சிம்பு சினி ஆர்ட்ஸ், மற்றும் குறள் டி.வி பி.லிட் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் வீராசாமி திரைப்படத்தின் இணை தயாரிப்பு உஷா ராஜேந்தர்..
பெயரை விஜய டி.ராஜேந்தர் என்று மாற்றிக்கொண்டுவிட்டபிறகு வந்துள்ள முதல் திரைப்படம்....கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள்,இசை,ஒளிப்பதிவு,டைரக்ஷன், ஹீரோயின் மேக்கப், லைட்டிங், புரொடக்சன் மானேஜர், யூனிட்டில் சமையல் ஆகிய பணிகளை ஏற்றுள்ளார் விஜய டி.ராஜேந்தர்..அதைவிட மிகவும் கொடிய பணியான ஹீரோ வேடமும் ஏற்று நடித்து பீதியை கிளப்பியுள்ளார் டி.ஆர்..
மும்தாஜ் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்...படத்துக்கு டபுள் ஹீரோயின் என்று யாராவது சொன்னால் அது உண்மைதான்...மும்தாஜே டபுளாக காட்சியளிக்கிறார்...இவரது காஸ்ட்யூமுக்கு முன்பெல்லாம் அதிகம் செலவாகாது என்பது உண்மை...ஆனால் இந்த படத்தில் அடுப்பு மாதிரி உள்ள மும்தாஜ் இடுப்புக்கே இரண்டு மீட்டர் துணி செலவாகும் என்று சொன்னால் அது மிகையல்ல...கட்டிப்புடி கட்டிப்புடிடா என்று பாடியவர் இப்போது பாடினாலும் கட்டிப்புடிக்கலாம்தான், ஆனால் ஒருவரால் முடியாது...
விமர்சனத்துக்கு இவ்வளவு பில்டப் தேவையில்லைதான்...இருந்தாலும் வேறுவழி இல்லையே...படத்தின் ஆரம்பக்காட்சிகள் பார்வையாளர்களை கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன...என்னுடைய தனிப்பட்ட அனுபவம் என்னவென்றால் நான் சீட் நுனிக்கே வந்துவிட்டேன்...ஆம்...ஸ்க்ரீனில் விஜய டி.ஆர் தோன்றியதும் தொண்டைக்குழி வறண்டு நாபி கமலத்தில் இருந்து உருண்டையாக பந்துபோல் ஒன்று தோன்றி உடனே தியேட்டரை விட்டு வெளியேறு என்று மிரட்டுகிறது...
கையில் அரிவாளுடன், சிகப்பு மஞ்சள் நிற சட்டைகளில் கொடுமையாக காட்சியளிக்கும் விஜய டி.ஆரை பார்த்தவுடன் கொஞ்சம் பிரட்டுகிறது...அவரது வசனம் மிரட்டுகிறது...எதிரில் இருப்பவரை அல்ல..நம்மையே...
கதை இதுதான்...விஜய டி.ஆர் ஒரு கொலைப்பதிவர்...அதாவது கூலிக்கு கொலைசெய்து,அதை ஒரு ரெஜிஸ்டரில் பதிவு செய்துகொள்கிறார்....அது ஏன் என்று கிளைமாக்ஸில் சொல்கிறேன் என்று இடைவேளையின்போது சொல்லி பயங்கரமான பீதியை கிளப்பி இண்டர்வெல் விடுகிறார்...நெம்பர் 1 அடிக்க கூட போகாமல் சீட்டிலேயே காத்திருக்கவேண்டியதாயிற்று...பாப்கார்னுக்கு பக்கத்து சீட்டில் உக்காந்திருந்த பாப்பாவின் டப்பாவில் கைவைக்க வேண்டியதாயிற்று...
விஜய டி.ஆர் மற்றும் மும்தாஜ் ( படத்தில் மும்தாஜின் பெயர் அழகுதமிழ் கலைச்செல்வி மனோகரி) இடம்பெறும் காதல்காட்சிகள் கிழவிகள் கூட ரசிக்ககூடியவை...அதிலும் ஹீரோ ஹீரோயினை பார்த்து, அடுக்கு மொழியில், முத்தம் வேனுமா, சுத்தமா வேனுமா, மொத்தமா வேனுமா என்று சத்தமாக கேட்கும்போது தமிழ் ஊற்றாக பெருகி காலை நனைக்கிறது ( எதிர் சீட்டில் குழந்தை)...
படத்தில் இடம்பெறும் பாடல்கள் காதிலேயே ஒலித்துக்கொண்டிருக்கின்றன இன்னும்..அவ்வளவு சத்தம்...அமர்ந்திருந்த இடத்துக்கு மேலேயே ஸ்பீக்கர் சாமி...பாடல்காட்சிகளில் மிக பிரம்மாண்டமான செட்டுகள்...செட் போடுவது கொஞ்சம் அரதப்பழசான ஐடியாவாக இருந்தாலும் ரசிக்கவைக்கிறது...அதிலும் பெரிய சாம்பார் கரண்டியின் உள்ளே மும்தாஜ் ஆடுவது போன்ற செட் அருமை...சாம்பாரே சாப்பிட்டதுபோல் இருந்தது...
காமெடி காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை...டி.ஆர் திரையில் வந்தவுடன் வெடிச்சிரிப்பு ஆரம்பமாகிவிடுகிறது...ஏன் எதற்கு என்று இல்லாமல் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது போங்கள்...பின்னால் உட்கார்ந்திருந்த தாத்தாவின் பல்செட் என்னோட மடியில் வந்து விழுந்தது என்றால் பாருங்கள்..எவ்வளவு ரசித்திருப்பார்...
படத்தில் எவ்வளவு அருமையான பஞ்சு டயலாக்குகள் மற்றும் அடுக்கு மொழிகள் இடம்பெறுகின்றன தெரியுமா ? மொத்த வசனமுமே அடுக்கு மொழியில் அமைந்திருப்பது மிகவும் அருமை...உதாரணம், டீ.ஆர் ஒருவரை கொல்லச்செல்லும்போது
டேய் லூசு..
உன்னோட பேரு தாசு..
இப்ப போடப்போறேன் டாசு..
நான் வெட்னா நீ பீசு..
ஆகாது இது போலீஸ் கேசு.
எனக்கு இருக்குது மக்கள் மாஸு..
என்று கடுமையான அடுக்கு மொழியை சொல்ல, கொல்லப்படவேண்டிய அரசியல்வாதி, தானாக மாரடைப்பில் செத்து விழுகிறார்...
படத்தில் மைனஸ் பாயிண்டுகள் என்று சொல்லப்போனால் ஏகே.47, 56, .33 பிஸ்டல், என்று பல நவீன ஆயுதங்கள் வந்துவிட்ட இந்த காலத்தில் டீ.ஆர் வெறும் அரிவாளை தூக்கிக்கொண்டு கொல்ல செல்வது மிக அரதப்பழசு டெக்னிக்..
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா கண்னைக்கட்டுதே...தினத்தந்தியில் வந்துள்ள வீராசாமி விளம்பரத்தை காலையில் எழுந்ததும் பார்த்ததினால் வந்த வினை...அடுக்கு மொழியை அதிகம் சொல்லி அறுக்கவில்லை...காரணம், படிக்கறவங்க பின்னூட்டம் அடுக்குமொழியிலேயே போடப்போறீங்க இல்லையா...!!!! இப்போதைக்கு நான் எஸ்கேப்...
Subscribe to:
Post Comments (Atom)
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....
-
நித்யானந்தா விவகாரம் ஆரம்பித்தவுடன் எல்லோரும் எங்கே எங்கே என்று இணையத்தில் தேடியது அந்த வீடியோவைத்தான்...!! ட்விட்டரில், பேஸ்புக்கில்...
-
'கள்' உண்ணாமை வேண்டும் அப்படின்னு காந்தி சொன்னதா கேள்வி..ஆனா அவர் கிட்ட கள் பத்தி யாரோ கதை விட்டு இருக்கனும்...கள் ரொம்ம போதை..உடம்ப...
-
பார்ப்பனீயம் குறித்து நிலவும் பெருங்குழப்பம் காரணமாக ஒரு அனானி டோண்டு ராகவன் சாரிடமே, சில விளக்கங்கள் கேட்டிருக்கிறார்... நிறைய புதிய பதிவர்...
93 comments:
ayyoo...kodumai.
where is the climax matter man ?
//சத்தமாக கேட்கும்போது தமிழ் ஊற்றாக பெருகி காலை நனைக்கிறது ( எதிர் சீட்டில் குழந்தை)...//
எப்படி குழந்தை பின் சீட்டில் இருந்தால்தானே கால் ஈரமாகும்?
//டேய் லூசு..
உன்னோட பேரு தாசு..
இப்ப போடப்போறேன் டாசு..
நான் வெட்னா நீ பீசு..
ஆகாது இது போலீஸ் கேசு.
எனக்கு இருக்குது மக்கள் மாஸு..//
::)))
அருமை
இதெல்லாம் சரிகிடையாதுங்கிறதை மட்டும் இப்போதைக்குச் சொல்லிக்கிறேன். தேவைப்பட்டால் பின்னால் வருவேன்.
அகில உலக அடுக்குமொழி போக்ரான் விஜய டி ராஜேந்தர் நற்பணி மன்றம்
அடிக்கவந்தான் தெரு
மயிலாடுதுறை
உங்களையெல்லாம் மன்னிக்கவே முடியாது. இந்தியில் எடுத்து தமிழில் டப் செய்துவிடும் மணிரெத்தினம் படத்திற்கு தூயதமிழில் படமெடுக்கும் விஜய டி ராஜேந்தர் எவ்வளவோ தேவலை.
உடனடியாகப் பதிவை வாபஸ் பெறவும்
இப்படிக்கு
அகில உலக அடுக்குமொழி போக்ரான் விஜய டி ராஜேந்தர் நற்பணி மன்றம்
வாபஸ்வாங்கவைப்பான் பேட்டை
மன்னார்கோயில்
///அகில உலக அடுக்குமொழி போக்ரான் விஜய டி ராஜேந்தர் நற்பணி மன்றம்///
அய்யோ, இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது ?
ஏன் இப்படி? எதுக்கு? ஆனாலும் அண்ணனை ஓவராக் கலாய்க்கிறீங்க... அண்ணண் ஆல் இன்டியா வீராச்சாமி ரசிகர் மன்றம் சார்பா இந்த விமர்சனத்துக்கு என் விமர்சையானக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு ரவிக்கு வீராச்சாமியின் இலவ்ச டிக்கெட்டுகள், இசைத் தட்டு மற்றும் வீராச்சாமி டீ ஷ்ர்ட் வீராச்சாமி பவள விழா அன்று அண்ணன் கையால் வழங்கவும் ஏற்பாடுகள் செய்கிறோம் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
////கதை இதுதான்...விஜய டி.ஆர் ஒரு கொலைப்பதிவர்...அதாவது கூலிக்கு கொலைசெய்து,அதை ஒரு ரெஜிஸ்டரில் பதிவு செய்துகொள்கிறார்....///
அருமை..
///படத்தில் இடம்பெறும் பாடல்கள் காதிலேயே ஒலித்துக்கொண்டிருக்கின்றன இன்னும்..அவ்வளவு சத்தம்...அமர்ந்திருந்த இடத்துக்கு மேலேயே ஸ்பீக்கர் சாமி... //
டூரிங் கொட்டாயில் பார்த்தீரா?
///பின்னால் உட்கார்ந்திருந்த தாத்தாவின் பல்செட் என்னோட மடியில் வந்து விழுந்தது என்றால் பாருங்கள்..எவ்வளவு ரசித்திருப்பார்...///
இது நமது பெல்லோ வலைப்பதிவர் இல்லையே?
இந்தப் படத்தை 'தில்'-ஆ பார்த்திட்டு விமர்சனம் வேறயா? நடத்துங்க... நடத்துங்க...
//படத்துக்கு டபுள் ஹீரோயின் என்று யாராவது சொன்னால் அது உண்மைதான்...மும்தாஜே டபுளாக காட்சியளிக்கிறார்.//
//பாப்கார்னுக்கு பக்கத்து சீட்டில் உக்காந்திருந்த பாப்பாவின் டப்பாவில் கைவைக்க வேண்டியதாயிற்று//
இது வேறயா? வேற ஒன்னும் ஆகலையே?
//தமிழ் ஊற்றாக பெருகி காலை நனைக்கிறது ( எதிர் சீட்டில் குழந்தை)...//
//சாம்பார் கரண்டியின் உள்ளே மும்தாஜ் ஆடுவது போன்ற செட் அருமை...சாம்பாரே சாப்பிட்டதுபோல் இருந்தது...//
//பின்னால் உட்கார்ந்திருந்த தாத்தாவின் பல்செட் என்னோட மடியில் வந்து விழுந்தது //
//கடுமையான அடுக்கு மொழியை சொல்ல, கொல்லப்படவேண்டிய அரசியல்வாதி, தானாக மாரடைப்பில் செத்து விழுகிறார்...//
:-)))))))))))
நல்லா எழுதியிருக்கீங்க அப்பூ!
ஸ்ரீதர், படம் பார்த்து நான் தமிழ்கூறும் நல்லுலகிற்கு எந்த கொடுமையும் செய்யவில்லை சாமி...சும்மா ஒரு கற்பனை....
நீங்க மீதியை வெள்ளித்திரையில் கண்டுவந்து உண்மையான விமர்சனம் எழுதினால் தன்யனாவேன்..
( நானும் நீங்களும் ஒன்னும் எதிரிகள் இல்லையே...ஏன் இப்படி எழுதத்தோனுது எனக்கு)
////இவரது காஸ்ட்யூமுக்கு முன்பெல்லாம் அதிகம் செலவாகாது என்பது உண்மை...ஆனால் இந்த படத்தில் அடுப்பு மாதிரி உள்ள மும்தாஜ் இடுப்புக்கே இரண்டு மீட்டர் துணி செலவாகும் என்று சொன்னால் அது மிகையல்ல///
உம்மை என்னவென்று சொல்வது? மும்தாஜ் பற்றி நல்லவிதமாக ஒரு பதிவிட்டு இந்த சாபத்திலிருந்து நீங்கவும்.
அகிலவுலக ஆரணங்கு மும்தாஜ் ரசிகர்மஞ்சம்,
கொசப்பேட்டை,
சென்னை.
இப்படி தனக்குத்தானே பின்னூட்டம் போட்டுக்கொள்ளும் செந்தழலாரை எதிர்த்து மாபெறும் கண்டனப் பொதுக்கூட்டம் சென்னைப் புத்தகக்கண்காட்சிக்கு நேர் எதிரில் பச்சையப்பாஸில் நடைபெறும்.
விழாவிற்கு தலைமை அகில உலக அடுக்குமொழி போக்ரான் விஜய டி ராஜேந்தர் என்பதை சொல்லவும் வேண்டுமா?
இடம் மற்றும் ஏனைய விவரங்கள் பின்னர் வெளியடப்படும்.
அகில உலக அடுக்குமொழி போக்ரான் விஜய டி ராஜேந்தர் நற்பணி மன்றம்
சுயமாய் பின்னூட்டம் பெறுவான் சந்து
போயஸ்கார்டன்
///சென்னைப் புத்தகக்கண்காட்சிக்கு நேர் எதிரில் பச்சையப்பாஸில் நடைபெறும்.//
உருப்படியா ஒரு புத்தக கண்காட்சி நடக்குது...அதுல அணுகுண்டு வெடிக்கனும்னு எப்படி தோனுது உங்களுக்கு...
பின்னூட்ட மட்டுறத்தல் செய்யும் செந்தழலாரை எதிர்த்து LG Office முன்னால் மாபெறும் தர்ணா
அழைப்பு விடுப்போர் -
மட்டுறுத்தலை மன்னிக்கமாட்டாதோர் கழகம்
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை
//விஜய டி.ஆர் ஒரு கொலைப்பதிவர்...//
யோவ், கொலைப்'பதிவர்' அவரு மட்டுந்தானா? RRRRRRRRRR!
தமிழனே, தன்மானத் தோழா தரணி புகழ வாழ்ந்த நண்பா. விழி. உறங்கியது போதும். உன் வீரம் எங்கே, கலை எங்கே, நீ வாழ்ந்த நிலை எங்கே, கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்தக் குடிமகனே. எங்கே அவைகளெல்லாம் எங்கே போயின தூக்கமா, இல்லை ஏக்கமா, தூங்கியது போதும் தோழா துடித்தெழு.
வஞ்சகர் சூழ்ச்சியால் வீழ்ந்தோம் வீழ்ந்தது போதுமினி வாழ்வோம் என போர்முரசு கொட்டி எழுந்திரு.
நேற்றிருந்தோம் முன்பிருந்தோம் நெடுநாளயத் தூதுவராய் வீற்றிருந்தோம் என வீண்பெருமை பேசிக்கொண்டிருக்க வேண்டாம்.
வாருங்கள் செந்தழலாருக்கு எதிராய் அணி திரள்வோம்.
தமிழுக்கு இழுக்கா
அதைப் பொறுக்க எனக்கு கிறுக்கா
இது எவருக்கும் அடுக்கா
அகில உலக அடுக்குமொழி போக்ரான் விஜய டி ராஜேந்தர் நற்பணி மன்ற தலைவர்
விஜய டி ராஜேந்தர் (நானேதான் பின்ன எனக்கு யார் நற்பணி மன்றம் வைப்பா?)
Thanithiru, Vizhithiru, Pasithiru!!
With this as the caption on your blog page, I assumed you'll be a smart one and alert. How could you ..? Did you pay to watch this crap?
அருமையான பதிவு ரவி.. ரசித்தேன் ரசித்தேன் இன்னும் ரசித்து கொண்டே இருக்கிறேன்
:)))))))))))))))))))))
//எப்படி குழந்தை பின் சீட்டில் இருந்தால்தானே கால் ஈரமாகும்?
//
சென்ஷி! இது போன்ற விமர்சனமெல்லாம் படிக்கும்போது அனுபவிக்கணும்! ஆராயக் கூடாது!
//கட்டிப்புடி கட்டிப்புடிடா என்று பாடியவர் இப்போது பாடினாலும் கட்டிப்புடிக்கலாம்தான், ஆனால் ஒருவரால் முடியாது...//
சூப்பர் தல :-))
கடிச்சுக் குதறீட்டீங்க போங்க
செந்தழலார் ரசிகர் மன்றம்
சிட்னிக் கிளை
பின்னூட்ட லேன்
பாரமாற்றா
சூப்பர் காமெடி... கரடித்தொல்ல தாங்க முடியல. இருந்தாலும் நகைச்சுவை விருது வாங்கும் என்பதில் சந்தேகமில்லை :)
came here via karthik's blog. nalla post :)
////ஆஹா....இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம்ங்க. T.R. படம் அதுவும் முதல் நாளே. ///
சாமீ, கொஞ்சமாவது படிச்சு பார்த்து பின்னூட்ட்டம் போடுங்கப்பா...ஏதாவது போடனும் அப்படீங்கறதுக்காக !!!! கொடுமை...
///Anonymous said...
Thanithiru, Vizhithiru, Pasithiru!!
With this as the caption on your blog page, I assumed you'll be a smart one and alert. How could you ..? Did you pay to watch this crap?
....////
ஓ நீங்களும் அவர் மாதிரி தானா ?
ஒரு பதிவுக்கு பின்னூட்டம் போடனும்னா அத படிக்கனும்வே...
ரவி,
நேற்று மாலை தலைவலி, நிஜமா சொல்லுகிறேன், இதைப் படித்து சிரித்த சிரிப்பில் தலைவலி போய் விட்டது. போதா குறைக்கு சந்தேகம் தோன்ற மீண்டும் படித்து, படம் பார்க்காமேலேயே எழுதப்பட்ட விமர்சனம் தானே என்று உறுதி செய்துக் கொள்ள இன்னொறு முறை. சிரித்த சிரிப்பில் கண்ணில் நீர் வர, சூப்பர் . ரொம்ப நாள் ஆச்சு இப்படி படித்து :-)
ஒரு ஜல்லியை கீழே இறக்க வேற வழிதெரியலியேப்பா !!!
///சென்ஷி! இது போன்ற விமர்சனமெல்லாம் படிக்கும்போது அனுபவிக்கணும்! ஆராயக் கூடாது!
Friday, January 19, 2007
///
அப்படிப்போடு !!!
///////நேற்று மாலை தலைவலி, நிஜமா சொல்லுகிறேன், இதைப் படித்து சிரித்த சிரிப்பில் தலைவலி போய் விட்டது. போதா குறைக்கு சந்தேகம் தோன்ற மீண்டும் படித்து, படம் பார்க்காமேலேயே எழுதப்பட்ட விமர்சனம் தானே என்று உறுதி செய்துக் கொள்ள இன்னொறு முறை. சிரித்த சிரிப்பில் கண்ணில் நீர் வர, சூப்பர் . ரொம்ப நாள் ஆச்சு இப்படி படித்து :-) /////
உஷா, நன்றி நன்றி !!! மேலும் உற்சாகமா எழுத இந்த கமெண்ட் உறுதுணை !!!
அருண்குமார், நன்றிப்பா !!!!!
//படத்துக்கு டபுள் ஹீரோயின் என்று யாராவது சொன்னால் அது உண்மைதான்...மும்தாஜே டபுளாக காட்சியளிக்கிறார்.//
போட்டோவ பாத்தே டரியல் ஆயிட்டேன். நீங்கவேற விமர்சனம்னு போட்டவுடனே எதையும் தாங்கும் இதயம் போலருக்குன்னு நினைச்சேன்.
//படத்துக்கு டபுள் ஹீரோயின் என்று யாராவது சொன்னால் அது உண்மைதான்...மும்தாஜே டபுளாக காட்சியளிக்கிறார்.//
இரண்டு யானைகுட்டி படத்துல டூயட் பாடுது.
//கையில் அரிவாளுடன், சிகப்பு மஞ்சள் நிற சட்டைகளில் கொடுமையாக காட்சியளிக்கும் விஜய டி.ஆரை பார்த்தவுடன் கொஞ்சம் பிரட்டுகிறது//
எங்க அடிவயித்துலையா?..தியேட்டர நாரடிக்கலையே?..
//பாப்கார்னுக்கு பக்கத்து சீட்டில் உக்காந்திருந்த பாப்பாவின் டப்பாவில் கைவைக்க வேண்டியதாயிற்று//
ஓ மல்டிபிளக்ஸ்லதான் படம் பாக்குற பழக்கமோ..
ஆமா பக்கத்துல இருந்த்த பாப்பா வயசு என்ன?..
உங்களுக்கு இவ்வளவு வருமா comedy??......சபாஷ்!! ஆனாலும் ரொம்ப தைரியமான ஆள் தான் நீஙக.(i wouldn't watch it even if i get a free ticket!!)இப்பதான் பெனாத்லாரோடத படிசிட்டு வன்தேன்.......வெளுத்து வாஙரீஙக எல்லாரும்.
அய்யையோ நீஙக வெறும் விளம்பரத்த பாத்து எழுதினதா?? நல்ல வேளை மத்த பின்னூட்டதெல்லாம் பாத்தேன்.
Anyway good one Ravi!!
அடுக்கு மொழியா? இந்த மாதிரி படத்தத் துணிச்சலாப் பாத்துட்டு...அதுக்கு விமர்சனமும் போட்டு எங்களைக் கொடுமைப் படுத்துன கொடுமையான தியாக மனப்பான்மைக்கு இடுக்கு மொழி, உடுக்கு மொழி, கடுக்கு மொழி இருந்தாலும் பத்தாது.
என்னால இன்னமும் கேக்காம இருக்க முடியல...என்னனு இந்தப் படத்துக்குப் போனீங்க? சொல்லியிருந்தீங்கன்னா...ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படத்த வீட்டு ஓம் தேட்டர்ல போட்டிருப்பேன்ல. நிம்மதியா இருந்திருப்பீங்க.
///Radha Sriram said...
உங்களுக்கு இவ்வளவு வருமா comedy??......சபாஷ்!!
///
நம்ம வீட்டுக்கும் முதல் முறையா வந்திருக்கீங்க...பாராட்டியுமிருக்கீங்க...நன்றி....
//ஆனாலும் ரொம்ப தைரியமான ஆள் தான் நீஙக.(i wouldn't watch it even if i get a free ticket!!)///
நாங்க மட்டும் போயிருவமா என்ன ?
///இப்பதான் பெனாத்லாரோடத படிசிட்டு வன்தேன்.......வெளுத்து வாஙரீஙக எல்லாரும்.//
பெனாத்தல் காமெடியிலே ஊறினவராச்சே...
//அய்யையோ நீஙக வெறும் விளம்பரத்த பாத்து எழுதினதா?? நல்ல வேளை மத்த பின்னூட்டதெல்லாம் பாத்தேன்.
Anyway good one Ravi!!
//
நன்றி !!!
///அடுக்கு மொழியா? இந்த மாதிரி படத்தத் துணிச்சலாப் பாத்துட்டு...அதுக்கு விமர்சனமும் போட்டு எங்களைக் கொடுமைப் படுத்துன கொடுமையான தியாக மனப்பான்மைக்கு இடுக்கு மொழி, உடுக்கு மொழி, கடுக்கு மொழி இருந்தாலும் பத்தாது.
////
மயிலார் என்னை திட்டறதும் அடுக்கு மொழியிலேவா !!!
///என்னால இன்னமும் கேக்காம இருக்க முடியல...என்னனு இந்தப் படத்துக்குப் போனீங்க? சொல்லியிருந்தீங்கன்னா...ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படத்த வீட்டு ஓம் தேட்டர்ல போட்டிருப்பேன்ல. நிம்மதியா இருந்திருப்பீங்க. ///
முழுசா படிங்க தலை....நான் தினத்தந்தி விளம்பரத்தை பார்த்துட்டு விமர்சனம் எழுதினேன்...
மேக்னா நாயுடு எங்கய்யா?
50 போடுவோமா
ஆட்டம் ஆடுவோமா
பாட்டு போடுவோமா
பிகர் தேடுவோமா
அவள கூட்டிட்டு ஓடுவோமா?
தல
இது அடுக்கு மொழில வருமா பாத்து சொல்லு தல!
அதில் ஜாதி பெயர் இருப்பதால் ( அதாவது மேக்னா @#$ஏ#$# ) அவரை பற்றி போடவில்லை, ஹி ஹி ஹி...
சும்மா...இப்போ கொஞ்ச நேரம் வெயிட் செய்யுங்க, உடனே அப்ட்டேட் செய்கிறேன்..
பின்னி பெடலெடுத்துருக்கீங்க..சூப்பர் காமெடி..ஆனா ஒன்னு ரொம்ப மன தைரியம் உள்ள ஆள் தான் நீங்க..பதிவு எழுதனும்னு முழு படத்தையும் பார்த்தீங்களா?
ஓ கதை அப்படியா? நான் என்ன நெனச்சேன்னா....விளம்பரத்தப் பாத்துட்டுப் படத்துக்குப் போயிட்டீங்களோன்னுதான். அப்பாடி நீங்க தப்பிச்சீங்க. இனிமே ஒங்கள தெகிரியமா சந்திக்கலாம். :-)
நீ உருப்படமாட்ட.
அட போங்கப்பா..!!
'வல்லவன்'-ல புடிச்ச தலைவலி தமிழ்நாட்டவுட்டு போகாம மேலும் மையங்கொண்டு 'வீராசாமி'-ல சுத்தி சுத்தி சுளுக்கெடுத்துட்டு இருக்கு...
கலக்கபோறது யாருன்னு அப்பன் மகனுக்கும் நடக்குற போட்டியில நம்ம வயிறும் சேர்ந்து கலக்குது..
அதாகப்பட்டது.. தமிழ்கூறும் திரையுலக ரசிககண்மணிகள் இந்த மாதிரி படங்கள பாக்கும் போதுதான் சில நல்ல படங்களோட தன்மைய புரிஞ்சிக்கிறாங்க..
இதப்போயி விமரிசனம் பண்ணிக்கிட்டு..
ஒருத்தரோட காமெடி இன்னொருத்தருக்கு டிராஜடி. என்னதான் நீங்க பாடு பட்டிருந்தாலும் அதைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு எடுத்துக் கூறி மற்றவர்களைக் காத்தமைக்கு மிக்க நன்றி!!
வலைப்பதிவுகளில் தொந்தி கொண்ட மந்தி வீராசாமிக்கு முந்திக் கொண்டு விமர்சனம் செய்து மக்களைக் காத்த உங்களுக்கும் புந்தியில் இருந்து நன்றி (அடடே உங்க விமர்சனப் பாதிப்பைப் பாத்தீங்களா???!)
soopper vimarsanam pa..vimarsanthirkey ivalvu siriupu varudhey innnum padam partha..saamiyovvvvv
ரவி..
கொஞ்ச நாளைக்கு முன்னாடி
வல்லவன் பார்க்காம ஓடி
விமர்சனம் எழுதினான் ஒரு கேடி..
அவந்தான் இதுக்கு முன்னோடி!
அதுக்கு இருக்கு காபி ரைட்டு!
கொடுக்காட்டி நடக்கும் செம பைட்டு!
யாரங்கே..
பினாத்தலுக்கு பதில் சொல்லுங்கப்பா!
வல்லவனுக்கு விமரிசனம் எழுதி இந்த சேட்டைய தொடங்கி வெச்சது யாரு?
கவிப்பிரியன், இது என்ன....அந்த கொடுமையான விஷயத்தை செய்து எல்லாரையும் பீதியில் உறையவைத்தது இந்த பினாத்தலேதான்...!!!!
//பினாத்தலுக்கு பதில் சொல்லுங்கப்பா!//
கேள்வியும் அவரே பதிலும் அவரே! :))
வீடு கட்டணும்னா வேணும் சிமெண்டு
எம்படத்து பேர போட்டதால உனக்கு அம்பது கமெண்டு
போதை வேணும்னா போடணும் சில ரவுண்டு
படத்த பாக்காமலே விடாத நீ சவுண்டு
இன்னிலருந்து ஸ்டார்ட் ஆகுது டீ.ஆரு
கவுண்ட்டு....
ஏ டண்டனக்கா ஏ டணக்குனக்கா
இன்னிக்கு காலையில ரேடியோ மிர்ச்சியில கேட்டாங்கய்யா ஒரு கேள்வி "புதுசா தியேட்டர் சென்னையில திறந்திருக்காங்களே தெரியுமா?"ன்னு, அத போன் போட்டு ஆம்பிள பொம்பிளங்க கிட்ட தனித்தனியா "உங்களுக்கு தெரியாதா? உங்களுக்கு தெரியாதா?.."ன்னு வேற கேக்கறாங்க. ஏம்ப்பா இது சென்னை வாழ் மக்களுக்கு ஏத்த கேள்வியா?- சொல்லுங்கப்பா?
சூப்பர் தலை
போட்டுட்டே வலை
அடிக்குது அலை
நடக்கப்போது கொலை
வாடுது ரெட்ட இலை
ஓடிடு எங்கேயாவது மூலை
-லக்கிலுக்
ஒருங்கிணைப்பாளர்
அகில உலக செந்தழலார் கொலைவெறிப்படை,
மடிப்பாக்கம்
Ungal pathivai padithen , arumai ;)
//சென்ஷி! இது போன்ற விமர்சனமெல்லாம் படிக்கும்போது அனுபவிக்கணும்! ஆராயக் கூடாது!//
ஸாரி, பக்கத்து சீட்டு பாப்பா வரைக்கும் கரெக்டா இருந்ததா அதான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்.
தலைவா!
உன் கோவணத்தை உருவிட்டாங்க தலைவா.
இங்கே போயி பாரு
http://vavaasangam2.blogspot.com/2007/01/blog-post_19.html
எல்லோரும் சீக்கிரம் இங்கே போய் பாருங்க
http://vavaasangam2.blogspot.com/2007/01/blog-post_19.html
கலக்கியிருக்காரு செந்தழலாரு..சொல்லவேயில்ல
///ஸாரி, பக்கத்து சீட்டு பாப்பா வரைக்கும் கரெக்டா இருந்ததா அதான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். ///
அநியாயம்....பாப்பா என்பது சின்ன குழந்தையை மீன் பண்ணேங்க...
ரவி
உங்கள் விமர்சனம் அருமை. மிகவும் மகிழ்ந்து போனேன். டி.ஆர். படம் என்றாலே தனி சிறப்பு தான்.இல்லையா? அவரின் வசனத்திற்காகவே படம் பார்த்து அனுபவிக்க வேண்டும். பெரியவரின் பல் செட் மடியில் விழுந்ததை எண்ணி எண்ணி சிரிதேன்.
////உங்கள் விமர்சனம் அருமை. மிகவும் மகிழ்ந்து போனேன். டி.ஆர். படம் என்றாலே தனி சிறப்பு தான்.இல்லையா? அவரின் வசனத்திற்காகவே படம் பார்த்து அனுபவிக்க வேண்டும். பெரியவரின் பல் செட் மடியில் விழுந்ததை எண்ணி எண்ணி சிரிதேன்.////
அய்யா நீங்களுமா ??? படத்தை நான் பாக்கலை பாக்கலை பாக்கலை.....
சும்மா தினத்தந்தி விளம்பரத்தை பார்த்து எழுதினேன்...
///கொலைசெய்து,அதை ஒரு ரெஜிஸ்டரில் பதிவு செய்துகொள்கிறார்///
படம் கஜினி மாதிரி இருக்கும்ன்னு சொல்லுங்க.
மணி, நீங்களும் கடைசி பாராவை படிக்கலையா ? என்னத்தை சொல்ல போங்க...
ஹாய் ரவி,
//தினத்தந்தியில் வந்துள்ள வீராசாமி விளம்பரத்தை காலையில் எழுந்ததும் பார்த்ததினால் வந்த வினை...//
இதுக்கே உங்களுக்கு ஆஸ்கார் அவார்ட் குடுக்கனும், இதுல படத்த பார்க்கரவங்களுக்கு டி,ஆர். ஸ்டைலில ஒரு பெரிய்ய கவிதை தான் குடுக்கனும் னு நினைக்கிறேன்.
வணக்கம் ரவி
நல்ல அறுவை மன்னிக்கவும் அருமை விமர்சனம்.
படத்தைப் பாத்துச் சிரிக்கிறேனோ இல்லியோ,//சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது போங்கள்...பின்னால் உட்கார்ந்திருந்த தாத்தாவின் பல்செட் என்னோட மடியில் வந்து விழுந்தது என்றால் பாருங்கள்..எவ்வளவு ரசித்திருப்பார்...// இதை வாசிச்சு சிரிச்சேன் நன்றி
ரவி மனசுவிட்டு சிரிக்க்கும்படியிருந்தது உங்க விமர்சனம்.தன் படத்தின் நகைச்சுவை டிராக் எழுத டி.ஆர் ஆள் தேடுகிறார் சிபாரிசு செய்யவா?
தமிழ்மணத்திலும் 'கொலைப்பதிவர்' 'வலைப்பதிவராக' கால் பதிக்கப் போறாராம்.[எப்படியிருக்கும்?]
வணக்கம் ரவி,
கலக்கல் பதிவு
கலக்கல் காமெடி..கலக்குங்க...
வீராசாமி படக் கொடுமை
ப்திவிட்டுச் சொன்னது அருமை!
வீராச்சாமி தலைப்பைப் பார்த்தே உங்க பதிவைப் படிக்காம ஸ்கிப் பண்ணிட்டேன்.. அந்த அளவுக்கு பீதியைக் கிளப்பிடிச்சு சன் டிவியில் வந்த டிரெயிலர் :-D அப்புறம் நீங்க ரொம்ப காமெடியா எழுதியிருக்கீங்கன்னு மு.கார்த்திகேயன் கொடுத்த விளம்பரம் பார்த்து தான் வந்தேன்! :-)
//படத்துக்கு டபுள் ஹீரோயின் என்று யாராவது சொன்னால் அது உண்மைதான்...மும்தாஜே டபுளாக காட்சியளிக்கிறார்//
:-D
நீங்க ஆசப்பட்ட மாதிரி அடுக்குமொழியில யாரும் பின்னூட்டம் போடலியே?
சரி, நானே போடறேன்!
என்மேல இல்லையா கரிசனம்
படத்த பாக்குண்டா பொதுசனம்
என் படத்தை பண்ணாதடா விமர்சனம்
உன்ன உதைக்கும்டா என் சாதிசனம்
ஏய் டண்தனக்கா!
ஏ டனக்குனக்கா!
கண்டிப்பாக சோகத்தில் உள்ளவர்கள் இந்தப்படத்தை பார்த்தாவது தங்கள் சோகத்திற்கு ஒரு வடிகால் தேட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த வருடம் சிங்கத்தில் ஆரம்பித்திருக்கிறது அதனால் ஆண்களுக்கு ஆபத்து என்று ஒரு வதந்தி நிலவுகிறதாம்
ஒருவேளை வீராசாமி படத்தைப்பற்றிதான் சொல்லியிருப்பார்களோ..
ஆண்கள் என்று சொல்வதற்குப் பதிலாக தமிழ்நாட்டு மக்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். :)
நன்றி கோபிநாத் அவர்களே...அடிக்கடி நம்ம வீட்டுக்கு வாங்க...!!!
வணக்கம் வாத்தியார்....வருகைக்கு நன்றி !!!!!!!!
பின்னூட்டத்துக்கு நன்றி சேதுக்கரசி...
வாங்க ஈசிஆர்.....வித்யாசமான பேரு...கி.க.சா படம் பாத்தீங்களா ? அடிக்கடி வாங்க, கமெண்டுக்கு நன்றி!!
சத்தியமா சொல்றேன் ரவியண்ணே!
எனக்கும் கி.க.சா படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!
ப்ளாக்கர் Register பண்ணும்போது வந்த குளறுபடி அந்த பேரு! சரி, வித்தியாசமா இருக்கேன்னு விட்டுட்டேன்
இதே மாதிரி பதிவு போடுங்க!
ஏய்.. டண்டணக்கா... டணுக்கணக்கா..
நான் எடுத்திருக்கேண்டா படம்.
மக்கள் மனசுதான் என் இடம்.
அவங்களுக்கு மனசு திடம்.
அது என்னிக்கும் தங்க குடம்.
அது நம்ம தியட்டரதான் தேடும்.
படத்துக்கு வெற்றி கூடும்.
அது நூறுநாள் ஓடும்.
நான் என்னிக்கும் மிதக்கற ஓடம்.
எம்படத்துக்கா கட்டுற நீ லாடம்.
கத்துக்குவ நீ சீக்கிரமா பாடம்.
ஏய்.. டண்டணக்கா... டணுக்கணக்கா..
எப்படிங்க இந்த படத்துக்கெல்லாம் தைரியமா போறீங்க? ஆனாலும் ரொம்ப தைரியசாலிதான் நீங்க!
எப்படிங்க இந்த படத்துக்கெல்லாம் தைரியமா போறீங்க? ஆனாலும் ரொம்ப தைரியசாலிதான் நீங்க!
எச்சூச்மி
தியேட்டர்ல நூறு நாள் ஓடாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்.
இங்கயாச்சும் நூறு அடிப்போமா?
காதலுக்காக செத்தவன் தாஸு
அவந்தான் எங்களுக்கெல்லாம் பாஸு
வருடத்திற்க 3 படங்களில் கதாநாயகனாக நடிப்பாராம் என்ற செய்தி எங்கள் எல்லார் மனங்களிலும் இடியென இறங்குகிறது.
பாவனா சிரிச்சா பால்குடமா இருக்கும்
அசின் ஆடினா அம்சமா இருக்கும்
பூஜா போனாவே புண்ணியமா போவும்
ஆனா
என் ஆஸ்தான நாயகி
மும்தாஜ் குலுக்குனா மொத்த தமிழ்நாடே குலுங்கும்
நான் திரையில வந்தா மட்டும் ஏண்டா பதுங்கறிங்க?
என்னையே கலாய்ச்சிட்டு இருக்கிங்களே
முடிஞ்சா பா.க.ச மாதிரி ரா.ப.ச ஆரம்பிக்க தில்லு இருக்கா?
டவுசர் போட்ட சின்ன வயசுல தெரியாம தைரியமா பார்த்த டி.ராஜேந்தர் இரண்டு வேஷத்தில் நடித்த உறவைக் காத்த கிளி படத்தில் வர்ற அடுக்குமொழி ( நெற்றியில் வீபூதிப்பட்டை அடித்த நபரை சாராயக்கடையில் அடிக்கும் சண்டைக்காட்சி)
டேய் பட்டை
நீ போடுறியா பட்டை
போகப்போகுது உன் தோள்பட்டை
டிஷ்யூம்..டிஷ்யூம் பைட் தொடரும்..
இப்பெல்லாம் மனசு நொந்து நூடுல்ஸா இருக்கும்போது டி.ராஜேந்தர் படத்து சீனை / டயலாக்கை நினைச்சாலே மனசு டென்சனாகி டென்சனாகுறதை விட்டுடும் ...இல்லைன்னா டி.ராஜேந்தர் பட சீனை / டயலாக்கை நினைக்கவேண்டி வரும்னு பயம் தான்
:-)))
டி.ராஜேந்தர்ன்னா சிரிப்பு கேரண்டி
ஆம போஸ்டர் ஒட்டரது குட TR பார்த்துருபார் போல
அவரு பேரிய ஆலுங்க
அப்பன் மவன் , இவங்க அடிக்கற லூட்டி தாங்கலப்பா!! வழிநில்லா
நகைச்சுவை திரைப்படம்( அதுதாம்பா, non-stop Comedy Flim )!!
இவரை பேசாம இந்திய அணியில சேர்த்துக்கலாம்.பேசி பேசியே எதிரணிய காலி பண்ணி கப் வாங்கி குடுத்துடுவாரு.
"மத்தவங்க 6 பால் போட்டா ஓவரு
நான் 1 பால் போட்டாலே நீ ஓவரு
எனக்கு தேவையில்ல BEAMERu
நான் பேசினாலே அவுட்டாயிடுவ டோமரு"
super super super. vimarsanam pattaya kilaputhu. super.
நீங்க எங்க தலைவரை பற்றி எந்த பதிவும் எழுதலியா??
டோண்டு நற்பணி மன்றம்
சான் ப்ரான்சிஸ்கோ
கரடிய பிடித்து துன்புருதியதர்காக உஙக எல்லாது மெலயும் நடவடிக்கை எடுக்க போறோம்
- bluecross
//http://www2.blogger.com/comment.g?blogID=26285239&postID=116912169667268473//
இதோ எங்க தலையின் வீர விமர்சனம்
இப்படிக்கு
அ.மு.க.
சிலுக்குவார் பட்டி மெயின் கிளை.
வ.வா.ச-1ம் ஆண்டு-நகைச்சுவை போட்டி
முதல் பரிசு நீங்கள் அனுப்பிய ப்ளோக் தான்
வாழ்த்துக்கள் !!
நானும் வீராசாமி பார்த்துட்டு வாயடைச்சுக் கிடந்தேன். வெளியில் சொன்னாக்
கொலை வுழும்னு ஒரு பயம்தான்.
'பார்க்காமலே'யே உங்க விமரிசனம் சூப்பர்.:-))))
ஆஹா.. :-) ..
Post a Comment