Wednesday, August 22, 2007

தேவேகவுடா: கொஞ்சம் கர்நாடக அரசியல் பார்ப்போமா?

மைசூர் மாகாணம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது, கர்நாடகாவாக மாற்றம் செய்யப்பட்டது ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுவத்து மூன்றில்...அந்தப்பக்கம் கோவா, இந்தப்பக்கம் ஆந்திரா, இப்பிக்கா கேரளா, அப்டிக்கா தமிழ்நாடு, என்று நடுவாந்திரமாக உட்கார்ந்திருக்கும் இந்த மாநிலம் இந்தியாவின் எட்டாவது பெரிய மாநிலம்...மக்கள் தொகையில (கொஞ்சம் கேப்) ஒன்பதாவது பெரிய மாநிலம்..அங் ( கேப்டன் விஜயகாந்த் பாணியில் படிக்கவும்)...

கர்நாடக அரசியலில் புயலாகட்டும், சின்ன காற்றாகட்டும் அது ஹெச்.டி.தேவகவுடாவை சுற்றித்தான் இருக்கும்...ஹரதனஹள்ளி தொட்டகவுடா தேவே கவுடா ( Haradanahalli Doddegowda Deve Gowda) ஒரு சிவில் எஞ்சினீயருங்க...தன்னோட இருவத்தெட்டாவது வயசுல 1962 ல ஹொலெநரசிபூர் தொகுதியில் சுயேச்சையா நின்னது ஆரம்பிச்ச இவரோட அரசியல் வாழ்க்கை, இன்னமும் கர்னாடகத்தை ஆட்டிப்படைச்சுக்கிட்டு இருக்குன்னா பாருங்களேன்...



1953 ல ஸ்கூல் படிப்ப முடிக்கறப்பவே காங்கிரஸ்ல மெம்பராம் தேவேகவுடா...பள்ளிக்கூட படிப்பு முடிஞ்சதும் காங்கிரஸ்ல பம்பரமா சுழன்று வேலைபார்த்தவர் 1962 வரைக்கும் ( அதாவது சட்டசபை தேர்தல்ல சீட் மறுக்கப்படும் வரைக்கும்) காங்கிரஸ்ல தான் இருந்தார்...எம்.எல்.ஏ ஆகுறத்துக்கு முன்னாடி, அஞ்ஞனய்யா கூட்டுறவு மையம் (சொசைட்டி), அதுக்கப்புறம் ஹொலெநரசிபூர் தாலுக்கா முன்றேன்ற மையத்துல எல்லாம் உறுப்பினரா இருந்து பதவிகளையும் ஒரு கை பார்த்திட்டு தான் இருந்திருக்கார்...

அதிலிருந்து தொடர்ந்து எம்.எல்.ஏ தான்...ஏழாவது முறையும் எட்டாவது முறையும் பொதுநலம் மற்றும் நீர்வள மந்திரியாவும் பணியாற்றியிருக்கார்...(Minister of Public Works and Irrigation.)...விவசாய குடும்பத்திலிருந்து வந்தவருங்க இவரு...அதனால இந்த பதவி கொடுத்தாங்களோ என்னமோ...



ஆங்...சீன் போடுறதுல நம்ம தலைவரை மிஞ்ச ஆளே கிடையாதுன்னு இப்போ ஒரு பேச்சு இருக்கில்ல...ஆனா அதை நம்ம தலைவர் 1987 லே ஆரம்பிச்சுட்டார்...நீர்வளத்துறைக்கு சரியான நிதி ஒதுக்கலைன்னு மந்திரி சபையில் இருந்து விலகிட்டார்...அதனால பெருவாரியான மக்களின் பரபரப்பான ஆதரவை பெற்றார்...



இந்த பரபரப்பான ஆதரவுதான் 94- 96 ஆம் ஆண்டுகள்ல இவரை கருனாடக முதல்வர் பதவிக்கே கொண்டுபோய் உட்கார வைச்சதுங்க...அதுலயும் உச்சபட்சமா மைய அரசியலில் நடந்த குழப்பங்களால் நடந்த ஒரு அரசியல் சித்து விளையாட்டு, இவரை பிரதமாராகவே ( 1996 - 1997) உட்கார வைச்சுடுச்சு....

ஜனதாதளத்தை பிரிச்சு மதசார்பற்ற ஜனதா தளம்னு நடத்திக்கிட்டு வரும் தேவகவுடா, 1999 சட்டசபை எலக்ஷன்ல பாரதீய ஜனதா கட்சியை போல காங்கிரசிரம் மண்ணைத்தான் கவ்வினார்..ஆனால் 2004 ஆம் ஆண்டு இறுதியில் நடந்த தேர்தல்களில் 57 சீட்டுகள் பெற்று பாரதீய ஜனதா ( 79) மற்றும் மண்ணை கவ்விய காங்கிரஸ் ( 64) ஆகியவற்றுடன் தனிப்பெரும் சக்தியாக தன்னை நிரூபித்தார்...



மதர்சார்பற்ற ஜனதா என்ற பெயரிலேயே அவர் எந்த ஓட்டுக்களை குறிவைக்கிறார் என்று நான் சொல்லாமலேயே உங்களுக்கு புரியும்...அதை கீழே உள்ள படம் மேலும் விளக்கும்...



மேலும் தேர்தல்களில் கர்நாடகத்தில் செல்வாக்குள்ள கவுடர்களையும், ஒக்கலிகர்களையும், லிங்காயத்துக்களையும் அரவணைப்பது, மேலும் செல்வாக்குள்ள ராஜ்குமார் ரசிகர்களை அவ்வப்போது தட்டிக்கொடுப்பது, (ராஜ்குமார் இருந்தவரை அவரை சந்திப்பது, அவர் மரணத்துக்கு பிறகு அவ்வப்போது அவரது மனைவி பர்வதம்மாளையும் மகன்களையும் சந்தித்து, தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக்கொள்வது), மேலும் அவர்களது குடும்ப வியாபாரங்களுக்கு எந்தவித இடையூறும் வராது காத்து அரண் அமைத்து நிற்பது என்று தாஜா செய்து வைத்துள்ளார்...



மேலும் காவேரிப்பிரச்சினையில் இவர் எடுத்திருக்கும் நிலை, யாராலும் புரிந்துகொள்ள இயலாதது...மைசூர், மாண்டியா மாவட்டங்களில் கடுமையான ஆதரவு நிலை...தமிழ்நாட்டுக்கு சொட்டு தண்ணி தரமாட்டேன் என்று பேசுவார்...பெங்களூரில் மாடரேட்டாக ஏதாவது சொல்லிவைப்பார்...அடுத்தால் கிளம்பி காரைக்கால் சனீசுவர பகவானிடம் பூஜை செய்ய கிளம்பி நிற்பார்...எனக்கென்னவே தேவேகவுடா கர்நாடக அரசியலில் இருக்கும் வரை இந்த பிரச்சினையை நீறு பூத்த நெருப்பாகத்தான் வைத்திருப்பார் என்று தோன்றுகிறது...




பெங்களூரில் வசிக்கும் இவரது குடும்பம் பற்றி சொல்லவேண்டும் என்றால் மனைவி சென்னம்மாள்...மீடியா வெளிச்சத்தில் விழுந்ததேயில்லை என்று சொல்லவேண்டும்...நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள்...இளைய மகன் ஹெச்.டி.குமாரசாமி ( இளைஞர் பட்டாளத்துக்கு செல்லமாக குமார் அண்ணா ) , கருனாடக முதல்வராக தேவே.கவுடாவின் சிறிய நாடகம் மற்றும் குட்டி கலாட்டாவினால் அமர்த்தப்பட்டார்....ஊரில் (ஹொலெனரசிபுரத்தில்) சினிமா தியேட்டர் நடத்திக்கொண்டு, சினிமாத்துறையில் திரைப்பட வினியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருந்த குமாரசாமி இன்றைய கருனாடக முதல்வர் என்றால் அதுதான் தேவேகவுடாவின் ராஜதந்திரம்...

மூத்த மகன் ஹெச்.டி.ரேவண்ணா அரசில் அமைச்சராக பணியமர்த்தப்பட்டுள்ளார்...சுத்திரதாரி யார் என்று நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா ? ஹெச்.டி.தேவகவுடாதான்...இதுபற்றி கொஞ்சம் பார்ப்போம்..

2004 தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி இல்லாமல் போனது...மதசார்பற்ற முகமூடி போட்டிருந்த தேவேகவுடா, தனிப்பெரும் கட்சியாக இருந்த பாரதீய ஜனதா (79) உடன் கூட்டணி வைக்க இயலாது என்று எண்ணினார்...அதனால் காங்கிரசுக்கு (64) வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தார் கவுடா...தரம்சிங் முதல் அமைச்சராக பொறுப்பேற்றார்...

பத்தொன்பது மாதம் ஆட்சிப்பொறுப்பில் இருந்த தரம்சிங்கை கவிழ்க்க தேவகவுடா கையாண்ட உத்தி - அரசியல் வாழ்வில் பழம் தின்று கொட்டை போட்டவர்களை கூட வாயை பிளக்கை வைத்தது....ஆம்..மகன் குமாரசாமியை தூண்டி நாற்பது எம்.எல்.ஏக்களை ஆதரவை விலக்க வைத்தார்...மீதம் உள்ள எம்.எல்.ஏக்களை (கட்சி கூட்டத்தை) கூட்டி, குமாரசாமியையும், நாற்பது எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்தார்...ஆனால் உள்ளடி வேலையாக, பாரதீய ஜனதாவுடன் பேச்சு நடத்தி, கூட்டணி அமைத்து, முதல்வர் பதவியை பங்கிட்டுக்கொள்வதாக பேரம் பேசி, தனது மகன் குமாரசாமியை முதல்வராகவும் - பாரதீய ஜனதாவை சேர்ந்த எடியூரப்பாவை துணை முதல்வராகவும் ஜனவரி 2006 ஆம் ஆண்டில் உட்காரவைத்து, தனக்கு எதுவுமே தெரியாது என்ற குட்டிப்பாப்பா முகபாவனையை வைத்துக்கொண்டு அவர் ஊடகங்களில் நடத்திய நாடகத்தை பார்த்த சில காங்கிரஸ் பெருசுகளுக்கு ஹார்ட் தனது ஆட்டையை நிறுத்திக்கொண்டது என்றால் பாருங்களேன்...!!!!

ஆனால் குமாரசாமி ஆட்சியில் நல்ல வீரிய காட்டினார் என்றுதான் சொல்லவேண்டும்...டொம்ளூர் சுற்றுப்பாலம், மடிவாளா முதல் எலக்ட்ரானிக் சிட்டி வரையிலான எலவேட்டட் ப்ரிட்ஜ் ப்ராஜட் ஆரம்பம், மெட்ரோ ரயில் ப்ராஜக்ட் துவக்கம், தேவனஹள்ளி இண்டர்நேஷனல் ஏர்ப்போட்டுக்கான பணிகள், பதவி பறிபோகும் செண்டிமெண்ட் காரணமாக எந்த முதல்வரும் போகாத சாம்ராஜ்புரா போனது, ஜனதா தரிசனம் என்ற வகையில் பொதுமக்களை நேரடியாக ஒவ்வொரு நாளும் சந்தித்தது, க்ல் குவாரி பிரச்சினையில் எழுந்த லஞ்சப்புகாரை ஊதி தள்ளியது என்று அதிரடியாகத்தான் ஆட்சி செய்துவருகிறார்...

ஆயிற்று...குமாரசாமியின் இருபது மாத டர்ன் ஓவர்...அடுத்த மாதம் ஆட்சியை பாரதீய ஜனதாவிடம் ஒப்படைக்கவேண்டும்...ஆனால் மந்திரி சபையில் இருக்கும் தேவேகவுடாவின் ரகசிய அல்லக்கைகள் ஆட்சியை ஒப்படைக்க மாட்டோம் என்று அங்கங்கே பேசி வருவது, எடியூரப்பாவுக்கு புளியை கரைக்கிறது...கடந்த சுகந்திர தினவிழாவில் அடுத்த வருடம் நான் தான் முதல்வராக கொடி ஏற்றுவேன் என்று அவர் திருவாய் மலர்ந்தது போதாதா தேவகவுடாவுக்கு...குமாரசாமியை விட்டு "எடியூரப்பா - இவ்வாறு பேசியது எனக்கு மனக்கசப்பை உருவாக்கியுள்ளது" என்று பேசவைத்துவிட்டார்...முன்னாள் முதல்வர் தரம்சிங்கை தூண்டிவிட்டு, ஜனதாதளத்துக்கு நிபந்தனை அற்ற ஆதரவு தர தயார் என்று பேசவைத்துவிட்டார்...நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து கை-குலுக்கி, ஒரு புதிய உறவுக்கு மதசார்பற்ற ஜனதா தளம் தயார் என்று கருனாடக மக்களுக்கு புரியவைத்து, எடியூரப்பாவின் முதல்வர் கனவிலும் மண் அள்ளி போட்டுவிட அடிகோலுகிறார் என்று புரிகிறது...



தனது எண்ணங்களுக்கு எதிரானவர்களை ஆட்டதில் இருந்தே ஒழித்துக்கட்டும் ஹெச்.டி.தேவகவுடாவின் சூழ்ச்சிகளுக்கு ஏற்கனவே பலியானவர் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.க்ருஷ்னா...இன்றைக்கு சட்டீஸ்கர் மாநில கவர்னராக குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறார்...இப்போதைக்கு பாரதீய ஜனதாவின் எடியூரப்பா...பாவம்பா நீ...எடியூரப்பா...



இன்னும் ஒரு மாதத்தில் நடைபெறப்போகும் ஒரு சூப்பர் நாடகத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமி மீண்டும் ஆட்சியில் அமரத்தான் போகிறார் என்று அடிமனது அரித்துக்கொண்டிருக்கிறது...அதற்கு தகுந்தார்ப்போல காய்கள் நகருவது கண்கூடாக தெரிகிறது...கருனாடக அரசியலை எழுதினால் தேவ.கவுடாவை மறப்பது மிகவும் கடினம் என்று எல்லாருக்கும் தெரியும்...ஆனால் அரசியல் சதுரங்கத்தில் இப்படிப்பட்ட காய்நகர்த்தல்களை அரசுவிழாவில் அரைத்தூக்கத்தில் இருந்த முன்னாள் பிரதமர் அடித்து தூள்கிளப்புவது....அடுத்த மாதம் வரை அரசியல் நோக்கர்களுக்கும், பத்திரிகை நன்பர்களுக்கும் கொண்டாட்டம் தான் போங்கள்.....

11 comments:

✪சிந்தாநதி said...

இங்கேயும் காத்து திசை மாற ஆரம்பிச்சிடுச்சா?

செந்தழல் ரவி மறுபடி சீரியஸ் பதிவு போட ஆரம்பிச்சுட்டார் ;)

நல்ல அலசல். நிறைய உழைச்சிருக்கீங்க போல...புள்ளி விவரத்தோட அள்ளி விடுறீங்க...

சூப்பர்.!!!

உண்மைத்தமிழன் said...

தம்பி புல்லரிக்குதுடா ராசா..

தேவேகவுடாவை புட்டு புட்டு வைச்சிட்ட.. அதுலேயும் நீ சொல்லாத ஒண்ணு.. கவுடா, ராமகிருஷ்ண ஹெக்டே ஆட்சில இருந்தப்ப அவரைக் கவுக்க என்னவெல்லாம் பல்டி அடிச்சாருன்னு கேள்விப்பட்டன்னு வைச்சுக்க இன்னொரு பத்து பக்கத்துக்கு பதிவு போடலாம்.. சுப்ரமணியம் சுவாமியைத் தூண்டிவிட்டு அல்லது ஸ்குரூ கொடுத்து ஒரு வேகாத மேட்டர் ஒண்ணைப் போட்டு ஹெக்டேயின் சுயமரியாதை என்னாச்சுன்னு கவுடா கத்தி.. கோர்ட், கேஸ் என்று ஹெக்டேயின் கழுத்தை நெறித்து வெளியே தள்ளினார் கவுடா...

இவர் பிரதமர் பதவியை ராஜினாமா பண்ண வேண்டி வந்தப்ப நடந்தது செம கூத்து.. உண்மையாவே சொல்றேன்.. இவரை பிரதமர் பதவில இருந்து ராஜினாமா பண்ண வைச்சது காங்கிரஸ் அல்ல. தமிழ்நாட்டில் இருந்து வெளியான ஒரு பத்திரிகையின் மூலமாக தமிழ்நாட்டின் 'நல்ல' அரசியல்வாதிகள் எல்லாம் சேர்ந்து செஞ்ச வேலை அது. மனுஷன் மொழி தெரியாம ஒண்ணை சொல்லி வைக்க.. அதை ஒண்ணை வைச்சே.. கவுத்தாச்சு.. நேர்ல வா.. விலாவாரியா டைம் டேபிள் போட்டுச் சொல்றேன்..

(ஆமா.. ஏதோ புத்தன் மாதிரி 10 பக்கத்துக்கு தீட்டுறியேன்னு என்னக் குத்தம் சொல்லுவ.. ன்னிக்கு உனக்குன்னு வந்தவுடனே எல்லாத்தையும் மறந்துட்டு அரிச்சந்திரனாயிட்ட.. இப்ப புரியுதா.. மேட்டர்ன்னு எழுத வந்தா மேட்டர் முழுசையும் எழுதித்தான் ஆகணும்னு..)

Anonymous said...

Good analysis Ravi. I feel Kumarasamy should retain the power even after 20 months.
Regards
Karthik

Anonymous said...

அருமையாக செய்திருக்கீங்க ரவி. படங்கள் நல்லாருக்கெ

Anonymous said...

///செந்தழல் ரவி மறுபடி சீரியஸ் பதிவு போட ஆரம்பிச்சுட்டார் ;)///

அதானே. ஏம்பா தம்ம்ம்ப்பீ

Anonymous said...

excellent post man.

சதுக்க பூதம் said...

He gave Rajya saba MP seat to MAM RAmasamy

பெத்தராயுடு said...

கவுடரு இந்த BMIC சேர்மன் அசோக் கெனிக்கு கொடுக்குற கொடச்சல் இருக்கே... மடிவாலா, மாருதி நகர் பெருச்சாளிங்க தோத்துப் போகும். மைசூரு ஹைவேக்கு கவுடரு காலத்துக்கு அப்பறந்தான் விடிவு பொறக்கும்போல!

இந்தக் கூத்துல, புது ஏர்ப்போர்ட் அடுத்த மார்ச்ல தயாராயிரும். ஆனா ஏர்போர்ட் ரோடு 2009 கடேசிலதான் முடியுமாம். அதுவரைக்கும் மாட்டுவண்டில ட்ராப் பண்ணுவாங்களோ என்னமோ.

இன்னிக்கு டைம்ஸ் பாத்தீங்களா? புது கவர்னர் பதவியேற்பு விழா கூத்துகள போட்டோவோட போட்டிருந்தாங்கிய.

பிஜேபி ஜனதா தளத்த பொளக்குமா, ஜனதா தளம் பிஜேபிய பொளக்குமா, இல்ல காங்கிரஸ் ஜனதா தளத்த பொளக்குமான்னு ஒரே மர்மமா கீது.

ரவி said...

வந்தாச்சு வந்தாச்சு ரோய்...!!!!

லக்கிலுக் said...

//இவர் பிரதமர் பதவியை ராஜினாமா பண்ண வேண்டி வந்தப்ப நடந்தது செம கூத்து.. உண்மையாவே சொல்றேன்.. இவரை பிரதமர் பதவில இருந்து ராஜினாமா பண்ண வைச்சது காங்கிரஸ் அல்ல. தமிழ்நாட்டில் இருந்து வெளியான ஒரு பத்திரிகையின் மூலமாக தமிழ்நாட்டின் 'நல்ல' அரசியல்வாதிகள் எல்லாம் சேர்ந்து செஞ்ச வேலை அது. மனுஷன் மொழி தெரியாம ஒண்ணை சொல்லி வைக்க.. அதை ஒண்ணை வைச்சே.. கவுத்தாச்சு.. நேர்ல வா.. விலாவாரியா டைம் டேபிள் போட்டுச் சொல்றேன்..
//

உண்மைத்தமிழன் அண்ணே!

"மதுரை முத்து" மேட்டர் மாதிரி ஏதோ ஒண்ணு ரெடி செஞ்சி வெச்சிருக்கீங்க போலிருக்கே? :-)))

ராஜ நடராஜன் said...

இவர் பிரதமர் பதவி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது உண்மையிலேயே வருத்தப் பட்டேன்.ஆனா இவரு மகன முதல்வர் ஆக்குறதுக்கு ஆடிய நாடகம் பார்த்தப்பத்தான் இவரு எத்தனை பெரிய தில்லாலங்கடின்னு புரிஞ்சது.

(பி.கு. மொக்கைய விட இந்த மாதிரி பார்வைகள் நல்லாவே இருக்கு.)

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....