இதன் மூலம் கர்ப்பிணி பெண்களில் இருந்து, மன அழுத்த நோய்க்கு ஆளானவர்கள் வரை பயனடையலாம்...நாள்பட்ட தலைவலி, முதுவலி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள், எப்போதும் வேலையை சிந்தித்து அதன் மூலம் ஹைப்பர் டென்ஷன், மைகிரேன், உடல் வலி, தூக்கமின்மை ஆகிய அத்துனைவரும் பயன் அடையலாம்...வியாதிகள் ஏதுமின்றி உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்பும் அனைவரும் பயனடையலாம்...\\
ஆமா! "நீங்க மெடிக்கல் ரெப்" ஆன விஷயத்தச் சொல்லவேயில்லை..
///ஆமா! "நீங்க மெடிக்கல் ரெப்" ஆன விஷயத்தச் சொல்லவேயில்லை.. ///
மருந்துல்லாம் கொடுக்கமாட்டேன்...!!!
உங்கள் கருத்துக்கு நன்றி யோகன் அவர்களே !!!
உங்கள் கருத்துக்கு நன்றி லஷ்மி அவர்களே !!!!
அருமையான பின்னூட்டத்துக்கு வாத்தியார் அவர்களுக்கு நன்றி !!!
'அடக்கும்' காயகல்பப் பயிற்சி நானும் கற்றுக்கொண்டேன். (திருச்சி BHEL ல் மனவளக்கலை மன்றத்தில்)கல்லூரிக் காலத்தில் மிக்க பயணளித்தது (!!).
யோகா கற்றுக்கொள்ள 'ஆஸ்தா' என்று ஒரு தனி தொலைக்காட்சி அலைவரிசை இருக்கிறது (இந்தியில்).
யோகா செய்து இரத்த அழுத்தம் குறைவது உண்மை. 140/100 லிருந்து 130/80 வரை எனக்குக் குறைந்தது.
Post a Comment