தேடுங்க !

Tuesday, January 29, 2008

அன்புமணி - விஜயகாந்த் - செந்தழலின் எரிச்சல்கள் ...!!!!!!!!!!!!!!

இரண்டு விஷயங்கள்...ஒன்றுக்கொண்று தொடர்பில்லாதவைதான்...ஆனால் சமுதாய நோக்கோடு சொல்லப்பட்டவை...அவற்றில் எது டாப் என்று நீங்கள் தான் சொல்லவேண்டும்...

முதலில் கேப்டன்...நேற்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தே.மு.தி.கவை சேர்ந்த இளைஞர்கள் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்யவேண்டும் என்று அழைத்திருக்கிறார்...

இன்றைக்கு தமிழகத்தில் வரதட்சிணை பிரச்சினையால் குடும்ப உறவுகள் பாதிக்கப்பட்டு நிர்கதியான பெண்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கு...100த்து பத்துபேர் இந்த அழைப்பை ஏற்று வரதட்சிணை பெறுவதிலோ / கொடுப்பதிலோ மனமாற்றத்தை கொண்டுவந்தால் அதனால் பயனடையப்போவதென்னவோ உழைக்கும் மற்றும் நடுத்தரவர்க்கத்தினர்தான்...

இதுபோன்றதொரு அறைகூவலை கலைஞரோ, அம்மையாரோ, வை.கோவோ, டாக்டரோ, வாசனோ, நல்லக்கண்ணுவோ, வரதராஜனோ, கிருட்டினசாமியோ, திருமாவோ இதுவரை விட்டதாக எனக்கு நினைவில்லை...

கேப்டனை இந்த விஷயத்தில் நெஞ்சாரப்பாராட்டுகிறேன்...!!! மக்கள் பிரச்சினையை மனதார உணர்ந்த ஒரு பாமரனின் பேச்சுத்தான் இது...இதில் அரசியல் இல்லை...மக்கள் நலன் தான் இருக்கிறது...என்பது என்னுடைய தெரிவு...

அடுத்ததாக டாக்டர் அன்புமணி...

பாலிவுட் உச்ச நட்சத்திரங்களை பெயர் விட்டு அழைத்து, அவர்கள் திரையில் புகைப்பதை நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்...அய்ம்பது சதவீதத்துக்கு மேற்பட்ட பிள்ளைகள் பாலிவுட் திரை உலகத்தினரால் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள் என்று அவரது புள்ளிவிவரம் சொல்கிறது...

தமிழகத்தில் ரஜினி மற்றும் விஜய் ஆகியவர்களை ஏற்கனவே திரையில் புகைப்பதை நிறுத்துமாறு அழைப்புவிடுத்து, அவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள் என்பதில் மகிழ்ச்சியே...

ஐ.டி.சி நிறுவனத்தினையே இழுத்து மூடவேண்டியது தானே என்று கேட்கும் அப்பாவிகளுக்கு - இது மிகப்பெரிய தொழில்...இதனை ஒரேயடியாக நிறுத்தினால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழப்பதுடன் அரசுக்கும் வருவாய் புஸ் போகும்...

ஆனால் மனமாற்றத்தின் மூலமே புகைப்பழக்கத்தினை நிறுத்தமுடியும்....புதிதாக புகைப்பவர்களை தடுக்கவேண்டும்...புகைப்பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை மக்களுக்கு வெளிப்படையான பிரச்சாரத்தின் மூலம் விளக்கவேண்டும்.....

ஹேட்ஸ் ஆப் அன்புமணி...!!!

கொறுசு எரிச்சல்கள்...

தமிழச்சி மேட்டர்: தமிழச்சிக்கு பின்னூட்டம் போடமுடியாத நிலையில் இருக்கிறேன்...அலுவலகத்தில் ஜிமெயில் அக்ஸஸ் தடைசெய்யப்பட்டுள்ளது...அவரது தனிமடலுக்கு அனுப்பிய மெயிலுக்கு பதிலைக்கானோம்...ஒருவேளை பிஸியா சண்டைபோட்டுக்கொண்டுள்ளார்களோ ? சும்மா இருந்த அவர்களை சீண்டி வம்பு 'வள'க்கும் 'அய்'ந்தாம்படைகளை பெரியார் விழிப்புணர்வு இயக்கத்தின் பெங்களூர் கிளை வன்மையாக கண்டிக்கிறது...

கள்ளச்சாராய மேட்டர் : தெருவுக்கு தெரு டாஸ்மார்க் கடைகளை திறந்துவைத்துள்ள அரசு, கள் இறக்க இன்னும் அனுமதிக்காதது எரிச்சல்...புதுவையைப்போல் சாராயக்கடை மற்றும் கள்ளுக்கடைகளை தெருவுக்கு தெரு திறந்துவிட்டுவிடுங்கள்...குடிப்பவன் என்றைக்கும் குடித்துக்கொண்டுதானிருப்பான்...அவனை எப்படி தடுக்கமுடியும்...இன்றைக்கு கள்ளச்சாராயம் இல்லாத ஊர் எது தமிழகத்தில் ? டாக்டர் கலைஞர் இதை கண்டும் காணாமல் இருப்பது ஏனோ ? பத்து ரூபாய் இருப்பவன் பட்டை அடிக்கவும், அய்ம்பது ரூபாய் இருப்பவன் கட்டிங் வாங்கவும் போய்க்கொண்டுதானே இருக்கிறான்...அட்லீஸ் கள்ளு இறக்க அனுமதி கொடுத்து பனைத்தொழிலில் இருப்பவர்கள் மூன்றுவேளை நன்றாக சாப்பிடவையுங்களேன் மிஸ்டர் கலைஞர்...

லாட்டரி மேட்டர் : முன்பெல்லாம் பஸ்டாண்டு மற்றும் பொது இடங்களில் கழுத்தில் பெரிய அட்டை ஒன்றை மாட்டிக்கொண்டு பலமாநில லாட்டரிகளை விற்பவர்களை பார்த்திருப்பீர்கள்...அம்மையாரது அரசு ஒரு உத்தரவின் மூலம் லாட்டரியை ஒழித்துவிட்டது என்னவோ வாஸ்தவம் தான்...ஆனால் அதனால் சொற்ப வருமானம் பெற்றுவந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் சோத்துக்கு சிங்கி அடித்தார்கள்.....சில பண முதலைகள் லாட்டரி தொழிலால் உருவானதென்னவோ உண்மைதான்...ஆனால் இந்த தொழிலை முறைப்படுத்துவதை விட்டுவிட்டு ஒரேயடியாக இந்த தொழிலுக்கே ஆப்பு அடித்தது என்ன நியாயம் ? இன்றைக்கு அமெரிக்காவில் அய்ரோப்பாவில் ஆப்ரிக்காவில் லாட்டரி இருக்கிறது...பக்கத்து மாநிலங்களால கருநாடகம், கேரளாவில் இருக்கிறது.....தமிழகத்தில் லாட்டரியை தடைசெய்துவிட்டதன் பலனாக குடியானவர்கள் எல்லாரும் மூன்று வேளை பிரியாணி சாப்பிடுகிறார்களா என்ன ? அதே கஞ்சி, சாம்பார், துவையலோடு ஊறுகாய்தானே ? மக்கள்ஸ்...நீங்களே சொல்லுங்க....!!!

குற்றப்பரம்பரை மேட்டர் : இன்னும் சாதி சான்றிதழ் வழங்கப்படாமல் அடிக்கடி கலெக்டர் அலுவலகம் முன்பு நாற்பது அய்ம்பது பேர் போராடுவதும், அது நாளிதழ்களில் செய்தியாவதும், பின்பு போராடியவர்கள் மப்ஸல் பஸ் பிடித்து ஊர்போய் சேருவதும் மாதத்தில் நான்கு முறை நடக்கிறது...சில சமயம் போராட்டக்காரர்களை மூன்று ஏட்டையாக்களும் ஒரு எஸ்.ஐயும் சேர்ந்து வளைத்து கைது செய்து, வேனில் ஏற்றி, அருகாமை கல்யாண மண்டபத்தில் மூன்று நான்கு மணிநேரம் உட்காரவைத்து பிறகு அனுப்பிவிடுவார்கள்...(கல்யாண மண்டபத்துக்கு முடிச்சு அவிழ்ப்பார்களா என்பது யாருக்கும் தெரியாது)...இதெல்லாம் என்ன ? வெள்ளைக்காரன் காரத்தில் குற்றப்பரம்பரை என்று நரிக்குறவர், அருந்ததியர் போன்றவர்களை - மேலும் சில சாதியினரை சேர்த்து, எந்த பிரச்சினையானாலும் அவர்களை கைதுசெய்து உள்ளே தள்ளும்படி ஒரு வாய்ப்பாக வைத்தான்...ஒரு சில சாதியினர் போராடி - அவர்களுக்கு உள்ள இன்ப்ளூயன்ஸ் - அரசு இயந்திரம் - ஓட்டு எண்ணிக்கை ஆகியவற்றை வைத்து இந்த பிரச்சினையில் இருந்து வெளியேறிவிட்டார்கள்...இன்னும் நரிக்குறவர்கள் போன்றவர்கள் - இந்த காரணத்துக்காக சாதி சான்றிதழ் வழங்கப்படாமல் - பள்ளியில் சென்று படிக்க வாய்ப்பில்லாமல் - உள்நாட்டிலேயே அகதிகளாக வாழ்கின்றனர்...அவர்களை எங்கே அரசு கவனிக்கப்போகுது ? இப்தார் விருந்துல குல்லாய் கவிழ்த்துக்கொண்டு கஞ்சி குடிக்க அவர்கள் என்ன பத்து சதவீத ஓட்டா வைத்துள்ளார்கள்...ஹும்...!!!

பாமரன் மேட்டர்: லீனா மணிமேகலையை குமுதத்தில் சூப்பராக கலாய்த்துள்ளார்...அந்த மேடம் என்ன பதில் சொல்கிறாரோ அதையும் குமுதத்தில் போடத்தான் போகிறான்..இதனால் குமுதத்தில் சர்க்குலேஷன் மொத்தமாக பத்து புத்தகம் அதிகரித்தால் சந்தோஷமே...!!!

15 comments:

Anonymous said...

நீண்ட இடைவளிக்கு ரவியின் எழுத்தில் படித்த ஒரு நல்ல பதிவு.

தொடரவும்.

ARIVUDAI NAMBI said...

உங்களின் பதிவு நன்றாக உள்ளது. ஏதோ சுவாரஷ்யத்திற்காக குற்றபரம்பரை கூட கூட்டி வந்தது தான் நெருடுகிறது. பிரச்சினை சொல்லப்பட வேண்டியதுதான். அது தீர்க்கப் பட வேண்டியதும் கூட.அதற்காக வெள்ளைக் காரன் சொன்னதை வேத வாக்ககாக கூறும் தீயே...!!! நமக்கு சுதந்திரம் கொடுக்கக் கூட நம்மை போராட வைத்து கொன்று குவித்ததை வரவேற்கிறீரா? அவன் சொன்னதை கூறும் உம் கருத்தில் நீர் நியாயம் இருப்பதாக உனக்கு பட்டாலும். எனது பார்வையில் இது அவசியமற்ற ஒப்பீடு.

வவ்வால் said...

செந்தழலாரே,

பல விஷயங்கள் ஒரு கலர்புல் கதம்ப மாலையாக தொடுத்து இருக்கிறீர்கள்!

//வெள்ளைக்காரன் காரத்தில் குற்றப்பரம்பரை என்று நரிக்குறவர், அருந்ததியர் போன்றவர்களை - மேலும் சில சாதியினரை சேர்த்து, எந்த பிரச்சினையானாலும் அவர்களை கைதுசெய்து உள்ளே தள்ளும்படி ஒரு வாய்ப்பாக வைத்தான்...//

குற்றப்பரம்பரை கணக்கில் இவர்கள் வர மாட்டார்கள், இவர்களுக்கு சான்றிதழ் கொடுக்காமலும் இல்லை.

நரிக்குறவர்கள் என்பவர் தமிழர்களே அல்ல ராஜஸ்தானை சேர்ந்தவர்கள்,மிகவும் பின் தங்கிய வகுப்பில் வருவார்கள்.

மலைக்குறவர்கள் தான் தமிழர்கள், பழன்குடியினம் ,எனவே தான் சான்று அளிக்க தாமதம் செய்வார்கள்.மேலும் இருளர்கள், குரும்பர்கள் என்ற பல பழங்குடியினத்தவருக்கும் சான்று அளிக்க தாமதம் செய்வார்கள்.

எனவே தான் பாம்பு எல்லாம் பிடித்துக்காட்டி போராடுகிறார்கள்.

அவர்களுக்கு எல்லாம் சான்று அளிக்கும் அதிகாரம் dro, கலக்டர் அளவில் இருப்பதே காரணம்.தாசில்தர் விசாரித்து ,பின்னர் அவர்கள் கை ஒப்பம் இடனும்.

நாடோடி இலக்கியன் said...

// Anonymous said...
நீண்ட இடைவளிக்கு ரவியின் எழுத்தில் படித்த ஒரு நல்ல பதிவு.//

என் கருத்தும் இதுவே!!

Anonymous said...

//அவர்களுக்கு எல்லாம் சான்று அளிக்கும் அதிகாரம் dro, கலக்டர் அளவில் இருப்பதே காரணம்.தாசில்தர் விசாரித்து ,பின்னர் அவர்கள் கை ஒப்பம் இடனும்///

why those dogs are not signing ?

Anonymous said...

Booking Confirmation# 23614
Movie Rambo 4 (A)
Theater Bangalore - Screen 1
Show Date/Time Tuesday, 29 January 09:45 pm
Seat Number(s) F:1 F:2 (Class CL)
Charges (INR) 320.00
Other Charges (INR) 20.00
Total Charges (INR) 340.00
http://www.inoxmovies.com/eTicketing, Tuesday, 29 January 08:20 am (1978260)

செந்தழல் ரவி said...

////உங்களின் பதிவு நன்றாக உள்ளது. ஏதோ சுவாரஷ்யத்திற்காக குற்றபரம்பரை கூட கூட்டி வந்தது தான் நெருடுகிறது. பிரச்சினை சொல்லப்பட வேண்டியதுதான். அது தீர்க்கப் பட வேண்டியதும் கூட.அதற்காக வெள்ளைக் காரன் சொன்னதை வேத வாக்ககாக கூறும் தீயே...!!! நமக்கு சுதந்திரம் கொடுக்கக் கூட நம்மை போராட வைத்து கொன்று குவித்ததை வரவேற்கிறீரா? அவன் சொன்னதை கூறும் உம் கருத்தில் நீர் நியாயம் இருப்பதாக உனக்கு பட்டாலும். எனது பார்வையில் இது அவசியமற்ற ஒப்பீடு./////

சார், நான் எப்ப வெள்ளைக்காரன் சொன்னதை 'வேத' வாக்காக சொன்னேன் ?

//நமக்கு சுதந்திரம் கொடுக்கக் கூட நம்மை போராட வைத்து கொன்று குவித்ததை வரவேற்கிறீரா? ///

நான் எப்போ வரவேற்றேன் ????

///அவன் சொன்னதை கூறும் உம் கருத்தில் நீர் நியாயம் இருப்பதாக உனக்கு பட்டாலும்.///

படலையே !!!!!

///எனது பார்வையில் இது அவசியமற்ற ஒப்பீடு.///

ஒப்பிடவே இல்லையே ???

செந்தழல் ரவி said...

வாங்க வவ்வால்...!!!!

நரிக்குறவர்கள் எல்லாருக்கும் சாதி சான்றிதழ் தருவதில்லைங்க...எனக்கே தெரியும்...போனவாரம் ஊரில் வழக்கமாக துப்பாக்கி மருந்து அரைக்கபோனபோது, அவர்கள் சங்கத்தின் மூலமாக போராட்ட அறிவிப்பு விவரம் கொண்ட நோட்டீஸ் ஒன்றை என்னிடமும் கொடுத்தார்கள்..

கருப்பன்/Karuppan said...

கேப்டன் இவ்வளவு அப்பாவியா இருக்காருனு நீங்க சொல்லித்தான் எனக்கே தெரியுது ரவி!

வரதட்சனை கேட்காத மாப்பிள்ளைகளுக்கு எந்த பெற்றோரும் பெண் கொடுக்க முன்வருவதில்லை என்ற விஷயம் அவருக்கு தெரியாது போல :-(

லக்கிலுக் said...

//இதுபோன்றதொரு அறைகூவலை கலைஞரோ, அம்மையாரோ, வை.கோவோ, டாக்டரோ, வாசனோ, நல்லக்கண்ணுவோ, வரதராஜனோ, கிருட்டினசாமியோ, திருமாவோ இதுவரை விட்டதாக எனக்கு நினைவில்லை...//

அய்யா! நீங்க பத்திரிகைகளே படிப்பதில்லையா? நீங்கள் குறிப்பிட்ட தலைவர்கள் எல்லாரும் எல்.கே.ஜி. படிக்கும் போதே இந்த வேண்டுகோளை விடுத்து விட்டார்கள். விஜயகாந்த் இப்போது தான் எல்.கே.ஜி. படிக்கிறார் போலிருக்கு!!!!

காமெடி ரவி காமெடி!!!!!

செந்தழல் ரவி said...

///
அய்யா! நீங்க பத்திரிகைகளே படிப்பதில்லையா? ///

படிக்கிறேனே...அதில் எந்த தலைவரும் இந்த விஷயம் சொல்லவில்லையே !!!

///நீங்கள் குறிப்பிட்ட தலைவர்கள் எல்லாரும் எல்.கே.ஜி. படிக்கும் போதே இந்த வேண்டுகோளை விடுத்து விட்டார்கள். ////

அப்படி இருந்தும் ஏன் யாரும் திருந்தவில்லை...தி.மு.கவில் அட்லீஸ்ட் வரதட்சனை கொடாத/பெறாத திருமணங்கள் நடைபெற்றதா ?

///விஜயகாந்த் இப்போது தான் எல்.கே.ஜி. படிக்கிறார் போலிருக்கு!!!!///

எல்லா தலைவர்களும் எல்.கே.ஜி படித்தார்கள் என்று நீங்கள் சொன்னது போல, விஜயகாந்தும் படிக்கிறார்...படித்துதான் வரட்டுமே !!!

//காமெடி ரவி காமெடி!!!!!///

நாம அப்படித்தானே...!!!!

விஜயகாந்தின் வளர்ச்சி பலருக்கு பிடிக்கவில்லைதான், ஆனால் இது காலத்தின் கட்டாயம்..!!!

லக்கிலுக் said...

//அப்படி இருந்தும் ஏன் யாரும் திருந்தவில்லை...தி.மு.கவில் அட்லீஸ்ட் வரதட்சனை கொடாத/பெறாத திருமணங்கள் நடைபெற்றதா ?//

சீர்த்திருத்த திருமணங்கள் வரதட்சணை பெறாத, அய்யர் இல்லாத திருமணங்களாகவே நடக்கிறது. திமுக வலியுறுத்துவதும் இதைத்தான். திமுகவின் அடிப்படைக் கொள்கைகளில் சீர்த்திருத்த திருமணத்துக்கும் இடமுண்டு.//விஜயகாந்தின் வளர்ச்சி பலருக்கு பிடிக்கவில்லைதான், ஆனால் இது காலத்தின் கட்டாயம்..!!!//

விஜயகாந்தின் வளர்ச்சி எனக்கு பிடித்திருக்கிறது. எவ்வளவு தூரம் வளருவார் என்பது தெரிந்திருப்பதால்... விஜயகாந்தால் குத அரிப்பு நோய் வந்து அதிமுக தலைமையும், தலைவர்களும் அவதிப்படுவதாக தகவல்.. ராமாவரத் தோட்டத்தில் அதனால் தான் ஏதோ மூலிகையை தேடி ஓடினார்களாம்.

வைகோவாலேயே திமுகவுக்கு பாதிப்பில்லை, விஜயகாந்தெல்லாம் எம்மாத்திரம்?

Prakash said...

>அதனால் சொற்ப வருமானம்
> பெற்றுவந்த பல்லாயிரக்கணக்கானவர்கள்
> சோத்துக்கு சிங்கி அடித்தார்கள்

இருக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா? லாட்டரியில காச விட்ட குடியானவங்க ஏகப்ப்பட்ட பேரு எங்க ஊருல இருக்காங்க, ஆனா அத நிறுத்தினதுக்கு அப்புறம் வித்துட்டு இருந்த ரெண்டு வியாபாரிகளும் வேற தொழில் செஞ்சாங்களே தவிர சோத்துக்கு சிங்கி எல்லாம் அடிக்கல. That was a very good move by JJ.

enRenRum-anbudan.BALA said...

//
நீண்ட இடைவளிக்கு ரவியின் எழுத்தில் படித்த ஒரு நல்ல பதிவு.

தொடரவும்.
//
«§¾, «§¾ :)

பிரபு ராஜதுரை said...

"அப்படி இருந்தும் ஏன் யாரும் திருந்தவில்லை"

இதுவெல்லாம் மேடையில போட்டு வைக்கிறது...திருந்துகிறதுக்கு இல்லை.

எம்ஜிஆர் பீடி குடிக்கிறதில்லை...ஆனா எம்ஜிஆர் சொல்லி எந்த ரசிகன் பீடிய விட்டான் கட்டிங் போடறத நிறுத்தினான். இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கிலாமா?

அவங்கள விடுங்க! வரதட்சணை வாங்க கூடாதுன்னு, கோவில்ல பாதிரியார் கூடத்தான் சொல்லுவார். வரதட்சணை வாங்கினால் சர்ச்சில் கலியாணம் செய்யக்கூடாதுன்னு சொல்வாரா?