Wednesday, October 10, 2007

பெயரிலி பதிவுகளுக்கு கோனார் நோட்ஸ்

இந்த பதிவை படித்து பெயரிலி பதிவுகளை நன்றாக புரிந்துகொள்ளுமாறு அன்பர்களை கேட்டுக்கொள்கிறேன்...பெயரிலி பதிவுக்கு நோட்ஸ் பார் டம்மீஸ் என்று தான் முதலில் தலைப்பு வைக்கலாமுன்னு பார்த்தேன்...ஆனா என் வாயால உங்களை எல்லாம் எப்படி டம்மீஸ்னு சொல்றது..

அலைஞன் : அலையாதவன்
குவியம் : குவிந்துகிடப்பது
அச்சிலசுக்குதி : அச்சில் ஏற்றக்கூடியது
எழுபடவில்லை : தெரியவில்லை
ஆயாசம் : பாயாசப்பதிவுகள் எழுதும்போது வருவது
ஒன்றறைத்துட்டு : சிறிய விடயம்
விளித்தெழுதியன் : சொல்லியது
ஒத்தியங்கமாட்டார் : சேர்ந்துகொள்ளமாட்டார்
மாற்றமைப்பு : வேறு அமைப்பு
சத்தியக்கடதாதி : சத்தியமா லட்டர் போடறது
ஈழத்தமிழுருவேறி : ஈழத்தமிழர்

எலியெதிர்ப்புக்க்காழ்ப்புத்தனத்துக்கும் : எலியை எதிர்க்கும் முறை
கொள்கைப்போராட்டத்தன்மைக்கும் : கொள்கையை வைத்து போராடுவது
குழந்தைப்பிள்ளைத்தன்மைக்குமிடையிலே : சிறுபிள்ளைத்தனம்

தட்டச்சிடுகின்றாரோ : டைப் பண்ணுகிறாரோ
காலத்துக்கொவ்வியதைத் : காலத்துக்கு தகுந்ததை
ஒவ்வாதிருப்பது : சேராதிருப்பது
மூடிக்கொண்டாவதிருக்கவேண்டும் : மூடிக்கினு இருக்கனும்
குருவிப்பதிவுகளை : லொட்டையான பதிவுகள்
நூற்கண்டுச்சிக்கற்றன்மையை : சிக்கல் (நூல் கண்டு சிக்கல்)
'பேன்' பெரியார்ப்பதிவர்களுக்கும் : அரிப்பு புடிச்சவங்க
பெரியாரைப்புரியா : பெரியாரை தெரிந்துகொள்ளாத
ஈழப்பதிவுக்குஞ்சுகளுக்கும் : குறைந்த வயசு ஈழப்பதிவர்கள் (ஆண்கள்)
அச்சுழியிழுந்தோடிய : அடிச்சிக்கிட்டு போன
ஈழப்பஞ்சமருக்கெதிரான : ஈழத்தை சேர்ந்த அஞ்சி பேருக்கு எதிராக
தற்ப்பாற்புணர்ச்சியாளர்களே : கே / லெஸ்பியன் காரர்கள்
சறுகுவது : சறுக்குவது
ஈழத்தில் ஐபிகேப்பை : இலங்கையில் ஐ.பி.கே

பகுதிநேரமார்க்ஸியப்போராளிக்கீச்சுக்காட்டற்பின்னூட்டமே : எனக்கே புரியல
பார்ப்பனியப்பின்னூட்டவாலாக்களும் : பார்ப்பணீய ஆதரவாளர்கள்
இச்சுயநியமிப்புத்தான்தோன்றிச்சமாதானத்தூதுவர் : சமாதான தூதர் (Own Appointment)

கடைசீயா ஒன்னு சொல்றேன்...இது நிஜமாலுமே ஒரு நேயர் விருப்ப ( நான் தான் அந்த நேயர்) சீரியஸ் பதிவு...!!!!

45 comments:

ரவி said...

எவ்ளோ பெரிய வார்த்தைகளை கண்டுபிடிச்சு எழுதுறார்...

இவர் ஒரு புக் எழுதி அதை சாகித்ய அக்காடமிக்கு அனுப்பினா பரிசு இவருக்கு தான்...

அங்க இருக்கவனுங்க மண்டை காய்ஞ்சு ப்ரைஸ் குடுத்திருவானுங்க...

We The People said...

அதினியும் நீங்களே ஆராய்ச்சிபண்ணி கண்டுபிடித்ததா?? அடேங்கபா... இந்த பிரச்சனைக்கு தான் நான் அந்த பக்கமே போகாம இருந்தேன்.. கோனார் நோட்ஸ்க்கு நன்றி :)))))))))))))

theevu said...

லப்டாப் பிடுங்கப்பட்ட புலியது.

ஆனாலும் பாயும் கவனம்:)

பதிவில் அவருக்கு மிகவும் புகழ் சேர்த்த அந்த பாசிசப்புலிப்பினாமிபோபியாக்களின்
கண்ணிடைமாபியா

என்ற சொற்தொடருக்கும் பெரும்பதவுரை எழுதியிருக்கலாம்.

ரவி said...

//பாசிசப்புலிப்பினாமிபோபியாக்களின்
கண்ணிடைமாபியா///

அதுக்க்கென்ன தீவு, இப்போ சேர்த்துட்டா போச்சு...

கோவி.கண்ணன் said...

//ஈழப்பஞ்சமருக்கெதிரான : ஈழத்தை சேர்ந்த அஞ்சி பேருக்கு எதிராக//

பஞ்சமர் என்றால் தலித் அல்லது தாழ்த்தப்பட்டவர் என்று சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

உண்மைத்தமிழன் said...

தம்பி அப்படியே கீழ்க்கண்டவற்றுக்கும் அர்த்தம் சொல்லிரேன்.. புண்ணியமாகப் போகும்..

"ஆடலோட்ட மின்னோட்டமாக
சிக்கற்றன்மையை
அச்சுழியிழுந்தோடிய
தற்ப்பாற்புணர்ச்சியாளர்களே
சத்தியக்கடதாசிக்காரர்களோ
மார்க்ஸியப்போராளிக்கீச்சுக்காட்டற்பின்னூட்டமே
உவப்பென்றால்"

குசும்பன் said...

ஐய்யா எப்படிய்யா எப்படி? கலக்கிட்டீங்க போங்க,,, இத படிக்கும் பொழுது பெண்ணின் மனதை தொட்டு படத்தில் மயில் சாமி டிரான்ஸ்டேட் செய்வாரெ அது நினைவுக்கு வருது!!

Unknown said...

சத்தியக்கடதாசி, குருவிப்பதிவு - ஒரு வலைபபதிவுகள்
ஈழத்துப் பஞ்சமர் - ஈழத்துத் தலித்துக்கள், ஈழத்தில் தலித்துக்கள் என்று சொல்வதில்லை. பஞ்சமர் என்பதே வழக்கம். தமிழகத்தில் பேர் கிடைக்கணும்கிறதுக்காகத்தான் சிலர் பஞ்சமர் என்றதைத் தூக்கிப் பிடிகிறார்கள்.

மலைநாடான் said...

ரவி!

நெசமாலுமே கோனார் நோட்ஸ் நல்லாகீதுப்பா :)

//ஈழப்பஞ்சமருக்கெதிரான : ஈழத்தை சேர்ந்த அஞ்சி பேருக்கு எதிராக//

இங்கினிக்கதான் அடி வேண்டப்போறேன்னு நெனைக்கிறேன்.

-/பெயரிலி. said...

என்பதிவிலோரிணைப்பிந்தவிடுகைக்குக்கொடுக்கவனுமதியுண்டா? ;-)

ஜெகதீசன் said...

//
என்பதிவிலோரிணைப்பிந்தவிடுகைக்குக்கொடுக்கவனுமதியுண்டா? ;-)
//

இதற்கும் பெரும்பதவுரை தரவும்.

ரவி said...

என்பதிவிலோரிணைப்பிந்தவிடுகைக்குக்கொடுக்கவனுமதியுண்டா? ;-)
//

இதற்கும் பெரும்பதவுரை தரவும்.


அவரோட பதிவுல இந்த போஸ்டுக்கு ஒரு லிங்க் தரவாங்கறாரு...

ரவி said...

வாங்க பெயரிலி...இந்த வார்த்தையும் சூப்பர்...

ஜெகதீசன் said...

//
என்பதிவிலோரிணைப்பிந்தவிடுகைக்குக்கொடுக்கவனுமதியுண்டா? ;-)
//

இதற்கும் பெரும்பதவுரை தரவும்.


அவரோட பதிவுல இந்த போஸ்டுக்கு ஒரு லிங்க் தரவாங்கறாரு...
//

நன்றி.. ஒரு டவுட்டு: "பெரும்பதவுரை" ன்னா இன்னா?

ரவி said...

///பஞ்சமர் என்றால் தலித் அல்லது தாழ்த்தப்பட்டவர் என்று சொல்கிறார் என்று நினைக்கிறேன்.///

ஓ !!!

ரவி said...

//ஆடலோட்ட மின்னோட்டமாக
சிக்கற்றன்மையை
அச்சுழியிழுந்தோடிய
தற்ப்பாற்புணர்ச்சியாளர்களே
சத்தியக்கடதாசிக்காரர்களோ
மார்க்ஸியப்போராளிக்கீச்சுக்காட்டற்பின்னூட்டமே
உவப்பென்றால்"///

இதுல பலதுக்கு சொல்லிட்டனே...என்ன சரியா படிக்கலையா ?

வவ்வால் said...

ரவி,

ஆங்காங்கே தவறாக அருஞ்சொற்பதவுரை தந்தாலும் , நல்ல பகிடியப்பா!(நாமலும் கொஞ்சம் கத்துக்கிட்டோம்ல)

பெயரிலிப்பதிவுகள் கொஞ்சம் சிக்கலான சொற்பிரயோகங்களோடு இருக்கும் (வேண்டும் என்றே அப்படி செய்கிறார் போலும்), கொஞ்சம் சிரத்தையாக படிக்கணும் இல்லை என்றால் அவர் சொன்னதுக்கு எதிராக புரிந்துக்கொள்ளும் அபாயம் அதிகம்!

அதனாலேயே படித்தாலும் பின்னூட்டம் அவ்வளவாக போடுவதில்லை, எதுக்கு வம்பு :-))


//ஈழத்துப் பஞ்சமர் - ஈழத்துத் தலித்துக்கள், ஈழத்தில் தலித்துக்கள் என்று சொல்வதில்லை. பஞ்சமர் என்பதே வழக்கம். தமிழகத்தில் பேர் கிடைக்கணும்கிறதுக்காகத்தான் சிலர் பஞ்சமர் என்றதைத் தூக்கிப் பிடிகிறார்கள்.//

தமிழக்கத்தில் அக்காலம் தொட்டே பஞ்சமர் என்து குறிப்பிடுதல் உண்டு , இன்றளவும் அரசு ஆவணங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு என அரசால் அளிக்கப்பட்ட நிலங்களை பஞ்சமி நிலம் என்பார்கள். ஜெ.வின் சிறுதாவூர் பங்களா இருப்பது பஞ்சமி நில ஆக்ரமிப்பு என்றெல்லாம் செய்திகள் வந்துள்ளதே.

இந்த பஞ்சமர், பஞ்சமி என்பதெல்லாம் வெள்ளைக்காரர் காலத்திய ஆவண சொற்கள். எனவே பெயருக்கா இங்கே தூக்கிப்பிடிக்கவில்லை. பழையவற்றை மீட்டெடுக்கிறார்கள்.

தலித் என்று எல்லாம் சொல்லிக்கொள்வது வட இந்திய முறை(இந்தி சொல்) நம்மவர்களுகும் அதனை கையாள ஆரம்பித்துவிட்டார்கள்.ஒடுக்கப்பட்டோர் என்று தான் தலித் என்றால் அர்த்தம். தாழ்த்தப்பட்டோர் என்பது சரியல்ல என்று இதனை முன்னிறுத்துகிறார்கள்.


ஆனாலும் எதுவே தெரியாமல் குத்துமதிப்பாக கருத்து சொல்ல வந்துடுறாங்கப்பா!

Unknown said...

யோவ் வவ்வாலு, அந்தக் கருத்திலை ஒரு சின்னப் பிழை.

//ஈழத்துப் பஞ்சமர் - ஈழத்துத் தலித்துக்கள், ஈழத்தில் தலித்துக்கள் என்று சொல்வதில்லை. பஞ்சமர் என்பதே வழக்கம். தமிழகத்தில் பேர் கிடைக்கணும்கிறதுக்காகத்தான் சில ஈழத்தவரும் தலித்து என்றதைத் தூக்கிப் பிடிகிறார்கள்.//

பஞ்சமர் என்றதை அஞ்சு பேரெண்டு எழுதுறதை விட குத்துமதிப்பாகவா கருத்து இருக்கு?

//இந்த பஞ்சமர், பஞ்சமி என்பதெல்லாம் வெள்ளைக்காரர் காலத்திய ஆவண சொற்கள்//

யாராச்சும் இது பற்றியெல்லாம் இணையத்திலை எழுதுங்கப்பா. உதுகள் பற்றின தகவல்கள் இருந்தா நா ஏன் குத்துமதிப்பா கருத்துச் சொல்லப் போறன், ஆ?

Sundar Padmanaban said...

// பஞ்சமர் என்பதே வழக்கம். தமிழகத்தில் பேர் கிடைக்கணும்கிறதுக்காகத்தான் சிலர் பஞ்சமர் என்றதைத் தூக்கிப் பிடிகிறார்கள்.//

"எங்களை தலித் என்ற இந்திச் சொல்லால் குறிப்பிட்டு இந்தியைத் திணிக்க முயலும் பார்ப்பனீய சக்திகளை வேரறுப்போம். பஞ்சமர் என்ற அழகான தமிழ்ச்சொல்லையே எங்களைக் குறிக்கப் பாவிக்க வேண்டும். தானைத் தலைவன் வாழ்க! தமிழ் வாழ்க!

-சோற்றாலடித்த பிண்டத் தமிழன்"

-அப்டீன்னு யாரும் இன்னும் கெளம்பலையா?

நல்ல தமிழ் உச்சரிப்பு வேண்டுமென்றால் பெயரிலியின் பதிவுகளை(யும்) உரக்க வாசித்துப் பழகுக!

அது சரி. 'கோனார்' நோட்ஸ் என்று சந்தடி சாக்கில் குறிப்பிட்டு, சாதீயத்தை பார்ப்பனீய முறையில் திணிக்கும் உங்கள் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வெற்றி said...

செந்தழல் ரவி,
மிகவும் உபயோகமான பதிவு.:-)) நல்ல வடிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள். :-))

இப் பதிவைப் பிரதி எடுத்து வைச்சிருக்கிறேன். இனி பெயரிலியின் பதிவை வாசிக்கும் போது 'அகராதி' போல புழங்கலாம்.

எனக்கும் ஒரு ஐமிச்சம். வவ்வால் சொன்னது போல அவர் வேண்டுமென்றே இப்படி எழுதுகிறாரா அல்லது கணினிக்கு முன்னால் குந்தியவுடன் உணர்ச்சிவசப்பட்டு தனையே மறந்து இப்படி எழுதுகிறாரா என்று? :-))

மிக்க நன்றி.

ILA (a) இளா said...

மேலே இருக்கிற் லிஸ்ட படிச்சு சிரிப்பை மனசுக்குள்ள அடைச்சுக்கிட்டே வந்தா கடைசி வரியில வெடிச்சிரிப்பா மாறிப் போயிருச்சு. செம ஃபார்மல இருக்கீங்க போல இருக்கு. வாங்க வாங்க மறுபடியும் இரு வீராச்சாமி-விமர்சனம் மாதிரி ஒரு பதிவு குடுங்க.

ILA (a) இளா said...

பதிவுக்கு மேல இருக்கு சுந்தரின் பின்னூட்டம் :)

Nakkiran said...

மிக அருமை...ரொம்ப கஷ்டபட்டு தொகுத்து விளக்கியுள்ளார்...

சிரிப்பை நிறுத்த தான் ரொம்ப நேரம் ஆச்சு...

//அது சரி. 'கோனார்' நோட்ஸ் என்று சந்தடி சாக்கில் குறிப்பிட்டு, சாதீயத்தை பார்ப்பனீய முறையில் திணிக்கும் உங்கள் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//

இது இன்னும் சூப்பர்...

ரவி said...

//அது சரி. 'கோனார்' நோட்ஸ் என்று சந்தடி சாக்கில் குறிப்பிட்டு, சாதீயத்தை பார்ப்பனீய முறையில் திணிக்கும் உங்கள் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.///

அய்யய்யோ...அது சாதிப்பேரா ? நான் தூத்துக்குடி பக்கம், ராமநாதபுரம் பக்கம் இருக்க ஒரு தமிழ்பற்று தாத்தா பேருன்னு இல்லை நெனச்சிக்கிட்டிருந்தேன்..

அவர் செஞ்ச உதவியை மறக்க முடியுமா ? அவர் எழுதி ப்ரிண்ட் போட்டு வித்ததை பார்த்து தானே காப்பி அடிச்சு பாஸானேன்...

-/பெயரிலி. said...

இந்தக்கோனார் நோட்ஸிலை சின்னத் திருத்தங்கள்/பெரியதிருத்தங்கள் இருக்கு (Some of the phrases have typos & few are wrongly explained). அதையும் செய்து தந்தால், உண்மைத்தமிழன், ILA(a)இளா [I am specific here] இவங்க ரெண்டு பேர்ல யாரோடதாச்சும் முன்னுரை, அணிந்துரையோட வெளியிட முடியுமா? :)

ரவி said...

///எனக்கும் ஒரு ஐமிச்சம். வவ்வால் சொன்னது போல அவர் வேண்டுமென்றே இப்படி எழுதுகிறாரா அல்லது கணினிக்கு முன்னால் குந்தியவுடன் உணர்ச்சிவசப்பட்டு தனையே மறந்து இப்படி எழுதுகிறாரா என்று? :-))
///

வெற்றி என்னா மீண்டும் குழப்பறீங்க...

ஐமிச்சமா ? iமிச்சம் ? ஐபோன் மாதிரி சாப்பாடு மீந்துபோனா ஐ.மிச்சம்னு சொல்வீங்களா ?

என்ன மொக்கை சரவணன் ?

கானா பிரபா said...

//பகுதிநேரமார்க்ஸியப்போராளிக்கீச்சுக்காட்டற்பின்னூட்டமே : எனக்கே புரியல//


பார்ட் டைம் இடதுசாரி ஆளுங்க கிச்சு கிச்சு வேலை

ரவி said...

சுமன், அப்படி நல்லா கேளுங்க...

ரவி said...

இளா, கமெண்டுக்கு நன்றி..!!!

ரவி said...

///அதையும் செய்து தந்தால், உண்மைத்தமிழன், ILA(a)இளா [I am specific here] இவங்க ரெண்டு பேர்ல யாரோடதாச்சும் முன்னுரை, அணிந்துரையோட வெளியிட முடியுமா? :)///

அது சரி...அது ஏன் அவங்களுக்கு குறிப்பா சூனியம் :))))))))))) - இது என்னோட ஐமிச்சம்.

SnackDragon said...

ரவி,

இதுலேர்ந்து உங்களுக்கு தமிழ் எவ்வளவு தூரம்னு நல்லா புரியுது :)

கீப் இட் லோ :-))

ரவி said...

///பார்ட் டைம் இடதுசாரி ஆளுங்க கிச்சு கிச்சு வேலை///

அப்படிப்போடு....வாங்க பிரபா...நல்லா கீறீங்களா ?

ரவி said...

///இதுலேர்ந்து உங்களுக்கு தமிழ் எவ்வளவு தூரம்னு நல்லா புரியுது :)

கீப் இட் லோ :-))///

அது சரி...கண்ணாலத்துல பார்த்தது...நல்லா கீறீங்களா ? என்னோட பதிவுல உங்க முதல் பின்னூட்டம்னு நினைக்கிறேன்...:)))

வவ்வால் said...

சுமன்,

இரவி போட்டது நகைச்சுவை நோக்கில் அதான் அதில் சொன்னதை லூஸ்ல விட்டாச்சு, ஆனால் நீங்க ரொம்ப தீவிரமா கருத்து சொல்றிங்க அதான் அப்படி சொன்னேன், எப்படி இருந்த போதும் வார்த்தை மாற்றியாச்சு தானே!
------------------------------

வெற்றி!

/////எனக்கும் ஒரு ஐமிச்சம். வவ்வால் சொன்னது போல அவர் வேண்டுமென்றே இப்படி எழுதுகிறாரா அல்லது கணினிக்கு முன்னால் குந்தியவுடன் உணர்ச்சிவசப்பட்டு தனையே மறந்து இப்படி எழுதுகிறாரா என்று? :-))
///

அப்படியும் இருக்கலாம் , தானாகவே சூடேறி அப்படிலாம் வார்த்தைகள் வந்து விழும் போல.

தமிழில் முன் பின் வரும் நிலையணி என்று ஒன்று இருக்கிறது , ஒரு பாடலில் நடுவில் இருக்கும் வார்த்தை முன்னர் இருக்கும் வார்த்தையுடன் படித்தால் ஒரு அர்த்தம் , அதே வார்த்தையை பின் உள்ளதுடன் சேர்த்து படித்தால் ஒரு அர்த்தம் தரும் .
அப்படி தான் பெயரிலி அடைப்புக்குறிக்குள் போட்டும், வார்த்தைகளை இழுத்தும் எழுதுவார், படிப்பவர் எப்படி படித்தாலும் ஒரு அர்த்தம் வந்து விடும், இதனால் ஒரு நன்மை உண்டு , சமயத்தில் ஏடாகூடமாக மாட்டிக்கொண்டால் , நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை , இப்படி படிக்கணுமாக்கும் என சொல்லி பல்டி அடிக்கலாம்! :-))

SnackDragon said...

நல்லாருக்கேன்.
நீங்க எப்படி இருக்கீங்க வாய்ப்பு கிடைக்கும் போது பேசுறேன்.

ரவி said...

கார்த்தி...ஆயா தாத்தா பதிவு பாக்கலையா ? ஆப்பரேஷன் முடிஞ்சு ரெண்டு நாளாத்தான் நடக்கற நிலைமைக்கு வந்திருக்கேன்...என்னுடன் மொக்கை போட நம்பர்ஸ் "Apartment 805-5930 / IP Phone Ext 2033 1039"...

இப்போ ஓபீஸில்...இரவு முடிஞ்சா பேசுங்க...

-/பெயரிலி. said...

வவ்வால்,
அடைப்புக்குறிகளுக்குள்ளே (brackets) சூடேறித்தான் வார்த்தைகள் விழுமா? :-)

குளிர்பிடித்தல் உணர்ச்சிக்குள்ளே வராதா? சூடேறுதல் மட்டுமேதான் வருமா? ;-)

/தமிழில் முன் பின் வரும் நிலையணி என்று ஒன்று இருக்கிறது , ஒரு பாடலில் நடுவில் இருக்கும் வார்த்தை முன்னர் இருக்கும் வார்த்தையுடன் படித்தால் ஒரு அர்த்தம் , அதே வார்த்தையை பின் உள்ளதுடன் சேர்த்து படித்தால் ஒரு அர்த்தம் தரும் .
அப்படி தான் பெயரிலி அடைப்புக்குறிக்குள் போட்டும், வார்த்தைகளை இழுத்தும் எழுதுவார்,/

அதுமட்டும் எப்படி என் பதிவிலிருந்து சரியாகப் பிழையாகப் புரிகின்றது? ஆனால், அதை அப்படியாக எழுதவில்லை என்பதுதான் துன்பமே :-)


/அப்படி தான் பெயரிலி அடைப்புக்குறிக்குள் போட்டும், வார்த்தைகளை இழுத்தும் எழுதுவார், படிப்பவர் எப்படி படித்தாலும் ஒரு அர்த்தம் வந்து விடும், இதனால் ஒரு நன்மை உண்டு , சமயத்தில் ஏடாகூடமாக மாட்டிக்கொண்டால் , நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை , இப்படி படிக்கணுமாக்கும் என சொல்லி பல்டி அடிக்கலாம்! :-))/

கரெக்டா வவ்வால் மாதிரியே யோசியுங்க ;-)
எங்கே ஏடாகூடத்திலே மாட்டுப்பட்டேன், பல்டியடித்தேன்ன்னு சொன்னாக்கூட கொஞ்சம் வசதியாருக்குமே அடுத்த தடவை எச்சரிக்கையா ப்ராக்கட் பண்றதுக்கு? ;-)

எங்ஙனயோ ஊமைக்காயம் பட்ட மாதிரில்ல டயலாக்கு வருது? மாலன் ஸ்சூவிலேயா? சேது ஸ்சூவிலேயே? தமிழச்சி இஸூவிலேயே? :-)

----
ரவி,

////அதையும் செய்து தந்தால், உண்மைத்தமிழன், ILA(a)இளா [I am specific here] இவங்க ரெண்டு பேர்ல யாரோடதாச்சும் முன்னுரை, அணிந்துரையோட வெளியிட முடியுமா? :)///

அது சரி...அது ஏன் அவங்களுக்கு குறிப்பா சூனியம் :))))))))))) - இது என்னோட ஐமிச்சம்./

இளாவோட பதிவுக்குப் பின்னூட்டம் போடறவுங்க ஒத்தருமே நம்ம பதிவுக்கு வர்றதில்லை. அவர் முன்னுரை எழுதினால், அவுங்களும் வருவாங்களேன்னு ஒரு கவுண்டு கல்சரல் ஆசை.

உண்மைத்தமிழன், "மதர் இண்டியா வாழ்க; ஈழவிடுதலைப்புலிகள் ஒழிக" என்று பின்னூட்டம் போடும் பதிவுகளின் ஆட்களுக்கு நான் எழுதுவது ஒரு நாளுமே புரியாததாலேதான், இராமின் மகளின் பேரைச் சொன்ன பெயரிலி நாவை இழுத்து ஒட்ட நறுக்க ரேஞ்சுக்கு எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு உண்மைத்தமிழன் அணிந்துரை எழுதின கோனார் நோட்ஸ் கிட்டுவதுபோல, ஒரு பாக்கியம் (ராமசாமி அல்ல) கிட்டுவது எனக்கும் ஒரு பாக்கியமே (அந்தப்பாக்கியம் அல்ல; வேறு பாக்கியம்). ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வந்துராது?

ஐமிச்சம் என்பதை நான் சொல்லவில்லை. நான் எழுதுவது புரியவில்லை என்ற வெற்றி சொல்கிறார். ஆனால், அதையும் எனக்காக வைத்திருக்கும் கோனார் "பாற்புட்டி" (பால் புட்டி என்று சரியாக எழுதணுமோ? :-() உள்ளே ஊற்றிவிடாதீர்கள். :)

அடுத்தது, யாருக்குக் கோனார் நோட்ஸ், இரயாகரனுக்கா? இராமகிக்கா? :-)

ரவி said...

இதில் இவ்வளவு விஷயம் இருக்கா...உங்கள் பெயரை வைத்து மூன்று பதிவு தொடர்ச்சியாக போடுவதென்று மூன்று நாளைக்கே முடிவெடுத்துவிட்டேன்...

அவை அனைத்தும் ரெடி...அடுத்த ரிலீஸ் ஐ.எஸ்.டி நேரத்தில் செய்யலாமே என்று காத்திருக்கிறேன்...

வெற்றி said...

ரவி,

/* வெற்றி என்னா மீண்டும் குழப்பறீங்க...

ஐமிச்சமா ? iமிச்சம் ? ஐபோன் மாதிரி சாப்பாடு மீந்துபோனா ஐ.மிச்சம்னு சொல்வீங்களா ? */

எங்கள் ஊரில் சந்தேகம் என்ற சொல்லுக்குப் பதிலாக ஐமிச்சம் என்று சொல்வார்கள். பெரும்பாலும் ஐயம் எனும் சொல்லில் இருந்து வந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

எனக்கு ஐமிச்சமாக இருக்கிறது என்றால் எனக்குச் சந்தேகமாக[ஐயமாக] இருக்கிறது என்று பொருள்.

Sundar Padmanaban said...

//எங்கள் ஊரில் சந்தேகம் என்ற சொல்லுக்குப் பதிலாக ஐமிச்சம் என்று சொல்வார்கள்.//

திருசிராப்பள்ளி மருவி ட்ரிச்சி-ன்னு ஆகலையா? அது மாரி 'ஐயம்' மருவி இப்ப மிச்சமிருக்கிறது 'ஐமிச்சம்'. ஆச்சா?

-சுந்தர்

பி.கு.:- வடிவேல் பாணியில் உங்கள் முகத்தின் நேரே உங்களது ஆள்காட்டி விரலை நீட்டிக்கொண்டு 'நோட்ஸ் போட்டேல்ல. உனக்கு இது நல்லா வேணும்'னு சொல்லுங்க பாப்போம்!

Sundar Padmanaban said...

பெயரிலிக்கு "உலகம் சுற்றி உள்குத்தும் வாலிபன்"-னு ஒரு பட்டம் கொடுக்க (பாலு பாடின மாதிரி 'ரொம்ப நாளாக) எனக்கொரு ஆசை'. சொன்னா 'வயசாயிடுச்சுப்பா'ன்னு நழுவிடுவார்னு நினைக்கிறேன்.

அதைப்பற்றி செந்தழலாதவனாகிய நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ரவி said...

வாங்க சுந்தர்...

அவரோட டங்குவாரு டஸின் கொஸ்டின் டைம் படிச்சீங்களா ?

பட்டம் கொடுத்திடலாம்....!!!!!

Sundar Padmanaban said...

டங்கு வார் எப்பயோ படிச்சேச்.

அது சரி. இந்த இடுகையை இம்சை பதிவுல போடாமல் தனித்திரு விழித்திரு பசித்திருவில் இட்டிருக்கும் உங்களின் நுண்ணரசியல் புரிகிறது! :-)

---

ம்ஹும். காலையிலிருந்து தமிழ்மணத்தின் சூடான (சில) இடுகைகளைப் படித்துப் படித்து ஐயோ ஐயோ என்று தலையலடித்துக்கொள்ளலாம் போல இருக்கிறது!

ஜமாலன் said...

//அங்க இருக்கவனுங்க மண்டை காய்ஞ்சு ப்ரைஸ் குடுத்திருவானுங்க...//

அப்ப சாகித்ய அகாடமி கிடைக்க இப்படி ஒரு வழி இருக்கா? தெரியாமா போச்சே?

இந்த ஆட்டத்துக்கு நான வரல.. பெயரிலி படிச்சுட்டு அப்புறம்.

ஜமாலன் said...

//அங்க இருக்கவனுங்க மண்டை காய்ஞ்சு ப்ரைஸ் குடுத்திருவானுங்க...//

அப்ப சாகித்ய அகாடமி கிடைக்க இப்படி ஒரு வழி இருக்கா? தெரியாமா போச்சே?

இந்த ஆட்டத்துக்கு நான வரல.. பெயரிலி படிச்சுட்டு அப்புறம்.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....