Wednesday, January 24, 2007
தூக்கமே டேபிள்மேலே...
வகுப்பறையில் தூங்குவது எப்படீன்னு தலைப்பு வைக்கலாம் என்று தான் நினைத்தேன்...அப்போ அலுவலகத்தில் தூங்குறவங்களை எந்த கணக்கில் சேர்க்கிறது.....நான்கூட இப்போ தூங்கி எழுந்து தான் இந்த பதிவே எழுதறேன்....இந்த தலைப்பு வெச்சதுக்கு காரணம் ஆசையே அலைபோலே அப்படீன்னு ஒரு பாடல் சட்டென என்னோட கனவுல (ஆமா - பத்து நிமிஷம் முன்னாடி) வந்தது தான்...
அதுக்கு முன்னாடி வகுப்பறையில் நான் தூங்கறது ஒரு கனவுமாதிரி (!?) வந்து கொசுவர்த்தி சுத்துது...( அட இங்கேயும் தூக்கத்துக்கு தேவையான ஐட்டம் தானா)
நான் அப்படியே கடைசி பெஞ்சுல உக்காந்திருப்பேன்...அதிலேயும் மூலையா ( ஈசானி மூலை) ஒரு சீட் கிடைச்சா வாஸ்துபடி அந்த இடத்தை முதல் நாளே ஹோய் ஹோய் இது என்னோட எடம் என்று சவுண்டு கொடுத்து ரிசர்வ் செய்யுறது தொட்டில் பழக்கம்...அப்போத்தானே நிம்மதியா தூங்கமுடியும்...
பாருங்க, படிக்கிற நமக்கு இந்த ஊர் சுத்துறது, படிக்காம சினிமாவுக்கு போறது, சைட் அடிக்கறது எல்லாம் பிடிக்காது..ஐயம் குட் பாய்...ஆனா க்ளாஸ்ல தூங்குறதுக்கு தனியா ஒரு செமஸ்டர் வெச்சா அதுல யூனிவர்சிட்டி பர்ஸ்ட்டை எங்க கல்லூரிக்கு வாங்கிதந்திருப்பேன்...
அதுல பாருங்க...ஒரு கையை படக்குன்னு மடக்கி, அதுமேல தலையை போட்டு, இன்னோரு கையை கொஞ்சம் வாகா மடக்கி, அதே இரண்டாவது கை முஷ்டியால கன்னத்துக்கு ஒரு சப்போர்ட் கொடுத்து அப்படியே சாய்ஞ்சா, அடா அடா அடா, என்ன அழகா தூக்கம் வரும்ன்றீங்க...புத்தகம் கொஞ்சம் பெருசா இருக்கறது என்ன அழகா யூஸ் ஆகும் தெரியுமா...இதுல சிம்'ரம்'ன் படமோ, சினேகா படமோ சமீபமா பார்த்திருந்தா போதும்...ஒரே "நிலவை கொண்டுவா, பெஞ்சில் சேர்த்துவை, மேகம் கொண்டுவா, புத்தகத்தின் மேலேவை" பாட்டுத்தான்...
சிலசமயம், தமிழ் வாத்தியார் "கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்" என்று ஏதாவது எலக்கிய பாடம் நடத்திக்கிட்டு இருக்கச்சே, நாம இங்கெ "கையில் தலைவைத்து மாணவர்கள் தூங்கிவிட்டால், வகுப்பில் இவர்க்கு தமிழ்பாடமும் ஓர் இரவாம்" என்று தூங்கிக்கிட்டு இருப்போம்...
இதுல பெரிய விஷயம் டேபிள் மேலே தலைவெச்சு தூங்கும்போது குடகு மலையில் கிளம்பி தஞ்சைத்தரணிக்கு வாழ்வளித்த காவிரி ஆறாக நம்ம வாயில் இருந்து பெருகும் புதிய காவிரியாக ஒரு ஜொள்ளு...
அதுபாட்டுக்கு அதோட வேலையை பார்த்துக்கிட்டிருக்கும்...தலைவெச்சு படுக்கிற புத்தகம் தான் ஓரே ஈரமா...
அப்படியே வீட்டுக்கு போனா, "ஏண்டா மழையில நனைஞ்சுக்கிட்டே வர்றே, கொஞ்சம் காலேஜில நின்னு வரக்கூடாதா" என்று அம்மா கேட்குமளவுக்கு கொண்டுபோய் விட்டிடும்...( மே மாசத்துல எந்த காலத்துல மழை பேஞ்சுருக்கு, எங்க அய்யன் அவ்ளோ அசமஞ்சமா வளத்துட்டார்...நான் என்ன செய்யறது...)
எங்க தமிழய்யாவுக்கு நான்னா ஒரு இளக்காரம்தான்...பேரைச்சொல்லி கூப்பிடமாட்டாரு...நெம்பர் 28. இதுதான் அவர் வெச்ச பேரு...என்னோட கல்லூரி ரெஜிஸ்டர் நெம்பர்தான்...திடீர் திடீர்னு என்னை எழுப்பி ஏதாவது கேட்பாரு...நானும் பட்டுனு எழுந்திருச்சு, ஸ்பைடர்மேன் முதல் காட்சியில அவர் விடும் வலை ஒரு சாப்பாட்டு தட்டோட ஒட்டிக்கற மாதிரி, நோட்டுக்கும் வாய்க்கும் ராமர் பாலம்(ஆடம் பாலம்) மாதிரி ஒரு ஜொள் இணைப்பை கொடுத்துக்கிட்டு எழுந்திரிச்சு நிப்பேன்...
மொக்கையா ஏதாவது கேட்டு கிண்டல் செய்துட்டு உக்கார சொல்லுவாரு...அது என்னன்னு ஒரு எழவும் புரியாதுன்னாலும், ஆமாங்கய்யா, சரிங்கய்யா மாதிரி ஏதாவது சொல்லி சமாளிச்சுட்டு மறுபடியும் வேலையை பார்க்க போயிருவேன்...
கணக்கு வாத்தியார் டஸ்டராலேயே அடிச்சிருக்காரு...அதுக்கப்புறம் நான் எழுந்து காதல்கொண்டேன் தனுசு மாதிரி போர்டை நாஸ்திசெஞ்சு கணக்கெல்லாம் போடலை...மறுபடியும் தூக்கம்தான்...எனக்கு என்ன கணக்கு தெரியும்....கணக்கு பண்ண கொஞ்சம் தெரியும்...அவரிடம் டியூசன் போயும் ஒன்னும் தேறலை...அந்த சோகக்கதையை கேட்காதீங்க ப்ளீஸ்...
சிலவகுப்பு டேபிள் தூங்கறதுக்கு அழகா, ரொம்ப பாந்தமா, பொருத்தமா இருக்கும்...ஏசி இல்லாமலே ஒரு சில்ல்ல்லுனு கூலிங் எபெக்ட் கிடைக்கும்..."சில்லுன்னு ஒரு பெஞ்சு" அப்படீன்னு வெச்சுக்கோங்களேன்...
சிலசமயம் படுத்தவுடனே தூக்கம் வந்திடும்...ஆனா சிலசமயம் வாத்தியார் பாடம் ஆரம்பிச்சாத்தான் மூடே வரும்னா பார்த்துக்கோங்களேன்...அதுலேயும் எங்க தமிழ்வாத்தியார் எனக்கு கிடைச்சது ஏதோ போன ஜென்ம பிறவிப்பலன்...என்னதான் அவருக்கு "காண்டாமிருகம்" அப்படீன்னு பட்ட பேரு வெச்சிருந்தாலும், இந்த விஷயத்தால அவர்மேல எனக்கு தனி மரியாதை...எப்போ அவரை வெளியிலே பார்த்தாலும் "அய்யா, நமது வகுப்பு எப்போது அய்யா" என்று பணிவோட கேட்டுக்கிட்டிருப்பேன்...பொறவு ? குவாட்டர் அடிச்சாலும் வராத தூக்கம் அவர் பீரியட்ல மட்டும் வருதே !!!
ஜன்னல் வழியா வரும் வேப்ப மரத்து காற்று, இனிமையான சில்லுனு ஒரு பெஞ்சு, தாலாட்டும் மெல்லிசையாக அய்யா நடத்தும் பாடம்...ஆகா...இனி ஒருமுறை வருமா அது வாழ்வில்...என்னதான் இப்போ ஆபீஸ்ல ஏசி இருந்தாலும், அந்த காலத்தில் வந்த தூக்கம் வரமாட்டேங்குது...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்பாபாபாபா...மறுபடியும் கண்ணைக்கட்டுதே....இண்டர்நெட் வேலை செய்யலை மத்தியானத்துல இருந்து...அப்படியே இருப்பிடத்திலேயே ஒரு குட்டித்தூக்கம் போட்டேன்...அப்போ எழுந்த சிந்தனை இப்படி பதிவு எழுத வெச்சிருச்சி...நீங்க ஒன்னும் கோ கோ வி விச்சுக்க்க்காஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
ஆனந்த விகடனில் தி.மு.க / அ.தி.மு.க ரெண்டு கட்சிக்காரங்களும் அயோக்கியர்கள் என்பது போல பேசிய விஜியகோந்துவை பகரைனில் இருந்து சுரேஷ் என்ற வாசகர்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
10 comments:
ஸ்ஸ்ஸ்..அப்பா, ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு வந்து முழுசா படிக்கிறேன்
:)
சென்ஷி
//ஜன்னல் வழியா வரும் வேப்ப மரத்து காற்று, இனிமையான சில்லுனு ஒரு பெஞ்சு, தாலாட்டும் மெல்லிசையாக அய்யா நடத்தும் பாடம்...ஆகா...இனி ஒருமுறை வருமா அது வாழ்வில்...என்னதான் இப்போ ஆபீஸ்ல ஏசி இருந்தாலும், அந்த காலத்தில் வந்த தூக்கம் வரமாட்டேங்குது...//
ஞாபகம் வருதே!!!ஞாபகம் வருதே!!!
+
நன்றி சென்ஷி...ஏந்திருச்சாச்சா ??
நன்றி ராம்..!!! நீங்க கடைசி பெஞ்சு ஆளா இன்னா ? உங்க உயரம்தான் என்னவோ ?
நான் 186 வேற வழியே இல்லாம மாப்ள பெஞ்சு குடுத்துட்டாங்க! :))
//நன்றி சென்ஷி...ஏந்திருச்சாச்சா ??//
//நன்றி ராம்..!!! நீங்க கடைசி பெஞ்சு ஆளா இன்னா ? உங்க உயரம்தான் என்னவோ ?//
கேள்வி தொக்கி நிற்கும் இது போன்ற பின்னூட்டங்கள் போலீஸ்காரரின் கயமை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதை போ.கா சார்பாக அறிவிக்கப்படுகிறது.
//நீங்க கடைசி பெஞ்சு ஆளா இன்னா ?//
அது எவ்வளவு பெரிய மகத்துவமான இடம், அந்த இடத்திலிருந்து வந்துதான் நாமெல்லாம் இம்புட்டு உசரத்துக்கு வந்திருக்கோம்.... :)
//உங்க உயரம்தான் என்னவோ ? //
எங்கூருலே ஒரு பெரியவர் அடிக்கடி சொல்லுவாரு, முனிசிப்பலிட்டி பல்ப் கழட்ட ஆளு தேவைப்பட்டா போடான்னு!
எதுக்கு தெரியுமா நின்ன இடத்திலே இருந்து பல்பு கழட்டிறலாமின்னு:)
இந்த மாதிரி, நான் ஒரு தடவை , வகுப்பில் , ஆழ்ந்து , தூங்கிக் கொண்டிருக்கும் போது, வாத்தியார் அட்டெண்டென்ஸ் எடுக்குறது போல கனவு வந்து தொலைந்து விட்டது. கனவில், என் பெயரை, கூப்பிட்டு விட்டு, எனக்காக வெயிட் பண்ணுவதாகவும் இருந்த , நேரத்தில், கனவைக் கலைத்து விட்டு, புயல் , வேகத்தில் எழுந்து, "எஸ் ஸார்" என நான் கத்தி விட , பாடம் நடத்திக் கொண்டிருந்த , வாத்தியார், என்ன ஆச்சு என்று கேட்க , வகுப்பறையே சிரிக்க , வழிந்து கொண்டே உட்கார்ந்தேன்..
அட.. செந்தழல்.. நீங்க பேசாம ஒரு லெக்ட்சரரா போயிடுங்க.. மாணவர்களை புரிஞ்ச வாத்தியார்னு நல்ல பேர் எடுக்கலாம் :))
:)))))))
Post a Comment