Sunday, October 14, 2007

இனிய ரமலான் வாழ்த்துக்கள்..!!!

இஸ்லாமிய சகோதரர்களுக்கு - இனிய ரமலான் வாழ்த்துக்கள்...!!!



அனைவரின் உள்ளங்களிலும் அன்பும் மகிழ்ச்சியும் சகோதரத்துவமும் பெருகட்டும்..!!!

பிற்சேர்க்கை: ஆசிப் மீரான் பதிவில் நான் போட்ட பின்னூட்டம் :

அண்ணாச்சி, நாங்க பதிவு போட்டோமே, அதை பார்க்கலையா ? அது உங்களுக்கும் தான்...

அதுல போயி ஒரு பின்னூட்ட இம்போஸிசன் செய்து தண்டனையை அனுபவிக்கவும்...

அப்புறம் என்னுடைய இனிய நினைவுப்பக்கத்தில் இருந்து...

ரம்ஜான் - என்றவுடன் எனக்கு நியாபகம் வருவது நோம்பு கஞ்சி...நாங்க குடும்பம் அப்போ வளவனூர்ல இருந்தோம்...

பக்கத்துல இஸ்லாமிய குடும்பம், அவங்க வீட்ல என்னோட / என்னோட அன்னனோட சைஸ்ல ரெண்டு பசங்க...ஜாகீர், ஜகாங்கீர் ( சமீபத்துல 1985 ல)...

நோம்பு கஞ்சி என்று ரம்ஜான் சமயத்தில் கொடுக்கப்படும்...அதை அந்த பசங்க தூக்குவாளியில போய் வாங்கி வருவாங்கள்...

நானும் ஒரு நாள் எங்கம்மாவுக்கு தெரியாமல் சொம்பை எடுத்துக்குட்டு அவனோட ஓடிட்டேன்...

அங்கே மசூதி வாசலில் அண்டா வைத்து கொடுத்துக்கொண்டிருந்தாங்க, என்னுடைய சொம்பையும் நிரப்பினாங்க...

சூடாக இருந்தாலும் எப்படியோ புடிச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்தேன்...

முதலில் எங்கம்மா கையால் கடுமையான சாத்து வாங்கினேன்..ஏண்டா சொம்பை எடுத்துக்கிட்டு போனே என்று...

பிறகு எங்கம்மா அந்த கஞ்சியை குடித்து பார்த்தது...பூண்டு எல்லாம் போட்டு ஒருவித டேஸ்டாக அது இருக்கவும், அடுத்த வருஷம் அதுவே சொம்பை கொடுத்து நோம்பு கஞ்சி வாங்கிட்டுவாடா என்று அனுப்பியது...

அப்புறம் அடிக்கமாட்டியே....என்று இழுத்து கேள்விகேட்டு சந்தேகப்பார்வை பார்த்தபடியே போய் வாங்கிவந்தென்...

வீட்டில் எல்லோரும் ரசித்து குடித்தோம்...

பிறகு பக்கத்துவீட்டு பீவிக்கிட்ட விசாரித்து, நோம்பு கஞ்சி எப்படி வைப்பது என்று தெரிஞ்சுக்கிட்டது எங்கம்மா...

மாதத்தில் ஒருமுறையாவது அந்த சுவைக்காக நோம்பு கஞ்சி - இப்போதும் வீட்டில் செய்துக்கிட்டிருக்கு...

ரொம்ப நீளமா போட்டிட்டனோ...

2 comments:

இல்யாஸ் said...

ரமலான் இல்லை, ஈகை திருநாள் வாழ்த்துக்கள் என்பது தான் சரி

nagoreismail said...

நோன்பு பெருநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி - நோன்பு கஞ்சி வாசனையும் ருசியும் தனி தான், அது ஏழைகளுக்காக வழங்கப்படும் உணவு தான் என்றாலும் எங்களூரில் நோன்பு பிடிக்காத (நோன்பை பிடிக்காத அல்ல) முஸ்லீம் அல்லாத தலித் மக்களும் ஏராளமானோருக்கும் வழங்கப்படும், அவர்களும் உண்டு மகிழ்வர். - நாகூர் இஸ்மாயில்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....