Saturday, November 22, 2008

சாய்பாபா !!!!!!!!!

<<< நாளை பாபா பிறந்தநாள், அதனால் இந்த மீள் பதிவு >>>

சாய் பாபா செய்துவரும் சேவைகளை பற்றியதான பதிவு இது....அவர் சத்திய நாராயண ராஜுவாக நவம்பர் 1926ல் பிறந்ததையோ, ஆந்திர புக்கபட்டினத்தில் எட்டாவது அகவையில் கல்விகற்றதையோ எழுத வரவில்லை...அதை சாய் டிவோட்டிகள் எழுதுவார்கள்...



பிரதமர்கள், ஜனாதிபதிகள், வெளிநாட்டு பிரமுகர்கள் வந்து சந்திக்கிறார்கள், மாதம் 800 கோடி நிதி வந்து குவிகிறது, அதை எப்படி செலவழிக்கிறார், என்றெல்லாம் கேட்டால் இந்த பதிவு அதை முழுதும் விளக்க வரவில்லை...

இந்த பதிவு அவரது சேவைகள் பற்றி, குறிப்பாக அவரது மகத்தான மருத்துவ சேவைகள் பற்றியதானது....எளியவருக்கு சேவை, அனைத்து உயிர்களிடத்தான அன்பு என்பதை போதிக்கிறார்...அதில் எளியவருக்கு சேவை என்பதை செயலில் காட்டுமுகத்தான் நாடெங்கும் அவர் அமைத்து இருக்கும் பல மருத்துவமனைகளில் ஒன்றை பற்றியதான பதிவு இது..




பாபாவின் பத்தாயிரம் ஆசிரமங்கள் மற்றும் சேரிட்டபுள் ட்ரஸ்ட்கள் நூற்றி அறுபத்தி ஆறு நாடுகளில் அமைந்துள்ளது எவ்வளவு உண்மையோ, அவற்றில், பெங்களூர் ஒயிட் பீல்டில் அமைந்துள்ள மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மிக ப்ரம்மாண்டமானது என்றால் அது மிகையான சொல்லாக இருக்க முடியாது...ஏக்கர் கணக்கில் கண்முன்னே விரிந்து கிடக்கும் அந்த மருத்துவமனைகளில் லட்சக்கணக்கானவர்கள் இது வரை பயன்பெற்றும், இனி பயன்பெறவும் போகிறார்கள் என்பதை எண்ணும்போது மனது நிறைகிறது...

இந்த மருத்துவமனையில்

* இதயநோய்களுக்கான தனிப்பிரிவு
* சிறுநீரகம் சம்பந்தம்மான நோய்களுக்கான தனிப்பிரிவு
* நரம்பியலுக்கான தனிப்பிரிவு
* பொது மருத்துவத்துக்கான தனிப்பிரிவு

என பாங்குற அமைந்துள்ளது...

தனிப்பிரிவு என்றால் வெறும் சிறியதொரு பிரிவை கற்பனை செய்யவேண்டாம்...ஏக்கர் கணக்கில் இருக்கும் தனி மருத்துவமனை. ஒவ்வொரு பிரிவிலும் நூற்றுக்கணக்கான பண்பான ஊழியர்கள்..உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்கள்...சாய் டிவோட்டிகள் பலர்...டிவோட்டியல்லாதோர் சிலர்..பணத்தை கொட்டிக்கொடுக்கப்பட்ட உலகப்புகழ்பெற்ற மருத்துவர்கள்...

வருடம்தோறும் ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் பைசா செலவில்லாமல் செய்யப்படுகின்றன....நரம்பியல் துறையில் கீ ஹோல் ஆப்பரேஷன்கள், பொது மருத்துவ துறையில் டெஸ்ட் ட்யூப் பேபிக்கள், இதய அறுவை சிகிச்சை துறையில் ட்ரான்ஸ்ப்ளாண்ட்டேஷன்கள் என்று நாட்டில் / உலகில் மருத்துவ துறையில் உள்ள அத்துனை அட்வாண்ட்ஸ் டெக்னாலஜிகளையும், அந்த துறையில் உலகப்புகழ் பெற்ற மருத்துவர்களை கொண்டு இந்தியாவில் எங்கோ கிராமத்தில் வசிக்கும் சாயி பாபா கதவை தட்டும் ஒரு ஏழைகளுக்கு இலவசமாக செய்யப்படுகின்றன..

இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமான விடயம், இங்கே எந்தவொரு அறுவை சிகிச்சைக்கும் / ஸ்கேன் போன்ற டெஸ்டுகளுக்கும் "சல்லி பைசா கிடையாது"...

ஆம்...முற்றிலும் இலவச மருத்துவமனை...தலையை சொறியும் வார்டு பாய் கிடையாது....லஞ்சம் கேட்கும் அரசாங்க மருத்துவர் கிடையாது....காய்ந்து போன ப்ரட் கிடையாது...உலகத்தரம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களையும், மருத்துவர்களையும் சர்வ சாதாரன பாமரன் சந்தித்து பைசா செலவில்லாமல் ஆலோசனையும், சிகிச்சைகளையும், படுக்கை வசதிகளையும், உணவு உடைகளையும் பெறுவது என்ன சாதாரண விடயமா ? சொல்லுங்கள்...

தரம் ? தரத்துக்கென்ன குறைச்சல் ?

பாபாவின் ஆசிரமம் அமைந்துள்ள ப்ரஷாந்தி நிலையத்தில் அமைந்துள்ள ஷிரீ சத்திய சாய் இன்ஸ்ட்டியூட் ஆப் ஹையர் லேர்னிங் (மருத்துவ உயர் படிப்புக்கானது), தேசிய அளவிலான தரக்கட்டுப்பாட்டு தேர்வில் ஏ++ சான்றிதழ் பெற்றுள்ளது...இதற்கு மேல் தரத்தை பற்றி சொல்ல வேண்டுமா ? இங்கேயும் கல்வி முற்றிலும் இலவசம் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமா ?

அவர்மீதான விமர்சனங்களை முன்வைக்கும் ஒருவர் எப்படி அவரது நற்செயல்கள் பற்றி எழுதமுடியும் என்றெல்லாம் கேட்காதீர்கள்...அதெல்லாம் நாங்களும் எழுதுவோம்..நல்ல விடயம் எங்கே நடந்தால் என்ன, உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியது தான்...



தனி தெலுங்கானாவுக்கு பாபா சப்போர்ட் செய்யவில்லை என்று கேட்டார் ஒரு தெலுங்கு நன்பர்....இது சிறுபிள்ளைத்தனமா இருக்கு...இதற்கு அவர் என்ன செய்வார்...என்றேன்..அவரால் முடிந்த நற்செயல்களை செய்யட்டும் அவர்...எங்களால் முடிந்தவரை அவற்றை கொஞ்சம் வெளிச்சம் போட்டு காட்டுவோம்...இந்த வெளிச்சம் அவருக்கல்ல, எங்கள் மனதுக்கு..

இந்த பதிவை என் தலையில் நறுக் என்று குட்டி எழுத வைத்த டாக்டர். ஹெக்டே அவர்களுக்கு நன்றி...எஸ்.கே அய்யாவின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்..

<<< நாளை பாபா பிறந்தநாள், அதனால் இந்த மீள் பதிவு >>>

<<< சாய் டிவோட்டிகள் + ஓட்டும், நாத்திகர்கள் - ஓட்டும் குத்தவும்...>>>

40 comments:

Anonymous said...

thanks 4 this post ravi

Anonymous said...

வாங்க நவீன், அதுக்குள்ள படிச்சாச்சா...போட்டோக்களுக்கு நன்றி.

வடுவூர் குமார் said...

என்ன ரவி??
இப்படி பண்ணிட்டீங்க!!
நாம் போடலாம் என்று வைத்திருந்த படங்களை போட்டுடீங்க?? :-))
இந்த கட்டிடம் மத்தியில் உள்ளதே அந்த டூம் எப்படி கட்டப்பட்டது என்பதை என் பதிவில் அனேகமாக அடுத்த வாரம் எதிர்பார்க்கலாம்.

Anonymous said...

வாங்க வடுவூராரே...

அந்த டூமுக்கு நடுவில் இருக்கு ஷாண்ட்லியர் பார்த்திருக்கீங்களா, ஒரு வீடு சைஸ்...:))))

வாங்க, போடுங்க உங்க பதிவை...போட்டோவை மீண்டும் நீங்க ஏத்த கஷ்டமில்லாமே நானே ஏத்திட்டேன்...

அபி அப்பா said...

இவரு நாயகன். "நாலு பேருக்கு நல்லது செய்யனுமுன்னா...."டைப் போல இருக்கு.

மங்கை said...

//எங்களால் முடிந்தவரை அவற்றை கொஞ்சம் வெளிச்சம் போட்டு காட்டுவோம்...இந்த வெளிச்சம் அவருக்கல்ல, எங்கள் மனதுக்கு//

ஹ்ம்ம்ம்...நல்லா எடுத்து சொல்லி பழகிட்டீங்க..நல்ல பதிவு..வாழ்த்துக்கள்

Anonymous said...

வாங்க அபி அப்பா..

உங்க பதிவுல ஒரு கொடுமை செஞ்சுட்டு எப்படி பின்னூட்டம் போடல்லாம் மனசு வந்துது ?

கவிதைன்னு லேபிள் கொடுத்து யாரோ எமலோகம் போக காரணமாயிடாதீங்க..

P:)))))))

Anonymous said...

வாங்க மங்கை...ஊட்டத்துக்கு நன்றி.

மாசிலா said...

எவ்வளவு கெடைச்சுது?
என்ன பதவி?
வர்ர தேர்தலுக்கு எந்த இடத்தில சீட்டு?
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!!!
:-]

Anonymous said...

மாசிலா, சும்மா கலாய்த்தல் தானே...அப்படீன்னா ஓக்கே...

:)))

Anonymous said...

ரவி அய்யா,

பாபா உண்மையில் சக்தி வாய்ந்தவர். அவரை பற்றிய கிண்டல் வேண்டாமே அய்யா. சாமி சாபம் பொல்லாது என்பார்கள்.

Anonymous said...

பாலா,

எங்கேப்பா கிண்டல் செய்தேன் ?

அபி அப்பா said...

//உங்க பதிவுல ஒரு கொடுமை செஞ்சுட்டு எப்படி பின்னூட்டம் போடல்லாம் மனசு வந்துது ?//

எப்டியோ ஒரு விளம்பரம் கிடச்சுது. இனியாவது 4 பேர் பாப்பாங்க.( நா தான் சொன்னனே "நா முடிவுசெஞ்சுட்டா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்"னு. நாங்கள்லாம் போக்கிரில்ல...

Anonymous said...

ஏங்க பாலா...

எங்கே கிண்டல் செய்தேன் ? இந்த பதிவில் எந்த கிண்டலும் செய்யவில்லையே...நன்றாக பாருமைய்யா.

Anonymous said...

நானும் வருவேன், ஆட்டத்தை கலைப்பேன்.

Anonymous said...

////எப்டியோ ஒரு விளம்பரம் கிடச்சுது. இனியாவது 4 பேர் பாப்பாங்க.( நா தான் சொன்னனே "நா முடிவுசெஞ்சுட்டா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்"னு. நாங்கள்லாம் போக்கிரில்ல... ///

எல்லாம் நேரக்கொடுமை...சனி உச்சத்துல இருக்கா, இல்லை செவ்வாயோட கபடியாடுதான்னு பாக்கனும்.

மாசிலா said...

ரவி//எங்கேப்பா கிண்டல் செய்தேன் ?//
ம்... அப்புறம் ஏன் அவரு 'மூஞ்சி' இருக்குற படத்தை போட்டீங்க? இதுல ஏதொ வெஷமம் அடங்கி இருக்குதானே? தலைப்புல ஏன் இத்தன !!!!!!
:-))

Anonymous said...

//எங்கே கிண்டல் செய்தேன் ? இந்த பதிவில் எந்த கிண்டலும் செய்யவில்லையே...நன்றாக பாருமைய்யா//

ரவி அய்யா..,

பதிவில் இல்லாவிட்டால் என்ன.. பின்னூட்டங்களில் தொடர்கிறதே!

Anonymous said...

ரவி அய்யா, மேலே இருக்கும் பாலா.. போலி!

மாசிலா said...

இந்த சின்ன வயதில் இப்படி ஒரி 'சீரியசான' பதிவை எழுதும்படி உங்கள் மனதை கெடுத்தது யார் ரவி? சொல்லுங்கள். சீவி விடுகிறேன்!
:-)

Anonymous said...

என்ன நேரக்கொடுமை பாலா இது ?

உண்மையான பாலாவின் ப்லாகர் எண் என்ன ?

அந்த பாலா போலி என்றால் நீங்கள் யார் ?

நீங்கள் போலி என்றால் அந்த பாலா யார் ?

பதிவில் ஒரு கருமமும் இல்லையே, நான் எப்படி தெரிந்துகொள்வது.

மண்டை காய்கிறது. ஒரு போஸ்ட் போடும்

அபி அப்பா said...

செந்தழலாரே!! எனக்கு இருகோடுகள் தத்துவம் தெரியும். "வீராசாமி" படம் சூப்பர்னு ஒரு பதிவு போட்டா, அப்ப என்னோட "கவுஜ' சூப்பராயுடுமே! இப்ப என்ன செய்வீங்க!!!

Anonymous said...

உருப்புடியா ஏதாவது எழுதலாம்னா உடமாட்டீங்களா மாசிலா?

இந்த பாலா பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்லுங்க மாசிலா.

Anonymous said...

அபி அப்பா, நால்லா வாகாத்தான் கெளம்பி வந்திருக்கீரு...உங்களுக்கு சரவணா சீடியை கொரியர்ல அனுப்பி வெக்கிறேன்..

மாசிலா said...

//உருப்புடியா ஏதாவது எழுதலாம்னா உடமாட்டீங்களா மாசிலா?//
ஐய்! கொழந்தையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டறீங்களோ?மொதல்ல இந்த மாதிரி சீரியஸா எழுதறத விட்டுடங்க. இல்லன்னா பொழுதோட உங்க முடியெல்லாம் நரச்சி கூடிய சீக்கிரம் வழுக்கதான்.

பாலா தொந்தரவுக்கு எனக்கு எதுவும் முடியாது. மன்னிக்கவும் ரவி.

Anonymous said...

அப்போ என்னை எழுத்தாளர்னு ஒத்துக்கோங்க :))))) நான் இப்படி எழுதறதை விடறேன் ஹி ஹி ஹி

மாசிலா said...

மன்னிக்கவும் ரவி. எனக்கு சில வேலைகள் இருக்கினறன். விடை பெறுகிறேன். உங்களுடன் கலாய்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
:-)))
அன்புடன் மாசிலா.

மன்னைகோசை said...

THE PERSONS WHO ARE CRITICISING BABA ARE NOT ABLE TO DO A SINGLE YEOMAN SERVICE TO SOCIETY OR COMMUNITY. WITHOUT HELPING OTHERS JUST LIKE THAT THEY ARE SPEAKING ANY THING AGAINST ANY PERSONS. VALUE BASED SERVICE OF BABA IS HIGLY CHERISHED THE MINDS OF NEEDY. IF TIME PERMITS HE WILL DEFINITELY DO BETTER THAN THIS PRESENT CONDITIONS. LET US PRAY THE ALMIGHTY FOR A LONG LIFE TO BABA FOR HIS FRUITFUL SERVICE.

VSK said...

தன்னலமற்ற சேவை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டகத் திகழ்வன இவ்விரு மருத்துவமனைகளும்.

புட்டபர்த்தியில் இருக்கும் மருத்துவமனைத் திறப்புவிழாவுக்கு நான் சென்றிருந்தேன்.

அட்த நேர்த்தியும், பாங்கும், பணியாற்றும் ஒவ்வொருவரின் அடக்கமன, அன்பான நடத்தையும் எவரையும் கவரும் ஒன்று.

ஒத்த மனத்தினராய் இருப்பதாஅல் உங்களால் இது உணர முடிந்தது என நம்புகிறேன்.

உங்களது சேவை மனத்தைச் சொல்லுகிறேன்.

சாய்ராம்!

பங்காளி... said...

இதத்தான் நான் வருசக்கணக்கா சொல்லிட்டு இருக்கேன்...ஒருத்தரும் கேக்கல...

LOVE ALL...SERVE ALL

இதை நாம ஒவ்வொருத்தரும் மனசுல ஒரு ஓரமா நினைக்க ஆரம்பித்தாலே பாதி பிரச்சினைகளை தீர்த்துவிடலாம்.ம்ம்ம்ம்ம்

Bharath said...

கொஞ்சம் சங்கர னேத்ராலயாவைப்பற்றியும் எழுதலாமே??

Anonymous said...

its a great post ravi. thanks.

அப்பா டக்கர் அமீர்பர் said...

Yes, i accept he is doing lot of good service to the community.

To do the service,Where the money is coming from?

From his earning or Is he a millionaire in the past.The answer is - his devotee's hard earned money.

Whatever good he does, all goes in vain because he is guiding his followers in a wrong path.

He proclaimed himself as god. As per the words of manicka vasagar - he is a "MOOKTI NERI ARIYA MOORKAN".
I hate him for his "sitthu game".Ask sai to worship god and let other also to worship god.Listen to Rajaji's song"kurai onrom ellai Govinda"

I REQUEST SAI,YOU AND HIS FOLLOWERS AND ALL HUMAN BEINGS TO GO TO "THIRUMALA AND WORSHIP THE ALMIGHTY"
" OM NAMO NARAYANA"

நல்லதந்தி said...

எந்த சாமியார்களிடத்தும் எனக்கு பற்று இல்லை என்றாலும்,அவர்கள் மக்களுக்கு நல்லது செய்யும் போது நிச்சயமாக வரவேற்க்க வேண்டும்.அதிலும் சாய்பாபா ஆந்திராவில் கொண்டு வந்த குடிநீர்த் திட்டம் பல இலட்சக்கணக்கான மக்களுக்கு உயிர் கொடுத்துள்ளது.

கிரி said...

சாய்பாபா அவர்கள் மீது பல குற்றசாட்டுகள் உண்டு என்றாலும், அவர் செய்யும் பல உதவிகள் பாராட்டத்தக்கவை. எனக்கு இவரை பிடிக்காது ஆனாலும் அவர் செய்யும் பல உதவிகள் (கிருஷ்ணா நதி நீர், ஏழைகளுக்கு சிகிச்சை, ஆபரேசன் மற்றும் பல) கண்டிப்பாக பாராட்டுக்குரியவை.

vijay tiruppur said...

hello ravi,
vijay fm tirupur,,
sai an internatinal criminal last year UK parliment contemd and watching his movement,,,
many complaint fr homosexuel attempt to foreigners,, 6 chargesheets agst sai...

vijay tiruppur said...

doondu,,,,,,,,,,,,,,,,
sai,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, so,,,,,su samy,,,,,,,,,,jayendran,,,,,,,,

ETHIRPAKKALAM,,,welset ravi,,

ரவி said...

விஜய். அதைப்பற்றி பேச விரும்பவில்லை. நான் அவரது சேவைகளை பற்றித்தான் பேசினேன்.

Anonymous said...

[B]NZBsRus.com[/B]
Skip Idle Downloads Using NZB Files You Can Instantly Find Movies, Games, MP3s, Software and Download Them at Electric Speeds

[URL=http://www.nzbsrus.com][B]Usenet[/B][/URL]

Anonymous said...

Infatuation casinos? inquire this advanced [url=http://www.realcazinoz.com]casino[/url] helmsman and confine a spear up online casino games like slots, blackjack, roulette, baccarat and more at www.realcazinoz.com .
you can also exclude our additional [url=http://freecasinogames2010.webs.com]casino[/url] up something at http://freecasinogames2010.webs.com and turn back in apposite folding conversion !
another inexperienced [url=http://www.ttittancasino.com]casino spiele[/url] theme is www.ttittancasino.com , because german gamblers, from aggregate fabric manumitted online casino bonus.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....