Monday, October 15, 2007

நானே கேள்வி - நானே பதில்...V 1.0

மனசுல என்ன தான் நினைச்சுக்கிட்டிருக்கே ?

ஏ நான் ஒன்னும் நினைக்கலையேப்பா...ஏன் இப்படி சூடான கேள்வி...நான் உண்டு என்னோட வேலை உண்டுன்னு ( அதான் மொக்கை போடுறது) போய்க்கிட்டிருக்கேன்...எதுவாருந்தாலும் சொல்லுங்கப்பா...பேசித்தீத்துக்கலாம்.....நான் கொஞ்சம் ஓப்பன் ஹார்ட்டு தான்...

தமிழச்சி பிரச்சினை பற்றி சொல்லேன்...

அவங்க பெரியாரிய கொள்கைகளை மட்டும் பரப்பிக்கிட்டிருந்தபோது கொரியாவில் கிளைக்கழகம் ஆரம்பிச்சேன்...அது மரமா வளர்றதுக்குள்ள பெண்ணீயம்,தலித்தியம், புலியெதிர்ப்பு அப்படீன்னு போய்ட்டாங்க...அவங்களுடைய பகுத்தறிவு பிரச்சாரங்களுக்கு எப்போதும் என் ஆதரவு...மற்ற விஷயங்களில் அப்படியே பொட்டீக்கடை கயட்டிக்கினமாதிரி நானும் கயட்டிக்கலாமுன்னு இருக்கேன்...ஆனாலும் தோழர்.தமிழச்சி நான் என்ன சொன்னாலும் வெளையாட்டாவே எடுத்துக்கிட்டு எங்கிட்ட கும்மியடிச்சுடறாங்க...எலிபண்ட் பாஸ்ல (Elephant Pass) எலிக்கென்ன வேலை...வர்ட்டா..

ஈழத்தமிழர்கள் மேல அப்படியென்ன அக்கறை, எவனுக்குமில்லாத அக்கறை ? ஈழப்பிரச்சினை பற்றி உனக்கென்ன தெரியும் ?

ஈழத்தமிழர்கள் மேல கொஞ்சம் பாசம் உண்டு...அது எப்படி உருவானது என்று சொல்லத்தெரியல...ஆனா டீப்பா ஈழப்பிரச்சினை பற்றி எனக்கு சுத்தமா தெரியாது...இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா வார்த்தைகள் புரிஞ்சுக்கிட்டிருக்கு...ஆங்கிலேய காலத்து யாழ் மேலாதிக்கம், அது சிங்கள மேலாதிக்கமாக உருவெடுத்தவிதம் என்று அங்கன இங்கன படிச்சு மண்டைகாய்ஞ்சு வந்துக்கிட்டிருக்கேன்...அங்கே இருக்கும் சாதீயம், அரசியல், பாஸிஸம் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள அவ்வளவாக ஆர்வம் காட்ட வேண்டாமுன்னு தான் இப்போதைக்கு நினைக்கிறேன்...அது அவங்க வீடு..பூட்டப்பட்ட வீடு...நான் பக்கத்துவீட்டுக்காரன்...அங்கன நடக்கற பங்காளிச்சண்டை என்னோட காதுல விழுது...அதை கேட்டு உள்வாங்கிக்கறேன்...அம்புட்டுத்தேன்...நான் போயி அதை தடுக்கவும் முடியாது...அதை நிறுத்தவும் முடியாது...அதனால கம்முனு குந்திக்கறது பெஸ்ட்..

நீ மட்டும் கும்மியடிக்கலாம்...அடுத்தவன் கும்மியடிச்சா தப்பா ?

கும்மி வேண்டாமுன்னு நான் சொன்னதே இல்லையே...குறிப்பா நாங்க பதிவுலகுக்கு வந்தப்போ (லக்கி / வரவணை ) எவனும் எங்களுக்கு பின்னூட்டம் போடாம நாங்களே முதல் பின்னூட்ட கயமை செய்து, போலீஸ்காரர்களாகி, அப்புறம் ஒரு சில பதிவர்கள் செய்யும் கொலைவெறி கயமைகளை பார்த்து டென்ஷனாகி ( உ.ம் இலவசக்கொத்தனார் / செல்வன்), நாங்களும் கும்மியடிக்க ஆரம்பிச்சோம்...என்ன ஒன்னு...அவங்க அவங்க பேருலே போடுவாங்க...நாங்க எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ, பிடல் காஸ்ட்ரோன்னு அதர் நேம்ல கும்மியடிப்போம்...பிடல் காஸ்ட்ரோ என்ன தமிழ் வலைப்பதிவரா, வந்து அப்ஜெக்ஷன் பின்னூட்டம் போட...இருந்தாலும் ஆபாச கும்மியை தவிருங்கன்னு தான் என்னோட திடீர் ஞானோதயம் சொல்லுது...பல பேர் அதை ஒத்துக்கிட்டாங்க...இன்னும் கொலைவெறியோட அடுத்தவங்களை தாக்கி வரும் பின்னூட்டங்கள் நிக்கல...நிக்காதுன்னு தான் நினைக்கிறேன்...பதிவர்கள் கொஞ்சம் மட்டுறுத்திக்கனும்...மற்றபடி எஞ்சாய் மாடி மக்களே...

கொரியாவுல என்ன தான் செஞ்சுக்கிட்டிருக்கே...கொரியா மொழி வேற பேசுவியாம் ?

கொரியாவுல கணினி துறை வேலை தான் செய்வாங்க...ப்ளாஸ்டர் ஆப் பாரீஸ்ல பொம்மையா செய்வாங்க...நான் புடுங்கற ஆணி பற்றியெல்லாம் சொல்லிக்கிட்டிருந்தா தூங்க ஆரம்பிச்சுருவீங்க...

கொரியா மொழி...ம்ம் தெரியும்...மூனு மாசம் படிச்சேன்...ரொம்ப ஈஸி...எழுத்துக்கூட்டி படிக்க பழகனும்...மூனே நாள்ல பழகலாம்னு சொல்றார் ஒரு நன்பர்.....அதுவும் இல்லாம ஒரு பத்து நாள் சுத்திவர கொரியாக்காரனுங்களோட ஹாஸ்பிட்டல் பெட்ல படுத்திருந்தேன்...கொரியா டி.வி முழுநேரமா பார்த்தேன்..அது போதாதா....தேவைன்னு வந்தா ஹிந்தி, கன்னடம் என்ன, எந்த லாங்குவேஜையும் படிக்கலாம்...பகுத்தறிவுவாதிகள் இதை ஒன்னும் சொல்லமாட்டாருன்னு நெனைக்கறேன்...

உன்னோட காதல் வாழ்க்கை பற்றி சொல்லிடேன்....தெரிஞ்சுக்கலாம்...

வலைப்பதிவுலயா ? என்னோட லவ்ஸ் பத்தியா ? வெளங்கிரும்...ஆனா இப்போதைக்கு நான் சிங்கிள் இல்லைன்னு மட்டும் சொல்லிக்கலாம்...சில வலைப்பதிவர்களுக்கு புல் டீட்டெயில்ஸ் தெரியும்....அவுங்க அதை எல்லாம் வெளிய சொல்லிக்கிட்டிருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்...இப்போ வலைப்பதிவு எல்லாம் படிக்க ஆரம்பிச்சிருக்கா....

வரவணை,லக்கி,உண்மைத்தமிழன்,ஓசை செல்லா, என்றென்றும் அன்புடன் பாலா, வ.வா.சங்கம், மிதக்கும் வெளி, பெயரிலி, விக்கி பசங்க, வீ.எஸ்.கே ஆன்மீகப்பதிவு, கானாபிரபா வோட ரேடியோஸ்பதி, துளசி டீச்சர், கண்மணி அக்கா, அபி அப்பா பதிவுகளுக்கு ரெகுலர் விசிட்டர்...உண்மைத்தமிழன் பதிவு நீளமா இருக்குன்னு,மிதக்கும்வெளி,பெயரிலி பதிவு புரியலை அப்படீன்னு இப்போதைக்கு கம்ளெயிண்ட் பன்றா..அது தவிர என்னுடைய பாஸிச ஆணாதிக்க சிந்தனை வலைப்பதிவை அடிக்கடி லுக் விட்டுக்கிட்டிருக்கா..அம்புட்டுதேன்...

வலைப்பதிவர்கள் பற்றி என்ன நினைக்கிறே ? வலை நட்பால ஏதாவது உருப்படியா நடக்குமா ?

நட்புன்னு வந்திட்டா அதுக்கப்புறம் என்ன வலை நட்பு, கொலை நட்புன்னு...எதுவா இருந்தாலும் நட்பு நட்புதான்யா...காலேஜ் போன...அங்க பக்கத்துல உட்கார்ந்தவன் காலேஜ் நன்பன்...வலைபதிய வந்தே...இங்க பக்கத்துல வலைப்பதிபவன் வலைநன்பன்...இதய சுத்தியோடு முழுமையான அன்பைப்பொழியும் பல நன்பர்கள்.....எல்லாரும் ஒரே தளத்தில் இல்லை...ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேற கருத்து...தமிழ், அரசியல், இடஒதுக்கீடு, பார்ப்பணீயம், மார்க்ஸியம், ம.க.இ.க, பாஸிஸம், பாவாடை நாடா, பெண்ணீயம், பெரியாரீயம் என்று ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து...

நட்பென்று வரும்போது அந்த கருத்துக்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு முழுமையான நட்பை செலுத்தும் பல நன்பர்கள் எனக்கு...என்னுடைய நன்பர்கள் சிலர், தங்களுக்குள் வேற்றுமைகளை வைத்துள்ளார்கள்...

அவர்களுக்குள் பஞ்சாயத்து செய்வது என்னுடைய வேலையல்ல என்றாலும், டேமேஜ் வராமல் பேண்டேஜோடு அலைவதும் சமயங்களில் என்னுடைய வேலையாகிப்போகிறது...ஆயிரம் இருந்தாலும் எல்லாரும் நல்லாருக்கனும் என்ற எண்ணம்தான் என்னுடைய நன்பர்கள் என் மீது வரைமுறை இல்லாமல் பொழியும் அன்புக்கு காரணமாக இருக்கமுடியும்...இதுபோல் என்றும் இருக்கவேண்டும்....

வலைநட்பால உருப்படியா நடந்த விடயங்களை பட்டியல்போட்டா இந்த வலைப்பூ பத்தாது..

அடுத்த வெர்ஷன் ரிலீஸ்:
நீ தி.மு.க.வா, அ.தி.மு.கவா, தே.தி.மு.கவா ?

நீ உருப்படியா என்னதான் படிச்சிருக்கே ? வாசிப்பு இருக்கா உன்கிட்ட ?

எவ்ளோ நாள் இப்படியே ஓட்டறதா உத்தேசம் ?

வேற என்ன உருப்படியா பண்ணலாம்னு ஐடியா ?

ஜாதி பற்றி உன்னோட கருத்தென்ன ?

புதிய பதிவர்கள் பற்றி என்ன நினைக்கிற ?

இப்போதைய வலையுலகம் எங்கே போய்க்கிட்டிருக்கு ?

வணக்கம்...வணக்கம்...வணக்கம்...
(வகை வகையாக வைக்கிறேன்)...

25 comments:

VSK said...

வழக்கமா கலைஞர்தான் இப்படில்லாம் செய்வாரு!

நீங்களும் இதைச் சுவையாகவே தந்திருக்கீங்க!

உங்க பொதுநலப் பணிகளையும் சொல்லியிருக்கலாமே!

//எதுவா இருந்தாலும் நட்பு நட்புதான்யா..//
எனக்கு மிகவும் பிடித்த வரி!

உங்கள் காதல் வெற்றிபெற...
மு..மு..!:))

ரவி said...

வாங்க வீ.எஸ்.கே

வலையுலகில் லக்கிலூக் ஏற்கனவே ஆரம்பிச்சுட்டார்...

வெர்ஷன் ரெண்டு வருதுங்க !!!

Anonymous said...

பொறிக்கி செந்தழல்,
கொரியாவில் என்ன வேலை செய்யற?உனக்கு தமிழச்சி போன்ற பொம்பளை பொறிக்கிகளுக்கு செருப்பு எடுத்து கொடுக்கும் வேலையைத் தவிர வேறு வேலை செய்ய தேவையான I Q கிடையாதே?

ரவி said...

அண்ணா ஏன் என் மேல டென்ஷன்...

பொதுவா ஆம்பிளையை தான் பொம்பளை பொறுக்கி என்று சொல்வோம்...

நீங்க லேடீஸை போயி சொல்றீங்க ?

ஆத்திரம் கூடாது அண்ணா, அது அறிவிழக்க செய்யும்...!!!

ரவி said...

மீண்டும் சகோதரருக்கு...

உங்கள் பின்னூட்டம் வெளியிடும் அளவுக்கு நான் இன்னும் மெச்சூரிட்டி அடையலை...

இன்னும் கொஞ்சம் டீசண்டான வார்த்தைகள் தந்தால் கண்டிப்பாக பரிசீலிக்கிறேன்...

Anonymous said...

மண்டை காயுது.

theevu said...

அடுத்த தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

//நான் புடுங்கற ஆணி பற்றியெல்லாம் சொல்லிக்கிட்டிருந்தா தூங்க ஆரம்பிச்சுருவீங்க...//

இதையும் சொல்லுங்க.தேவைப்பட்டால் யாரும் உதவி கேட்கலாமில்லையா

ரவி said...

ஏன் அப்படியொரு கொலைவெறி ? சரி அது பற்றி தனியாவே ஒரு பதிவு போட்டுடறேன்...டெக்னிக்கல் சமாச்சாரம்னாதான் மக்கள் காத தூரம் ஓடிருவாங்களே...

kiddy ppl said...

நானே கேள்வி நானே பதில்னு போட்டுக் கொள்கிற அளவுக்கு "அது" கூடிப்போய் விட்டதா தோழர்? முக்கிய விஷயம் நேற்று நவீன இலக்கிய கூடல் சென்றேன். வழக்கம் போலவே நீங்கள் சொல்லிக் கொடுத்தபடி ...... நல்லபடியாக முடிந்தது. அடுத்த ஆப்ரேஷனுக்காக காத்திருக்கின்றோம் தோழர்.

ரவி said...

ஆஹா...சனியன் சடபோட ஆரம்பிச்சிருச்சே...இனிமே பூவைக்காம பொட்டுவைக்காம போவாது போலிருக்கே....

:)))) ஸ்மைலி

kiddy ppl said...

செந்தழல் ரவி a dit...
ஆஹா...சனியன் சடபோட ஆரம்பிச்சிருச்சே...இனிமே பூவைக்காம பொட்டுவைக்காம போவாது போலிருக்கே....

:)))) ஸ்மைலி /////////////

யாருங்க சனியன்!

ரவி said...

பனியன் போட்டதை எல்லாம் நாங்க சனியன்னு கூப்பிடறது...

(ஒருவேளை அதனாலதான் செல்லா பனியன் மறுப்பு இயக்கம் நடத்துறாறா தெரியல...பதிவர்.தீவு கவனிக்க)

kiddy ppl said...

அப்ப எல்லோரும் சனியன்கள்
என்று சொல்கிறீர்களா? அப்ப சரி இருக்கிற ஒரு சனி பத்தாதா சடை போட பொட்டு வைக்க ....

kiddy ppl said...

/////அவங்க பெரியாரிய கொள்கைகளை மட்டும் பரப்பிக்கிட்டிருந்தபோது கொரியாவில் கிளைக்கழகம் ஆரம்பிச்சேன்...அது மரமா வளர்றதுக்குள்ள பெண்ணீயம்,தலித்தியம், புலியெதிர்ப்பு அப்படீன்னு போய்ட்டாங்க...////

புலி எதிர்ப்பு என்ற வார்த்தையை நீங்கள் உபயோகித்ததிற்கு என் மறுப்பினை தெரிவித்துக் கொள்கின்றேன். பெரியாரியம் எழுதுவது என் லட்சியம். சமூதாயத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை சார்பு நிலையில் இல்லாமல் உள்ளதை உள்ளபடியே எழுதுவது என் எழுத்துப்பணி. தவறுகளை சுட்டிக்காட்டுகின்றேனே தவீர யாரையும் எனக்கு எதிரானவர் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில்லை.

நாகு (Nagu) said...

கேள்வி: இன்னா இப்படி உளறிக் கொட்டுற. அப்படியே வாத்தியார் ஸ்பீச் கேட்ட மாதிரி இருக்கு, என்ன சமாச்சாரம்?

பதில்: அது ஒன்னுமில்லிங்க தல. இப்பதான் கொஞ்சம் ஒடம்பு குணமாயிட்டு இருக்கு. இந்த கொரியா சரக்கு போட்டா கொஞ்சம் நல்லாருக்கும்னு ஆபிஸ்ல சொன்னாங்க. பித்த உடம்பாச்சா, தூக்கிருச்சு!

Anonymous said...

நான் ஒரு கேள்வி கேட்கலாமா தோழர்.

ரவி said...

நாகு...ஏன் இந்த கொலைவெறி...

நேத்து ரைஸ் கொழம்பி கஞ்சாயிருச்சு உங்களோட சேட் செய்ய முயற்சி செய்ததுல...

சந்தோஷமா ( பருத்தி வீரன் கஞ்சா கருப்பு பாணியில் படிங்க)

Pot"tea" kadai said...

//மற்ற விஷயங்களில் அப்படியே பொட்டீக்கடை கயட்டிக்கினமாதிரி நானும் கயட்டிக்கலாமுன்னு இருக்கேன//

இதென்ன கலாட்டா?

உங்க துணைகிட்ட பொட்"டீ"கட பதிவெல்லாம் படிக்க சொல்ல மாட்டீங்களோ?

Anonymous said...

பவுன்சர் போட்டான்
புல் ஷாட் ஆடினேன்
பால் மிஸ்ஹிட் ஆகி
க்ளவுசை வருடியது

எம்பிய பந்து
முகத்தில் இருக்கும்
மூக்கிற்கு கீழே அடித்தது
உதடு கிழிந்தது
பல் ஆடுகிறது
ரூட் கெனால்
செய்ய தேவை
3000 டொலர்கள்

ரவி said...

பொட்டீக்கடைன்னு ஓரு பேட் பாய் இருக்கான், அவன் பதிவை மட்டும் படிக்காதேடீன்னு சொல்லிவெச்சிருக்கேன்...

Anonymous said...

// கேள்விகேட்பவன் said...

நான் ஒரு கேள்வி கேட்கலாமா தோழர்.//

என்ன எழவோ...கேட்டுத் தொலை

Anonymous said...

அப்பா எங்கிட்ட சொல்லுச்சி,

பொட்"டீ"கடை பதிவு படிச்சா எனக்கு நிறையா ஜெர்னல் நாலேஜ் வரும்னு.

ILA (a) இளா said...

Gooooooooooood oNeeeeeee

Anonymous said...

//வலைப்பதிவுலயா ? என்னோட லவ்ஸ் பத்தியா ? வெளங்கிரும்...ஆனா இப்போதைக்கு நான் சிங்கிள் இல்லைன்னு மட்டும் சொல்லிக்கலாம்...//

My heart is breaking...
By
Shreya,
Lead Actress

மங்களூர் சிவா said...

WHO TAMILACHI??

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....